search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97865"

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் 20 ஓவர் போட்டியில் பும்ரா 50 விக்கெட்டை எடுத்துள்ளார். #Ashwin #JaspritBumrah #INDvAUS
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தோற்றாலும் பும்ராவின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 16 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா 2-வது விக்கெட்டான பீட்டர் ஹேண்ட்ஸ் கோயை அவுட் செய்த போது 50-வது விக்கெட்டை தொட்டார். 20 ஓவர் போட்டியில் 50 விக்கெட்டை எடுத்த 2-வது இந்திய வீரர் பும்ரா ஆவார்.

    அஸ்வின் 47 போட்டியில் விளையாடி 52 விக்கெட் கைப்பற்றி உள்ளார். பும்ரா 41 ஆட்டத்தில் 51 விக்கெட் எடுத்துள்ளார். இந்த தொடரில் அவர் அஸ்வினை முந்தி முதல் இடத்தை பிடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    சர்வதேச அளவில் அப்ரிடி 98 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். தற்போது விளையாடும் வீரர்களில் ரஷீத்கான் (ஆப்கானிஸ்தான்) 75 விக்கெட் கைப்பற்றி 6-வது இடத்தில் உள்ளார். #Ashwin #JaspritBumrah #INDvAUS
    20 ஓவர் சர்வதேச போட்டியில் இந்திய அணி தனது கடைசி பந்தில் நான்கு முறை தோல்வியை தழுவி உள்ளது. #INDvAUS #AUSvIND
    20 ஓவர் சர்வதேச போட்டியில் இந்திய அணி தனது கடைசி பந்தில் தோல்வியை தழுவியது 4-வது முறையாகும்.

    இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு நியூசிலாந்திடமும் (வெலிங்டன்), 2010-ல் இலங்கையிடமும் (கிராஸ் ஐலெட்), 2014-ம் ஆண்டு இங்கிலாந்திடமும் (மும்பை) கடைசி பந்தில் இந்திய அணி தோற்று இருந்தது. #INDvAUS #AUSvIND
    விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 போட்டியில், பரபரப்பான கட்டத்தில் இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா. #INDvAUS
    இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர்.

    ரோகித் சர்மா 5 ரன்னிலும், விராட் கோலி 24 ரன்னிலும், ரிஷப் பந்த் 3 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடிய லோகேஷ் ராகுல் அரை சதமடித்து அவுட்டானார்.

    மகேந்திர சிங் தோனி ஓரளவு தாக்குப்பிடித்து 29 ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்துள்ளது.

    ஆஸ்திரேலியா சார்பில் நாதன் கவுல்டர் நைல் 3 விக்கெட் வீழ்த்தினார்.



    இதையடுத்து, 127 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா களமிறங்கியது. அந்த அணி 5 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது.

    அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல், தொடக்க ஆட்டக்காரரான ஆர்கி ஷாட்டுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இருவரும் 84 ரன்கள் சேர்த்தனர். ஆர்கி ஷாட் 37 ரன்னில் அவுட்டானார். கிளென் மேக்ஸ்வெல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் வெளியேறினார்.

    ஆஸ்திரேலிய அணி இடையில் விக்கெட்டுகளை இழந்து திணறினாலும், பரபரப்பான கட்டத்தில் பொறுப்புடன் ஆடி வெற்றி பெற்றது.

    அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து, டி20 தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. #INDvAUS
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், லோகேஷ் ராகுலின் அரை சதத்தால் இந்திய அணி 127 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. #INDvAUS
    இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர்.

    ரோகித் சர்மா 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து கேப்டன் விராட் கோலி இறங்கினார். ராகுலுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இருவரும் இணைந்து 55 ரன்கள் சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 69 ஆக இருக்கும் போது விராட் கோலி 24 ரன்னில் வெளியேறினார்.

    அவரை தொடர்ந்து இறங்கிய ரிஷப் பந்த் 3 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனால் முதல் 10 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய லோகேஷ் ராகுல் அரை சதமடித்து அவுட்டானார். அடுத்து வந்த வீரர்களில் தோனி மட்டும் தாக்குப்பிடித்தார். அவர் 29 ரன்னுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 127 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. #INDvAUS
    இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களமிறங்கி உள்ளனர். #INDvAUS
    இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் விளையாடி வருகின்றனர். #INDvAUS
    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை (24-ந்தேதி) நடக்கிறது. #AUSvIND

    விசாகப்பட்டினம்:

    இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடுவதற்காக ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை (24-ந்தேதி) நடக்கிறது.

    இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்து விளையாடிய போது டெஸ்ட் தொடரையும், ஒரு நாள் தொடரையும் முதல் முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது.

    தற்போது சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எளிதில் வீழ்த்தும் ஆர்வத்துடன் இருக்கிறது.

    நியூசிலாந்து தொடரில் பாதியில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளார். அவரது அதிரடி ஆட்டத்தை காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர். இதே போல வேகப்பந்து வீரர் பும்ராவும் மீண்டும் களம் திரும்பி உள்ளார். ஆல்ரவுண்டர் ஹார்த்திக் பாண்ட்யா காயத்தால் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகி உள்ளார். அவரது இடத்தில் ஜடேஜா தேர்வாகி இருக்கிறார்.

