search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கங்குலி"

    கேப்டன் பதவியில் அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி 2-வது இடத்தை பிடித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. இதில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1-2 என பின்தங்கி தொடரை லைவ் ஆக வைத்துள்ளது.

    விராட் கோலி கேப்டன் பதவியில் இது 22-வது வெற்றியாகும். இதன்மூலம் கேப்டனாக அதிக வெற்றி பெற்ற 2-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். கங்குலி தலைமையில் இந்திய அணி 49 போட்டிகளில் 21 வெற்றி, 13 தோல்வியை சந்தித்துள்ளது.



    விராட் கோலி தலைமையில் இந்திய அணி 38 போட்டிகளில் 22 வெற்றி, 7-ல் தோல்வியை சந்தித்துள்ளது. டோனி தலைமையில் இந்தியா 60 போட்டிகளில் 27 வெற்றி, 18 தோல்விகளை சந்தித்துள்ளது.

    அசாருதீன் தலைமையில் இந்தியா 47 போட்டிகளில் 14-ல் வெற்றி பெற்றுள்ளது. கவாஸ்கர் தலைமையில் 47 போட்டியில் 9-ல் வெற்றி பெற்றுள்ளது. பட்டோடி தலைமையில் இந்தியா 40 போட்டியில் 9 வெற்றி பெற்றுள்ளது.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவுரை வழங்கியுள்ளார். #ENGvIND #ViratKohli #Ganguly
    இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்த நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்குகிறது. இதையொட்டி இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் எழுதியிருப்பதாவது:-தோல்விக்கு அணியின் கேப்டனை விமர்சிப்பதும், வெற்றி பெற்றால் கேப்டனை பாராட்டுவதும் கிரிக்கெட்டில் சகஜம். தோல்வியால் துவண்டு போய் உள்ள இந்திய வீரர்களுக்கு விராட் கோலி புது நம்பிக்கை கொடுக்க வேண்டும். அவரால் மட்டுமே அவர்களது மனநிலையை மாற்ற முடியும்.

    அவர் தங்கள் அணி வீரர்களுடன் உட்கார்ந்து பேச வேண்டும். என்னால் ரன் குவிக்க முடிகிறது என்றால் உங்களாலும் ஏன் முடியாது என்று எடுத்து கூற வேண்டும். களம் இறங்கி பயமின்றி விளையாடும்படி அறிவுறுத்த வேண்டும். அது மட்டுமின்றி அவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த போதிய வாய்ப்பு அளிக்க வேண்டும்’ என்று கங்குலி அதில் கூறியுள்ளார். #ENGvIND #ViratKohli #Ganguly
    நானாக இருந்தால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முரளிவிஜய், ராகுல் ஆகியோரைத் தான் தொடக்க வீரர்களாக களம் இறக்குவேன் என்று கங்குலி கூறியுள்ளார். #Ganguly #MuraliVijay #lokeshrahul

    புதுடெல்லி:

    வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது.

    டெஸ்ட் தொடரில் தொடக்க வீரர்களாக யார் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தவானின் மோசமான ஆட்டம் காரணமாக இந்த கேள்வி எழுகிறது.

    எசக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தவான் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இரண்டு இன்னிங்சிலும் அவர் ‘டக்’ அவுட் ஆனார். பேட்டிங்குக்கு ஏற்ற ஆடுகளத்தில் அவர் சிறப்பாக ஆட முடியாததால் ஏமாற்றமே.

    இந்த பயிற்சி ஆட்டத்தில் முரளிவிஜய், வீராட்கோலி தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அரை சதம் அடித்து இருந்தனர்.

    தவானின் மோசமான ‘பார்ம்’ காரணமாக அவர் தொடக்க வீரராக களம் இறக்கப்படுவாரா? என்ற கேள்வி இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முரளி விஜய்யையும், லோகேஷ் ராகுலையும் தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனை யாளருமான கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    வெளிநாடுகளில் தவான் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடியது இல்லை. அவர் ரன்களை குவித்ததில்லை என்று சாதனைகள் சொல்கிறது.

    தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா எதுவாக இருந்தாலும் அவர் சரியாக ஆடவில்லை. தவானை பொறுத்தவரை ஒருநாள் போட்டியில் சிறந்த வீரர்.

    டெஸ்ட் போட்டியில் அவர் உள்நாட்டில் மட்டுமே தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். இந்திய மண்ணில் சதம் அடித்ததை வைத்து அவருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்குவது சுவாரசியமே.


