search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயக்குனர்"

    • மாவட்ட அளவில் வலைப்பந்து போட்டி நடைபெற்றது.
    • எம்.ஜி.ஆர் அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள்மாவட்ட த்திலேயே முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட அளவில் வலைப்பந்து போட்டி நடைபெற்றது.

    இதில் புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள்மாவட்ட த்திலேயே முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர்.

    மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவிக ளுக்கு புத்தூர் கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி, உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன்,

    கொள்ளிடம் சீனிவாசா மெட்ரிக் பள்ளி நிர்வாகி முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவி களுக்கு பரிசு மற்றும் ரொக்கம் வழங்கி பாராட்டினர்.

    நிகழ்ச்சியில் பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இரண்டு படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் ஒருவர், நடிகர்கள், நடிகைகளுக்கு கட்டளை போட்டு இருக்கிறாராம்.
    போதை பொருள் படம் மூலம் மிகவும் பிரபலமான இயக்குனர், அந்த படத்தின் ஹிட்டை தொடர்ந்து, பல நடிகர்களுக்கு கதை சொல்ல முயற்சி செய்தாராம். ஆனால், கடவுளின் பெயரை கொண்ட நடிகர் இயக்குனரை யாரையும் இயக்க விடாமல் தடுத்து, தன்னை வைத்து படம் இயக்க கட்டாயப்படுத்தினாராம்.

    அந்த படமும் வெற்றி பெற, முன்னணி இயக்குனர் அந்தஸ்துக்கு வந்துவிட்டாராம் இயக்குனர். தற்போது பாக்ஸ் ஆபிஸ் நடிகரை வைத்து படம் இயக்கி இருக்கிறாராம். இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்களுக்கு புதிய கட்டளை போட்டு இருக்கிறாராம். அதாவது, தற்போது உருவாகி வரும் படத்தை பற்றி யாரும் எங்கேயும் பேசக் கூடாது என்று கட்டளை போட்டு இருக்கிறாராம். 

    இயக்குனரின் கட்டளைக்கு பயந்து நடிகர்கள் பலரும் எங்கேயும் படத்தை பற்றி பேசாமல் இருக்கிறார்களாம்.
    பூந்தோட்ட காவல்காரன், பாலைவன ரோஜாக்கள் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் காஞ்சிபுரம் கோவிலில் பிச்சையெடுத்து வருகிறார்.
    எம்.ஜி.ஆர் நடித்த நம் நாடு படத்தின் இயக்குனரான ஜம்புலிங்கத்தின் மகன் செந்தில்நாதன். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்து இயக்குனரானார்.

    விஜயகாந்த், ராதிகாவை வைத்து பூந்தோட்ட காவல்காரன் படம் மூலம் அறிமுகம் ஆனார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் பாலைவன ரோஜாக்கள், இளவரசன் உள்பட 20 படங்களை இயக்கினார்.

    2009-ம் ஆண்டு உன்னை நான் என்ற படத்தை இயக்கி தயாரித்தார். இதனால் கடன் நெருக்கடிக்கு ஆளானார். படமும் வெளியாகவில்லை. கடன் நெருக்கடியால் சினிமாவை விட்டுவிட்டு டிவி பக்கம் வந்தார்.

    டிவியில் தொடர்களை இயக்கியும் நடித்தும் வந்தார். அவர் நடித்து வந்த தொடர் ஒன்றில் இருந்து அவர் சமீபத்தில் நீக்கப்பட்டார். இதனால் கடும் விரக்தியில் இருந்தார்.

    சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி காஞ்சிபுரத்தில் ஒரு கோவிலில் பிச்சை எடுக்க தொடங்கினார்.

    தயாரிப்பாளர்களாக இருக்கும் அவருடைய நண்பர்கள் சிலருக்கு இந்த தகவல் தெரியவரவே அவருக்கு தொடர்புகொண்டு விசாரித்தனர். அப்போது தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறி இருக்கிறார்.

    செந்தில் நாதனை மீட்டு பண உதவி செய்ய தயாரிப்பாளர்கள் சிலர் கார்களில் காஞ்சிபுரம் விரைந்தனர், இயக்குனர் செந்தில் நாதன் விபரீத முடிவு எதையும் எடுப்பதற்கு முன்பாக மீட்பதற்கு காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. காவல்துறை உதவியுடன் சினிமா தயாரிப்பாளர்கள் அவரை தேடிவருகிறார்கள்.

    சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக்குமார் கடந்த ஆண்டு கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்போது செந்தில் நாதன் அந்த விபரீத முடிவை தேட முயற்சிப்பது வேதனையளிப்பதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
    ×