search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97865"

    ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளது குறித்து ஒரு பார்வை. #AUSvIND
    இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 128 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 73-ல் ஆஸ்திரேலியாவும், 45-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 10 ஆட்டங்களில் முடிவில்லை.

    ஆஸ்திரேலிய மண்ணில் இவ்விரு அணிகளும் சந்தித்த 48 ஒரு நாள் போட்டிகளில் 35-ல் ஆஸ்திரேலியாவும், 11-ல் இந்தியாவும் வெற்றி கண்டன. 2 ஆட்டத்தில் முடிவில்லை.

    ஒரு நாள் கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் உலக கோப்பை உள்பட இதுவரை 12 போட்டித் தொடர்களில் பங்கேற்று இருக்கிறது. இதில் 1985-ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் மற்றும் 2008-ம் ஆண்டு நடந்த முத்தரப்பு ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் மட்டும் இந்திய அணி வாகை சூடியது. கடைசியாக 2016-ம் ஆண்டு ஜனவரியில் இங்கு நடந்த ஒரு நாள் தொடரை இந்திய அணி 1-4 என்ற கணக்கில் இழந்து இருந்தது. #AUSvIND
    சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. #AUSvIND #bhuvneshwarkumar
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி பெற்று சாதனைப் படைத்தது. இதையடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன.

    இதில், இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. துவக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச், கேரே களமிறங்கினர். ஆரோன் பிஞ்ச் 6 ரன்கள் எடுத்த நிலையில், புவனேஸ்வர் குமார் பந்தில் போல்டாகி வெளியேறினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் நூறாவது விக்கெட்டை புவனேஸ்வர் குமார் கைப்பற்றி உள்ளார். அதன்பின்னர் கேரே-கவாஜா ஜோடி நிதானமாக விளையாடியது.

    இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

    ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரே (விக்கெட் கீப்பர்) உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டாயின்ஸ், கிளென் மேக்ஸ்வெல், நாதன் லயன், பீட்டர் சிடில், ரிச்சர்ட்சன், ஜேசன் பெரண்டார்ப்,

    இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்) ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், முகம்மது சமி, கலீல் அகமது. #AUSvIND #bhuvneshwarkumar
    ஆஸ்திரேலியாவில் இந்திய தூதரகத்துக்கு வந்த மர்ம பார்சலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Australia #IndianConsulate
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தின் தலைநகர் மெல்போர்னில் இந்தியா உள்பட பல்வேறு சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன.

    இந்த நிலையில் நேற்று அங்குள்ள இந்திய தூதரகத்துக்கு மர்ம பார்சல் ஒன்று வந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் பாகிஸ்தான், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து, கிரீஸ், இந்தோனேசியா, இங்கிலாந்து மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் தூதரகங்களுக்கும் மர்ம பார்சல்கள் வந்தன.

    இதன் காரணமாக மெல்போர்ன் நகரம் முழுவதும் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து அனைத்து தூதரகங்களிலும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசர சேவைகள் குழுவினர் குவிந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூதரகங்களில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    பின்னர் தீயணைப்பு வீரர்கள் அந்த மர்ம பார்சல்களை கைப்பற்றி, ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவற்றில் ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையிலான பொருட்கள் ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர்தான் மெல்போர்ன் நகரில் இயல்பு நிலை திரும்பியது.

    சர்வதேச நாடுகளின் தூதரகங்களுக்கு மர்ம பார்சல் வந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.   #Australia #IndianConsulate
    இந்தியா வந்துள்ள நார்வே பிரதமர் மற்றும் ஸ்பெயின், ஆஸ்திரேலியா நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று சந்தித்துப் பேசினார். #SushmaSwaraj
    புதுடெல்லி:

    நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் நார்வே அரசின் உயரதிகாரிகள் குழுவும் வந்துள்ளது.

    நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் இன்று காலை இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார்.

    இதேபோல், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஸ்பெயின் வெளியுறவு துறை மந்திரி ஜோசப் போரெல் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டின் வெளியுறவு துறை மந்திரி மாரிஸ் பெயின் ஆகியோரையும் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று சந்தித்துப் பேசினார்.



    அப்போது, இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது, பல்வேறு துறைகளில் இணைந்து செயலாற்றுவது தொடர்பாக இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

    சுஷ்மா சுவராஜை சந்தித்த பின்னர், நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். #SushmaSwaraj
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 சதங்கள் அடித்த புஜாரா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டி சென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். #AUSvIND #Pujara
    இந்திய அணி முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான புஜாரா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார். சிட்னி டெஸ்டில் 193 ரன் குவித்ததன் மூலம் ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. 4 டெஸ்டிலும் (7 இன்னிங்ஸ்) சேர்த்து 521 ரன் குவித்ததன் மூலம் தொடர் நாயகன் விருதும் கிடைத்தது.

