search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97757"

    கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு 3 பேர் பலியாகியுள்ள நிலையில் 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaRain
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த 1½ மாதங்களாக பெய்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் சற்று ஓய்ந்து இருந்த மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

    கேரள தலைநகரான திருவனந்தபுரம் உள்பட மாநிலம் முழுவதும் இந்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழை காரணமாக சிறுவன் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கோழிக்கோடு பகுதியை சேர்ந்த கல்யாணி (வயது 88) என்ற பெண் தனது வீடு அருகே நடந்து சென்றபோது மரக்கிளை முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்தார். கண்ணூர் பகுதியில் ஆட்டோ மீது மரம் விழுந்ததில் அதில் பயணம் செய்த சித்தாரா (20) என்ற பெண்ணும், ஆலப்புழாவில் சாலையில் அறுந்துகிடந்த மின் கம்பியை மிதித்த சுபத்ரா (60) என்பவரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதேபோல கோழிக்கோடு பகுதியை சேர்ந்த வைஷ்னவ் (16) என்ற சிறுவன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பலத்த மழை காரணமாக தவறி சாலையில் விழுந்தான். அப்போது அந்த வழியாக வந்த பஸ் மோதியதில் அவன் உயிரிழந்தான்.

    இந்த மழை காரணமாக பல இடங்களில் பெரிய, பெரிய மரங்கள் சாலைகளில் சாய்ந்தன. கோழிக்கோடு புதியங்காடி என்ற இடத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் கணவன், மனைவி பயணம் செய்தனர். மழை காரணமாக வேரோடு சாய்ந்த ராட்சத மரம் அந்த கார் மீது விழுந்தது. இதனால் காரின் முன் பகுதி நசுங்கியதால் காருக்குள் அவர்கள் சிக்கிக்கொண்டனர். காரில் பயணம் செய்த பெண்ணின் கால் நசுங்கிய பகுதியில் மாட்டிக்கொண்டதால் அவரால் வெளியே வரமுடியவில்லை. உடனடியாக தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு அந்த பெண் காரில் இருந்து மீட்கப்பட்டார். அவருக்கு காலில் படுகாயம் ஏற்பட்டு இருந்ததால் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.



    வியாழக்கிழமை வரை கேரளா முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் திருவனந்தபுரம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, பத்தனம்திட்டா, திருச்சூர், கொல்லம், கோட்டயம் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரள பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் வருகிற 21-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரத்தில் உள்ள நெய்யாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் அந்த அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    முல்லை பெரியாறு, இடுக்கி அணைகளுக்கும் அதிகளவு தண்ணீர் வருவதால் அந்த அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் மின்கம்பிகளில் விழுந்ததால் மின்தடையும் ஏற்பட்டுள்ளது.

    எர்ணாகுளம் தெற்கு ரெயில்நிலையத்திற்குள் மழை வெள்ளம் புகுந்ததால் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் இங்கு ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    சிறையின்கீழ், கோவளம், விழிஞ்ஞம், கொல்லம் போன்ற இடங்களில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. ராட்சத அலைகளும் கரையை நோக்கி சீறிப் பாய்கிறது. இதனால் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். #KeralaRain
    மலையாள டைரக்டர் உண்ணி கிருஷ்ணன் மீது டி.வி. சீரியல் நடிகை நிஷா சாரங் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்போர் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.

    பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு பல்வேறு நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் தங்களுக்கும் இது போன்ற சம்பவங்கள் நடந்ததாக குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் மலையாள சின்னத்திரை வட்டாரத்திலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நடப்பதாக பிரபல நடிகை நிஷா சாரங் பகிரங்க புகார் கூறினார்.

    நிஷா சாரங் மலையாள டெலிவி‌ஷன் நிகழ்ச்சிகளில் பிரபலமான உப்பும், மிளகும் என்ற மெகா தொடரில் நடித்து வருகிறார். 5 குழந்தைகளுக்கு தாயாக நடிக்கும் நிஷா சாரங் இது பற்றி மேலும் கூறியதாவது:-

    டைரக்டர் உண்ணிகிருஷ்ணன் படப்பிடிப்பில் பங்கேற்க நான் செல்லும் போது என் கையை பிடித்து இழுப்பது, உடலில் கிள்ளுவது போன்ற சேட்டைகளில் ஈடுபடுவார். பல முறை படுக்கைக்கும் அழைத்தார். நான் அவரை கண்டித்தேன்.

