search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97757"

    கேரளாவில் சமீபத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த பேய் மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது.

    திருவனந்தபுரம் மாவட்டம் உள்பட மாநிலத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. எனவே 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளன.

    இதுவரை 97 பேர் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கேரளாவில் சமீபத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், கேரளாவில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலியானோரின் எண்ணிக்கை 97ல் இருந்து 164 ஆக அதிகரித்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தை தவிர 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    மீட்பு பணிக்காக கூடுதலாக இந்திய கடற்படைக்கு சொந்தமான 4 கப்பல்கள் கொச்சி வந்துள்ளது. இந்த மீட்புக்குழுவில் இந்த கப்பலில் வந்த கடற்படையினரும் இணைய உள்ளனர். நிவாரணப் பொருட்களும் கப்பல் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது. #KeralaFloods #KeralaRain #PinarayiVijayan
    கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் காரைக்குடியில் இருந்து சபரிமலைக்கு சென்ற அய்யப்ப பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி பருப்பூரணி பகுதியில் உள்ள அய்யப்பன் கோவிலில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் கார்த்திகை மற்றும் ஆடி மாதங்களில் விரதம் இருந்து மாலை அணிந்து சபரி மலைக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல் இந்தாண்டும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கினர்.

    இதையடுத்து கடந்த 12-ந்தேதி இரவு காரைக்குடியில் இருந்து 5 பஸ்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு புறப்பட்டனர். அவர்கள் முதலில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நெல்லை, செங்கோட்டை வழியாக கேரளா மாநிலத்தில் உள்ள சபரி மலைக்கு சென்றனர்.

    அப்போது செங்கோட்டையை தாண்டி அவர்கள் கேரள எல்லைக்குள் நுழையும்போது அம்மாநில போலீசார் அவர்களை நிறுத்தி தற்போது கேரளாவில் கடும் மழை பெய்து ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சபரிமலை, பம்பை தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு உள்ளதால் நீங்கள் அங்கு செல்ல முடியாது. எனவே நீங்கள் உங்கள் ஊருக்கு செல்லுங்கள் என்று திருப்பி அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து அய்யப்ப பக்தர்கள் அங்கிருந்து நேற்று அதிகாலை காரைக்குடிக்கு வந்தனர். பின்னர் பருப்பூரணி பகுதியில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு வந்து இருமுடிகளை இறக்கி வைத்து சாமி தரிசனம் செய்தனர். 
    கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை நூறை நெருங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #KeralalRain #Keralafloods
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

    மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதற்கிடையே, கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 72 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

    இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவாலும் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.



    இன்று ஒரே நாளில் 30க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இன்று மலப்புரம் மாவட்டத்தில் வீடு இடிந்ததில் 8 பேர் பலியாகினர். பத்தனம்திட்டா, கண்ணூர், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, இடுக்கி, எர்ணாகுளம் உள்பட பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பில் சிக்கி 30-க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இன்று காலை 8.30 மணி முதல் நாளை காலை 8.30 மணி வரை கேரளாவில் மிதமிஞ்சிய மழை பெய்யும் என்றும் நாளை (17-ந் தேதி) காலை 8.30 மணி முதல் 19-ந் தேதி காலை 8.30 மணி வரை பலத்த காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் என்று  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர்.

    கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேரில் சென்று பார்வையிட்டார். முதல் கட்டமாக கேரள வெள்ள பாதிப்புக்கு ரூ.100 கோடி நிதி உதவியையும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.

    மேலும், கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் நரேந்திர மோடி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். #KeralaRain #Keralafloods
    கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக ஒடிசா மாநில அரசு இன்று 5 கோடி ரூபாயை இன்று வழங்கியுள்ளது. #KeralalRain #Keralafloods #NaveenPatnaik
    புவனேஷ்வர்:

    கேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

    மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதற்கிடையே, கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 72 பேர் பலியாகியுள்ளனர்.