    தொடர்நாயகன் விருது பெற்ற புஜாரா கூறியதாவது:-

    நான் இடம்பெற்றுள்ள சிறந்த இந்திய அணி இதுவாகும். டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வெளிநாட்டில் தொடரை வென்றுள்ளோம். ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது என்பது எளிதானதல்ல. இதனால் இந்திய வீரர்களை பாராட்டுகிறேன்.

    4 வேகப்பந்து வீரர்கள் 20 விக்கெட்டை வீழ்த்துவது எளிதானதல்ல. எனவே அனைத்து வேகப்பந்து வீரர்கள் மற்றும் சுழற்பந்து வீரர்கள் பாராட்டப்படக் கூடியவர்கள். இது உண்மையிலேயே வியக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். #AUSvIND #Pujara
    ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இதை தனது மிகப்பெரிய சாதனையாக கருதுவதாகவும் விராட் கோலி கூறியுள்ளார். #AUSvIND #ViratKohli
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை எனது மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன்.

    2011-ல் உலக கோப்பையை வென்றபோது நான் இளம் வீரராக இருந்தேன். அப்போது மற்ற வீரர்களின் உத்வேகத்தை பார்த்தேன்.

    தற்போது தொடரை வென்ற இந்திய அணி அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்த வீரர்கள் சாதிக்கக்கூடிய திறமை படைத்தவர்கள். இதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

    நான் கேப்டனாக பொறுப்பேற்று 4 ஆண்டில் இந்த சாதனையை படைத்து இருக்கிறேன். இதற்கு வீரர்களின் செயல்பாடுதான் காரணம். இந்த வீரர்களுக்கு நான் கேப்டனாக இருப்பது பெருமை அளிக்கிறது. உண்மையிலேயே இது மிகுந்த மகிழ்ச்சிகரமான தருணம் ஆகும்.



    இந்த டெஸ்ட் தொடரில் பேட்டிங், மற்றும் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. புஜாராவின் பேட்டிங் நம்ப முடியாத வகையில் அபாரமாக இருந்தது. அவர் மிகவும் சிறப்புக்கு உரிய வீரர் ஆவார்.

    இதேபோல மெல்போர்ன் டெஸ்டில் புதுமுக வீரர் அகர்வால் தனது திறமையை வெளிப்படுத்தியது சிறப்பானது. ரிசப்பந்தும் இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தினார். வேகப்பந்து வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாதனைகளை முறியடித்து அபாரமாக வீசினார்கள். குறிப்பாக பும்ராவின் பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்நாயகன் விருது பெற்ற புஜாரா கூறியதாவது:-

    நான் இடம்பெற்றுள்ள சிறந்த இந்திய அணி இதுவாகும். டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வெளிநாட்டில் தொடரை வென்றுள்ளோம். ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது என்பது எளிதானதல்ல. இதனால் இந்திய வீரர்களை பாராட்டுகிறேன்.

    4 வேகப்பந்து வீரர்கள் 20 விக்கெட்டை வீழ்த்துவது எளிதானதல்ல். எனவே அனைத்து வேகப்பந்து வீரர்கள் மற்றும் சுழற்பந்து வீரர்கள் பாராட்டப்படக் கூடியவர்கள். இது உண்மையிலேயே வியக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். #AUSvIND #ViratKohli
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். #AUSvIND #RamnathKovind
    புதுடெல்லி:

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.

    72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தமைக்கு வாழ்த்துக்கள். பேட்டிங், பந்துவீச்சு என இந்திய அணியின் ஒட்டுமொத்த சிறப்பான பங்களிப்பை கண்டு பெருமை கொள்கிறோம் என தனது வாழ்த்து செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார். #AUSvIND #RamnathKovind
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. #AUSvIND
    சிட்னி:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.

    31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா பாலோ-ஆன் ஆனாது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் 322 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கியது. இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. 

    நேற்று 4-வது நாள் ஆட்டத்தின் போது, 2-வது செசனில் தேனீர் இடைவேளைக்குப்பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டி நிறுத்தப்பட்டது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.



    கடைசி நாளான இன்றும் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மைதானத்தை சோதித்த நடுவர்கள் போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதையடுத்து கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. 72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    கடைசி டெஸ்டில் ஆட்ட நாயகனாகவும், இந்த டெஸ்ட் தொடரின், தொடர் நாயகனாகவும் சத்தீஸ்வர் புஜாரா தேர்வு செய்யப்பட்டார். #AUSvIND

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக தடைபட்டுள்ளதால், போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது. #AUSvIND
    சிட்னி:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.

