search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோகன்லால்"

    சினிமா பிரபலங்கள் மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். #PadmaAwards #Mohanlal #Prabhudeva
    ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம விருது பெறுபவர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    திரைத்துறை சார்பில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருதும், நடிகர் பிரபுதேவா, மனோஜ் பாஜ்பய், மறைந்த நடிகர் காதர்கான், பாடகர் ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, நார்த்தகி நடராஜ் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது.



    இந்த நிலையில், இன்று (11.3.19) டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த பலரும் பத்ம விருதுகளை பெற்றுக் கொண்டனர். #PadmaAwards #Padmashri #PadmaBhusan #KaderKhan #Mohanlal #ManojBajpayee #PrabhuDeva #ShankarMahadevan

    எச்.வினோத் இயக்கத்தில் பிங்க படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வரும் அஜித்குமார், சமீபத்தில் மோகன்லால், பிரபாசை சந்தித்து பேசிய நிலையில், அவர்களுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறினாராம். #AjithKumar
    விஸ்வாசம் படத்தை அடுத்து தனது 59-வது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அதே ஸ்டுடியோவில் பல்வேறு படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    மோகன்லால் நடிக்க பிரியதர்‌ஷன் இயக்கும் மராக்கர் அரபிக்கடலிண்ட சிம்ஹம் என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன் அவர்களின் படப்பிடிப்பு அரங்கிற்கு திடீரென்று சென்ற அஜித் அங்கிருந்த மோகன்லால், பிரியதர்‌ஷன் இருவரையும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்.



    தொடர்ந்து பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் படப்பிடிப்பு நடப்பதை அறிந்து அவரது அரங்கிற்கும் சென்றுள்ளார். அஜித்தை கண்டதும் அன்புடன் வரவேற்றார் பிரபாஸ். ஆரம்பம் படத்தில் அஜித்துடன் ராணா நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை தன்னிடம் பாகுபலி படப்பிடிப்பின் போது ராணா பகிர்ந்துகொண்டதை பிரபாஸ் கூறி உள்ளார்.

    சுமார் ஒரு மணிநேரம் பிரபாசுடன் மனம்விட்டு பேசிக்கொண்டிருந்த அஜித் பின்னர் புறப்பட்டு சென்றார். முன்னதாக, மோகன்லால், பிரபாஸ் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக அவர்களிடம் அஜித் தெரிவித்தாராம். #AjithKumar #Mohanlal #Prabhas

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் `காப்பான்' படத்தில் நடித்து வரும் சூர்யா, படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து அளித்துள்ளார். #Kaappaan #Suriya #Mohanlal
    சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்று முடிந்தததாக படக்குழு அறிவித்தது.

    இந்த நிலையில், மொத்த படக்குழுவினருக்கும் நடிகர் சூர்யா இன்று பிரியாணி விருந்து அளித்தார். காப்பான் படக்குழுவுக்கு சூர்யா பிரியாணி பரிமாறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் பாடல் காட்சியை படக்குழு படமாக்கி வருவதாகவும், அடுத்ததாக அமெரிக்கா சென்று அங்கு ஒரு பாடலை படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடிக்கிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். 

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    சூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. #Kaappaan #Suriya37 #Suriya

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால் - ஆர்யா - சாயிஷா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி வரும் காப்பான் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. #Kaappaan #Suriya #Mohanlal
    சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மோகன்லால் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

    மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடிக்கிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடிக்கின்றனர்.


    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 

    சூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. #Kaappaan #Suriya37 #Suriya
     
    கேரளாவில் மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்று எம்.எல்.ஏ பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Vijay #ThalapathyVijay #Mohanlal #Mammootty
    தமிழ் நடிகரான விஜய்க்கு தமிழ்நாட்டை தாண்டி பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முக்கியமாக கேரளாவில் மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டிக்கு இணையான வரவேற்பு விஜய் படங்களுக்கும் உண்டு.

    தீபாவளிக்கு வெளியான விஜய்யின் சர்கார் படத்தின்போது விஜய்க்கு 175 அடி உயரத்தில் கட் அவுட்டை கேரளாவில் உள்ள கொல்லம் நண்பன்ஸ் அமைப்பினர் வைத்தனர்.

    கேரளாவில் உள்ள விஜய் ரசிகர் மன்றங்கள் மூலம், விஜய் படம் வெளிவரும் போதெல்லாம் தொண்டு நிறுவனங்களுக்கு உதவுதல், கட் அவுட்களில் புதுவிதமான அணுகுமுறைகளைச் செய்து வருகின்றனர்.