    இது பற்றி டெலிவி‌ஷன் நிறுவன அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன். அவர்கள் டைரக்டரை கண்டிக்காமல் என்னை சமரசம் செய்தனர். இதை வெளியில் சொன்னால் வேறு வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் என்று மிரட்டினர்.

    இதனால் டைரக்டர் உண்ணிகிருஷ்ணன் சேட்டைகள் மேலும் அதிகமானது. ஒரு கட்டத்தில் என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே நான் இது பற்றி வெளியில் சொல்வேன் என்று கூறினேன். அதன் பிறகு என்னை தொடரில் இருந்து நீக்கி விட்டதாக டைரக்டர் தெரிவித்தார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இனி இந்த தொடரில் நடிக்க மாட்டேன். டெலிவி‌ஷன் நிர்வாகம் அழைத்தாலும், உண்ணிகிருஷ்ணன் டைரக்டராக இருந்தால் தொடரில் நடிக்க வரமாட்டேன் என்று கூறிவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகை நிஷா சாரங், சின்னத்திரை டைரக்டர் மீது கூறிய செக்ஸ் புகார் ஊடகங்களில் வெளியானதும் டெலிவி‌ஷன் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டைரக்டர் உண்ணி கிருஷ்ணனுக்கு கண்டனமும், நடிகை நிஷாசாரங்கிற்கு ஆதரவும் தெரிவித்து பலர் கருத்து பதிவிட்டனர்.

    மலையாள நடிகைகள் கூட்டமைப்பும், நடிகை நிஷா சாரங்கிற்கு ஆதரவு தெரிவித்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினையை எதிர்கொள்ள நிஷா சாரங்கிற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக அவர்கள் கூறி உள்ளனர்.
    படுகொலை செய்யப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல சென்ற நடிகர் சுரேஷ் கோபி, பின்னர் வெளியில் மக்களுடன் செல்பி எடுத்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். #SureshGopi
    கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த இடுக்கி மாவட்டம் வட்டவடா பகுதியை சேர்ந்த இந்திய மாணவர் சங்க தலைவர் அபிமன்யூ படுகொலை செய்யப்பட்டார்.

    அந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்க சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இன்னொரு சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் அபிமன்யூவை கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    மாணவர் அபிமன்யூ கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அபிமன்யூ ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்திற்கு சிலர் உதவிகளும் செய்ய முன்வந்தனர்.

    மேலும் மாணவர் அபிமன்யூ குடும்பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தத்தெடுத்துள்ளது. அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அந்த கட்சி செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நடிகரும், பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யுமான சுரேஷ்கோபி மாணவர் அபிமன்யூ வீட்டிற்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அந்த பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அபிமன்யூ பெயரில் தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.



    நடிகர் சுரேஷ்கோபி அங்கு வந்துள்ள தகவல் கிடைத்ததும் ஏராளமான ரசிகர்கள் அந்த வீடு முன்பு திரண்டனர். துக்கம் விசாரித்துவிட்டு வெளியில் வந்த சுரேஷ்கோபி ரசிகர்களை பார்த்ததும் அவர்களுடன் சிரித்தபடி செல்பி எடுத்துக்கொண்டார்.

    இதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் இது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. துக்க வீட்டிற்கு சென்ற இடத்தில் சுரேஷ்கோபி செல்பி எடுத்ததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் சுரேஷ்கோபியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். 
    கேரளாவில் கடந்த 2008-ம் ஆண்டு பா.ஜ.க. கட்சியில் இணைந்ததற்காக ஆட்டோ ஓட்டுனர் கொல்லப்பட்ட வழக்கில், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் தலச்சேரி பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக இருந்தவர் சித்தாரிபரம்பில் மகேஷ். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்துவந்தார். இதையடுத்து சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இவர் 2008-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அவர் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். 2008-ம் ஆண்டு நடைபெற்ற இந்த கொலை வழக்கு தலச்சேரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 11 பேரை குற்றவாளிகள் என ஏற்கனவே நீதிமன்றம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தலச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #Kerala
    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக பா.ஜ.க தலைவர் அமித் ஷா நாளை கேரளாவிற்கு பயணம் செய்ய உள்ளார்.
    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனாதா கட்சியை தயார் செய்யும் விதமாக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா ஒவ்வொரு மாநிலங்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக கேரள மாநிலத்திற்கு அமித் ஷா நாளை பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை காலை கேரளா சென்றடையும் அவர், மாநிலத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளார்.

