search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்போ"

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. #Realme2



    ஒப்போவின் துணை பிரான்ட் ஆன ரியல்மி புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் கடந்த சில தினங்களாக வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 2 ஸ்மார்ட்போன் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனுடன் கால்மி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த சேவையில் பயனர்களுக்கு இலவச பிக்கப் மற்றும் டெலிவரி வழங்குகிறது. இத்துடன் ரியல்மி 2 ஸ்மார்ட்போன் தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது.

    புதிய ரியல்மி 2 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன் 1520x720 பிக்சல் ரெசல்யூஷன், நாட்ச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட டைமன்ட் கட் வடிவமைப்பு கொண்டுள்ள ரியல்மி 2 மாடல் அதிக பிரகாசமாக இருக்கிறது. 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என இருவித மெமரி வேரியன்ட்களில் கிடைக்கிறது.



    ரியல்மி 2 சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 1520x720 பிக்சல் 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி 
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - கலர் ஓஎஸ் 8.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ், f/2.2
    - 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, 1.12μm பிக்சல்
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. ஓ.டி.ஜி.
    - 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இந்தியாவில் ரியல்மி 2 ஸ்மார்ட்போன் டைமன்ட் பிளாக், டைமன்ட் ரெட் மற்றும் டைமன்ட் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. ரியல்மி 2 ஸ்மார்ட்போன் 3 ஜிபி வேரியன்ட் விலை ரூ.8,990 என்றும் 4 ஜிபி ரேம் வேரியன்ட் விலை ரூ.10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    செப்டம்பர் 4-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. ரியல்மி 2 ஸ்மார்ட்போனின் டைமன்ட் புளு வெர்ஷன் அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.



    அறிமுக சலுகைகள்:

    - ரியல்மி 2 ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.750 தள்ளுபடி பெற முடியும்.
    - ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.4200 மதிப்புடைய உடனடி சலுகைகள் மற்றும் 120 ஜிபி கூடுதல் டேட்டா 
    - வட்டியில்லா மாத தவணை முறை வசதி
    - பேடிஎம் விமான பயணச்சீட்டுகள் மற்றும் லென்ஸ்கார்ட் சார்பில் பிரத்யேக சலுகைகள்
    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Oppo


    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் X போன்ற நாட்ச் ஸ்கிரீன் கொண்ட ஒப்போ ஏ5 மாடல் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 720x1520 பிக்சல், 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2 , 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, எல்இடி ஃபிளாஷ் கொண்டுள்ளது. செல்ஃபிக்களை எடுக்க 8 எம்பி கேமரா, ஏ.ஐ. பியூட்டி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.



    ஒப்போ ஏ5 சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 1520x720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - கலர் ஓ.எஸ். 5.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
    - 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இந்தியாவில் ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆஃப்லைன் தளங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் ஒப்போ நிறுவனம் எஃப்9 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.23,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
    இந்தியாவில் ஒப்போ நிறுவனத்தின் எஃப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. 25 எம்பி செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #OPPOF9Pro


    இந்தியாவில் ஒப்போ எஃப்9 ஸ்மார்ட்போனினை தொடர்ந்து எஃப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர், 6 ஜிபி ரேம், கலர் ஓஎஸ் 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.85, 2 எம்பி இரண்டாவது கேமரா, 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர், ஏ.ஐ. சோனி IMX576 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 



    ஒப்போ எஃப்9 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2280x1080 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர் 
    - ARM மாலி-G72 MP3 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஓஎஸ் 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1
    - 16 எம்பி பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ், f/1.85
    - 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, ஏஐ, சோனி IMX576 சென்சார்
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    ஒப்போ எஃப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் சன்ரைஸ் ரெட், ட்விலைட் புளு, ஸ்டேரி பர்ப்பிள் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ஆகஸ்டு 31-ம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அறிமுக சலுகைகள்

    - ரூ.299 சலுகையை தேர்வு செய்வோருக்கு 3200 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் ரூ.4900 மதிப்புள்ள சலுகைகள்
    - ஒரு முறை ஸ்கிரீன் மாற்றிக்கொள்ளும் வசதி
    - ஆஃப்லைனில் முன்பதிவு செய்வோருக்கு 3D மெட்டாலிக் பாட்டில்
    - தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10% கேஷ்பேக் மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி
    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் எஃப்9 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #OPPOF9