    பிறமொழி நடிகர் ஒருவருக்கு தொடர்ந்து கேரளாவில் அதிகமான வரவேற்பு இருப்பதை கேரள திரையுலகினர் பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.



    மோகன்லால் நடித்த ஒடியன் படத்தின் இயக்குனர் ஷிரிக்குமார் விஜய் படத்தின் வசூலை மட்டும் இங்கு கொண்டாடுகிறார்கள் என்று விமர்சித்து இருந்தார்.

    இந்த நிலையில் கேரளாவில் பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கேரளாவில் மலையாள நடிகர்களைவிட தமிழ் நாட்டு நடிகர் விஜய்க்கு இருக்கும் வரவேற்பு குறித்து விமர்சிக்கப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த பூஞ்சார் தொகுதி எம்.எல்.ஏ. பி.சி.ஜார்ஜ், ‘‘மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு கேரளாவில் கூடுதலான ரசிகர்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் திரையரங்குகள் முன் கூடி விஜய் கட் அவுட்டுகளுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்கின்றனர்” என்று தெரிவித்தார்.

    இவரது கருத்துக்கு மலையாள முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது ரசிகர்கள் சமூக வலை தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பி.சி.ஜார்ஜ் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். கடந்த தேர்தலின் போது கட்சியில் இருந்து விலகி சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர்.
    தேர்தலில் நிற்க எனக்கு விருப்பம் இல்லை. அதேபோல பா.ஜனதா கட்சியில் சேரும் எண்ணமும் இல்லை என்று நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார். #Mohanlal #BJP
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடந்து வருகிறது.

    அங்கு பிரதான எதிர்கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. பா.ஜனதா கட்சிக்கு ஓ.ராஜகோபால் என்ற ஒரேஒரு எம்.எல்.ஏ. மட்டுமே உள்ளார். இதனால் அந்த கட்சி கேரள அரசியலில் தன்னை பலப்படுத்திக் கொள்ள பல்வேறு திட்டங் களை வகுத்து செயல்பட்டு வருகிறது.

    சமீபத்தில் சபரிமலை கோவிலில் இளம்பெண்கள் தரிசனம் செய்யும் விவகாரத்தில் பா.ஜனதா பெரிய அளவில் போராட்டம் நடத்தி ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கு நெருக்கடியை கொடுத்தது. மேலும் சபரிமலை விவகாரததின் மூலம் தனது கட்சியின் செல்வாக்கை உயர்த்தவும், அதை பாராளுமன்ற தேர்தலில் ஓட்டாக மாற்றவும் வியூகம் வகுத்து செயல்படுகிறது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பிரபலங்களை களம் இறக்கினால் எளிதில் வெற்றி பெறலாம் என்று பா.ஜனதா கணக்கு போட்டு உள்ளது. கேரளாவை பொருத்தவரை ஏற்கனவே நடிகர் சுரேஷ்கோபி பா.ஜனதாவின் மேல்சபை எம்.பி.யாக உள்ளார்.

    இந்த நிலையில் மலையாள பட உலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் மோகன்லாலை தங்கள் வலையில் வீழ்த்த பா.ஜனதா காய்களை நகர்த்தியது. ஏற்கனவே மத்திய அரசின் பல திட்டங்களையும், செயல்பாடுகளையும் மோகன்லால் வரவேற்று இருந்ததால் அவரை பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் எப்படியும் களம் இறக்க வேண்டும் என்று அந்த கட்சி விரும்புகிறது. இதற்கு ஏற்ப கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் மோகன்லால் போட்டியிடலாம் என்று அந்த கட்சி தலைவர்கள் கூறிவந்தனர். இதனால் திருவனந்தபுரம் எம்.பி. தொகுதியில் மோகன்லால் போட்டியிட உள்ளதாக சமீபகாலமாக பரபரப்பு நிலவி வந்தது.

    இந்த நிலையில் தான் பா.ஜனதா சார்பில் பாராளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுவதாக வந்த செய்திகளை நடிகர் மோகன்லால் மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக மோகன்லால் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நான் தேர்தலில் போட்டியிடப்போவதாக நிறைய கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. ஆனால் நான் தொடர்ந்து ஒரு நடிகனாக இருக்கவே விரும்புகிறேன். என் தொழிலில் எனக்கு முழு சுதந்திரம் உள்ளது.

    அரசியல் என்பது எனக்கு டீ குடிக்கிற மாதிரிதான். அரசியல் பற்றி எனக்கு அதிகமாக எதுவும் தெரியாது என்பதால் எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. எனக்கு அரசியல் ஒத்துவராது. அதனால் தேர்தலில் நிற்க எனக்கு விருப்பம் இல்லை. அதேபோல பா.ஜனதா கட்சியில் சேரும் எண்ணமும் இல்லை.

