search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97757"

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்படுவது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு இன்று கேரளாவுக்கு பயணம் செய்யவுள்ளது. #KeralaFloods #KeralaRain #PonRadhakrishnan
    சென்னை:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்துள்ளது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி சூனியமாக காட்சியளிக்கிறது.

    மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 370க்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு இன்று கேரளா சென்று ஆய்வு நடத்த உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் பணிகளை மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது என தெரிவித்துள்ளனர். #KeralaFloods #KeralaRain #PonRadhakrishnan
    கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணத்துக்கு உத்தரப்பிரதேசம் மாநில எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #UPMLAS
    லக்னோ:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.

    மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 350க்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணத்துக்கு உத்தரப்பிரதேசம் மாநில எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், கேரளா மாநிலத்தின் வெள்ள பாதிப்புக்கு உ.பி. எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் அளிக்க உள்ளோம். மேலும், எம்.எல்.ஏ நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் அளிக்கப்பட உள்ளது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நேற்று நடைபெற்ற உ.பி. சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கும், திமுக தலைவர் கருணாந்தியின்  மறைவுக்கு இரங்கல் அனுசரிக்கப்பட்டது. #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #UPMLAS
    வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு ஒருமாத ஊதியத்தை நிவாரண நிதியாக கொடுங்கள் என பினராயி விஜயன் அம்மாநில மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். #KeralaRains #KeralaFloods #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 372 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.



    இந்நிலையில், வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு ஒருமாத ஊதியத்தை நிவாரண நிதியாக கொடுங்கள் என பினராயி விஜயன் அம்மாநில மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட சேத பகுதிகளை ஆய்வுசெய்தபின், பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் மாநிலத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி வரையில் இழப்பு நேரிட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் மழை குறைந்து, வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. முகாம்களில் தங்கி இருக்கும் மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட வசதிகளை மீண்டும் மேம்படுத்த ஏராளமான நிதி தேவைப்படுகிறது.

    எனவே, கேரளாவில் வாழும் மக்களும், வெளிநாடுகளில் வாழும் கேரள மக்களும் தங்களின் ஒருமாத ஊதியத்தை மாநிலத்தின் மேம்பாட்டுக்காக அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #KeralaRains #KeralaFloods #PinarayiVijayan
    கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 28ம் தேதி பார்வையிட உள்ளார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. #KeralaRains #KeralaFloods #RahulGandhi
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 372 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. 

    இந்நிலையில், கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 28ம் தேதி பார்வையிட உள்ளார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சேதமடைந்த பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 28-ம் தேதி பார்வையிட உள்ளார். வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள செங்கண்ணூர், ஆலப்புழா, அங்கமாலி பகுதிகளை 28ம் தேதி பார்வையிடுகிறார்.

    மேலும்,  29-ம் தேதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தை பார்வையிட உள்ளார்  என தெரிவித்தனர். #KeralaRains #KeralaFloods #RahulGandhi
    கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது மீட்பு பணிகளில் சிறப்பாக சேவையாற்றிய முப்படை அதிகாரிகளுக்கு முதல் மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்து வழியனுப்பி வைத்தார். #KeralaRains #KeralaFloods #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 372 பேர் உயிரிழந்துள்ளனர்.



    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. மேலும், கேரள வெள்ள மீட்பு பணிகளுக்கு முப்படைகளை சேர்ந்தவர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட  முப்படை அதிகாரிகளுக்கு முதல் மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.



    திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற விழாவில் முதல் மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டார். அப்போது அவர் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட முப்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கேடயங்களை வழங்கி பாராட்டி வழியனுப்பி வைத்தார். #KeralaRains #KeralaFloods #PinarayiVijayan
    கேரளாவில் கடந்த நூற்றாண்டில் மிகபெரிய சேதத்தை ஏற்படுத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மகாத்மா காந்தி நிதி திரட்டி தந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. #KeralaRain #Keralaflood #MahathmaGandhi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெய்த தென்மேற்கு  பருவமழையால் அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. மொத்தமுள்ள 36 அணைகளில் 33 அணைகள்  நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்தன.

    கனமழையால் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்குக்கு மத்திய அரசு நிவாரண உதவி வழங்கியுள்ளது. மேலும் பல்வேறு மாநில அரசுகளும் நிவாரண நிதி அளித்து வருகின்றன.

    இந்நிலையில், கேரளாவில் கடந்த நூற்றாண்டில் மிகபெரிய சேதத்தை ஏற்படுத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மகாத்மா காந்தி நிதி திரட்டி தந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.



    இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கூறியதாவது:

    கடந்த நூறாண்டுக்கு முன்பு கேரளா மாநிலம் மலபார் என அழைக்கப்பட்டு வந்தது. 1924ம் ஆண்டில்  அப்போதைய மலபாரில் கனமழை பெய்தது. இதையடுத்து, அந்த பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்புக்கு உள்ளானது. 

    அதைத்தொடர்ந்து, மலபார் பகுதிக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. மகாத்மா காந்தி தான் நடத்தி வந்த யங் இந்தியா மற்றும் நவஜீவன் ஆகிய பத்திரிகைகளில் மலபாருக்கு நிவாரண உதவிகள் வழங்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.

    அவரது கோரிக்கையை ஏற்று வாசகர்கள் பலர் நிவாரண உதவிகளை அவரது பத்திரிகைகளுக்கு அனுப்பினர். அதன்படி, ஒருவர் இரண்டு மெட்டிகளையும், ஒரு பெண் தனது கொலுசுகளையும், இளைஞர் ஒருவர் தங்க காது தோடுகளை நிவாரணத்துக்கு அளித்துள்ளார். மேலும், 6 ஆயிரம் ரூபாய், 13 அணா மற்றும் 3 பைசா நிவாரண உதவித்தொகையாக வந்துள்ளதாக காந்தி கூறினார் என தெரிவித்தார். #KeralaRain #Keralaflood #MahathmaGandhi
    வீ.கே. புதூர் தாலுகா மக்கள் சார்பில் கேரளா மக்களுக்கு நிவாரண பொருட்களை தாசில்தார் அனுப்பி வைத்தார்.

