என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 97962
நீங்கள் தேடியது "slug 97962"
பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா - கார்த்தி அக்கா, தம்பியாக நடிக்கவிருக்கும் நிலையில், அந்த படத்தில் அவர்களுக்கு அப்பாக சத்யராஜ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Karthi #Jyothika
பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் அன்சன் பால் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் கார்த்தி - ஜோதிகாவின் அப்பாவாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Karthi #Jyothika #JeethuJoseph
தென்னிந்திய நடிகர் நடிகைகளின் சுயமரியாதை, பொது வாழ்வு மதிப்பீடு மற்றும் சுயகவுரவம் இவற்றின் பாதுகாப்பு கருதி தென்னிந்திய நடிகர் சங்கம் சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது. #MeToo #NadigarSangam
பெண்கள் தங்கள் துறைகளில் தங்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்களை வெளிப்படுத்த சர்வதேச அளவில் உருவான இயக்கம் மீடூ.
இந்த இயக்கம் சார்பில் தமிழ் சினிமாவில் நடிகைகள், பாடகிகள் என சில பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அத்துமீறல்களை வெளிக்கொண்டு வந்தனர். அப்போதே நடிகர் சங்கம் சார்பில் இந்த பிரச்சினைகளை கையாள ஒரு குழு அமைக்கப்படும் என்று நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் அறிவித்தார்.
கடந்த மாதம் நயன்தாராவை ராதாரவி மேடையில் விமர்சித்த சம்பவம் பரபரப்பானது. அப்போது நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் நடிகர் சங்கம் சார்பில் விஷாகா கமிட்டி அமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் நடிகர் சங்கம் சார்பில் இது போல பாதிக்கப்படும் பெண்களுக்கு நியாயம் வழங்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்னிந்திய நடிகர் நடிகைகளின் சுயமரியாதை, பொது வாழ்வு மதிப்பீடு மற்றும் சுயகவுரவம் இவற்றின் பாதுகாப்பு கருதி தென்னிந்திய நடிகர் சங்கம் சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், குழு அமைப்பாளர்கள் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பூச்சி முருகன், லலிதாகுமாரி, நடிகைகள் சுகாசினி, ரோகிணி, நடிகர் கிட்டி, பொருளாளர் கார்த்தி மற்றும் வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சிறப்புக் குழு மூலம் நடிகர், நடிகைகளின் சுயமரியாதைக்கு மதிப்பளிக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MeToo #NadigarSangam
பாராளுமன்ற தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்த நடிகர் சூர்யா, உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் என்று ட்விட் செய்துள்ளார். #LokSabhaElections2019
12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விஜய், பிரபு, விக்ரம் பிரபு, சசிகுமார், விஜய் ஆண்டனி, நடிகை குஷ்பு, மீனா, சுருதிஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர்.
உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது.. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்..!#Elections2019#GoVoteTN@ECISVEEP#ECISVEEP@TNelectionsCEOpic.twitter.com/AcABcHc8zi
— Suriya Sivakumar (@Suriya_offl) April 18, 2019
நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா, நடிகர் கார்த்தி அவரது மனைவி ரஞ்சினி ஆகியோர் தியாகராய நகரில் உள்ள பள்ளி ஒன்றில் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு நடிகர் சூர்யா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது.. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்..!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #Suriya #Jyothika
பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கவிருக்கும் படத்தில் கார்த்தி நடிக்கும் நிலையில், அந்த படத்தில் அவரது சகோதரியாக ஜோதிகா நடிக்கவிருக்கிறார். #Karthi #Jyothika
ஜோதிகா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான காற்றின் மொழி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் அடுத்தடுத்து மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கத்திலும், குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்திலும் ஜோதிகா நடிக்கிறார்.
அத்துடன் பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் திரில்லர் படம் ஒன்றில் ஜோதிகா இணைந்துள்ளார். கார்த்தி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இதில் இருவருக்கும் என்ன கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது சகோதரன், சகோதரியாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் அன்சன் பால் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Karthi #Jyothika #JeethuJoseph
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி - ராஷ்மிகா மந்தானா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #Karthi #K19
மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் நடித்து வரும் கார்த்தியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது.
