search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்பந்து"

    கேரளாவின் திருவல்லாவில் உள்ள கல்லூரியில் படித்து வரும் ஆதர்ஷுக்கு தற்போது பலரும் நிதியுதவி செய்துள்ளார்கள்.
    கேரளாவைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரர் ஆதர்ஷ். இவருக்கு 5-வது டிவிஷன் பிரிவில் கால்பந்துப் பயிற்சி பெறுவதற்காக ஸ்பெயினுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. 

    இந்த ஒரு மாதப் பயிற்சியில் அவரால் 5 ஆட்டங்களில் விளையாட முடியும். அவருடைய திறமை அங்கீகரிக்கப்பட்டால் ஸ்பெயின் கிளப்புகளில் தேர்வாகவும் வாய்ப்புண்டு. 

    ஆனால் ஸ்பெயினுக்குச் சென்று பயிற்சி எடுக்கும் அளவுக்கு நிதி வசதி இல்லை. எனவே, அவர் கேரள அமைச்சர் சாஜி செரியனிடம் உதவி கோரினார். இதனைத் தொடர்ந்து, ஆதர்ஷின் நிலைமை மற்றவர்களும் தெரியவந்தது. பலர் உதவி செய்ய முன் வந்துள்ளார்கள். 

    கேரளாவின் திருவல்லாவில் உள்ள கல்லூரியில் படித்து வரும் ஆதர்ஷுக்குத் தற்போது பலரும் நிதியுதவி செய்துள்ளார்கள். மேலும்,  தனியார் கிளப் ஒன்று ரூ. 50,000 அளித்த நிலையில் கேரள அமைச்சர் சாஜி செரியனும் வெளிநாட்டுப் பயிற்சிக்காக ஆதர்ஷுக்கு நிதியுதவி செய்துள்ளார். 

    அதுமட்டுமல்லாமல், பிரபல கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனும் தன் பங்குக்கு ஆதர்ஷுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். ஆதர்ஷ் ஸ்பெயின் செல்வதற்கான விமான டிக்கெட் செலவை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆதர்ஷ் விரைவில் மேட்ரிட் சென்று பயிற்சியில் பங்கேற்க வாழ்த்து தெரிவித்துள்ளார் சஞ்சு சாம்சன்.
    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கோவாவில் நேற்று நடைபெற்ற கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவா அணி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு 2-வது அணியாக முன்னேறியது. #ISL #Goa #Kerala
    கோவா:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவாவில் நேற்று இரவு நடந்த 80-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தன. 22-வது நிமிடத்தில் கோவா அணியின் பெர்ரான் கொராமினாஸ் முதல் கோல் அடித்தார். 25-வது நிமிடத்தில் கோவா அணி வீரர் எடு பெடியா கோல் திணித்தார். முதல் பாதியில் கோவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

    78-வது நிமிடத்தில் கோவா அணி வீரர் ஹீகோ கோல் அடித்தார். பதில் கோல் திருப்ப கேரளா அணியினர் எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தியது. 16-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 9 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் 31 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்ததுடன் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு 2-வது அணியாக முன்னேறியது. ஏற்கனவே பெங்களூரு எப்.சி. அணி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தது. 17-வது ஆட்டத்தில் ஆடிய கேரளா அணி சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும்.

    நாளை (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் 81-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.(கவுகாத்தி)-எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.
    2022-ல் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரை காண வருமாறு உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கத்தார் அழைப்பு விடுத்துள்ளது. #WorldCup
    2022-ல் கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடரை நடத்துகிறது. இந்த உலகக்கோப்பைக்கான சிஇஓ-வாக நாஸர் காட்டர் உள்ளார். இவர் கிரிக்கெட்டில் 1983-ம் ஆண்டும், 2011-ம் ஆண்டும் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கால்பந்து தொடரை காண வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுகுறித்து நாஸர் காட்டர் கூறுகையில் ‘‘கத்தாரில் நடக்க இருக்கும் உலகக்கோப்பை தொடர் நாம் அனைவரும் கொண்டாடதக்கதாக இருக்கும் என சொல்லலாம். உங்களை கத்தாரில் வரவேற்கும் நாளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.