    322 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கியது. இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. 31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா பாலோ-ஆன் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்று 4-வது நாள் ஆட்டத்தின் போது, 2-வது செசனில் தேனீர் இடைவேளைக்குப்பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டி நிறுத்தப்பட்டது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.



    கடைசி நாளான இன்றும் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உணவு இடைவேளை முடிந்து போட்டி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் மழை குறுக்கிடும் பட்சத்தில் போட்டி  டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருப்பதால் தொடரை வெல்வது உறுதியாகிவிட்டது. #AUSvIND

    சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் என்ற நிலையில் பின்தங்கியுள்ளது. #AUSvIND #SydneyTest
    சிட்னி:

    இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அபாரமாக விளையாடிய புஜாரா 193 ரன்கள் விளாசினார். ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 150 ரன்கள் எடுத்தார். மயாங்க் அகர்வால் 77 ரன்களும், ஜடேஜா 81 ரன்களும் அடித்தனர்.

    இதையடுத்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் (2ம் நாள்) விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. நிதானமாக ஆடிய ஹாரிஸ் 79 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். கவாஜா 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இந்த ஜோடி பிரிந்தபின்னர் ஆஸ்திரேலிய அணி தடுமாறத் தொடங்கியது. மார்ஷ் (8), லபூஸ்சாக்னே (38), ஹெட் (20) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.



    அதன்பின்னர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பெய்னி (5 ரன்கள்) குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஹேண்ட்ஸ்காம்ப் மற்றும் கம்மின்ஸ்  இருவரும் விக்கெட்டைக் காப்பாற்ற நிதானமாக ஆடினர். ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை பெய்ததால் இன்றைய ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. ஹேண்ட்ஸ்காம்ப் 28 ரன்களுடனும், கம்மின்ஸ் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 386 ரன்கள் பின்தங்கியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் நாளை கடும் நெருக்கடி கொடுப்பார்கள். விரைவில் 4 விக்கெட்டுகளையும் விரைவில் வீழ்த்தும்பட்சத்தில், போட்டி இந்திய அணிக்கு சாதகமாக திரும்பும். #AUSvIND #SydneyTest
    சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. #AUSvIND #SydneyTest
    சிட்னி:

    இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அபாரமாக விளையாடிய புஜாரா 193 ரன்கள் விளாசினார். ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் எடுத்தார். மயாங்க் அகர்வால் 77 ரன்களும், ஜடேஜா 81 ரன்களும் அடித்தனர்.

    இதையடுத்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் (2ம் நாள்) விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்தது.



    இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. நிதானமாக ஆடிய ஹாரிஸ் 79 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். கவாஜா 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இந்த ஜோடி பிரிந்தபின்னர் ஆஸ்திரேலிய அணி தடுமாறத் தொடங்கியது. மார்ஷ் (8), லபூஸ்சாக்னே (38), ஹெட் (20) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின்னர் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பெய்னி (5 ரன்கள்) குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஹேண்ட்ஸ்காம்ப் மற்றும் கம்மின்ஸ் ஜோடி விக்கெட்டைக் காப்பாற்ற கடுமையாக போராடியது. #AUSvIND #SydneyTest
    சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் புஜாரா, ரிஷப் பந்த், ஜடேஜா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. #AUSvIND #SydneyTest
    சிட்னி:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது.

    புஜாரா, மயாங்க் அகர்வால் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் சேர்த்திருந்தது. மயாங்க் அகர்வால் 77 ரன்கள் சேர்த்தார். புஜாரா 130 ரன்களுடனும், விகாரி 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய புஜாரா சிறிது நேரத்தில் 150 ரன்களைக் கடந்தார். உணவு இடைவேளையின்போது இந்திய அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் எடுத்திருந்தது. சிட்னி அரங்கை அதிரவைத்த புஜாரா 181 ரன்களுடன் இரட்டை சதத்தை நோக்கி பயணித்தார்.

    உற்சாகத்துடன் பந்துகளை பறக்க விட்ட புஜாரா, இன்று தனது நான்காவது இரட்டை சதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் 193 ரன்களில் ஆட்டமிழந்தார்.



    அவரைத் தொடர்ந்து ரிஷப் பந்த், ஜடேஜா இருவரும் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை மிரட்டிய ரிஷப் பந்த் சதம் அடித்தார். மறுமுனையில் ஜடேஜா அரை சதம் கடந்தார். இதன் மூலம் அணியின் ஸ்கோர் 500 ரன்களைத் தாண்டியது. 7வது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் 200க்கும் அதிகமான ரன்கள் சேர்த்தனர்.

    இந்நிலையில் ஜடேஜா 81 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தார். அப்போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்திருந்தது. ரிஷப் பந்த் 159 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. தொடக்க வீரர்களாக ஹாரிஸ், கவாஜா களமிறங்கினர். #AUSvIND #SydneyTest
    ×