    மேலும், சமீபகாலமாக அம்மாநிலத்தில் முக்கிய கூட்டணி கட்சியான ஸ்ரீ நாராயண தர்ம பரிபால யோகம் கட்சியுடன் பா.ஜ.க.விற்கு உரசல்கள் அதிகரித்துள்ளது. இவற்றை சரிசெய்து கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகளில் அவர் ஈடுபடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து, லட்சத்தீவு பா.ஜ.க நிர்வாகிகளையும் இந்த பயணத்தின் போது அவர் சந்தித்தித்து பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கேரள மாநிலத்தில் பாவ மன்னிப்பு கோரிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பாதிரியார்கள் மீது குற்றப்பிரிவு புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #KeralaPriests
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு பாதிரியார்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக ஐந்து பாதிரியார்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்று தெரியவந்தால் அவர்கள் மீது முறைப்படி போலீசில் புகார் செய்யப்படும் என்று சர்ச் நிர்வாகம் அறிவித்திருந்தது.

    இதற்கிடையே, தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அம்மாநில டி.ஜி.பி.யை தேசிய மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டது.

    இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 4 பாதிரியார்கள் மீது குற்றப்பிரிவு புலனாய்வு போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். #KeralaPriests
    கேரள மாநிலம் கோட்டையம் காவல்நிலையத்தில் கிறிஸ்தவ பிஷப் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Kerala
    திருவனந்தபுரம்:

    கிறிஸ்தவ மதத்தினர் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று கேரள மாநிலம். இங்கு சமீப காலமாக கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, கேரள மாநிலம் கோட்டயம் காவல்நிலையத்தில் பிஷப் ஒருவர் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் பிஷப் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கன்னியாஸ்திரியை பணியிடமாற்றம் செய்ததால் தம்மை பழிவாங்கும் நோக்கில் கன்னியாஸ்திரி தம் மீது புகார் அளித்துள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கன்னியாஸ்திரி மீது பிஷப் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Kerala
    கேரளாவில் கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதிகளை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
    திருவனந்தபுரம் :

    மாற்று பாலினத்தவர்களுக்கு என பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக  இந்தியாவிலேயே முதல் மாநிலமாக படிக்கும் மாற்று பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதிகளை அமைத்துக்கொடுக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

    மாற்று பாலினத்தவர்களுக்கு என ‘சமன்வாயா’ எனும் சிறப்பு கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கல்வி திட்டத்தில் சேர்ந்து பயிலும் மாற்று பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய தங்கும் விடுதி அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இந்த தங்கும் விடுதிகள் அமைக்கப்பட உள்ளன.

    “தங்கும் விடுதி அல்லது வாடகை வீடுகள் போன்றவைகளில் வசிக்க மூன்றாம் பாலினத்தவர்கள் எனும் ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், அவர்கள் கல்வி பயில ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, உணவும் தங்கும் இடமும் அவர்கள் கல்வி கற்க ஒரு தடையாக இருக்க கூடாது என்பதால் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது’’ என அம்மாநில கல்வித்துறை இயக்குனர் பி.எஸ்.ஸ்ரீகலா தெரிவித்துள்ளார்.

    சிறப்பு கல்வி திட்டத்தின் கீழ் நான்காம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மூன்றாம் பாலின மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் , 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,250 உதவித்தொகையாக வழங்கப்ப உள்ளது.
    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வேதிப்பொருட்கள் கலந்த 6 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #ChemicalMixedFish #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோழிக்கோடு அருகே மீன்களில் கலப்படம் செய்வதாக சுகாதாரத்துறைக்கு வந்த புகார்களை அடுத்து, சிறப்பு ஆபரேஷன் ஒன்றை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்தினர். அந்த ஆபரேஷனில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 47 வகை மீன்கள் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    பரிசோதனைக்கூடத்தில் நடத்திய ஆய்வில் மீன்களில் சோடியம் பென்ஸோயேட், அம்மோனியா ஆகியவை கலந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த வகை வேதிப்பொருட்கள் மீன்கள் கெடாமல் இருப்பதற்காக பயன்படுத்தக்கூடியவை. இதன்மூலம் உடலில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் எனவும், இந்த வகை வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த வேதிப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்கோடு பகுதியில் உள்ள எல்லைப்பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து வந்த மீன்களை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த மீன்களில் வேதிப்பொருட்கள் கலந்து இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து, வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட 6 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் கேரளாவில் வேதிப்பொருள் கலக்கப்பட்ட 12 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ChemicalMixedFish #Kerala
    மலையாள வார இதழில் எழுத்தாளர் ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது போல அட்டைப்படம் இடம்பெற்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வழக்கை கேரள ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
    கொச்சி:

    கேரள மாநிலத்தில் வெளிவரும் பிரபல மலையாள வார இதழ் கிரிஹலட்சுமி. இதன் அட்டைப் படத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன், மலையாள எழுத்தாளர் இந்து மேனன் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது போல் போஸ் கொடுத்திருந்தார். அதற்கு கீழே, ‘உற்று பார்க்காதீர்கள்; நாங்கள் தாய்ப்பால் அளிக்க வேண்டும்’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது. 

