search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98066"

    12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் போட்டியில் 36-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை அணி, நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது. #ProKabaddi #UMumbai #PatnaPirates
    பாட்னா:

    12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பாட்னாவில் நேற்றிரவு நடந்த பரபரப்பான 36-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை அணி (யு மும்பா) 40-39 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது. 7-வது ஆட்டத்தில் ஆடிய மும்பைக்கு இது 5-வது வெற்றியாகும். முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 39-28 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வென்றது. இன்றைய ஆட்டங்களில் டெல்லி-உ.பி.யோத்தா (இரவு 8 மணி), பாட்னா-அரியானா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. 
    நீங்கள் எடுத்துக்கொண்டத் துறை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை அதில் மிகப்பெரிய சாதனை புரியவேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் பணியாற்றுங்கள் வெற்றி உங்களைத் தானாகத் தேடிவரும்.
    நமது வாழ்க்கையில் எந்த ஒரு குறிக்கோளும் லட்சியமும் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களை பார்த்திருப்போம். அவர்கள் தம்முடைய தலைவிதி இது தான் என்று வாழ்க்கையில் எந்தஒரு லட்சியமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் ஒரு சிலர் தற்செயலாக வெற்றி பெற்று விடுகிறார்கள். ஆனால், பெரும்பாலான மக்கள் விரக்தியினாலும் மகிழ்ச்சி இன்மையாலும் வாழ்நாள் முழுவதும் அவதிப்படுகிறார்கள். தற்செயலாகவோ அல்லது சிபாரிசின் மூலமாகவோ ஒருவர் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டால் அவர்களுக்கு பயம் இருக்கும். ஆனால் தன்னுடைய திறமை மற்றும் உழைப்பின் மூலம் உயர்ந்த நிலைக்கு வந்தவர்களுக்கு பயம் இருக்காது. கீழே விழுந்தாலும் மீண்டும் உயர்ந்த நிலைக்கு வருவார்கள்.

    வாழ்க்கையின் வெற்றிக்கு மிக முக்கியமாக மூன்று தடைகள் உள்ளன அவைகள் பயம், கவலை மற்றும் சோம்பல் ஆகும். பயமும் தயக்கமும் உள்ளவர்களை தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும். பயம் மற்றும் கவலைக்கு காரணம் தேவையற்ற சந்தேகம் மற்றும் தாழ்வு மனப்பான்மை ஆகும். பெரும்பாலும் இவைகள் நம்முடைய எதிர்மறை கற்பனையின் மூலம் ஏற்படுகிறது. நம்முடைய தேவையற்ற பயத்தைப் போக்க வேண்டுமென்றால், நாம் எதைக்கண்டு பயப்படுகிறோமோ அதை எதிர் நோக்க முயற்சிக்க வேண்டும். நாம் நம்முடைய சிறு வயதுமுதலே தெரிந்தோ தெரியாமலோ தேவையற்ற எதிர்மறைக் கற்பனையை வளர்த்து விடுகிறோம் அதுதான் நம்முடன் நம்வாழ்நாள் முழுவதும் பயணிக்கிறது. அதிலிருந்து நம்மால் நிச்சயம் விடுபடமுடியும் அதற்கு தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் தேவை.

    உயிரோடு இருக்கும் மனிதன் தனக்காக கட்டிக் கொள்ளும் கல்லறைதான் சோம்பல். சோம்பலில் சுகம் காண்பவன் தன்னைத் தேடிவரும் நல்ல பல வாய்ப்புகளை பயன்படுத்தாமல் புறக்கணித்துவிடுகிறான். ஆனால், எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பவர்கள் தமக்கு வரும் தடைகளை வெற்றிப் படிகளாக மாற்றுகின்றனர். ஒருமுறை வந்த வாய்ப்பு மீண்டும் வருவதில்லை அப்படிவந்தால் அது மற்றொரு வாய்ப்பாகத்தான் கருதமுடியும். வாய்ப்புகள் வரும்போது தங்கள் மனக்கதவுகளை திறந்து வையுங்கள். சோம்பலே வாழ்க்கையானால் சோகமே வருமானம் ஆகும். எல்லாவாய்ப்புகளிலும் உள்ள சிறந்தவற்றையே பாருங்கள்.