    வெள்ளம் பாதிப்பு அடைந்த கேரளா மாநிலத்துக்கு மத்திய அரசு 100 கோடி ரூபாய் நிவாரணம் அளித்துள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்கள் நிவாரண தொகை அளித்து வருகின்றன.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தின் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் 5 கோடி ரூபாய் அளித்து உத்தரவிட்டுள்ளார். 

    இது தொடர்பாக, நவீன் பட்நாயக் கேரளா முதல் மந்திரி பினராயி விஜயனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிவாரண நிதி அளிப்பது குறித்து பேசினார். மேலும், தேவைப்படும் உதவிகளை வழங்கவும் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார். #KeralalRain #Keralafloods ##NaveenPatnaik
    கேரளாவில் கனமழை பெய்து வருவதையொட்டி பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு செல்லும் வழித்தடங்கள் சேதம் ஆனாதால் பொள்ளாச்சி- பாலக்காடு சாலையை போலீசார் மூடிவிட்டனர். #KeralaFloods2018
    கொழிஞ்சாம்பாறை:

    கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. 50 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத வகையில் பெய்யும் கனமழைக்கு இதுவரை ஏராளமானோர் பலியானார்கள். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. சாலை, பாலம், ரெயில் தண்டவாளம், மின் கம்பங்கள் சேதமடைந்தன.

    குறிப்பாக கடந்த 48 மணி நேரம் பெய்த பேய் மழையால் பாலக்காடு மாவட்டம் தண்ணீரில் தத்தளிக்கிறது. நீர் வரத்து அதிகரிப்பால் மலம்புழா அணையின் ‌ஷட்டர் 9 செ.மீட்டர் திறக்கப்பட்டது. நேற்று 9 செ.மீட்டரில் இருந்து திடீரென 36 செ.மீட்டர் திறக்கப்பட்டு தற்போது 45 செ.மீட்டருக்கு ‌ஷட்டர் திறக்கப்பட்டது.

    இதனால் அணையில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து வெளியேறி கல்பாத்தி ஆற்றில் ஓடுகிறது. கல்பாத்தி ஆற்றையொட்டி இருந்த 80 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது.

    இது தவிர ஆழியாற்றில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டதால் சித்தூர் தாலுகாவில் உள்ள அனைத்து பாலங்கள் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் வெள்ளம் கிராமங்களை நோக்கி ஓடுகிறது. கிராமங்களில் பயிரிட்ட 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இது தவிர 30 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு செல்லும் வழித்தடங்கள் சேதம் ஆனாதால் பொள்ளாச்சி- பாலக்காடு சாலையை போலீசார் மூடிவிட்டனர். இதனால் எங்கு வழி உள்ளதோ அதில் பஸ் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. தொடர் மழையால் கடந்த 2 நாட்களாக மின் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது.

    இன்னும் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால் பாலக்காடு நகர மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

    பாலக்காடு கலெக்டர் பாலமுரளி பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார். கனமழை பெய்வதால் சுற்றுலா பயணிகள் பாலக்காடு வரவேண்டாம் என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். #KeralaFloods2018
    இந்தியாவில் இந்த பருவ மழை காலத்தில் இதுவரை 7 மாநிலங்களில் 774 பேர் மழை வெள்ளத்துக்கு பலியாகி உள்ளனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 187 பேர் இறந்துள்ளனர். #Kerala #Rain #Floods
    புதுடெல்லி:

    கேரளா மாநிலத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துவருகிறது. நேற்று முன்தினம் மாலை மழை சற்று குறைந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளது.

    வடமேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மழை பெய்துவருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம் என்று புதிய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.



    கனமழை, வெள்ளம், நிலச் சரிவுகளில் சிக்கி இதுவரை 39 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து வேறு இடங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் குடிபெயர்ந்துள்ளனர்.

    10 கம்பெனி ராணுவத்தினர், சென்னை ரெஜிமென்டை சேர்ந்த ஒரு குழுவினர், கப்பல் படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை ஆகிய வற்றை சேர்ந்த வீரர்கள் தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கோழிக் கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இந்த மீட்பு பணிகள் நடைபெறுகிறது.

    வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை மந்திரி ராஜ் நாத்சிங் பார்வையிட்டு உடனடி நிவாரணமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.

    26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட இடுக்கி அணையில் இருந்து நேற்றும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன் துணை அணையான செருதோனி அணையில் 5 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேறுவதால் ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



    சபரிமலை பகுதியில் பெய்து வரும் மழையால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கும் பக்தர்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற் போது ஆவணி மாத பிறப்பை யொட்டி நடை திறப்பது வழக்கம். பம்பையில் வெள்ளம் அபாய அளவை தாண்டி ஓடுகிறது. பம்பையில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதி, கடைகள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

    பம்பை நதி மீது உள்ள பாலத்தை மூழ்கடித்தப்படி வெள்ளம் போகிறது. இதனால் அந்த பாலத்தை கடந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் யாரும் தற்போது வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் போக்குவரத்து மற்றும் சுற்றுலா தொழிலும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. அடுத்த வாரம் ஓணம் பண்டிகை, உலகளவில் சுற்றுலா பயணிகளை கவரும் பாம்பு படகு போட்டி ஆகியவை தொடங்க உள்ள நிலையில் சுற்றுலா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இடுக்கி, மூணாறு, குமரகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது 70 முதல் 80 சதவீதம் வரை ரத்தாகி உள்ளது.

    மத்திய உள்துறை அமைச் சகத்தின் கீழ் உள்ள தேசிய அவசரகால செயல்பாட்டு மையம் இந்தியாவில் 7 மாநிலங்களில் இந்த ஆண்டு பருவமழை காலத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் இது வரை ஏற்பட்டுள்ள பாதிப்புக ள் குறித்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:-

    கேரளாவில் அதிகபட்சமாக இந்த பருவமழை காலத்தில் இதுவரை அதிகபட்சமாக 187 பேர் இறந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் 171 பேரும், மேற்கு வங்காளத்தில் 170 பேரும், மராட்டியத்தில் 139 பேரும், குஜராத்தில் 52 பேரும், அசா மில் 45 பேரும், நாகாலாந்தில் 10 பேரும் இறந்துள்ளனர்.



    கேரளாவில் 27 பேரும், மேற்குவங்காளத்தில் 22 பேரும் மாயமாகி உள்ளனர். மொத்தம் 245 பேர் காயம் அடைந்துள்ளனர். மராட்டி யத்தில் 26 மாவட்டங்களும், அசாமில் 23, மேற்குவங்காளத் தில் 22, கேரளாவில் 14, உத்தர பிரதேசத்தில் 12, நாகாலாந்தில் 11, குஜராத்தில் 10 மாவட்டங் களும் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 27,552 ஹெக்டேரில் பயிர்கள் நாசமாகியுள்ளன.

    தேசிய பேரிடர் மீட்பு படையின் 15 குழுக்கள் (ஒரு குழுவுக்கு 45 வீரர்கள்) அசாமிலும், உத்தரபிரதேசம், மேற்குவங்காளத்தில் தல 8 குழுக்கள், குஜராத்தில் 7, கேரளா, மராட்டியத்தில் தலா 4, நாகாலாந்தில் ஒரு குழுவும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   #Kerala #RainFloods #tamilnews 
    கேரள மாநிலத்தில் பாவ மன்னிப்பு கேட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 2 பாதிரியார்கள் இன்று சரணடைந்தனர். #Kerala #PriestRapeCase
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொள்ளம் பகுதியில் தனது கடந்த கால வாழ்க்கையில் நடந்த தவறு குறித்து பாவ மன்னிப்பு கேட்பதற்காக சென்ற பெண்ணை, அவர் கூறிய தகவலை வைத்துக் கொண்டு அந்த பாதிரியார் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அந்த தகவலை இன்னும் சில பாதிரியார்களுக்கும் பகிர்ந்து அவர்களும் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர்.

    இந்த சம்பவம் அவரது கணவரின் மூலமாக வெளிவந்ததை அடுத்து மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற கேரளாவின் சில பாதிரியார்கள் முயற்சி செய்த தகவலும் அம்பலமானது.

    இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து 4 பாதிரியார்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின்னர் ஜாப் மேத்யூ, ஜான்சன் மேத்யூ ஆகிய இரண்டு பாதிரியார்களும் தாமாக முன்வந்து சரணடைந்தனர். அதன்பிறகு அவர்களுக்கு ஜாமின் அளிக்கப்பட்டது.

    இதேபோல், தலைமறைவாக இருந்த 2 பாதிரியார் ஆப்ரகாம் வர்கீஸ் மற்றும் ஜெய்ஸ் கே.ஜார்ஜ் ஆகியோர் முன்ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அவர்களின் மனு நிராகரிக்கப்படவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

    அந்த மனுவை விசாரித்த அமர்வு, அவர்களின் மனுவை நிராகரித்து சரணடையும்படி உத்தரவிட்டது. இதையடுத்து, பாதிரியார் ஆப்ரகாம் வர்கீஸ் திருவல்லா நீதிமன்றத்தின் முன்பும், பாதிரியார் ஜெய்ஸ் கே.ஜார்ஜ் போலீசாரிடமும் சரணடைந்தனர்.

    உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி இருவரும் சரணடைந்ததால், விரைவில் இவர்கள் ஜாமினில் வெளிவருவார்கள் என தெரிகிறது. #Kerala #PriestRapeCase
    கேரளாவில் பெய்து வரும் கன மழையால் நிலச்சரிவில் இருந்து தனது எஜமானையும், அவருடைய மனைவியையும் ஒரு செல்ல நாய் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. #DogSaved #KeralaFamily #Landslide
    இடுக்கி:

    கேரளாவில் பெய்து வரும் கன மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பதில் ராணுவம், விமானப்படை, கடலோர காவல்படையை சேர்ந்த வீரர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நிலச்சரிவில் இருந்து தனது எஜமானையும், அவருடைய மனைவியையும் ஒரு செல்ல நாய் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. இடுக்கி மாவட்டம் கீர்த்திகோடு என்னும் மலைக்கிராமத்தில் மனைவியுடன் வசித்து வருபவர் மோகனன். இவர், ‘ராக்கி’ என்னும் நாயை தனது வீட்டில் செல்லமாக வளர்த்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் ராக்கி திடீரென்று பலமாக குரைத்தது.

    வெகு நேரமாகியும் அது குரைப்பதை நிறுத்தவில்லை. இதனால் திடுக்கிட்டு எழுந்த மோகனனும், அவருடைய மனைவியும் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தனர். அப்போது அவர்களின் வீடு நிலச்சரிவு ஏற்பட்டு முழுவதுமாக சரிந்து விழுந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மோகனனும், அவருடைய மனைவியும் தங்களுடைய உயிரை தக்க நேரத்தில் காப்பாற்றிய ராக்கியை நன்றிப் பெருக்குடன் உச்சி முகர்ந்து கொஞ்சி மகிழ்ந்தனர்.

    மோகனன், தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.  #DogSaved #KeralaFamily #Landslide
    மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.8,300 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள அணைகள், ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டன.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 39 பேர் பலியாகினர். மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

    இதற்கிடையே, கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர்  பார்வையிட்டார். அவருடன் முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி அல்போன்ஸ் ஆகியோரும் சென்றனர்.

    நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய ராஜ்நாத் சிங், கேரளாவுக்கு உடனடி வெள்ள நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும் என அறிவித்தார்.

    இந்நிலையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிவாரண தொகையாக ரூ.8,300 கோடி தேவை என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவால் ரூ.8,316 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.400 கோடியை தற்போது வழங்க வேண்டும். உடனடி நிவாரணம், புனரமைப்பு பணிகளுக்கு ரூ.820 கோடியை மத்திய அரசிடம் ஏற்கனவே கேட்டுள்ளோம். 

    கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 20 ஆயிரம் வீடுகள் முற்றிலும் சேதமாகியுள்ளன. சுமார் 10 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு சாலைகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகளை மீண்டும் ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #PinarayiVijayan
    கேரளாவில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பார்வையிட உள்ளார். #KeralaFloods #KeralaRain #RajnathSingh
    புதுடெல்லி:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக இதுவரை 37 பேர் பலியாகினர். மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

    கனமழை பாதிப்பு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    இதற்கிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளை கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்பட பலர் பார்வையிட்டனர்.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கேரளா செல்கிறார். கனமழையல் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அவர் பார்வையிடுகிறார். அதன்பின்னர், மாநில முதல்வர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மீட்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். #KeralaFloods #KeralaRain #RajnathSingh
    கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. #KeralaRain #KeralaFloods #IdukkiDam
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது.

    இதனால் கேரளாவில் உள்ள அணைகள், ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன. விவசாய பயிர்களும் மழையால் நாசமடைந்துள்ளது.

    முழு கொள்ளளவை எட்டியுள்ள இடுக்கி அணை 26 வருடங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மீட்புப் பணிக்காக பேரிடர் மீட்பு குழு, ராணுவம் மற்றும் கப்பற்படை வீரர்கள் கேரளா விரைந்துள்ளனர்.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வெள்ளம் பாதித்த பகுதிகளை கேரளா முதல் மந்திரி பினராய் விஜயன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சென்னிதலா உள்பட பலர் பார்வையிட்டனர்.

    இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு பகுதியில் வெள்ளத்தில் சிக்கி பலியான தாய் மற்றும் மகளின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், வெள்ளத்தில் பலியான 4 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.

    இதையடுத்து, கேரளாவில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #KeralaRain #KeralaFloods #IdukkiDam
    கேரளாவின் பல பகுதிகளில் இடைவிடாது பெய்துவரும் அடைமழையினால் பெரியார் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. எர்ணாக்குளம் மாவட்டத்தில் உள்ள 78 நிவாரண முகாம்களில் 10 ஆயிரம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளன. #KeralaFloods #KeralaRains
    திருவனந்தபுரம்:

    கேரள மாவட்டத்தில் மே மாத இறுதியிலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதன் பிறகு விட்டு விட்டு பெய்த மழை ஆகஸ்டு முதல் வாரத்தில் மிகப்பலத்த மழையாக உருவெடுத்தது.

    மாநிலத்தின் மலையோர மாவட்டங்கள் தொடர்மழையால் பெரும் பாதிப்புக்கு ஆளானது. நிலச்சரிவு போன்ற மழையால் ஏற்படும் விபத்துக்களில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, பாலக்காடு, இடுக்கி, கண்ணூர் உள்பட 8 மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக மழை இடைவிடாமல் பெய்து வருகிறது.



    தொடர் மழை காரணமாக இம்மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியது. வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது. தரைப்பாலங்கள், சாலைகள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன.

    கேரளத்தின் பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணையும் மழையால் நிரம்பியது. 2403 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 2401.90 அடியாக உயர்ந்தது.

    இந்நிலையில், பெரியார் ஆற்றில் அதிகரித்து வரும் நீரின் அளவு காரணமாக ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் அனைவரும் எர்ணாக்குளம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எர்ணாக்குளம் மாவட்டத்தின் பரவூர், அலுவா, கனயன்னூர், குன்னத்துநாடு ஆகிய தாலுக்காக்களில் அமைக்கப்பட்டுள்ள 78 நிவாரண முகாம்களில் இதுவரை 10  ஆயிரத்து 501 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



    அதேசமயம், பெரியார் ஆற்றில் அமைந்துள்ள சிவன் ஆலையத்தில் வருடாந்திர பூஜை செய்ய வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அப்பகுதிக்கு வந்துள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பான பகுதியில் இருந்தபடி பூஜையை செய்ய ஏற்பாடு செய்து தரப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

    இந்த பகுதியில் மட்டும் 3 படகுகள், 20 மீட்பு படகுகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன், தேசிய மீட்புப் படையினரும் தயார் நிலையில் இருப்பதாகவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloods #KeralaRains
    ×