    பல்வேறு விமர்சனங்களுக்கும், விவாதங்களுக்கும் ஆளானது. அட்டைப்பட சர்ச்சை தொடர்பாக வார இதழ் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கான மனுவில், மோசமான விளம்பர செயல் என்று வழக்கறிஞர் வினோத் மேத்யூ குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான இதழின் ஆசிரியர், பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, அட்டைப் பக்கத்தில் அந்த புகைப்படத்தை அச்சிட்டிருந்தோம் என்றார். 

    முன்னதாக மனைவி தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தை, கணவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். ஆனால் அதனை பலர் கிண்டல் செய்திருந்தனர். இதனைத் தடுக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கிரிஹலட்சுமி வார இதழ் செயல்பட்டது. அட்டைப்படம் சர்ச்சை தொடர்பாக விளக்கம் அளித்த எழுத்தாளர் இந்து மேனன், தான் செய்தது சரிதான்.

    இதற்கு எதிர்வினைகள் வரும் என்று தெரியும். சுதந்திரமாக தாய்ப்பால் கொடுக்க விரும்பும் பெண்களுக்காகவே நான் போஸ் கொடுத்தேன் என்று கூறினார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், ஆபாசம் என்பது பார்ப்பவர் கண்களில் மட்டுமே உள்ளது. எனவே தாய்ப்பால் கொடுப்பது தொடர்பான அட்டைப் பட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுவதாக தெரிவித்தது. 
    குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரெயில் மூலமாக கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசியை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரெயில் மூலமாக கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசியை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்த தகவல் வருமாறு:-

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்போவதாக நாகர்கோவில் உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அதிகாலையில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அவர்கள் மதுரை-புனலூர் பயணிகள் ரெயிலில் சோதனை நடத்தியபோது, முன்பதிவில்லாத பெட்டிகளில் இருக்கைகளுக்கு அடியிலும், கழிவறைகளிலும் சிறு, சிறு மூடைகளாக 1½ டன் ரேஷன் அரிசி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், ரேஷன் அரிசி மூடைகளை ரெயிலில் மறைத்து வைத்தது யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து அரிசி மூடைகளை போலீசார் பறிமுதல் செய்து, அவற்றை உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரெயில் மூல
    செல்போன் சார்ஜர் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் ரூ.2 கோடி செலவில் உருவாக்கப்பட்ட நவீன பஸ்சை கேரள அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி அமைந்தபிறகு அரசு நடவடிக்கைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

    கேரள அரசு போக்குவரத்துக்கழகமும் தற்போது நவீன மயமாகி வருகிறது. பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு புதிய திட்டங்களும் போக்குவரத்துத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக பேட்டரியில் இயங்கும் நவீன பஸ்சை கேரள அரசு போக்குவரத்துக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

    இந்த பஸ் ரூ.2 கோடியே 5 லட்சம் செலவில் உருவாகி உள்ளது. 5 மணிநேரம் மின்சாரம் மூலம் இந்த பஸ்சின் பேட்டரியை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 350 கிலோ மீட்டர் தூரத்திற்கு பஸ்சை இயக்க முடியும். முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட இந்த பஸ்சில் பயணிகள் நெருக்கடி இன்றி பயணம் செய்ய வசதியாக 35 சொகுசு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை போன்ற வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. செல்போன் சார்ஜ் செய்யவும் ஒவ்வொரு இருக்கை அருகேயும் அதற்கான மின்சாதன வசதியும் அமைந்துள்ளது.

    வேக கட்டுப்பாட்டு கருவி, தானியங்கி முறையில் கதவுகள் மூடி-திறக்கும் வசதிகள் என்று பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்த பஸ்சில் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்களது 3 சக்கர நாற்காலியுடன் பஸ்சில் சிரமமின்றி ஏறி, இறங்கவும் தனி வழி இந்த பஸ்சில் உண்டு.

    இந்த நவீன பஸ் இன்று சோதனை முறையில் இயக்கப்படுகிறது. படிப்படியாக 300 நவீன பஸ்களை மாநிலம் முழுவதும் இயக்க அரசு திட்டமிட்டு உள்ளது. #Kerala #ElectricBus
    ×