    இந்தியாவில் கிரிக்கெட் எவ்வளவு பெரிய விளையாட்டு என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. ஆகவே, 1983-ம் ஆண்டு கோப்பையை வென்ற இந்திய அணியில் உள்ள வீரர்களும், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் வென்ற அணியில் உள்ள வீரர்களும் உள்ளனர். கத்தார் வந்து உலகக்கோப்பை போட்டிகளை காண அவர்களுக்கு சிறப்பான அழைப்பு விடுக்கிறேன்’’ என்றார்.
    எகிப்து நாட்டைச் சேர்ந்த முன்னணி கால்பந்து வீரரான முகமது சாலா, தொடர்ந்து 2-வது முறையாக தென்ஆப்பிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    எகிப்து நாட்டின் கால்பந்து வீரர் முகமது சாலா. இவரின் அபார ஆட்டத்தால் எகிப்து அணி ரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சீசனில் அபாரமாக விளையாடினார். இதனால் 2017-ம் ஆண்டுக்கான தென்ஆப்பிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதை முதன்முறையாக தட்டிச் சென்றார்.

    இந்நிலையில் தற்போது 2-வது முறையாக தென்ஆப்பிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றுள்ளார். விருது பெற்ற முகமது சாலா கூறுகையில் ‘‘நான் சிறுவனாக இருக்கும்போதே இந்த விருதை பெற வேண்டும் என்பது கனவாக இருந்தது. தற்போது இரண்டு முறை இந்த விருதை பெற்றுள்ளேன். இந்த விருதை எகிப்து மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
    பிரான்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான தியரி ஹென்றி மொனாகோ அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். #ThierryHenry
    பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தவர் தியரி ஹென்றி. பிரான்ஸ் அணிக்காக 123 போட்டிகளில் விளையாடி 51 கோல்கள் அடித்துள்ளார். பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர் இவர்தான்.

    இவர் மொனாகோ, யுவான்டஸ், அர்செனல், பார்சிலோனா, நியூயார்க் ரெட் புல்ஸ் ஆகிய கிளப் அணிகளுக்காக விளையாடியுள்ளார். பிரான்ஸ் அணி 1998-ம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.



    பெல்ஜியம் தேசிய அணியின் துணைப் பயிற்சியாளராக இருந்த ஹென்றி சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில் மொனாகோ அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2021 ஜூலை மாதம் வரை மூன்று வருடம் மொனாகோ அணியின் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். நாளைமறுநாள் முதல் தனது பணியை மேற்கொள்ள இருக்கிறார்.
    கேரளா பிளாஸ்டர்ஸ் அணியில் தனக்கு இருந்த பங்குகளை டெண்டுல்கர் சமீபத்தில் விற்ற நிலையில், அதனை நடிகர் மோகன்லால் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #KeralaBlasters #SachinTendulkar #Mohanlal
    திருவனந்தபுரம்:

    இந்திய சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் கிளப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக சச்சின் டெண்டுல்கர் 2014-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். இவருடன், கேரளா அணியின் இணை பங்குதாரர்களாக, தொழிலதிபர் நிம்மகட்டா பிரசாத், திரைப்பட தயாரிப்பாளர் அல்லு அர்ஜூன், நடிகர்கள் நாகர்ஜூனா, சீரஞ்சிவி ஆகியோர் இருந்தனர்.

    20 சதவிகித பங்குகளை வைத்திருந்த சச்சின் டெண்டுல்கர், கடந்த நான்கு ஆண்டுகளாகக் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னின்று கலந்துகொண்டு, அணியை உற்சாகப்படுத்தி வந்தார். சமீபத்தில், திடீரென தனது வசம் இருந்த பங்குகளை வேறு ஒருவருக்கு சச்சின் கைமாற்றினார்.