    பேட்டிங்கில் ரோகித் சர்மா, தவான், டோனி, அம்பதி ராயுடு ஆகியோரும் பந்து வீச்சில் பும்ரா, யசுவேந்திரசஹால், கர்ணல் பாண்ட்யா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன்பிஞ்ச், மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ் ஸ்டோனிஸ், ஹேண்ட்ஸ் ஹோம் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் வேட்கையில் உள்ளது.

    இரு அணிகளும் நாளை மோதுவது. 19-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 18 ஆட்டத்தில் இந்தியா 11-ல் ஆஸ்திரேலியா 6-ல் வெற்றி பெற்றுள்ளன. 1 ஆட்டம் முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலி வி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், டோனி, விஜய் சங்கர், தினேஷ் கார்த் திக், ரி‌ஷப்பன்ட், கர்ணல் பாண்ட்யா, லோகேஷ் ராகுல், உமேஷ் யாதவ், பும்ரா, மான்யக் மார்க்கன்டே, சித்தார்த் கவூல், யசுவேந்திர சஹால்.

    ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ் ஹோம், பெகரன்டர்ஸ், அலெக்ஸ் கேர்ரே, நாதன் கோல்ட்டர், நாதன் லயன், கும்மின்ஸ், கானே ரிச்சர்சன், டி ஆர்சி ஷார்ட், ஸ்டோன்ஸ், டர்னா, ஆடம் ஜம்பா, ஹைரிச்சர்ட்சன். #viratkohli #AUSvIND

    இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒருநாள் ஆட்டத்தில் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. #INDvAUS
    ஐதராபாத்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் ஆட்டம் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் வருகிற 24-ந்தேதி விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. 2-வது போட்டி 27-ந்தேதி பெங்களூரில் நடக்கிறது.

    இதை தொடர்ந்து ஒருநாள் ஆட்டங்கள் மார்ச் 2, 5, 8, 10, 13 ஆகிய தேதிகளில் ஐதராபாத், நாக்பூர், ராஞ்சி, மொகாலி, புதுடெல்லி ஆகிய இடங்களில் முறையே நடக்கிறது. இந்தப்போட்டிகளில் விளையாடுவதற்காக ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று முதல் பயிற்சியை தொடங்குகிறார்கள்.

    இந்தியாவுடன் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:-

    ஆரோன் பிஞ்ச், ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ் கோப், கம்மின்ஸ், அலெக்ஸ் கேரே, நாதன் கோல்ட்டர், நாதன் லயன், பெகரன்டார்ப், கானே ரிச்சர்ட்சன், டிஆர்சி ஹார்ட், ஸ்டோனிஸ், டர்னர், ஆடம் ஜம்பா, ஹை ரிச்சர்ட்சன். #INDvAUS
    இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரின்போது ரிஷப் பந்தை தொடக்க ஆட்டக்காரராக இறக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே கூறினார். #ShaneWarne #RishabhPant
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் டோனி, ரிஷப் பந்த் இருவரும் விளையாட வேண்டும். ரிஷப் பந்த், அற்புதமான வீரர். ஒரு பேட்ஸ்மேனாக அவர் ஏன் தொடரக்கூடாது? என்னைக்கேட்டால் அவரை ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக கூட இறக்கலாம்.

    தற்போது தொடக்க வரிசை பணியை ஷிகர் தவான் சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் ரிஷப் பந்தை ரோகித் சர்மாவுடன் இறக்கும்போது, இந்திய அணிக்கு நெருக்கடி வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. அத்துடன் அது ஒரு வித்தியாசமான யுக்தியாக எதிரணிக்கு ஆச்சரியத்தை அளிக்கும். விரைவில் தொடங்க உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரின் போது ரிஷப் பந்தை தொடக்க ஆட்டக்காரராக விளையாட வைத்து சோதித்து பார்க்கலாம். ஷிகர் தவானை அதற்கு அடுத்த வரிசையில் ஆட வைக்கலாம்.

    இவ்வாறு வார்னே கூறினார். #ShaneWarne #RishabhPant

    இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீரர் ஸ்டார்க் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. #Starc #INDvAUS
    மெல்போர்ன்:

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதன் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது.

    இதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது.

    முதல் 20 ஓவர் ஆட்டம் வருகிற 24-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. 27-ந்தேதியுடன் 20 ஓவர் முடிகிறது. ஒருநாள் தொடர் மார்ச் 2-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. மார்ச் 13-ந்தேதியுடன் ஒரு நாள் தொடர் முடிகிறது.

    உலக கோப்பைக்கு முன்பு நடைபெறும் இந்த ஒரு நாள் தொடர் மீத அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீரர் ஸ்டார்க் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இதனால் கானே ரிச்சர்ட்சன் அணிக்கு மீண்டும் அழைக்கப்படுவார்.