எமோஷன், ஆக்ஷன் கலந்த காமெடி கதையாக உருவாகும் இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தானா தமிழில் அறிமுகமாகிறார். யோகி பாபு, பொன்னம்பலம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கார்த்தியின் 19-வது படமாக உருவாகும் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கின்றனர்.
Very happy to share that pooja of our’s next #Karthi19 was held earlier today 😊😊 @Karthi_Offl@iamRashmika@Bakkiyaraj_k@rajeevan69pic.twitter.com/COsIKRDYsA
— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 13, 2019
விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவையும், ஜெய் கலை பணிகளையும், ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். தொடர்ந்து சென்னை மற்றும் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் சில இடங்களில் பெரிய செட் போடப்படுகிறது. #K19 #Karthi #Karthi19 #RashmikaMandanna
லோகேஷ் கனகராஜ் படத்தை தொடர்ந்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் பணியாற்றவிருக்கும் கலைஞர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. #Karthi #K19
கார்த்தி நடித்த தேவ் படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கார்த்தி தற்போது மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். கார்த்தியின் 19-வது படமாக உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் கலைஞர்கள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிப்பதாக முன்னதாக கூறியிருந்த நிலையில், தற்போது படக்குழு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு மார்ச் இரண்டாவது வாரத்தில் துவங்கவிருக்கும் நிலையில், படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவையும், ஜெய் கலை பணிகளையும், ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். #K19 #Karthi #Karthi19 #RashmikaMandanna
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா மந்தானா, தமிழில் கார்த்தி ஜோடியாக அறிமுகமாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Karthi #RashmikaMandanna
கார்த்தி நடித்த தேவ் படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கார்த்தி தற்போது மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கார்த்தி ஜோடியாக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தானா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.
தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். அவர் விஜய் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாவதாக சில சில வதந்திகள் பரவிய நிலையில், ராஷ்மிகா கார்த்தி ஜோடியாக தமிழில் அறிமுகமாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Karthi #RashmikaMandanna #BaghyarajKannan
ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தேவ்' படத்தின் விமர்சனம். #DevReview #Dev #Karthi #RakulPreetSingh #RajathRaviShankar
கார்த்தி, விக்னேஷ்காந்த், அம்ருதா மூன்று பேரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்கள். தான் எங்கு சென்றாலும் தனது நண்பர்களையும் உடன் அழைத்துச் செல்கிறார். இந்த நிலையில், தனது மேல்படிப்புக்காக கார்த்தி வெளிநாடு செல்ல வேண்டிய நிலை வர, விக்னேஷ்காந்த், அம்ருதாவையும் அழைத்து செல்கிறார்.
இவ்வாறாக கார்த்தியின் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கும் விக்னேஷ்காந்த், அவரை காதலில் விழவைக்க திட்டமிடுகிறார். அதற்காக முகநூலில் பெண் தேடலில் ஈடுபட, ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படத்தை பார்க்கின்றனர். கார்த்திக்கு ரகுலை பார்த்த உடன் பிடித்து விடுகிறது.
சிறு வயதிலேயே தனது தந்தையை பிரிந்த ரகுல், ஒரு தொழில்நிறுவனத்தை நடத்திக் கொண்டு தனது தாய் ரம்யா கிருஷ்ணனுடன் வாழ்ந்து வருகிறார்.
ஆண்கள் என்றாலே வெறுக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை கார்த்தி எப்படி காதலில் விழ வைக்கிறார்? அவர்களுக்கிடையேயான நட்பு, காதல், பாசம், பிரிவு என்ன? கடைசியில் இருவரும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தி மீண்டும் ஸ்டைலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கார்த்தியின் மாறுபட்ட படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடனத்திலும் தேறியிருக்கிறார். ரகுல் ப்ரீத் சிங்கின் நடிப்பு அபாரம். கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்ககேற்றவாறு நடித்திருப்பது சிறப்பு.
விக்னேஷ்காந்த் காமெடியில் சிரிக்க வைக்கிறார். பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் அனுபவ நடிப்பாலும், அம்ருதா, வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள் காட்சிக்கு ஏற்பவும் வந்து செல்கின்றனர்.