    ஒப்போ நிறுவனத்தின் எஃப்9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக எஃப்9 ஸ்மார்ட்போன் வியட்நாமில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டன. 4 ஜிபி ரேம் கொண்டிருக்கும் எஃப் 9 மாடலில் 25 எம்பி செல்ஃபி கேமரா, ஹெச்.டி.ஆர். வசதி மற்றும் டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

    வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் கேமரா செயலியில் கூகுள் லென்ஸ் வசதியை வழங்குவதாக கூறிவருகிறது. இத்துடன் ஃபேஸ் அன்லாக் வசதி மற்றும் ஏ.ஐ. பியூட்டி தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

    ஒப்போ எஃப்9 சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2280x1080 பிக்சல் FHD பிளஸ் 19.5:9 டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர் 
    - ARM மாலி-G72 MP3 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஓஎஸ்5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.85
    - 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஒப்போ எஃப்9 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஒப்போ எஃப்9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதன் விற்பனை துவங்க இருக்கிறது.
    ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Oppo #smartphone


    ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் PBEM00, PBET00 மாடல் நம்பர்களுடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட மாடல்களும், சற்று விலை குறைந்த வெர்ஷன் PAGM00, PAGT00 மாடல் நம்பர்களுடன் பின்புற கைரேகை சென்சார் கொண்ட மாடல்கள் உருவாகின்றன.

    அந்த வகையில் ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போனின் முதல் போஸ்டர் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ஆர்17 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா மாட்யூல்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கின்றன. கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 10 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.



    ஒப்போ ஆர்17 மாடலின் மற்றொரு படத்தில் F9/F9 ப்ரோ போன்ற நாட்ச், பின்புறம் டூயல் கேமரா செட்டப் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கிறது. இதிலும் கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டுள்ளது. ஒப்போ ஆர்17 மாடலில் ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஒப்போ மாடல்களில் 6.3 இன்ச், 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும் புதிய ஸ்மார்ட்போன்கள் TENAA மூலம் சான்று பெறும் போது இவற்றின் முழு விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருக்கும் நிலையில், மேலும் இரு நிறுவனங்கள் இதுபோன்ற ஸ்மார்ட்போனினை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. #smartphone


    சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களான சியோமி மற்றும் ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

    சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 2019-இல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எK்ஸ் என அழைக்கப்படலாம் என்றும் சமீபத்தில் வெளியான தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஃப் என அழைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாம்சங்கை தொடர்ந்து ஹூவாய் நிறுவனம் உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியான நிலையில், சியோமி மற்றும் ஒப்போ நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 



    இருநிறுவனங்களும் சீன நிறுவனங்களிடம் இருந்து மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் எல்ஜி நிறுவனமும் விநியோகம் செய்யலாம் என கூறப்படுகிறது. சியோமி நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை வெளிப்புறம் மடிக்கும் படி வடிவமைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் சாம்சங் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் உள்புறம் மடிக்கக்கூடிய வடிவமைப்பை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒப்போவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எம்மாதிரியான வடிவமைப்பு கொண்டிருக்கும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    சியோமி மற்றும் ஒப்போ நிறுவனங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எனினும் சியோமி மற்றும் ஒப்போ நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை சாம்சங் மற்றும் ஹூவாய் நிறுவனங்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படுகின்றன. சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் போட்டி நிறுவன மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. #Xiaomi #smartphone
    ஒப்போ நிறுவனத்தின் ஆர்17 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Oppo


    ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் PBCM00 மற்றும் PBCT00 மாடல் எண்களில் சான்று பெற்றிருக்கிறது. ஆர்15 சீரிஸ் இன் மேம்படுத்தப்பட்ட மாடலாக உருவாகி இருக்கும் ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் டிஸ்ப்ளே, 19:9 ரக OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    இத்துடன் டூயல் பிரைமரி கேமரா, 3415 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. சீனாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 16 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.