    அரசியல் கட்சிகள் தங்களுக்கு விருப்பமான நபர்களை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறுவது வழக்கமான ஒன்றுதான். அதற்காக அவர்களை குறைகூற முடியாது. அதேசமயம் அது பற்றிய முடிவை அந்த நபர்தான் எடுக்க வேண்டும். அதன்படி அரசியலில் எனக்கு விருப்பம் இல்லை.

    எனக்கு கலைதான் 99 சதவீத வாழ்க்கை. நான் நடித்து முடிக்க வேண்டிய படங்கள் நிறைய உள்ளது. அதில் எனது கவனத்தை செலுத்தி வருகிறேன். எனவே அதில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட முடியாது. தொடர்ந்து நடிகனாக இருக்கவே விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகர் மோகன்லாலுக்கு பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்‌ஷன் நெருங்கிய நண்பர் ஆவார். இதே போல பல திரையுலக நண்பர்களும் அவருக்கு உள்ளனர். தனது நண்பர்கள் வட்டாரத்திலும் தனக்கு அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை என்றே மோகன்லால் கூறி உள்ளார். #Mohanlal #BJP
    மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்ட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. #PadmaAwards #Mohanlal #Padmabushan
    ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அதேபோல் நடிகர் பிரபுதேவா, மனோஜ் பாஜ்பய், மறைந்த நடிகர் காதர்கான் உள்ளிட்டோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாடகர் ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, நார்த்தகி நடராஜ் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.



    பத்ம விருதுகள் வென்ற பிரபலங்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. #PadmaAwards #Padmashri #PadmaBhusan #KaderKhan #Mohanlal #ManojBajpayee #PrabhuDeva

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரகாஷ்ராஜ், மோகன்லால், அக்‌ஷய்குமார் உள்ளிட்ட நடிகர்கள் போட்டியிட தயாராகி வருகிறார்கள். #PrakashRaj #Mohanlal #AkshayKumar
    இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட நடிகர்கள் அரசியலில் இருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. இவர்களில் பலர் அமைச்சர்களாகவும் எம்.பி., எம்.எல்.ஏக்களாகவும் பதவி வகித்துள்ளனர். மறைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ராமராவ் ஆகியோர் முதல்-அமைச்சராகி ஆட்சி நடத்தி உள்ளனர்.

    இப்போது கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் குதித்துள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்த கட்சி போட்டியிடுகிறது. ரஜினிகாந்தும் விரைவில் கட்சி தொடங்குகிறார். இந்த வருடம் புதிதாக மேலும் சில நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.

    வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் வருகிற பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு மத்திய தொகுதியில் அவர் நிற்கிறார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால், திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட தயாராவதாக தகவல். பா.ஜனதா கட்சி அவருக்கு டிக்கெட் கொடுக்க ஆர்வமாக உள்ளது. நரேந்திர மோடியை மோகன்லால் சந்தித்து விட்டு வந்துள்ளார்.



    ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்த அக்‌ஷய்குமாரும் பாராளுமன்ற தேர்தலில் டெல்லி அல்லது பஞ்சாப் மாநிலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். நடிகை ஜெனிலியாவின் கணவரும் இந்தி நடிகருமான ரிதேஷ் தேஷ்முக் காங்கிரஸ் சார்பில் லத்தூர் தொகுதியில் போட்டியிட முயற்சிக்கிறார்.
    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன் லால் - ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 37-வது படத்திற்கு `காப்பான்' என்று தலைப்பு வைத்துள்ளனர். #Kaappaan #Suriya
    `மாற்றான்' படத்திற்கு பிறகு சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் த்ரில்லர் படத்திற்கு `காப்பான்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

    முன்னதாக காப்பான், மீட்பான், உயிர்கா உள்ளிட்ட மூன்று தலைப்புகளை தேர்வு செய்து வைத்திருந்த படக்குழு, எந்த தலைப்பை வைக்கலாம் என்று ரசிகர்களிடம் கருத்து கேட்டிருந்தது. இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 12.10 மணிக்கு படத்திற்கு காப்பான் என்று தலைப்பு வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் முதல்பார்வை போஸ்டரையும் வெளியிட்டது.

    இதில் சூர்யா, கோர்ட், சூட்டுடன் கையில் துப்பாக்கி வைத்தபடி தோற்றமளிக்கிறார். மற்றொரு போஸ்டரில், சூர்யா, மோகன் லால், ஆர்யா இடம்பெற்றுள்ளனர்.

    மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்து வருகிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 

    70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி 17-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. அதற்குள் என்ஜிகே படப்பிடிப்பை முடித்துவிட்டு சூர்யா விரைவில் காப்பான் படக்குழுவில் இணையவிருக்கிறார். #Kaappaan #Suriya37 #Suriya

    சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூர்யா 37’ படத்தின் தலைப்பிற்காக இயக்குனர் கே.வி.ஆனந்த் ரசிகர்களிடம் வாக்கு கேட்டிருக்கிறார். #Suriya37 #Suriya
    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 37-வது படத்தில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி என பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சூர்யாவிற்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஒரு மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சிரக் ஜனியும் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. 



    இந்நிலையில், இப்படத்திற்கு தலைப்பு தேடி வருகிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். மீட்பான், காப்பான், உயிர்கா என மூன்று தலைப்புகளை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, ரசிகர்களிடையே வாக்கு கேட்டிருக்கிறார். இதில் ‘உயிர்கா’ என்ற தலைப்பிற்கே அதிக வாக்குகள் கிடைத்து வருகிறது. எனவே ‘உயிர்கா’ என்ற தலைப்பே படத்திற்கு வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Suriya37 
    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால், மீடூ இயக்கம் உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ளார். #Mohanlal #Metoo
    தமிழ் திரையுலகில் பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது மீ டூ புகார் கூறியதை அடுத்துப் பரபரப்பானது. அதே போல் கேரள திரையுலகிலும் நடிகை ஒருவர் கடத்தப்பட்ட விவகாரத்திலிருந்து அங்கிருக்கும் நடிகைகள் திரையுலகில் பெண்களுக்கு நிகழும் பாலியல் கொடுமைகள் பற்றி பேசி வருகின்றனர்.

    இந்நிலையில், மீ டூ விவகாரம் குறித்து கருத்துக் கூறியுள்ளார் நடிகர் மோகன்லால். சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பாதிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்ட மலையாள திரையுலகம் வரும் டிசம்பர் 7ஆம் தேதி துபாயில் கலை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிகழ்விற்கான ஏற்பாடு வேலைகளுக்காக துபாய் சென்றுள்ள நடிகர் மோகன்லால் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மீ டூ விவகாரம் பற்றி பேசும் போது, “மலையாள சினிமா உலகில் இதுபோன்ற பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீ டூவை ஒரு இயக்கமாக நீங்கள் நினைக்கக் கூடாது. அது உள்நோக்கம் கொண்டது. அது ஒரு டிரெண்ட். பாலியல் குற்றம் சொல்வது ஒரு பே‌ஷனாக மாறிவிட்டது. எந்த ஒரு சிக்கலுக்கும் ஒரு ஆயுட்காலம் உண்டு. பாலியல் சச்சரவுகள் திரைப்படங்களில் மட்டுமல்ல... வாழ்வில் எல்லா இடங்களிலும் நடக்கலாம்” என்று கூறியுள்ளார்.
    மலையாளத்தில் புகழ் பெற்ற நடிகர் மோகன்லாலை எதிர்த்ததால் தனக்கு பட வாய்ப்பு இல்லை என்று நடிகை பார்வதி கூறியுள்ளார். #Parvathy
    தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள் ஆகிய படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். பாலியல் புகாரில் சிக்கிய திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்த்த மோகன்லாலை கண்டித்ததால் அவரது கோபத்துக்கு ஆளானார். மம்முட்டி குறித்தும் சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.

    அதன்பிறகு மோகன்லாலுக்கு பயந்து பார்வதியை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்கள். இதனால் பார்வதி வருத்ததில் இருக்கிறார். மலையாள பட உலகினர் தன்னை ஓரம் கட்டுவதாக ஏற்கனவே புகார் கூறிய அவர் இப்போது மீண்டும் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து பார்வதி கூறியதாவது:-

    “நான் 13 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். சமீபத்தில் மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடிக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து நியாயம் கேட்டு போராடியதால் என்னை ஓரம் கட்டுகிறார்கள். புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் புறக்கணிக்கிறார்கள். கொலை மிரட்டல் பாலியல் அச்சுறுத்தல்களும் வருகின்றன.



    சில நடிகைகள் சினிமாவில் உச்சத்தில் இருந்து பிறகு காணாமல் போய் இருக்கிறார்கள். அதன் காரணம் அந்த நடிகைகளுக்கு மட்டுமே தெரியும். என்னையும் காணாமல் போக வைக்க சிலர் முயற்சிக்கின்றனர். பட வாய்ப்பு இல்லா விட்டால் கடை அல்லது ஓட்டல் திறந்தாவது என்னால் பிழைக்க முடியும். இதற்காக அமைதியாக இருக்க மாட்டேன். பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.”

    இவ்வாறு பார்வதி கூறினார்.
    ×