search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூசிலாந்து"

    நியூசிலாந்துடனான மூன்றாவது டெஸ்டில் அசார் அலி, ஆசாத் ஷபிக் ஆகியோரின் சதத்தால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 348 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. #PAKvNZ
    அபுதாபி:

    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடரில் வெற்றியாளரை நிர்மாணிக்கும் மூன்றாவது டெஸ்ட் துபாயில் தொடங்கியது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன்களும், வாட்லிங் 77 ரன்களும் சேர்க்க முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    பாகிஸ்தான் அணி சார்பில் பிலால் ஆசிப் 5 விக்கெட்டும், யாசிர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய அசார் அலி அபாரமாக விளையாடி சதமடித்து அசத்தினார். அவர் 134 ரன்னில் அவுட்டானார். அவருக்கு ஆசாத் ஷபிக் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 201 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஆசாத் ஷபிக்கும் சதமடித்தார்.  அவர் 104 ரன்னில் வெளியேறினார். இவர்களை தவிர மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.



    இதனால் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 135 ஓவர்களில் 348  ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    நியூசிலாந்து தரப்பில் வில்லியம் சாமர்வில்லி 4 விக்கெட்டுகளும், டிரெண்ட் போல்ட், அஜாஸ் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து,  74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது. கேன் வில்லியம்சன் 14 ரன்னுடனும், வில்லியம் சாமர்வில்லி ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். #PAKvNZ
    பிரான்ஸ் நாட்டின் தீவு கூட்டங்களில் ஒன்றான நியூ கலிடோனியாவில் இன்று அடுத்தடுத்து தாக்கிய 7.5 மற்றும் 6.6 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #earthquake #newcaledonia
    நயுமியா:

    தெற்கு பசிபிக் கடல் பிராந்தியத்தில் நியூசிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுமார் 24 ஆயிரம் தீவு கூட்டம் அமைந்துள்ளது. பனைமரங்கள் சூழ்ந்த இந்த தீவு கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் இயற்கை எழிலை கண்டு மகிழ்வதற்காக ஏராளமான உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் நீர் சறுக்கு விளையாட்டுக்காக இங்கு வந்து செல்கின்றனர்.

    இந்த தீவு கூட்டத்தில் உள்ள முக்கிய பகுதியான நியூ கலிடோனியாவில் (உள்நாட்டு நேரப்படி) மாலை சுமார் 3.30 மணியளவில் 7.5 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
        
    நிலநடுக்கத்துக்கு பிறகு தொடர்ந்து அடிக்கடி பலமுறை நில அதிர்வுகளும் ஏற்பட்டது. கடல் அலைகள் 3 மீட்டருக்கும் அதிகமாக எழும்பி கரையை தாக்கியது. அதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.



    அருகாமையில் உள்ள தீவு நாடுகளான வனாது, பிஜி ஆகியவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கடலோரத்தில் தங்கியிருக்கும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    நியூகலிடோனியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் நியூசிலாந்திலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அது வாபஸ் பெறப்பட்டது.

    இந்த நிலநடுக்கம் தாக்கிய சுமார் இரண்டு மணிநேரத்துக்கு பின்னர் 6.6 அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் தாக்கியது. இந்த இரு நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. #earthquake #newcaledonia
    பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் கேன் வில்லியம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து 7 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. #PAKvNZ #CaneWilliamson
    அபுதாபி:

    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி அபுதாபியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜித் ராவலும், டாம் லத்தாமும் களமிறங்கினர்.

    டாம் லத்தாம் 4 ரன்னிலும், ஜித் ராவல் 45 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுப்புடன் ஆடினார்.

    மற்றவர்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் கேன் வில்லியம்சன் 89 ரன்களில் வெளியேறினார்.



    ராஸ் டெய்லர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து, ஹென்ரி நிகோல்ஸ் 1 ரன்னிலும், கிராண்ட்ஹோம் 20 ரன்னிலும், டிம் சவுத்தி 2 ரன்னிலும் வெளியேறினர்.

    இறுதியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில்  நியூசிலாந்து அணி 90 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. விக்கெட் கீப்பர் வாட்லிங் 42 ரன்னும், வில்லியம் சாமர்வில்லி 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டும், பிலால் ஆசிப் 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். #PAKvNZ #CaneWilliamson
    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் யாசிர் ஷா 14 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் சாதனையை சமன் செய்துள்ளார். #YasirShah #ImranKhan

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு சுழற்பந்து வீரர் யாசிர் ஷா முக்கிய பங்கு வகித்தார். அவர் 184 ரன் எடுத்து, 14 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் அவர் முன்னாள் கேப்டன் இம்ரான்கானை சமன் செய்தார்.



    அவர் ஒரு டெஸ்டில் 14 விக்கெட்டை வீழ்த்தி சிறந்த பாகிஸ்தான் பந்து வீச்சாளர் என்ற சாதனையில் உள்ளார். வேகப்பந்து வீரரான இம்ரான்கான் 1982-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 116 ரன் கொடுத்து 14 விக்கெட் வீழ்த்தினார். 36 ஆண்டுகளுக்கு பிறகு யாசிர் ஷா அவரை சமன் செய்துள்ளார். #YasirShah #ImranKhan
    நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #PAKvNZ #Pakistan #NewZealand
    துபாய்:
     
    பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்தது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. அதிகபட்சமாக ஹாரிஸ் சோகைல் 147 ரன்னும், பாபர் அசாம் ஆட்டம் இழக்காமல் 127 ரன்னும் எடுத்தனர்.

    அதன்பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி, யாசிர் ஷா பந்து வீச்சில் சிக்கி 90 ரன்னில் சுருண்டது. யாசிர் ஷா 8 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

    பாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. நேற்று 3-வது நாள் ஆட்டநேரம் முடிவில் 2 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது. டாம் லாதம் 44 ரன்னுடனும், ராஸ் டெய்லர் 49 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. டாம் லாதம் அரை சதமடித்து வெளியேறினார். அடுத்து இறங்கிய ஹென்றி நிகோலஸ் டெய்லருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ராஸ் டெய்லர் 82 ரன்னிலும், ஹென்றி நிகோலஸ் 77 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. 



    இறுதியில், நியூசிலாந்து அணி 112.5 ஓவரில் 312 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 6 விக்கெட்டுகளும், ஹசன் அலி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் 14 விக்கெட்டுகள் வீழ்த்திய யாசிர் ஷா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    இந்த வெற்றி மூலம் இரு அணிகளும் தலாஒரு வெற்றியை பெற்றுள்ளன. இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3-ம் தேதி தொடங்கவுள்ளது. #PAKvNZ #Pakistan #NewZealand
    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 90 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. #Pakistan #NewZealand
    துபாய்:

    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 90 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா நேற்று ஒரே நாளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 2-வது நாளில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. அதிகபட்சமாக ஹாரிஸ் சோகைல் 147 ரன்னும், பாபர் அசாம் ஆட்டம் இழக்காமல் 127 ரன்னும் எடுத்தனர்.



    பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்து இருந்தது. ஜீத் ராவல் 17 ரன்னுடனும், டாம் லாதம் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. அணியின் ஸ்கோர் 50 ரன்னாக இருந்த போது ஜீத் ராவல் (31 ரன்கள்) யாசிர் ஷா பந்து வீச்சில் போல்டு ஆனார். அதன் பின்னர் விக்கெட்டுகள் மள, மளவென்று சரிந்தன. 35.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 90 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. கடைசி 40 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதிகபட்சமாக டாம் லாதம் 22 ரன்களும், கேப்டன் கனே வில்லியம்சன் 28 ரன்களும் (நாட்-அவுட்) எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. இதில் 6 வீரர்கள் ரன் கணக்கை தொடங்காமல் ஆட்டம் இழந்ததும் அடங்கும். பாகிஸ்தான் அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 8 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    ‘பாலோ-ஆன்’ ஆகி தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 43 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது. ஜீத் ராவல் 2 ரன்னிலும், கேப்டன் கனே வில்லியம்சன் 30 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இரண்டு விக்கெட்டையும் யாசிர் ஷா வீழ்த்தினார். டாம் லாதம் 44 ரன்னுடனும், ராஸ் டெய்லர் 49 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    நேற்று ஒரே நாளில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 10 விக்கெட்டுகள் சாய்த்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஒரேநாளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் பெருமையை யாசிர் ஷா பெற்றார். அத்துடன் டெஸ்ட் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பவுலரின் சிறப்பான பந்து வீச்சு இதுவாகும். மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு பவுலரின் சிறந்த பந்து வீச்சாகவும் இது பதிவானது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. #TestCricket #PAKvNZ
    அபுதாபி:

    பாகிஸ்தான் - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 153 ரன்னில் சுருண்டது. கேப்டன் கேன் வில்லியம்சன் 63 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளும், முகமது அப்பாஸ், ஹசன் அலி, ஹாரிஸ் சோகைல் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

    அதன்பின், ஆடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 83.2 ஓவர்களில் 227 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பாபர் அசாம் மட்டும் தாக்குப் பிடித்து 62 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து சார்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டும், கிரான்ட்ஹோம், அஜாஸ் பட்டேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜீத் ராவல் 46 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 37 ரன்னிலும் அவுட்டானார்.



    அடுத்து இறங்கிய ஹென்றி நிகோல்ஸ் 55 ரன்களும், வாட்லிங் 59 ரன்னிலும் வெளியேறினர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 100.4 ஓவரில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது.

    மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் இரண்டு நாள்கள் உள்ள நிலையில், 139 ரன்கள் மட்டும் எடுக்க வேண்டி இருப்பதால் பாகிஸ்தான் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. #TestCricket #PAKvNZ
    நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 227 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. #Pakistan #NewZealand #TestCricket
    அபுதாபி:

    பாகிஸ்தான்-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 153 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் கனே வில்லியம்சன் 63 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ‘அவுட்’ ஆனார்கள். பாகிஸ்தான் அணி தரப்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளும், முகமது அப்பாஸ், ஹசன் அலி, ஹாரிஸ் சோகைல் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.



    பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்து இருந்தது. அசார் அலி 10 ரன்னுடனும், ஹாரிஸ் சோகைல் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன.

    பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 83.2 ஓவர்களில் 227 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. சற்று தாக்குப்பிடித்து ஆடிய பாபர் அசாம் 62 ரன்னும், ஆசாத் ஷபிக் 43 ரன்னும், ஹாரிஸ் சோகைல் 38 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பினார்கள். நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டும், கிரான்ட்ஹோம், அஜாஸ் பட்டேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    74 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் ரன் எதுவும் எடுக்காமல் ஹசன் அலி பந்து வீச்சில் போல்டு ஆனார். நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 22.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்து இருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. அப்போது ஜீத் ராவல் 26 ரன்னுடனும், கேப்டன் கனே வில்லியம்சன் 27 ரன்னுடனும் இருந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. #WomenWorldT20 #Pakistan #NewZealand

    புரோடென்ஸ்:

    6-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் ‘பி’பிரிவில் உள்ள இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. இந்தியாவுக்கு இது 3-வது வெற்றியாகும். இதன் மூலம் இந்தியா அரை இறுதிக்கு முன்னேறியது.

    நேற்று நள்ளிரவு நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-பாகிஸ்தான் (பி பிரிவு) மோதின. முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்தது. பேட்ஸ் 35 ரன்னும், டேவின் 32 ரன்னும் எடுத்தனர்.

     


    பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 90 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து 54 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும். ‘பி’ பிரிவில் இருந்து ஏற்கனவே ஆஸ்திரேலியா இந்தியா ஆகிய அணிகள் அலை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்துவிட்டன. #WomenWorldT20 #Pakistan #NewZealand

    அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இறுதி வரை நியூசிலாந்து வீரர்கள் விளையாடுவார்கள் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. #NewZealand #IndianPremierLeague #IPL2019
    மும்பை:

    12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் அடுத்த ஆண்டு (2019) மார்ச் 23-ந் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மே மாதம் 15-ந் தேதிக்குள் இந்த போட்டி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    ஐ.பி.எல். போட்டி முடிந்ததும், உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி தொடங்குகிறது. இரண்டு போட்டிக்கும் இடையே குறுகிய கால இடைவெளியே இருப்பதால் ஐ.பி.எல். போட்டி தொடரில் இறுதி ஆட்டம் வரை இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா வீரர்கள் விளையாட அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அனுமதி அளிப்பது சந்தேகம் தான் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனுக்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய பொதுமேலாளர் ஜேம்ஸ் வியர் அளித்த சிறப்பு பேட்டியில், ‘அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டி தொடரில் இறுதிப்போட்டி வரை நியூசிலாந்து வீரர்கள் விளையாட அனுமதி அளிக்க நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதன் மூலம் நியூசிலாந்து வீரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். கடந்த சீசனில் ஐ.பி.எல். போட்டியில் எங்கள் நாட்டை சேர்ந்த 11 வீரர்கள் விளையாடினார்கள். அது எங்களுக்கு சிறந்த பலனை அளித்தது. எனவே அவர்கள் தொடர்ந்து விளையாட அனுமதிப்பதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

    மேலும் ஆஸ்திரேலிய போட்டி தொடர் முடிந்ததும், இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 23-ந் தேதி நேப்பியரில் நடக்கிறது. 20 ஓவர் போட்டிகள் இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டி தொடங்கும் நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடர் குறித்து நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் அளித்த பேட்டியில், ‘இந்திய அணி கடைசியாக 2014-ம் ஆண்டில் நியூசிலாந்தில் விளையாடியது. அதன் பிறகு இரு அணிகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. நியூசிலாந்தை போன்ற தன்மை கொண்ட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் தற்போதைய இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. எங்களது மைதானங்கள் ரன் குவிப்புக்கு உகந்ததாக இருக்கும். இந்திய அணியில் கேப்டன் விராட்கோலி உள்ளிட்ட சில வீரர்கள் சமீபகாலமாக சிறப்பாக ரன் குவித்து வருகிறார்கள். எனவே இந்த போட்டி தொடரில் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் இந்த போட்டி தொடர் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று கூறினார்.

    பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. #PAKvNZ #NZvPAK
    துபாய்:

    பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று பகல்-இரவாக நடந்தது.

    முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன் குவித்தது. பாபர் ஆசம் 92 ரன்னும், பஹர்ஜமான் 65 ரன்னும், ஹாரிஸ் சோகைல் 60 ரன்னும் எடுத்தனர். பெர்குசன் 5 விக்கெட் வீழ்த்தினார்.



    பின்னர் விளையாடிய நியூசிலாந்து 6.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. எனவே ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 20 ஓவர் தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி இருந்தது.

    இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் அபுதாபியில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. #PAKvNZ #NZvPAK
    நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வீசிய பவுன்சர் பந்து தாக்கியதில் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் காயமடைந்தார். #PAKvNZ #NZvPAK

    அபுதாபி:

    பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று பகல் -இரவாக நடந்தது.

    முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்னே எடுக்க முடிந்தது. ரோஸ் டெய்லர் அதிக பட்சமாக 86 ரன்னும், நிக்கோலஸ் 33 ரன்னும் எடுத்தனர். சகீன்ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 40.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஹர் ஜமான் 88 பந்தில் 88 ரன்னும் (11 பவுண்டரி), பாபர் ஆசம் 50 பந்தில் 46 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். பெர்குசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.


    இந்தப்போட்டியின் போது பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம்-உல்- ஹக் காயம் அடைந்தார். 16 ரன்னில் இருந்தபோது நியூசிலாந்து வேகப்பந்து வீரர் பெகுசன் வீசிய பவுன்சர் பந்து அவரது ஹெல்மட்டை பலமாக தாக்கியது. இதில் நிலை குலைந்து அவர் கீழே விழுந்தார். ஆட்டத்தின் 13-வது ஓவரில் முதல் பந்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. உடனடியாக அவருக்கு ஆடுகளத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சக வீரர் பஹர்ஜமானும், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனும் அருகே வந்து அவரது உடல் நலம் பற்றி கேட்டு அறிந்தனர்.

    சிறிது நேரத்தில் இமாம்- உல்-ஹக் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ‘ஸ்கேன்’ எடுத்து பார்க்கப்பட்டது. இதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று தெரியவந்தது. #PAKvNZ #NZvPAK

    ×