    சுரண்டை:

    நெல்லை மாவட்ட கலெக்டரின் வேண்டுகோளின் படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு வீ.கே.புதூர் தாலுகா சார்பில் நிவாரண பொருட்கள் வழங்க வீ.கே. புதூர் தாசில்தார் நல்லையா கேட்டுக்கொண்டார். அதன்படி வீ.கே. புதூர் தாலுகா மக்களின் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.

    அதன்பேரில் பொது மக்கள் அரிசி, கோதுமை மாவு, மைதா, ரவை, குடிநீர் பாட்டில்கள், குளியல் சோப், துணி துவைக்கும் சோப், பவுடர், கொசுவர்த்தி சுருள், கொசு விரட்டி, மெழுகு வர்த்தி, தீப்பெட்டி, தலையணை, போர்வை, டீத்தூள், காபித் தூள், பால் பவுடர், சானிடரி நாப்கின், துணிகள், நிலக்கடலை, பயறு வகைகள், தேங்காய் எண்ணெய், ரஸ்க், பிஸ்கட், டார்ச், பேட்டரி ஆகிய பொருட்களை (பயன்படுத்திய ஆடைகளை தவிர்த்து) வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் வந்து நேரில் சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தாராளமாக வழங்கினர்.

    அதனை தாசில்தார் நல்லையா நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். கலெக்டர் அலுவலகம் மூலமாக அவை கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

    கேரளாவில் அரசின் நிவாரண முகாம்களில் தங்கி வெளியேறிவர்களின் வங்கி கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:  

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.

    மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 350க்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தில் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகி அரசின் நிவாரண முகாம்களில் தங்கி வெளியேறிவர்களின் வங்கி கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளா மாநிலத்தின் வெள்ள பாதிப்புக்கு ஆளாகி அரசு சார்பில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் பொதுமக்கள் பலர் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

    அரசின் நிவாரண முகாம்களில் தங்கி வெளியேறினவர்களின் வங்கி கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும். மேலும், நிவாரண முகாம்களில் தங்கி ஏற்கனவே வெளியேறினவர்களுக்கும் நிவாரண தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #PinarayiVijayan
    கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணத்துக்கு டெல்லி போலீசார் ஒரு கோடி ரூபாய் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #DelhiPolice
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.

    மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 350க்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.



    இந்நிலையில், கேரளா வெள்ள நிவாரணத்துக்கு டெல்லி போலீசார் ஒரு கோடி ரூபாய் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், கேரளா மாநிலத்தின் வெள்ள பாதிப்புக்கு டெல்லி போலீசார் ஒரு கோடி ரூபாய் அளிக்க உள்ளோம். டெல்லி போலீசில் பணிபுரிந்து வரும் ஊழியர்களிடம் இருந்து இந்த தொகை பெறப்பட்டு பிரதம மந்திரி நிவாரண நிதியில் இந்த தொகை சேர்க்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #DelhiPolice
    கேரளா மாநிலத்தின் வெள்ள நிவாரணத்துக்காக தனது ஒருமாத சம்பளத்தை அளிப்பதாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #Banwarilalpurohit
    சென்னை:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.  மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. மழை பாதிப்பால் இதுவரை 373 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தின் வெள்ள நிவாரணத்துக்காக தனது ஒருமாத சம்பளத்தை அளிப்பதாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ள பாதிப்புக்கு ஆளான கேரளாவில் முதல் மந்திரியின் நிவாரண நிதிக்கு ஒருமாத சம்பளத்தை வழங்க உள்ளேன் என அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே, கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிமுக மற்றும் திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #Banwarilalpurohit
    கேரளாவின் வெள்ள பாதிப்பால் பலியானவர்களுக்கு ரஷிய அதிபர் புடின் இரங்கல் தெரிவித்து, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #ViladimirPutin
    புதுடெல்லி :

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.  மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. மழை பாதிப்பால் இதுவரை 373 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு சேதங்களில் பங்கு கொள்வதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், தோழமையுள்ள ரஷ்யா இந்திய மக்களின் துக்கத்தில் பங்குகொள்கிறது. இந்த இயற்கைப் பேரிடரில் காயம் அடைந்தவர்களும் விரைவில் நலமடைவார்கள் என நம்புகிறோம் என்று எழுதியுள்ளார். 

    இதுதொடர்பாக, இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிகோலய் குடசேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளா மாநிலத்தின் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பெருத்த சேதத்துக்கு பலர் பலியாகியுள்ளனர். கேரளா துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #ViladimirPutin
    வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வந்த நிவாரண பொருட்கள் மீது சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யை ரத்து செய்வது என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #KeralaFlood #GST #CustomsDuty
    புதுடெல்லி:

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 கோடியும், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ரூ.100 கோடியும் நிதி உதவி அறிவித்தனர். இந்த ரூ.600 கோடி நிதியை கேரள அரசுக்கு நேற்று மத்திய அரசு விடுவித்தது. இத்தகவலை மத்திய அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.



    மேலும், வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வந்த நிவாரண பொருட்கள் மீது சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யை ரத்து செய்வது என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோல், திருச்சூர், பாலக்காடு, கொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 3 சுங்கச்சாவடிகளில் 26-ந் தேதி வரை, கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.  #KeralaFlood #GST #CustomsDuty  #tamilnews
    ×