என்ன செய்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்ற கார்த்தியின் கதாபாத்திரமும், ஆண் இல்லாமல் ஒரு பெண்ணால் வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையில் இருக்கும் ரகுலின் கதாபாத்திரத்திற்கு இடையேயான காதலை வித்தியாசமான கோணத்தில், காட்டியிருப்பதன் மூலம் இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இயக்குநருக்கு பாராட்டுக்கள். வழக்கமான காதல் கதையில், வித்தியாசமாக காட்சிப்படுத்துதல் மூலம் படத்தை ரசிக்க வைத்திருக்கிறார். காதல், காமெடி, செண்டிமென்ட் என காட்சிகள் ரசிக்கும்படியாகவே உள்ளது. திரைக்கதையின் நீளத்தை மட்டும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம்.
ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை அபாரம், பாடல்களில் அவரது பழைய ஹிட் பாடல்களை உணர முடிகிறது. ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவில் படத்திற்கே பலமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் `தேவ்' காதலன். #DevReview #Dev #Karthi #RakulPreetSingh #RajathRaviShankar
ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவ்' படத்தின் முன்னோட்டம். #Dev #Karthi #RakulPreetSingh
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள படம் `தேவ்'.
கார்த்தி நாயகனாகவும், ரகுல் ப்ரீத் சிங் நாயகியாவும் நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், வம்சி கிருஷ்ணா, ரேணுகா, விக்னேஷ்காந்த், அமுதா ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். நவரச நாயகன் கார்த்திக் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு - ஆர்.வேல்ராஜ், படத்தொகுப்பு - ரூபன், தயாரிப்பு வடிவமைப்பு - ராஜீவன், ஸ்டண்ட் - அன்பறிவ், கலை இயக்குனர் - ராஜீவன், பாடல்கள் - தாமரை, விவேக், ரஜத், நடனம் - தினேஷ், ஷோபி, உடை வடிவமைப்பு - நீராஜா கோனா, நிர்வாக தயாரிப்பு - கே.வி.துரை, தயாரிப்பு - எஸ்.லக்ஷ்மன் குமார், எழுத்து, இயக்கம் - ரஜத் ரவிஷங்கர்.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தி பேசும்போது,
இந்த படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை வலியுறுத்தும். ரஜத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன். ரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.
தேவ் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகிறது. #Dev #Karthi #RakulPreetSingh #RajathRaviShankar
தேவ் டிரைலர்:
கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘தேவ்’ படத்துடன் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ திரைப்படம் இணைந்துள்ளது. #Dev #Karthi #Suriya #NGK
`கடைக்குட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ரிலீசாகவிருக்கும் படம் `தேவ்'. அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
இப்படம் வெளியாகும் திரையரங்குகளில் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ டீசர் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்.ஜி.கே படத்தில் சூர்யா நாயகனாகவும் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நாயகிகளாகவும் நடித்திருக்கிறார்கள். செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கின் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆஜரானார். #INXMediaCase #PChidambaram
புதுடெல்லி:
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இவ்வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேற்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ப.சிதம்பரம் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்த ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துக்களை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது. #INXMediaCase #PChidambaram
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இவ்வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேற்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ப.சிதம்பரம் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்த ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துக்களை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது. #INXMediaCase #PChidambaram
ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியிருக்கும் `தேவ்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரகுல், கார்த்தியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக கூறினார். #Dev #Karthi #RakulPreetSingh
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லட்சுமண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `தேவ்'.
ரஜத் ரவிசங்கர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி நாயகனாகவும், ரகுல் ப்ரீத் சிங் நாயகியாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், தயாரிப்பாளர் லட்சுமண், இயக்குனர் ரஜத் ரவிசங்கர், வேல்ராஜ், கலை இயக்குனர் ராஜீவன், விநியோஸ்தகர் முரளி, ஆர்.ஜே.விக்னேஷ், அம்ருதா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசும் போது,
இந்த படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை வலியுறுத்தும். ரஜத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன். ரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.
ரகுல் ப்ரீத் சிங் பேசும் போது,
இயக்குநர் ரஜத் என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். கதை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கதாபாத்திரத்தை விரும்பி நடித்தேன். இயக்குநர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்.
கார்த்தியுடன் பணியாற்றுவது கடினமாக இருக்காது. 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. அதுபோல் இப்படத்திலும் வெற்றி பெரும் என்று நம்புகிறேன். கார்த்தியுடன் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார். #Dev #DevPressMeet #Karthi #RakulPreetSingh #RajathRaviSankar
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X