search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97757"

    கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நடிகர் ஜெயராம், மனைவி மகளுடன் மீட்கப்பட்டுள்ளார். #KeralaRain #Jayaram
    கேரளாவில் கன மழை பெய்து வருவதால் ஊரெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 35 அணைகள் திறக்கப்பட்டு உள்ளன. சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

    வெள்ளத்தில் சிக்கிய மக்களை பேரிடர் மீட்பு குழுவினர் படகுகளில் அழைத்து வந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கின்றனர். வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்து உதவி கேட்டு குரல் எழுப்புகிறார்கள். அவர்களும் மீட்கப்பட்டு வருகிறார்கள். இந்த மழை வெள்ளத்தில் நடிகர்களும் சிக்கி உள்ளனர். 

    திருவனந்தபுரத்தில் உள்ள பிருதிவிராஜ் வீட்டுக்குள் புகுந்த வெள்ளத்தில் சிக்கிய அவரது தாயார் மல்லிகா சுகுமாரனை படகில் மீட்டனர். 

    நடிகர் ஜெயராம் குடும்பத்தினரும் நிலச்சரிவில் சிக்கினார்கள். திருச்சூர் மாவட்டத்தில் ஜெயராம் தனது மனைவி பார்வதி, மகள் மாளவிகாவுடன் காரில் சென்று கொண்டு இருந்தார். 

    தேசிய நெடுஞ்சாலையில் குதிரன் என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்தபோது, திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. உயரத்தில் இருந்து மண்சரிந்து வந்து சாலையில் விழுந்தது. இதில் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கித் கொண்டன. 



    அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஜெயராம் காரையும் மண் சூழ்ந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

    வடக்கன்சேரி போலீசார் விரைந்து சென்று ஜெயராம் குடும்பத்தினரை பத்திரமாக மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். 
    சென்னையில் உள்ள ‘எய்டு இந்தியா’ அமைப்பு சார்பில் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் உணவு, உடை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சேகரிக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
    சென்னை:

    கேரளாவில் வரலாறு காணாத கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. அதோடு நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. இதில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்து உள்ளனர். ஏராளமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    கேரளாவில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்பையொட்டி திரையுலகினர், தனியார் தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகள் சார்பில் உதவிகரம் நீட்டப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் சென்னையில் உள்ள ‘எய்டு இந்தியா’ அமைப்பு சார்பில் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் உணவு, உடை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சேகரிக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை 2 கன்டெய்னர்களில் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளன. தற்போது 3-வது முறையாக நாளை (திங்கட் கிழமை) அனுப்பப்பட உள்ளது.

    இதுகுறித்து ‘எய்டு இந்தியா’ அமைப்பின் இணை செயலாளர் தாமோதரன் கூறுகையில், “மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் சேகரிக்கப்படும் நிவாரண பொருட்களை நல்ல முறையில் ‘பேக்’ செய்து அனுப்பி வருகிறோம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த பணியில் சேவை மனப்பான்மையுடன் ஈடுபட்டு வருகிறார்கள்”, என்றார். 
    மராட்டிய மாநிலம், மும்பையில் இருந்து கேரளாவுக்கு 8 லட்சம் லிட்டர் குடிநீர், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். தீபக் கப்பல் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. #KeralaRain #Keralaflood #NH183
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லத்தையும், தமிழ்நாட்டின் திண்டுக்கல் நகரத்தையும் இணைப்பது தேசிய நெடுஞ்சாலை எண்.183 ஆகும். மழை, வெள்ளத்தால் இந்த நெடுஞ்சாலை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் கோட்டயம், குமுளி, இடுக்கி வழியாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.



    மழை, வெள்ளம் காரணமாக உணவுக்கு தவிக்கிற மக்களுக்கு உணவுப்பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை கம்பம்மெட்டு வழியாக எடுத்துச்செல்ல முடியாத பரிதாப நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு இடையே பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ள நிலையில் மக்கள் குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர். இதனால் மராட்டிய மாநிலம், மும்பையில் இருந்து கேரளாவுக்கு 8 லட்சம் லிட்டர் குடிநீர், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். தீபக் கப்பல் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. இந்த கப்பல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொச்சிக்கு சென்று அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. #KeralaRain #Keralaflood #NH183
    கேரளாவில் மனோஜ் என்ற பத்திரிக்கையாளர் தனது மகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி, அந்த பணத்தை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். #StandWithKerala #KeralaRains #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளா கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பெய்யும் தென்மேற்கு பருவமழையை விட இந்த ஆண்டு 3 மடங்கு பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கொச்சி, ஆலப்புழா, கோழிக்கோடு, மலப்புரம் என அனைத்து நகரங்களும் வெள்ள நீரில் மிதக்கின்றன.