    இந்நிலையில், இந்த பங்குகளை நடிகர் மோகன்லால் வாங்கியுள்ளதாக அணியின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். மேலும், அணியின் நல்லெண்ண தூதராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். கொச்சியில் நேற்று நடந்த ஜெர்சி அறிமுக விழாவிலும் அவர் கலந்து கொண்டு ஜெர்சியை அறிமுகப்படுத்தி வைத்தார். 
    கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையில் 20 சதவிகித பங்குகளை வைத்திருந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தற்போது அதை வேறு ஒருவருக்கு கைமாற்றியுள்ளார். #KeralaBlasters #SachinTendulkar
    மும்பை:

    இந்திய சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் கிளப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக சச்சின் டெண்டுல்கர் 2014-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். இவருடன், கேரளா அணியின் இணை பங்குதாரர்களாக, தொழிலதிபர் நிம்மகட்டா பிரசாத், திரைப்பட தயாரிப்பாளர் அல்லு அர்ஜூன், நடிகர்கள் நாகர்ஜூனா, சீரஞ்சிவி ஆகியோர் இருக்கின்றனர். 

    20 சதவிகித பங்குகளை வைத்திருந்த சச்சின் டெண்டுல்கர், கடந்த நான்கு ஆண்டுகளாகக் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னின்று கலந்துகொண்டு, அணியை உற்சாகப்படுத்தி வந்தார். இந்நிலையில், திடீரென தனது வசம் இருந்த பங்குகளை வேறு ஒருவருக்கு சச்சின் கைமாற்றியுள்ளார். 

    ஹைபர் மார்க்கெட் மற்றும் ஷாப்பிங் மால்களை அதிகளவில் வைத்திருக்கும் தொழிலதிபர் ஒருவருக்கு இந்த பங்குகளை சச்சின் டெண்டுல்கர் விற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், கேரள கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு அரங்கேறும் இறுதிப்போட்டியில் பிரான்ஸ்-குரோஷியா அணிகள் மோத உள்ளன. #WorldCupFinal #FRACRO
    மாஸ்கோ:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி ரஷியாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ஐரோப்பிய அணிகளான பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டியை எட்டின.

    இந்த நிலையில் உலக கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், குரோஷியாவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் யுத்தத்தில் இறங்குகின்றன. உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருப்பதால் இந்த ஆட்டம் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.


    1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி 2-வது முறையாக வாகை சூடும் முனைப்பில் உள்ளது. தோல்வியே சந்திக்காத அந்த அணி அரைஇறுதியில் பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் விரட்டியது. கிரிஸ்மான் (3 கோல்), ‘இளம் புயல்’ கைலியன் பாப்பே (3 கோல்), பால் போக்பா, ஆலிவர் ஜீருட், ரபெல் வரானே உள்ளிட்டோர் பிரான்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். இவர்கள், களத்தில் இறங்கி விட்டால் புயல்போல் சுழன்று எதிரணியை உலுக்கி விடும் திறமை படைத்தவர்கள். இளமையும், அனுபவமும் கலந்த பிரான்சுக்கே இப்போது வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.


    அரைஇறுதியில் பெல்ஜியத்துக்கு எதிராக ஒரு கோல் அடித்த பிறகு ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பாத பிரான்ஸ் அணியினர், அதன் பிறகு முழுமையாக தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். இது மந்தமான யுக்தி என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் குரோஷிய வீரர்கள் தாக்குதல் தொடுப்பதில் கில்லாடிகள் என்பதால் பிரான்சும் தனது வியூகங்களை கொஞ்சம் மாற்றி அமைத்து இருக்கிறது. அந்த அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் பின்களத்தை மேலும் வலுப்படுத்தி இருக்கிறார்.