    நானாக இருந்தால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முரளிவிஜய், ராகுல் ஆகியோரைத் தான் தொடக்க வீரர்களாக களம் இறக்குவேன்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    இதேபோல 3-வது வரிசையில் ஆடும் புஜாராவும் திணறி வருகிறார். 11 பேர் கொண்ட அணிக்கு அவர் தகுதியானவர் என்று இங்கிலாந்து முன்னாள் தொடக்க வீரர் டாரன்காக் தெரிவித்துள்ளார். #Ganguly #MuraliVijay #lokeshrahul

    ரகானே அல்லது கேஎல் ராகுல் ஆகியோரில் ஒருவருக்கு 4-வது இடம் கொடுக்காதது குறித்து திலிப் வெங்சர்கார் விமர்சனம் எழுப்பியுள்ளார். #rahane #KLRahul
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இங்கிலாந்து 2-1 என வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும், அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது.

    ஒருநாள் கிரிக்கெட் அணியில் தொடக்க வீரர்களான தவான், ரோகித் சர்மா மற்றும் 3-வது வீரராக களம் இறங்கும் விராட் கோலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இவர்கள் சொதப்பினால் ஒட்டு மொத்தமாக அணி சொதப்பி விடுகிறது. 4-வது இடத்திற்கு சரியான நபரை இந்திய அணி இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

    இதனால் இந்தியா தோல்வியடைந்து வருகிறது. இப்படி சென்றால் உலகக்கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்வது கடினமாகிவிடும். 4-வது இடத்திற்கு ரகானே அல்லது கேஎல் ராகுலை தயார் செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர் கங்குலி விமர்சனம் செய்திருந்தார்.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வளாரும் ஆன திலிப் வெங்சர்காரும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து திலிப் வெங்சர்கார் கூறுகையில் ‘‘நம்பர் 3 மற்றும் 4 ஒருநாள் கிரிக்கெட்டில் முக்கியமான இடம். நம்பர் 4 இடத்திற்கு சரியான நபர் கிடைக்கவில்லை என்பது மோசமான தேர்வை காட்டுகிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரகானே அல்லது கேஎல் ராகுலை அந்த இடத்திற்கான வாய்ப்பில் இருந்து நீங்கள் எப்படி தவிர்க்க முடியும்?.



    ஒருநாள் போட்டிக்கு ரகானே தகுதி பெற முடியாது என்றால், அங்கு உங்கள் கண்ணை விட வேறு ஏதோ அங்கிருக்கிறது என்பதுதான் அர்த்தம். ஆப்கானிஸ்தானிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து அவர் எப்படி நீக்க முடியும்?.

    இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரகானே மீது நீங்கள் எப்படி நம்பிக்கை வைக்க முடியாமல் போனது?. நீங்கள் மியூசிக் சேர் ஆட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தால் பின்னர், டாப் வீரர்களின் நம்பிக்கை சீர்குலைக்கப்படும். இது வருங்காலத்திற்கு நல்லதல்ல. கேஎல் ராகுலை 4வது இடத்தில் நிலையாக களம் இறக்காதது, அவரை போன்ற குவாலிட்டி பேட்ஸ்மேன்களுக்கு நல்லதல்ல’’ என்றார்.
    ராகுல் 4-வது வீரர் வரிசைக்கு தான் பொருத்தமானவர் அவரை கண்டிப்பாக இந்த வரிசையில் களம் இறக்க வேண்டும் என்று கோலிக்கு முன்னாள் கேப்டனும் கங்குலி அறிவுரை கூறியுள்ளார். #INDvENG #Virat #Ganguly #Rahul
    புதுடெல்லி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால் 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோற்று தொடரை இழந்தது. கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. லீட்ஸ் மைதானத்தில் நடந்த கடைசி ஆட்டத்தில் கே.எல்.ராகுல், உமேஷ்யாதவ், சித்தார்த் கவூல் ஆகியோர் நீக்கப்பட்டு தினேஷ்கார்த்திக், புவனேஷ்வர்குமார், ‌ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வீரர்கள் தேர்வு முறைக்கு முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கங்குலி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சிறந்த பேட்ஸ்மேன்கள் கே.எல்.ராகுல், ரகானே ஆகியோருக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கவில்லை. அடிக்கடி மிடில் ஆர்டரை (நடுவரிசை) மாற்றி சோதிப்பது முன்கள பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-

    இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ரோகித்சர்மா, தவான், விராட்கோலி ஆகியோர் சர்வதேச அணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். இவர்கள் வலுவான பேட்ஸ்மேன்கள்.

    ஆனால் இந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சில நேரங்களில் விரைவில் ஆட்டம் இழந்து ரன் எடுக்க முடியாமல் போகும் போது அடுத்தடுத்து களம் இறங்கும் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படும். இது அணிக்கு மிகப்பெரிய பிரச்சினையாக மாறும்.

    இதனால் மிடில் ஆர்டர் வரிசையை பலப்படுத்துவது அவசியம். இந்த வரிசையை அடிக்கடி மாற்றி சோதிப்பது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை அதிகரிக்கும்.