    ஒப்போ ஆர்17 மற்றும் ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை என்பதால், புதிய மாடல்களில் 3D ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இரண்டு ஒப்போ ஸ்மார்ட்போன்களும் ஆகஸ்டு மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த வகையில் புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்களின் முழு விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. #Oppo #smartphone
    ஒப்போ மற்றும் அமேசான் இந்தியா இணைந்து வெளியிட்ட ரியல்மி 1 ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய 40 நாட்களில் 4 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. #realme1 #smartphone
     


    ஒப்போ மற்றும் அமேசான் இந்தியா நிறுவனங்கள் இணைந்து ரியல்மி 1 எனும் ஸ்மார்ட்போனினை மே மாதத்தில் இந்தியாவில் வெளியிட்டன.

    பட்ஜெட் விலையில் அறிமுகமான ரியல்மி 1 ஃபிளாஷ் விற்பனையில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து 40 நாட்களில் 4 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ ரியல்மி 1 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் முழுமையாக விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமேசான தளத்தில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இடம்பிடித்து இருக்கும் ரியல்மி 1 ஸ்மார்ட்போன் பயனர் வழங்கும் மதிப்பீடுகளில் 4.4 புள்ளிகளை பெற்றிருக்கிறது. 



    ரியல்மி 1 சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர்
    - மாலி-G72 MP3 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஓஎஸ் 5.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3410 எம்ஏஹெச் பேட்டரி

    ரியல்மி 1 ஸ்மார்ட்போன் மூன்லைட் சில்வர், சோலார் ரெட் மற்றும் டையமன்ட் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் ரூ.8,990, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.10,990 மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி  கொண்ட மாடல் விலை ரூ.13,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஒப்போ நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலையை தொடர்ந்து பார்ப்போம். #oppoa3s



    ஒப்போ நிறுவனத்தின் A3s ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களாக டூயல் பிரைமரி கேமரா, 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்டவை இருக்கிறது.

    6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1520 பிக்சல் சூப்பர் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ஒப்போ A3s ஸ்மார்ட்போனில் அழகிய செல்ஃபிக்களை எடுக்க ஒப்போவின் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் 2.0 வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    முன்னதாக ஒப்போ A3 ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து புதிய A3s வெளியிடப்பட்டு இருக்கிறது. சீனாவில் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட A3 ஸ்மார்ட்போனில் 19:9 ரக பெசல்-லெஸ் டிஸ்ப்ளே மற்றும் ஐபோன் X போன்ற நாட்ச் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஒப்போ A3s சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1520 பிக்சல் சூப்பர் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமராக்கள், எல்இடி ஃபிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, AI பியூட்டி தொழில்நுட்பம் 2.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த கலர் ஓ.எஸ். 5.1
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - 4230 எம்ஏஹெச் பேட்டரி

    இந்தியாவில் ஒப்போ A3s 2 ஜிபி மாடலின் விலை ரூ.10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ரெட் மற்றும் டார்க் பர்ப்பிள் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கும் ஒப்போ A3s ஜூலை 15-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட், அமேசான், பேடிஎம் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் விற்பனைக்கு வருகிறது. #oppoa3s #smartphone 
    ஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் டெல்லியில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #OPPOFindX



    ஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய ஃபைன்ட் X ஸ்மார்ட்போனில் 6.42 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED பானரோமிக் ஆர்க் ஸ்கிரீன், 19:5:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த கலர் ஓஎஸ் 5.1 வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், ஏஐ போர்டிரெயிட்கள், ஏஐ ஸ்கிரீன் ரெக்ஃனீஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 800 சீன்களை கண்டறியும், இதன் ஸ்லைடிங் அம்சம் சுமார் 3,00,000 முறைக்கும் மேல் சோதனை செய்யப்பட்டிருக்கிறது.



    இதன் 3D ஃபேஸ் அன்லாக் வசதி ஓ-ஃபேஸ் ரெக்ஃனீஷன் (O-Face Recognition) என அழைக்கப்படுகிறது. முகத்தில் உள்ள 15,000 முக நுனுக்கங்களை ஸ்கேன் செய்து இந்த தொழில்நுட்பம் இயங்குகிறது. இது வழக்கமான கைரேகை தொழில்நுட்பத்தை விட 20 மடங்கு வேகமாக வேலை செய்கிறது. இதன் 25 எம்பி செல்ஃபி கேமரா இயற்கையாக செல்ஃபிக்களை அழகாக்குகிறது. 