    இந்த உலக கோப்பையில் குரோஷிய அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. லீக் சுற்றில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்ததும், அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை போட்டுத்தாக்கியதும் குரோஷியாவின் எழுச்சியை பறைசாற்றுகிறது. மூன்று ‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டங்களிலும் பின்தங்கிய நிலையில் இருந்து சளைக்காமல் போராடி வெற்றிப்பாதைக்கு திரும்பிய குரோஷிய வீரர்கள் மனவலிமை மிக்கவர்கள் என்பதில் சந்தேகமில்லை.


    தங்கப்பந்து விருது வெல்லும் வாய்ப்பில் உள்ள கேப்டன் லூக்கா மோட்ரிச்சும், இவான் ராகிடிச்சும் உலகின் தலைச்சிறந்த நடுகள வீரர்களாக வர்ணிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு இவான் பெரிசிச், மரியோ மான்ட்ஜூகிச், வர்சல்ஜ்கோ ஆகியோர் பக்கபலமாக இருக்கிறார்கள். முதல்முறையாக இறுதி சுற்றை அடைந்துள்ள குரோஷியா, உலக கோப்பையை வசப்படுத்தி புதிய சரித்திரம் படைக்கும் உத்வேகத்துடன் வரிந்து கட்டி நிற்கும்.

    இந்த போட்டியை பொறுத்தவரை இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் விளங்குவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை கணிப்பது கடினம். ஆனால் முதல் கோல் போடும் அணியின் கை எளிதில் ஓங்கிவிடும். இவ்விரு அணிகளும் உலக கோப்பையில் இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு அரைஇறுதியில் சந்தித்து இருந்தது. இதில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி இருந்தது. அதற்கு வட்டியும் முதலுமாக பழிதீர்க்க குரோஷிய வீரர்கள் தங்களது முழு ஆற்றலையும் களத்தில் கொட்டுவதற்கு ஆயத்தமாக உள்ளனர்.


    கடைசியாக நடந்த மூன்று உலக கோப்பை இறுதி ஆட்டங்களும் கூடுதல் நேரத்திற்கு சென்று இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆட்டம் கூடுதல் நேரத்திற்கோ அல்லது பெனால்டி ஷூட்-அவுட்டுக்கோ சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் குரோஷியா ஏற்கனவே 2-வது சுற்று மற்றும் கால்இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட் அனுபவத்தை சந்தித்து இருக்கிறது.

    இதில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.255 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.188 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

    இறுதிப்போட்டியில் களம் காணும் உத்தேச அணி பட்டியல் வருமாறு:-


    பிரான்ஸ்: ஹூகோ லோரிஸ் (கோல் கீப்பர்), பெஞ்சமின் பவார்ட், ரபெல் வரானே, சாமுல் உம்டிடி, லுகாஸ் ஹெர்னாண்டஸ், பால் போக்பா, நிகோலோ கன்ட், கைலியன் பாப்பே, கிரிஸ்மான், பிளைஸ் மடுடி, ஆலிவர் ஜீருட்.

    குரோஷியா: டேனிஜெல் சுபசிச் (கோல் கீப்பர்), சிம் வர்சல்ஜ்கோ, டேஜன் லோவ்ரென், டோமாகோஜ் விடா, இவான் ஸ்டிரினிச், ராகிடிச், மார்சிலோ புரோஜோவிச், ஆன்ட் ரெபிச், லூக்கா மோட்ரிச், இவான் பெரிசிச், மான்ட்ஜூகிச்.

    இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என்., சோனி டென்2, டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.  #WorldCup #WorldCupFinal #WorldCup2018 #FrancevsCroatia #FRACRO
    உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக்அவுட் சுற்றுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், கால்இறுதி ஆட்டங்கள் 6-ந்தேதி தொடங்குகிறது. #WorldCup2018 #QuarterFinals
    நோவ்காகிராட்:

    உலககோப்பை கால்பந்து திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன.

