search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98066"

    மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தல் இறுதி முடிவினை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. #MadhyaPradeshElections2018
    இந்தூர்:

    பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், 230 இடங்களை கொண்ட பெரிய மாநிலமான மத்திய பிரதேச மாநிலத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தது. ஆளும் பாஜகவும் சிறிய எண்ணிக்கை வித்தியாசத்தில் பின்தொடர்ந்தது.

    ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில் நேற்று இரவு நிலவரப்படி காங்கிரஸ் 115 இடங்களில் வெற்றி பெற்றதாக தெரியவந்தது. ஆளும் பா.ஜனதாவுக்கு 108 இடங்கள் கிடைத்தன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் மெஜாரிட்டியை நெருங்கியபோதும் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநில தேர்தல் இறுதி முடிவுகளை தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்துள்ளது. அதில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளனர்.



    காங்கிரஸ் கட்சிக்கு சமாஜ்வாடி கட்சியின் ஒரு உறுப்பினர் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளதால், ஆட்சியமைக்க இன்னும் ஒரு உறுப்பினரின் ஆதரவு இருந்தால் ஆட்சி அமைக்க முடியும். எனவே பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் பணியை தொடங்கி உள்ளது. #MadhyaPradeshElections2018
    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார். #RajatsthanAssemblyElections #Congress #SachinPilot
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் கடந்த 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 74.21 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓட்டு எண்ணும் 40 மையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிக இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை பெற்றதால், தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். 



    இந்நிலையில், ராஜஸ்தானின் டோங்க் தொகுதியில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் வெற்றி பெற்றுள்ளார்.

    இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யூனுஸ் கானை விட 54 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார். #RajatsthanAssemblyElections #Congress #SachinPilot
    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் 40 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகமாக பெற்று வெற்றியடைந்தார். #RajatsthanAssemblyElections #Congress #AshokGehlot
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் கடந்த 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 74.21 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓட்டு எண்ணும் 40 மையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிக இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை பெற்றதால், தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். 



    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் சர்தார்புரா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் வெற்றி பெற்றுள்ளார்.

    இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஷம்பு சிங்கை விட 40 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார். #RajatsthanAssemblyElections #Congress #AshokGehlot
    தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், காஜ்வெல் தொகுதியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். #Results2018 #TelenganaElections #ChandrasekharRao
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, துவக்கம் முதலே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது.

    மதிய நிலவரப்படி ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டியை தாண்டி, 86 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. இதனால் சந்திரசேகர ராவ் மீண்டும் முதல்வர் ஆவது உறுதியாகிவிட்டது.



    இந்நிலையில், காஜ்வெல் தொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவ் துவக்கத்தில் இருந்தே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் சந்திரசேகர ராவ், 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் வந்தேரு பிரதாப் ரெட்டி 2ம் இடத்தைப் பிடித்தார். பாஜக வேட்பாளர் அகுல விஜயா நான்காம் இடத்திற்கு பின்தங்கினார். #Results2018 #TelenganaElections #ChandrasekharRao
    அணு ஆயுதங்களுடன் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் ‘அக்னி-5’ ரக ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது. #AgniV #AbdulKalamisland
    புவனேஸ்வர்:

    இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மூன்றுகட்ட உந்துதல் செயல்பாட்டுடன் 1.5 டன் எடையை சுமந்துச் செல்லக்கூடிய வகையில் 17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட ‘அக்னி–5’ ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.

    அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் இந்த ‘அக்னி–5’ ஏவுகணைகள் சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை, கண்டம்விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில் (பழைய பெயர் வீலர் தீவு) இருந்து இன்று பிற்பகல் ‘அக்னி–5’ ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டது.

    இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை குறிதவறாமல் ‘அக்னி–5’ பாய்ந்து தாக்கி, அழித்ததாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் ஆறுமுறை நடத்தப்பட்ட பரிசோதனைகளும் வெற்றிகரமாகவே அமைந்தது நினைவிருக்கலாம். #AgniV #AbdulKalamisland

    ஆர்மீனியாவில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நிகோல் பஷின்யானின் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் அவர் மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். #ArmeniaElection #NikolPashinian
    யெரேவன்:

    முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடு ஆர்மீனியா. இங்கு 30 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். ரஷியாவின் பாதுகாப்புடன் இந்த நாடு செயல்படுகிறது. எனவே அதன் நெருங்கிய நட்பு நாடாக இது திகழ்கிறது.

    இங்கு கடந்த 10 ஆண்டுகளாக அதிபராக இருந்த சாக்ஷியானை புரட்சி மூலம் பதவி நீக்கம் செய்துவிட்டு நிகோல் பஷின்யான் பிரதமரானார்.

    இந்தநிலையில் அங்கு நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் பிரதமர் நிகோல் பஷின்யானின் கட்சி அமோக வெற்றிபெற்றது.

    தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 70 சதவீதம் வாக்குகளை நிகோல் பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.

    இவர் பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்கு வந்தவர். ஏப்ரலில் அமைதியான முறையில் புரட்சி நடத்தி ஆட்சியை பிடித்தார்.  #ArmeniaElection #NikolPashinian
    புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய 85-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி, அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை சுவைத்தது. #ProKabaddi #PuneriPaltan #HaryanaSteelers
    புனே:

    6-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய 85-வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) புனேரி பால்டன் அணி 35-33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை சுவைத்தது. முதல் பாதியில் 8-23 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த புனே அணி பிற்பாதியில் வியப்புக்குரிய வகையில் ஆடி பிரமாதப்படுத்தியது. புனே அணியில் அதிகபட்சமாக சந்தீப் நார்வல் 7 புள்ளிகள் சேர்த்தார். 17-வது லீக்கில் ஆடிய புனே அணிக்கு இது 7-வது வெற்றியாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் (பி பிரிவு) பெங்களூரு புல்ஸ் 34-26 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. இன்றைய ஆட்டங்களில் புனேரி பால்டன்- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி), பெங்களூரு புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 9 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.
    புரோ கபடி லீக் தொடரில் பெங்களூரு புல்ஸ், குஜராத் பார்ச்சுன் அணிகள் வெற்றியை ருசித்தது. #ProKabaddi #Bengaluru #Gujarat
    ஆமதாபாத்:

    6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு ஆமதாபாத்தில் அரங்கேறிய 70-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 45-32 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தி 7-வது வெற்றியை ருசித்தது.

    மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 32-37 என்ற புள்ளி கணக்கில் உள்ளூர் அணியான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சிடம் வீழ்ந்தது. குஜராத்துக்கு இது 8-வது வெற்றியாகும். போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.
    10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று இந்திய வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர். #WomensWorldBoxing #Championship #India
    புதுடெல்லி:

    10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 57 கிலோ பிரிவில் நேற்று நேரடியாக 2-வது சுற்றில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சோனியா லாத்தெர், மொராக்கோ வீராங்கனை டோஜானி டோயாவை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சோனியா லாத்தெர் 5-0 என்ற கணக்கில் டோஜானி டோயாவை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அரியானாவை சேர்ந்த 26 வயதான சோனியா லாத்தெர் 2016-ம் ஆண்டு உலக போட்டியில் வெள்ளிப்பதக்கமும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 2 முறை வெள்ளிப்பதக்கமும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் 51 கிலோ பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி 4-1 என்ற கணக்கில் அர்மேனியா வீராங்கனை அனுஷ் கிரிகோர்யானை சாய்த்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். 64 கிலோ பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 4-1 என்ற கணக்கில் அமெரிக்காவின் அமெலி மூரை தோற்கடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை ருசித்தது. #India #Australia #WomenWorldT20
    கயானா:

    பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் கயானாவில் நேற்று இரவு நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை சந்தித்தது. ஏற்கனவே இரு அணிகளும் அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில் தனது பிரிவில் முதலிடத்தை பிடிப்பது யார்? என்பதற்காக மல்லுக்கட்டின.

    ‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் மிதாலி ராஜ், மான்சி ஜோஷி நீக்கப்பட்டு அனுஜா பட்டீல், அருந்ததி ரெட்டி சேர்க்கப்பட்டனர். முதலில் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை தனியா பாதியா 2 ரன்னிலும், ரோட்ரிக்ஸ் 6 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.



    3-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், மந்தனாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 11.5 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்னை எட்டியது. அதிரடியாக விளாசிய ஹர்மன்பிரீத் கவுர் 27 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் கிம்மின்சி பந்து வீச்சில் ராச்சல் ஹானேஸ்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    அடுத்து களம் கண்ட வேதா கிருஷ்ணமூர்த்தி 3 ரன்னிலும், ஹேமலதா 1 ரன்னிலும் நடையை கட்டினார்கள். அபாரமாக அடித்து ஆடிய மந்தனா (83 ரன்கள், 55 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன்) மெகன் ஸ்குட் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்து அருந்ததி ரெட்டி 6 ரன்னிலும், தீப்தி ஷர்மா 8 ரன்னிலும் அவுட் ஆனார்கள். 20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. ராதா யாதவ் 1 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் எலிசி பெர்ரி 3 விக்கெட்டும், கிம்மின்சி, ஆஷ்லிக் கார்ட்னெர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 119 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடத்தை பிடித்தது. கேட்ச் பிடிக்க முற்படுகையில் சக வீராங்கனையுடன் மோதி காயம் அடைந்த விக்கெட் கீப்பர் அலிசா ஹீலி பேட்டிங் செய்யவில்லை. அதிகபட்சமாக எலிசி பெர்ரி ஆட்டம் இழக்காமல் 39 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அனுஜா பட்டீல் 3 விக்கெட்டும், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்திய வீராங்கனை மந்தனா ஆட்டநாயகி விருது பெற்றார்.
    இலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். #SriLankaParliament #RajapaksaWalkout
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அத்துடன் பாராளுமன்றத்தையும் முடக்கிய அவர், பின்னர் பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலை தொடர்ந்து நவம்பர் 14-ம்தேதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்தார்.  

    இதற்கிடையே, பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அத்துடன், அதிபரின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்தது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி இலங்கை பாராளுமன்றம் இன்று காலை கூடியது. அவை நடவடிக்கை தொடங்கியதும், அதிபரால் நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ராஜபக்சே வெளிநடப்பு செய்தார்.

    அதன்பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக பெரும்பாலான எம்பிக்கள் வாக்களித்தனர். இதையடுத்து ராஜபக்சே அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும் ராஜபக்சே அரசுக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். #SriLankaParliament #RajapaksaWalkout
    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. #WomenT20 #WorldCup #India #Pakistan
    புரோவிடென்ஸ்:

    பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்த நிலையில் இந்திய அணி நேற்று தனது 2-வது லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்த இந்தியா முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய பணித்தது.



    இதன்படி பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தானுக்கு, இந்திய பவுலர்கள் கடும் குடைச்சல் கொடுத்தனர். ஆயிஷா ஜாபர் (0), உமைமா சோகைல் (3 ரன்) இருவரும் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. அதன் பிறகு மிடில் வரிசையில் பிஸ்மா மாரூப் (53 ரன்), நிதா தர் (52 ரன்) இருவரும் அரைசதம் அடித்து அணியை ஓரளவு நல்ல ஸ்கோரை எட்ட வைத்தனர். 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் சென்னையைச் சேர்ந்த ஹேமலதா மற்றும் பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.



    அடுத்து களம் புகுந்த இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மிதாலி ராஜ் 56 ரன்களும் (47 பந்து, 7 பவுண்டரி), மந்தனா 26 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

    முன்னதாக கிராஸ் இஸ்லெட்டில் ஏ பிரிவில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையே நடக்க இருந்த லீக் ஆட்டம் பலத்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. #WomenT20 #WorldCup #India #Pakistan
    ×