    ராகுல், ரகானே ஆகிய 2 பேட்ஸ்மேன்களையும் அணி நிர்வாகம் போதுமான அளவு பயன்படுத்தவில்லை.

    4-வது வீரர் வரிசைக்கு ராகுல் தான் பொருத்தமானவர் அவரை கண்டிப்பாக இந்த வரிசையில் களம் இறக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நானாக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு ராகுலை 4-வது இடத்தில் பேட் செய்யுங்கள் என்று கூறிவிடுவேன். உங்களுக்கு 15 வாய்ப்புகள் தருகிறோம். விளையாடுங்கள் என்று கூறுவேன்.



    மான்செஸ்டர் போட்டியில் சதம் அடித்த ராகுலை கடைசி ஒருநாள் போட்டியில் நீக்கியது ஏன்? என்று தெரியவில்லை. இதுபோன்ற சிறந்த வீரர்களை உங்களால் உருவாக்க முடியாது.

    5-வது வரிசையில் ரகானேயை பயன்படுத்தலாம். அதன்பின்னர் 6-வது இடத்துக்கு தினேஷ் கார்த்திக் அல்லது டோனியா? என்பதை முடிவு செய்யப்படும். 7-வது வீரராக ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

    ரகானேயை ஒருநாள் தொடரில் இருந்து நீக்கியது வேதனை அளித்தாலும் அவரின் சேவை டெஸ்ட் தொடருக்கு முக்கியம் என்பதை அணி நிர்வாகம் உணர்ந்து இருக்கிறது. இருவரையும் வேண்டுமென்றே அணி நிர்வாகம் ஒதுக்கிவிட்டது என்று நான் கூறவில்லை.

    2019 உலக கோப்பையில் டோனி இடம் பிடிக்க வேண்டுமானால் அவரின் வழக்கமான ஆட்டத்துக்கு திரும்ப வேண்டும். 25 ஓவர்கள் வரை மீதம் இருக்கும்போது அவர் தன்னை நிலைப்படுத்தி கொண்டு நன்றாக விளையாடலாம். ஆனால் டோனி தடுமாறுகிறார்.

    இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வந்தவர் டோனி. ஆனால் தற்போது பேட்டிங்கில் திணறுகிறார். அவர் தனது திறமையை அதிகரித்து இன்னும் 1ஆண்டுக்கு அணியில் நீடிக்க வேண்டும்.

    இவ்வாறு கங்குலி கூறியுள்ளார். #INDvENG #Virat #Ganguly #Rahul
    மாஸ்கோவில் இன்றிரவு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காண கங்குலி ரஷியா சென்றுள்ளார். #WorldCup2018 #Russia
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி மாஸ்கோவில் உள்ள லுஸ்னிக்கி மைதானத்தில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியை காண உலகில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் மாஸ்கோ சென்றுள்ளனர்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இடது கை பேட்ஸ்மேனும் ஆன கங்குலி கால்பந்து போட்டியின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் இங்கிலாந்து - இந்தியா இடையிலான கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக மாஸ்கோ சென்றுள்ளார். இதை கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்ஸ்மேன் செய்ய வேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இலங்கையில் நடைபெற்ற தொடரின்போது இந்திய அணி பல்வேறு பரிசோதனை செய்தது. அப்போது கேஎல் ராகுல், கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரகானே ஆகியோரை நான்காவது இடத்தில் களமிறக்கியது.

    ஆனால் எந்த வீரரும் அந்த இடத்தில் சரியாக விளையாடவில்லை. இங்கிலாந்திற்கு எதிராக டி20 தொடரில் கேஎல் ராகுலை 3-வது இடத்தில் களமிறக்கி கோலி 4-வது இடத்தில் களமிறங்கினார். இதற்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது. கேஎல் ராகுல் முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கோலி கடைசி இரண்டு போட்டியில் தலா 40 ரன்களுக்கு மேல் அடித்தார்.

    இந்நிலையில் விராட் கோலி ஒருநாள் போட்டியில் 4-வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘டி20 தொடரை பார்த்தீர்கள் என்றால், பேட்டிங் வரிசை சரியாக அமைந்ததாக நான் நினைக்கிறேன். கேஎல் ராகுல் 3-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் களம் இறங்கி விளையாடியதால், பேட்டிங்கில் இருந்து வந்த பிரச்சனை தீர்ந்ததாக நினைக்கிறேன்.

    ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு இதுபோன்று களம் இறங்குவது சிறப்பானதாக அமையும் என்பது என்னுடைய ஒட்டுமொத்த நம்பிக்கை. விராட் கோலி ஒருநாள் தொடரில் இந்த எண்ணத்தோடுதான் களம் இறங்குவார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
    ×