    கடந்த 28-ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் போட்டியை நடத்தும் ரஷியா, உருகுவே, ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸ், டென்மார்க், குரோஷியா, அர்ஜென்டினா, பிரேசில், சுவிட்சர்லாந்து, சுவீடன், மெக்சிகோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகிய 16 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

    நடப்பு சாம்பியன் ஜெர்மனி, எகிப்து, சவுதி அரேபியா, ஈரான், மொராக்கோ, பெரு, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டாரிகா, தென்கொரியா, துனிசியா, பனாமா, செனகல், போலந்து ஆகிய 16 அணிகள் தொடக்க சுற்றிலேயே வெளியேறின.

    2-வது சுற்று ஆட்டங்கள் நேற்று முடிவடைந்தன. இதன் முடிவில் பிரான்ஸ், உருகுவே, ரஷியா, குரோஷியா, பிரேசில், பெல்ஜியம், சுவீடன், இங்கிலாந்து ஆகிய 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.

    முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல், டென்மார்க், மெக்சிகோ, ஜப்பான், சுவிட்சர்லாந்து, கொலம்பியா ஆகிய அணிகள் 2-வது சுற்றில் வெளியேற்றப்பட்டன.

    இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். கால்இறுதி ஆட்டங்கள் 6-ந்தேதி தொடங்குகிறது. அன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் பிரான்ஸ்- உருகுவே, பிரேசில்- பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

    7-ந்தேதி நடைபெறும் கால்இறுதிகளில் இங்கிலாந்து-சுவீடன், ரஷியா, குரோஷியா அணிகள் மோதுகின்றன.

    அரையிறுதி ஆட்டங்கள் 10 மற்றும் 11-ந்தேதியும், இறுதிப்போட்டி 15-ந் தேதியும் நடக்கிறது. #WorldCup2018 #QuarterFinals
    உலக கோப்பை கால்பந்து 'நாக்அவுட்' சுற்றில் பலம் வாய்ந்த முன்னாள் சாம்பியனான பிரேசில் அணியை, மெக்சிகோ இன்று எதிர்கொள்கிறது. #WorldCup2018
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் பட்டம் வெல்லும் வாய்ப்பு உள்ள அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி, மெக்சிகோவை சமரா ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) சந்திக்கிறது.

    லீக் சுற்றில் சுவிட்சர்லாந்துடன் டிரா (1-1) கண்ட பிரேசில் அணி, அதன் பிறகு கோஸ்டாரிகா (2-0), செர்பியா (2-0) அணிகளை தோற்கடித்து தனது பிரிவில் முதலிடத்தை பிடித்தது. நெய்மார், பிலிப் காட்டினோ, கேப்டன் தியாகோ சில்வா, கேப்ரியல் ஜீசஸ் உள்ளிட்டோர் பிரேசிலை தாங்கிப்பிடிக்கும் நட்சத்திர வீரர்களாக மின்னுகிறார்கள். இதில் நெய்மார், காட்டினோ ஏற்கனவே தலா ஒரு மஞ்சள் அட்டை பெற்றிருப்பதால் இன்னொரு மஞ்சள் அட்டை வாங்கினால் அடுத்த ஆட்டத்தில் ஆட முடியாத நிலை ஏற்படும். அதனால் இன்றைய ஆட்டத்தில் அவர்கள் மிகுந்த கவனமுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

    கணிக்க முடியாத அணிகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் மெக்சிகோ லீக் சுற்றில் உலக சாம்பியன் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பேரதிர்ச்சி அளித்தது. தென்கொரியாவையும் (2-1) பதம் பார்த்த மெக்சிகோ கடைசி லீக்கில் சுவீடனுடன் (0-3) தோல்வியை தழுவியது. ஜெர்மனியை போன்று பிரேசிலின் கனவையும் சிதறடிக்கும் முனைப்புடன் மெக்சிகோ அணியினர் வியூகங்களை வகுத்துள்ளனர்.