    பீட்டர் சிடில், மிட்செல் மார்ஷ், ஸ்டான்லேக் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    ஆரோன்பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஹேன்ட்ஸ்ஹோம், மேக்ஸ்வெல், ஆஸ்டன் டர்னர், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, கும்மின்ஸ், நாதன் கோல்ட்டர், கேன் ரிச்சர்ட்சன், ஜோசன் பெக்ரன் மார்ப், நாதன் லயன், ஆடம் ஜம்பா. டி ஆர்சி ஷார்ட், ஜியே ரிச்சர்ட்சன்.

    இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் விளையாடி வருகிறது. வருகிற 10-ந் தேதியுடன் இந்த தொடர் முடிகிறது. அதன் பிறகு இந்தியா- ஆஸ்திரேலியா தொடர் நடைபெறும். #Starc #INDvAUS
    ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இலங்கை அணி 366 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.
    கான்பெரா:

    ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பெராவில் நடந்தது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 534 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 215 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது.

    319 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இலங்கைக்கு 516 ரன் நிர்ணயிக்கப்பட்டது.

    இலங்கை அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ரன் எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 499 ரன் தேவை. கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இலங்கை தொடர்ந்து விளையாடியது.

    ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி நிலை குலைந்தது. இலங்கை அணி 51 ஓவர்களில் 149 ரன்னில் சுருண்டது.

    இதனால் ஆஸ்திரேலியா 366 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மெண்டீஸ் அதிகபட்சமாக 42 ரன் எடுத்தார். ஸ்டார்க் 5 விக்கெட்டும், கும்மின்ஸ் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்த டெஸ்டில் ஸ்டார்க்கின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அவர் மொத்தம் 10 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்த வெற்றிமூலம் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் அந்த அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. #SLvAUS
    ஆஸ்திரேலியாவில் உள்ள டார்லிங் நதியில் கோடிக்கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால், அந்த நதி வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது. #Australiafishdead #darlingriver
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் புகழ்மிக்க டார்லிங் நதி உள்ளது. இது முர்ரே டார்லிங் நதியின் ஒரு பகுதியாகும். பல ஆயிரம் கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்நதியில் மீன்கள் உள்ளிட்ட பல நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கடுமையான வறட்சி காரணமாக ஆற்றில் உள்ள மீன்கள் செத்து மிதக்கத் தொடங்கி உள்ளன. நேற்று நதிக்கு அருகே உள்ள மெனின்டீ பகுதி மக்கள், நதியின் மேற்பகுதியில் மீன்கள் இறந்து மிதந்து கொண்டிருப்பதைக்  கண்டனர்.

    இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 'வெப்பநிலை மாற்றம் மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து ஆல்கா நச்சாக மாறியதால், மீன்கள் சுவாசிக்க இயலாமல் இறந்துள்ளன' என கூறினர்.

    ஆனால், சுற்றி இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து ஆற்றில் கலக்கும் மாசு தான் மீன்கள் சாவதற்கு உண்மையான காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    கடுமையான வெப்பநிலை ஆஸ்திரேலியாவை தாக்கி 40க்கும் மேற்பட்ட குதிரைகள் இறந்தன. இந்நிலையில், திடீரென வெப்பநிலை குறைந்ததாலும், பருவகால மழை காலதாமதமாக பெய்ததாலும் ஆஸ்திரேலிய மக்கள் பல சுற்றுச்சூழல் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதேபோல், நதியில் ஆக்ஸிஜன் தட்டுபாட்டின் காரணமாக மீன்கள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில், ஆஸ்திரேலியா வரலாறு காணாத வெள்ளப்பெருக்கையும் சந்தித்தது. இதன் விளைவாக குயின்ஸ்லேண்டின் பிரதான டின்டிரி ஆற்றின் நீர்மட்டம் 12.06 மீட்டர் உயர்ந்தது. இது கடந்த நூற்றாண்டில் இதுவரை எட்டாத நீர்மட்டம் ஆகும். இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.

    இதே நிலை நீடித்தால், டார்லிங் ஆற்றில் எஞ்சியிருக்கும் மீன்கள் இறப்பதற்கும் வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  #Australiafishdead #darlingriver

    இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் பேட் கம்மின்சின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #AUSvSL #PatCummins
    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.

    முதல் நாளில் இலங்கை முதல் இன்னிங்சில் 144 ரன்னில் சுருண்டது. பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா, தனது முதல் இன்னிங்சில் லாபஸ்சேக்னே மற்றும் டிராவிஸ் ஹெட்டின் பொறுப்பான ஆட்டத்தால் 323 ரன்னில் ஆல் அவுட்டானது.

    இலங்கை சார்பில் வேகப்பந்து வீச்சாளர் லக்மல் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.



    பின்னர் 179 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்சின் மிரட்டலான பந்து வீச்சில் இலங்கை அணி சிக்கியது.

    இதனால் இலங்கை அணி 50.5 ஓவரில் 139 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக திரிமானே 32 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், ஜே ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 40 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற்து. பேட் கம்மின்ஸ்  ஆட்ட நாயகன் விருது பெற்றார். #AUSvSL #PatCummins
    ×