    நிலச்சரிவு மற்றும் வெள்ளநீரில் சிக்கி 324 பேர் பலியாகிவிட்டனர். 2.2 லட்சம் பேர் 1500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநில அரசுகள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட கேரள மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்,



    இந்நிலையில், கேரளாவில் பத்திரிகையாளர் மனோஜ் என்பவர் கன்னூரில் தனது மகளுக்கு நடக்க இருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தி, அந்த பணத்தை முதல் மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘எனது மகளின் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கேரள மாநிலம் மிகப்பெரிய வெள்ளப்பாதிப்புகளை சந்தித்து வருவதால் நிச்சயதார்த்ததை ரத்து செய்து அதற்கான சேமிப்பை முதல் மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பது என முடிவு செய்துள்ளோம். மணமகன் வீட்டாரின் முழு சம்மதத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    கேரளாவில் மீன் விற்பனை செய்து வரும் மாணவி ஹனன் ஹமித் என்பவர் வெள்ள நிவாரணமாக ரூ.1.5 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #StandWithKerala #KeralaRains #KeralaFloods
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் எஸ்.எம்.எஸ் மற்றும் இன்டர்நெட் சேவை இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. #KeralaFloods #KeralaRain
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இன்று மட்டும் 22 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் எஸ்.எம்.எஸ் மற்றும் இன்டர்நெட் சேவை இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், வெள்ளத்தால் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ள கேரளாவில் எஸ்.எம்.எஸ், செல்போன் இணையதள சேவை இலவசமாக வழங்கப்படும் 

    மேலும், கொச்சி விமான நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அந்த விமான ஓடுதளத்துக்கு பதிலாக கொச்சி கடற்படை விமான ஓடுதளம் பயன்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து, வரும் திங்கட்கிழமை முதல் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை தொடங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.

    வெள்ளம் சூழ்ந்ததால் கொச்சி விமான நிலையம் 26-ம் தேதி வரை மூடப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #KeralaFloods #KeralaRain
    கேரளா வெள்ள நிவாரணத்துக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.  மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இன்று மட்டும் 22 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரளா வெள்ள நிவாரணத்துக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமை கூறுகையில்,  கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிதியாக தருவார்கள். மேலும், கேரளாவுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு குழு ஒன்று அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    இதேபோல், டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். 

    டெல்லியில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒருநாள் சம்பளத்தை கேரளாவுக்கு நன்கொடையாக அளிக்கும்படி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், தமிழகத்தை சேர்ந்த  ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை கேரளா வெள்ள பாதிப்புக்கு நிதியுதவி அளிப்பதாக தெரிவித்தனர். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். #KeralaRains #KeralaFloods
    புதுடெல்லி:

    கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலத்தை சூனியம் சூழ்ந்ததுபோல, மழை வெள்ளத்தால் தற்போது அந்த மாநிலமே சேதமடைந்துள்ளது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, பல லட்சம் மக்கள் தங்களது உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த மக்களுக்கும், கேரளாவுக்கும் உதவ பல்வேறு மாநிலங்களும், தொண்டு நிறுவனங்களும் முன்வந்துள்ளன. சமீபத்தில் கோவை மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. இதே போல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்துக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.



    இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து பொதுவுடைமை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் ரெயில்கள் வழியாக கேரளாவுக்கு அனுப்பப்படும் நிவாரண பொருட்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் அறிவித்துள்ளார். #KeralaRains #KeralaFloods 
    கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு உத்தரப்பிரதேச அரசு ரூ.15 கோடியும், மத்தியப்பிரதேச அரசு ரூ.10 கோடியும் நிதியுதவி அளித்துள்ளன. #KeralaRains #KeralaFloods
    லக்னோ:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.

    மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இன்று மட்டும் 22 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    தமிழக அரசின் சார்பில் 10 கோடி, டெல்லி அரசின் சார்பில் 10 கோடி, தெலுங்கானா அரசின் சார்பில் 25 கோடி, பீகார் அரசின் சார்பில் 10 கோடி,  அரியானா அரசின் சார்பாக 10 கோடி, மகாராஷ்டிரா சார்பில் 20 கோடி, குஜராத் சார்பில் 10 கோடி, ஜார்க்கண்ட் சார்பில் 5 கோடி ரூபாயும் என நிதியுதவி குவிந்து வருகின்றன. 