    கோல் கீப்பர் குல்லர்மோ ஒச்சாவ் மற்றும் மெக்சிகோ அணிக்காக சர்வதேச போட்டிகளில் 49 கோல்கள் அடித்துள்ள அனுபவம் வாய்ந்த ஜாவியர் ஹெர்னாண்டஸ் ஆகியோர் அந்த அணியின் நம்பிக்கை தூண்கள் ஆவர்.

    2014-ம் ஆண்டு உலக கோப்பையில் பிரேசிலுக்கு எதிரான லீக்கில் குல்லர்மோ ஒச்சாவ் ஒரு கோல் கூட அடிக்க விடாமல் அந்த ஆட்டத்தை கோல் இன்றி டிராவுக்கு கொண்டு வந்தது நினைவு கூரத்தக்க விஷயமாகும். எல்லா வகையிலும் மெக்சிகோ முட்டுக்கட்டை போடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் வெற்றி வாய்ப்பில் பிரேசிலின் கையே சற்று ஓங்கி நிற்கிறது. #WorldCup2018 #WorldCup
    இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் அடுத்த மாதம் ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க அனுமதி அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். #WeAreIndia #BackTheBlue #StephenConstantine #IndiaFootball

    மும்பை:

    2018-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறுகிறது. இதில் 40 விதமான விளையாட்டுகளை சேர்ந்த 462 போட்டிகள் நடைபெற உள்ளன. 

    இந்த தொடரில் இந்திய அணி தடகளம், ஹாக்கி, குத்துச்சண்டை, மல்யுத்தம், வில் வித்தை, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறது.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய கால்பந்து அணியை விளையாட அனுமதிக்க வேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டண்டைன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    எங்களுக்கு நிறைய போட்டிகள் தேவைப்படுகிறது. ஒருவேளை அரசு கவனித்தால் எங்களை ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு அனுப்பி வையுங்கள். அது 23 வயதிற்குட்பட்டோருக்கான போட்டி. நமது அணியில் 23 வயதிற்குட்பட்டவர்கள் 11 பேர் உள்ளனர்.  அந்த வீரர்கள் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் நாம் அதிக பலன்கள் பெறலாம்.



    போட்டியை காண வாருங்கள் என மக்களிடம் நாம் பிச்சை எடுப்பது போல் கேட்க கூடாது. இன்று (திங்கள்கிழமை) கிடைத்த வரவேற்பு நான் எதிர்பார்த்தைவிட மிகவும் அதிகம். அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அடுத்த இரண்டு போட்டிகளுக்கும் அதே ஆதரவு இருக்கும் என நம்புகிறேன்.

    இவ்வாறு ஸ்டீபன் கான்ஸ்டண்டைன் கூறியுள்ளார்.  #WeAreIndia #BackTheBlue #StephenConstantine #IndiaFootball
    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் ஸ்பெயின், குரோஷிய அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. #WorldCupSquads2018
    ஜாக்ரெப்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் அடுத்த மாதம் (ஜூன்) 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான 24 பேர் கொண்ட குரோஷிய அணியை பயிற்சியாளர் ஜட்கோ டாலிச் நேற்று அறிவித்தார். லூக்கா மோட்ரிச், இவான் ராகிடிச், மரியோ மான்ட்ஜூகிச், இவான் பெரிசிச் போன்ற முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    இதே போல் ஸ்பெயின் அணி வீரர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர்கள் இனியஸ்டா, டேவிட் சில்வா, செர்ஜியோ ரமோஸ், ஜோர்டி ஆல்பா, ஜெரார்டு பிக்யூ உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். அதே சமயம் தகுதி சுற்றில் விளையாடிய ஆல்வரோ மோரட்டா மற்றும் மார்கஸ் அலோன்சோ நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி, போர்ச்சுகல், மொராக்கோ, ஈரான் ஆகிய அணிகளுடன் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

    இதற்கிடையே உலககோப்பை போட்டிக்கான பெல்ஜியம் அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அந்த அணியின் நடுகள வீரர் 30 வயதான ராட்ஜா நையிங்கோலன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  #WorldCupSquads2018
    ×