    இத்துடன் 3D லைட்டிங் தொழில்நுட்பம் போர்டிரெயிட்களுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இத்துடன் ஆப்பிள் அனிமோஜி போன்று 3D ஓமோஜி தொழில்நுட்பம் முக பாவனங்களை பதிவு செய்யும்.






    ஒப்போ ஃபைன்ட் X சிறப்பம்சங்கள்:

    - 6.42 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED 19:5:9 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10nm சிப்செட்
    - அட்ரினோ 630 GPU
    - 8 ஜிபி ரேம்
    - 256 ஜிபி இன்டெர்னல் மெமகி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓஎஸ் 5.1
    - டூயல் சிம்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் f/2.0, OIS
    - 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
    - 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, DSP மாட்யூல், NXP நாய்ஸ் ரிடக்ஷன்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3,730 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்



    ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் போர்டாக்ஸ் ரெட் மற்றும் கிளேசியர் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் விலை ரூ.59,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 3-ம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது. புதிய ஃபைன்ட் X ஸ்மார்ட்போனின் லம்போர்கினி எடிஷன் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் ஜூலை முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்வோருக்கு ரூ.3000 மதிப்பிலான சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 
    ஒப்போ நிறுவனத்தின் A3s ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஒப்போ நிறுவனத்தின் A3s ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு வித வேரியன்ட்களில் வெளியிடப்பட இருக்கும் ஒப்போ A3s ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் அழகிய செல்ஃபிக்களை எடுக்க ஒப்போவின் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் 2.0 வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ஒப்போ A3 ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து புதிய A3s வெளியிடப்பட இருக்கிறது. சீனாவில் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட A3 ஸ்மார்ட்போனில் 19:9 ரக பெசல்-லெஸ் டிஸ்ப்ளே மற்றும் ஐபோன் X போன்ற நாட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.



    ஒப்போ A3s சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1520 பிக்சல் சூப்பர் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
    - 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
    - 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமராக்கள், எல்இடி ஃபிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, AI பியூட்டி தொழில்நுட்பம் 2.0
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4230 எம்ஏஹெச் பேட்டரி

    இந்தியாவில் ஒப்போ A3s 2 ஜிபி மாடலின் விலை ரூ.10,990 முதல் துவங்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ரெட் மற்றும் டார்க் பர்ப்பிள் என இரண்டு வித நிறங்களில் வெளியிடப்படுகிறது.
    ஒபோபோ ஃபைன்ட் X லம்போர்கினி லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் பாரிஸ் நகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போனுடன் லம்போர்கினி லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் கார்பன் ஃபைபர் டெக்ஸ்ச்சர் மற்றும் 3D லம்போர்கினி கார் லோகோ பொறிக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் VOOC ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் 2016 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    ஃபைன்ட் X லம்போர்கினி லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனில் வோல்டேஜ் பிளஸ் அல்காரிதம் மற்றும் பிரத்யேக கஸ்டமைஸ் செயய்ப்பட்ட ஒப்போ உருவாக்கிய சூப்பர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் 2500 எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரியை வெறும் 15 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் என ஒப்போ தெரிவித்திருந்தது.

    ஒப்போ ஃபைன்ட் X லம்போர்கினி லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருக்கும் சூப்பர் VOOC சார்ஜிங் தொழில்நுட்பம் இதில் உள்ள 3400 எம்ஏஹெச் பேட்டரியை 0-100% சார்ஜ் செய்ய 35 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. இது சக்திவாயந்த சூப்பர் VOOC சார்ஜரை பயன்படுத்துகிறது.



    மற்ற சிறப்பம்சங்கள் ஃபைன்ட் X மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. இதில் 6.42 இன்ச் 2340x1080 பிக்சஸ், ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED 19:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ பானரோமிக் ஆர்க் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது.

    ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் கலர் ஓஎஸ் 5.1, 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், OIS, 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏஐ போர்டிரெயிட் மற்றும் ஏஐ சீன் ரெக்ஃனீஷன் மற்றும் 25 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ஒப்போ ஃபைன்ட் X லம்போர்கினி எடிஷன் மாடலில் 512 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விலை 1699 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,34,470) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரத்யேக பெட்டியில் பேக் செய்யப்பட்டிருக்கும் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாத வாக்கில் ஃபைன்ட் X ஸ்மார்ட்போனுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×