    அவ்வகையில் கேரளா மாநில அரசின் துயர் துடைப்பு பணிகளுக்கு உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ரூ.15 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், மத்தியப்பிரதேசம் மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    மேலும்ம் பஞ்சாப் மாநில அரசு சார்பில் கூடுதலாக ரூ. 5 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதல் மந்திரி அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். #KeralaRains #KeralaFloods 
    கேரளாவில் பெய்து வரும் கனமழையில் தேசிய நெடுஞ்சாலை எண் 183 துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. #KeralaRain #Keralaflood #NH183
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தின் கொல்லம் பகுதியில் இருந்து திண்டுக்கல் நோக்கி செல்வது தேசிய நெடுஞ்சாலை  எண் 183. இது கேரளாவின் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை ஆகும்.

    கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.

    கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவால் 340க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழையால் முக்கிய தேசிய நெடுஞ்சாலை எண் 183 துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்த நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு உள்ளதால் கோட்டயம், சபரிமலை, குமுளி மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளன. மேலும், கேரளாவுக்கு செல்ல வேண்டிய நிவாரண பொருள்களை எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #KeralaRain #Keralaflood #NH183
    கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து கடற்படையால் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரள மாநிலம் கடுமையான மழை பாதிப்புகளை சந்தித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விமான போக்குவரத்து, பேருந்து சேவை என அனைத்தும் வெள்ளத்தின் அளவிலா பசிக்கு உணவானது.

    இதனால் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்வை முற்றிலும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் படுகின்றனர். மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கி தவிக்கும் மக்களையும் ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர்.

    இந்நிலையில்,  ஆலுவா பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. வெள்ள பாதிப்புகளினால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருக்க, அப்பகுதியில் இருந்த சஜீதா ஜபீல் கர்ப்பிணி பிரசவ வலி ஏற்பட்டதாக மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதிக்கு விரைந்த கடற்படையினர், பத்திரமாக சஜீதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். வெள்ளம், பிரசவம் என மரணத்தின் விளிம்பு வரை சென்று விட்டு வந்த சஜீதா ஜபீலுக்கு தற்போது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    கேரள மாநிலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணியில் முழுமூச்சாய் பணியாற்றும் கடற்படை உள்ளிட்ட அனைத்து மீட்புக்குழுவினருக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். #KeralaFloods
    கேரள மாநிலத்தில் பெய்துவரும் அதிகப்படியான கனமழை காரணமாக இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்மந்திரி பிணராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #KeralaRains #RainKills #KeralaFlood #StandWithKerala
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரள முதல்மந்திரி தனது ட்விட்டர் பக்கத்தில், மழை பாதிப்பால் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 100 வருடங்களில் இல்லாத இந்த மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்து வருவதாகவும் பிணராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.



    கேரள மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்க இதுவரை  ஆயிரத்து 500 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 139 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கேரள முதல்மந்திரி பிணராயி விஜயன் வெளியிட்டுள்ள ட்விட்டர் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மழை வெள்ளத்தில் இருந்து மக்களையும் கேரளாவையும் மீட்டெடுக்க உதவ donation.cmdrf.kerala.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறும் பிணராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். #KeralaRains #RainKills #KeralaFlood #StandWithKerala
    கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக பஞ்சாப் மாநில அரசு இன்று 10 கோடி ரூபாய் வழங்குவதாக இன்று அறிவித்துள்ளது. #KeralalRain #Keralafloods #AmarinderSingh
    சண்டிகர்:

    கேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

    மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

    இதற்கிடையே, கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்படட் வெள்ளத்தில் சிக்கி 164 பேர் பலியாகி உள்ளதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    வெள்ளம் பாதிப்பு அடைந்த கேரளா மாநிலத்துக்கு மத்திய அரசு 100 கோடி ரூபாய் நிவாரணம் அளித்துள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்கள் நிவாரண தொகை அளித்து வருகின்றன.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தின் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக பஞ்சாப் மாநில முதல் மந்திரி அமரிந்தர் சிங் 10 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், முதல் கட்டமாக, கேரள முதல் மந்திரி நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும், உணவு பொருள்கள் உள்ளிட்ட பிற பொருள்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் உதவியுடன் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர். #KeralalRain #Keralafloods #AmarinderSingh
    ×