    பயம், சோம்பல், கவலை, தாழ்வு மனப்பான்மை ஆகியவைகள் ஒன்றன் கீழ் ஒன்றாக வரிசையாக பின்னப்பட்ட சிலந்தியின் வலையைப்போன்றது. அதில் நாம் ஒரு பூச்சியைப் போல மாட்டிக்கொண்டோம். அந்த கூட்டிலிருந்து விடுபடவேண்டுமென்றால் நமக்கு யாரும் உதவமுன்வரமாட்டார்கள் நாம் தான் முயற்சிசெய்து வெளியே வரவேண்டும். நாம் நம்முடைய மனநிலையை மாற்றிக்கொள்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ளலாம்.

    மக்கள் பெரும்பாலும் தோல்வியடைவதற்கான காரணம் திறமையில்லாமையோ அல்லது அறிவில்லாமையோ அல்ல மாறாக விருப்பமில்லாமை, சிறந்தவழிகாட்டி இல்லாமை, ஒழுக்கமில்லாமை மற்றும் அர்ப்பணிப்புத்தன்மை இல்லாமை ஆகும். நாம் எப்படி வாழ்வது, எப்படி பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி சரியான முடிவுகளை எடுப்பது போன்றவற்றை எந்த பள்ளிகூடமும் கல்லூரியும் கற்றுக் கொடுப்பதில்லை. நாம் தான் இவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் இது நம் அனுபவத்தின்மூலமே பெறமுடியும்.

    சில கடினமான வேலைகள் வரும்போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அதை நிராகரிக்காதீர்கள் இதுபோன்ற கடினமான வேலைகள் செய்யும் போதுதான் நம்முடைய திறமை வெளிப்படும். எந்த ஒரு செயலையும் எல்லோரும் செய்துவருகின்ற நடைமுறையாக இருந்தாலும் அதில் ஒருவர் ஏனைய மற்றவர்களைவிட மிகச்சிறப்பாக, மிகஅழகாக, விரைவாக அதிக மாறுபாட்டுடன் செய்து பிறரது கவனத்தை ஈர்த்து பாராட்டு பெறுகிறார்களோ அவர்களே திறமைசாலிகள் ஆவர்.

    நமது முன்னோர்கள் ஞானிகளாகவும், அறிஞர்களாகவும், யோகிகளாகவும், முனிவர்களாகவும், தியாகிகளாகவும், மாமன்னர்களாகவும் வாழ்ந்து வந்தார்கள். அந்த பரம்பரையில் வந்த நாம் இன்று தன்னம்பிக்கையற்று தைரியம் இல்லாமல் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கிறோம். முயற்சி இல்லாமல் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது. நீங்கள் எடுத்துக்கொண்டத் துறை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை அதில் இதுவரை பணியாற்றியவர்கள் எல்லோரும் சேர்ந்து என்னவெல்லாம் சாதித்தார்களோ அவற்றுக்கெல்லாம் மேலாக இன்னும் மிகப்பெரிய சாதனை புரியவேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் பணியாற்றுங்கள் வெற்றி உங்களைத் தானாகத் தேடிவரும்.

    ர.அறிவழகன், சென்னை.
    ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் சுங்க இலாகா அணி வெற்றி பெற்றுள்ளது.
    ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டத்தில் சுங்க இலாகா 75-67 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் அணியை வீழ்த்தியது.

    பெண்கள் பிரிவில் நடந்து ஆட்டங்களில் ரைசிங் ஸ்டார் 62-54 என்ற கணக்கில் இந்துஸ்தான் கிளப்பையும், அரைஸ் ஸ்டீல் 58-57 என்ற கணக்கில் சுங்கம் கிளப்பையும் தோற்கடித்தன. #tamilnews

    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் திரிபுரா அணியை வீழ்த்தி தமிழக அணி அபார வெற்றி பெற்றது. 7-வது லீக்கில் ஆடிய தமிழக அணிக்கு இது 5-வது வெற்றியாகும். #VijayHazareTrophy
    சென்னை:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, திரிபுராவை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த திரிபுரா அணி 46.4 ஓவர்களில் 196 ரன்களுக்கு சுருண்டது.

    தமிழகம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட்டுகளும், ரஹில் ஷா, வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய தமிழக அணி 31.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 197 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    அபினவ் முகுந்த் 131 ரன்கள் விளாசி (100 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். 7-வது லீக்கில் ஆடிய தமிழக அணிக்கு இது 5-வது வெற்றியாகும். தமிழக அணி அடுத்த லீக்கில் வருகிற 7-ந்தேதி ஜம்மு-காஷ்மீரை சந்திக்கிறது. #VijayHazareTrophy


    பீஜிங்கில் நடந்து வரும் சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒசாகா, கெர்பர் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர். #ChinaOpen2018 #Kerber #Osaka
    பீஜிங்:

    மொத்தம் ரூ.60 கோடி பரிசுத்தொகைக்கான சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் மகுடம் சூடும் வீராங்கனை ரூ.11 கோடியை பரிசாக அள்ளுவார். நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சீனாவின் வாங் குயாங், முன்னாள் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோவுடன் (லாத்வியா) மோதினார். இடதுகையில் ஏற்பட்ட காயத்தால் ஆஸ்டாபென்கோ தடுமாற, அதை சாதகமாக பயன்படுத்தி வாங் குயாங் அமர்க்களப்படுத்தினார். அவர் எதிராளிக்கு ஒரு புள்ளி கூட விட்டுக்கொடுக்காமல் 6-0, 6-0 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 55 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.

    விம்பிள்டன் சாம்பியனான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் தன்னை எதிர்த்த கார்லா சுவாரஸ் நவரோவை (ஸ்பெயின்) 7-6 (4), 6-1 என்ற நேர் செட்டில் வீழ்த்தி 3-வது சுற்றை எட்டினார். கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), சிபுல்கோவா (சுலோவக்கியா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

    அமெரிக்க ஓபன் சாம்பியனான ஜப்பான் இளம் புயல் நவோமி ஒசாகா 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் டேனியலி கோலின்சை (அமெரிக்கா) 53 நிமிடங்களில் பந்தாடினார். அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள் மூலம் ஒசாகா, சிங்கப்பூரில் வருகிற 21-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடக்கும் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு 3-வது வீராங்கனையாக தகுதி பெற்றார். ஏற்கனவே சிமோனா ஹாலெப் (ருமேனியா), கெர்பர் (ஜெர்மனி) ஆகியோரும் இந்த கவுரவமிக்க போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார்கள். 
    பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. #Congress #PunjabRuralPolls
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.

    அம்மாநிலத்தில் உள்ள ஜில்லா பரி‌ஷத்களில் 353 மண்டலங்களுக்கும், 150 பஞ்சாயத்து சமிதிகளில் உள்ள 2899 மண்டலங்களுக்கும் தேர்தல் கடந்த 19-ந்தேதி நடந்தது.

    இதில் ஜில்லா பரிவுர்களில் 353 மண்டலங்களில் காங்கிரஸ் 331 இடங்களில் வெற்றிபெற்று கைப்பற்றியது. சிரோன்மணி அகாலிதளம் 18 இடங்களிலும், பா.ஜனதா 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    இதேபோல் 150 பஞ்சாயத்து சமிதிகளில் உள்ள 2899 மண்டலங்களில் 2351 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. சிரோன்மணி அகாலிதளம் 353 இடங்களிலும், பா.ஜனதா 63 இடங்களிலும், ஆம் ஆத்மி 20 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றது. ஆனால் தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஏமாற்றமே கிடைத்தது.

    பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கைப்பற்றி சங்ரூர் தொகுதியில் உள்ள 10 பஞ்சாயத்துகளில் உள்ள 193 மண்டலங்களில் 123 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.

    இதேபோல் ஆம் ஆத்மி கைப்பற்றிய மால்பா, பதிண்டா சட்டசபை தொகுதிகளில் உள்ள உள்ளாட்சி இடங்களில் தோல்வியே பெற்றது. உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் கூறியதாவது:-

    எங்களுக்கு வாக்களித்த பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இந்த வெற்றி சென்றடையும். விவசாயிகள் கடன் தள்ளுபடி, போதை மருந்துகளுக்கு எதிரான நடவடிக்கை என அனைத்து வி‌ஷயங்களிலும் மக்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #PunjabRuralPolls
    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் பிரனாய் ஆகியோர் வெற்றி பெற்றனர். #JapanOpen2018 #Sindhu #Prannoy
    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நேற்று தொடங்கியது. 16-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முன்னணி வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.

    தொடக்க நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 13-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சயகா தகஹாஷியை சந்தித்தார். 53 நிமிடம் அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-17, 7-21, 21-13 என்ற செட் கணக்கில் சயகா தகஹாஷியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் சிந்து, சீன வீராங்கனை பான்ஜிவ் காவை எதிர்கொள்கிறார்.



    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் பிரனாய் 21-18, 21-17 என்ற நேர்செட்டில் அண்மையில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தோனேஷியா வீரர் ஜோனதன் கிறிஸ்டியை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த வெற்றியை பெற பிரனாய்க்கு 45 நிமிடமே தேவைப்பட்டது.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-13, 21-15 என்ற நேர்செட்டில் சீன வீரர் யுஜியாங் ஹூயாங்கை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 18-21, 22-20, 10-21 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் லீ டாங் குன்னிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 1 மணி 23 நிமிடம் நீடித்தது.

    கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. இதேபிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-அஸ்வினி பொன்னப்பா ஜோடி முதல் சுற்றுடன் நடையை கட்டியது. #JapanOpen2018 #Sindhu #Prannoy 
    பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி பெற்றதாக திருநாவுக்கரசர் தெரிவித்தார். #BharatBandh #PetrolDieselPrice #Thirunavukkarasar
    சென்னை:

    பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் வெற்றி பெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சியும், தோல்வி அடைந்ததாக பாஜகவும் கூறி வருகின்றன.



    அவ்வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், ‘பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்திய முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது’ என்றார்.

    தமிழகத்தில் அதிமுக தவிர்த்து முழு அடைப்பில் பங்கேற்ற மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துக் கட்சிகள், வணிகர் அமைப்புகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் திருநாவுக்கரசர் கூறினார். #BharatBandh #PetrolDieselPrice #Thirunavukkarasar
    அகில இந்திய ஆக்கி போட்டியில் இந்திய ராணுவ அணி 3-2 என்ற கோல் கணக்கில் மத்திய செயலக அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. #Hockey #IndianArmy
    சென்னை:

    92-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 4-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய ராணுவம்-மத்திய செயலகம் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி 3-2 என்ற கோல் கணக்கில் மத்திய செயலக அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் ஓ.என்.ஜி.சி. அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியன் ரெயில்வே அணியை சாய்த்து 2-வது வெற்றியை தனதாக்கியது.

    இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்திய கடற்படை-இந்தியன் ஆயில் (மாலை 4.15 மணி), பஞ்சாப் சிந்து வங்கி-பெங்களூரு ஆக்கி சங்கம் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன. 
    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலியாவின் டாரியா காவ்ரிலோவாவை பந்தாடி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். #Cincinnati #SerenaWilliams
    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 1-6, 6-1, 4-6 என்ற செட் கணக்கில் லூகாஸ் போய்லியிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில், முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் டாரியா காவ்ரிலோவாவை பந்தாடி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். 
    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் சவுதிஅரேபியாவை தோற்கடித்தது. #India #WorldJuniorSquash
    சென்னை:

    13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் தனிநபர் போட்டி நிறைவடைந்த நிலையில் அணிகளுக்கான பந்தயம் நேற்று தொடங்கியது. ஆண்கள் பிரிவில் 24 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. ‘இ’ பிரிவில் அங்கம் வகித்த இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் சவுதிஅரேபியாவை தோற்கடித்தது.

    இந்திய அணியில் ராகுல் பாய்தா, உத்கார்ஷ் பஹெதி, வீர் சோட்ரானி ஆகியோர் வெற்றியை தேடித்தந்தனர். தொடர்ந்து இந்திய அணி 2-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தையும் பதம் பார்த்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தது. இதே போல் பலம் வாய்ந்த அணியான எகிப்து அணி சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவை தலா 3-0 என்ற கணக்கில் பந்தாடி அடுத்த சுற்றை எட்டியது. #India #WorldJuniorSquash
    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. #India #NewZealand #Hockey
    பெங்களூரு:

    நியூசிலாந்து ஆக்கி அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

    இந்திய அணியில் ரூபிந்தர் பால்சிங் 2-வது மற்றும் 34-வது நிமிடத்திலும், மன்தீப்சிங் 15-வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 38-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் ஸ்டீபன்ஸ் ஜென்னெஸ் 26-வது மற்றும் 55-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். 
    ×