search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98066"

    மனதில் உறுதி இருந்தால் மலைகளைக்கூட காலில் விழுந்து மண்டியிட வைத்துவிடலாம். மன உறுதி இல்லாதவர் கூழாங்கற்களுக்கே கூட குனிந்து வணக்கம் சொல்ல வேண்டியிருக்கும்.
    வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம்; விழுப்புண் பெறாமல் போர்க்களத்தில் வெற்றிகாண முடியுமா? வாழ்க்கை என்பது காட்டாறு; எதிர் நீச்சல் போடாமல் காட்டாற்றில் நீந்தி எதிர்க்கரை சேர முடியுமா? விழியில் நீரோட்டமும், வழியில் போராட்டமும் நிறைந்ததுதான் வாழ்க்கைப் பயணம்.

    மனதில் உறுதி இருந்தால் மலைகளைக்கூட காலில் விழுந்து மண்டியிட வைத்துவிடலாம். மன உறுதி இல்லாதவர் கூழாங்கற்களுக்கே கூட குனிந்து வணக்கம் சொல்ல வேண்டியிருக்கும். மனஉறுதி படைத்தவர் எதிர்ப்பு, ஏளனம், இடையூறுகளை எதிர்த்து முன்னேறிச் செல்கின்றனர்.

    குப்பைக்கழிவுகளை உரமாக்கிக் கொண்டு பூக்கவில்லையா குண்டுமல்லிகள்? காய்க்கவில்லையா கொய்யாக்கனிகள்? வரும் சோதனைகளை உரமாக்கிக்கொண்டு வாழ்கிறவன் வாசலில்தான் தினம் மாலைகள் அவன் கழுத்துக்காக காத்துக்கிடக்கின்றன.

    மன உறுதியை நாள்தோறும் இதயத்தில் விதைத்து வந்தவர்கள், மகத்தான சாதனைகளையே மகசூல் செய்திருக்கிறார்கள். சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜியத்துக்கு சொந்தக்காரர்கள் நாங்கள் என்று எக்காளமிட்டவர்கள் ஆங்கிலேயர்கள். மகாத்மா காந்தியின் மனஉறுதிக்கு முன்னால் அவர்களின் எதேச்சதிகாரம் என்ன ஆனது? இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுத்துவிட்டு வந்த வழியே திரும்பி ஓடவேண்டியதாயிற்று.



    எதிரியின் கூடாரத்திற்கு உளவறிய சென்றான் நெப்போலியன். பகைவரின் படைகள் அவனை கண்டுபிடித்துவிட வேகமாக குதிரையைச் செலுத்தினான். தப்பிப்பதற்குள் மூன்று திசைகளிலிருந்தும் எதிரியின் படைகள் நெருங்கி வந்தன. நான்காவது திசையை நோக்கினாலோ, ஆழமான பெரும் பள்ளத்தாக்கு. குதிரையால் முழுப்பள்ளத்தையும் தாண்ட முடியாது என்பது நெப்போலியனுக்கே தெரியும்.

    இருந்தும் மனதில் உறுதி இருந்ததால் குதிரையைச் செலுத்தினான் அவன். குதிரை பள்ளத்தாக்கின் முக்கால் பகுதியை தாண்ட அது தவறி விழுவதற்கு முன்பே அக்குதிரை மீது நின்றபடி தாவி எதிர்ப்புற மலைச்சரிவில் குதித்து தப்பித்தான் அம்மாவீரன். எதிரிகளே வியக்கும் வண்ணம் இப்பேற்பட்ட மன உறுதி இருந்ததால்தான், ‘முடியாது என்ற சொல் முட்டாள்களின் அகராதியில்தான்’ என்று சொல்ல முடிந்தது நெப்போலியனால்.

    ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். வெப்பத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை இல்லாவிட்டால் மத்தாப்புக்களால் பிரகாசமாய் ஒளிர்ந்துவிட முடியாது. எனவே எந்த செயலானாலும் சரி, மன உறுதியுடன் அதில் முனைப்புடன் செயல்படுவோம். வெற்றிக்கனி நம் கைகளில் விழும். தோல்விகள் நம் கால்களில் விழும்.

    எழுத்தாளர் எல்.பிரைட்
    உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் ராகுல் பாய்தா, சுவிட்சர்லாந்து வீரர் நில்ஸ் ரோச்சை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    சென்னை:

    இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நேற்று தொடங்கியது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ராகுல் பாய்தா 11-5, 12-10, 11-8 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்து வீரர் நில்ஸ் ரோச்சை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் யாஷ் பத்டே 10-12, 11-7, 11-7, 11-6 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீரர் அப்டெல் ரஹ்மாவை தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் அட்வைத் அடிக், உட்கர்ஷ் ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினார்கள். 
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடால், ஹாலெப் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர். #Wimbledon2018 #SimonaHalep #RafaelNadal
    லண்டன்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் கஜகஸ்தான் வீரர் மிகைல் குகுஷ்கினை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஹோராசியா ஜிபல்லோசை (அர்ஜென்டினா) பந்தாடினார்.

    2017-ம் ஆண்டு விம்பிள்டனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியவரான 5-ம் நிலை வீரர் மரின்சிலிச்(குரோஷியா) 6-3, 6-1, 4-6, 6-7 (3), 5-7 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 82-வது இடம் வகிக்கும் அர்ஜென்டினாவின் குடோ பெல்லாவிடம் வீழ்ந்தார். இந்த ஆட்டம் 3 மணி 13 நிமிடங்கள் நீடித்தது. இதே போல் இத்தாலி வீரர் தாமஸ் பாபியானோ 7-6 (7), 7-6(6), 6-3 என்ற நேர் செட் கணக்கில் முன்னணி வீரர் வாவ்ரிங்காவுக்கு (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி அளித்தார்.



    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 3-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் கிளாரி லுவை (அமெரிக்கா) போராடி வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    ‘நம்பர் ஒன்’ புயல் சிமோனா ஹாலெப் (ருமேனியா) தன்னை எதிர்த்த சாய்சாய் ஜெங்கை (சீனா) 7-5, 6-0 என்ற நேர் செட்டிலும், சுலோவக்கியாவின் சிபுல்கோவா 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஹோகன்னா கோன்டாவையும் (இங்கிலாந்து) தோற்கடித்து 3-வது சுற்றை உறுதி செய்தனர்.

    ஆண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி- விஷ்ணு வர்தன் கூட்டணி 7-6 (7-5), 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் மார்கஸ் டேனியல் (நியூசிலாந்து)- வெஸ்லி கூலோப் (நெதர்லாந்து) இணையை வென்றது.

    மற்றொரு ஆட்டத்தில் சென்னையைச் சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன், அமெரிக்காவின் கிராஜிசெக்குடன் இணைந்து களம் இறங்கினார். இவர்கள் 6-7 (5), 6-7 (3), 6-7(2) என்ற நேர் செட் கணக்கில் நெதர்லாந்தின் சான்டர் அரென்ட்ஸ்- மிடில் கூப் இணையிடம் தோற்று வெளியேறினர்.  #Wimbledon2018 #SimonaHalep #RafaelNadal  #tamilnews
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து வீரர் பெடரர், குரோஷியா வீரர் மரின் சிலிச் ஆகியோர் வெற்றி பெற்றனர். #RogerFederer #MarinCilic
    லண்டன்:

    ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் உயரியதும், கவுரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது.

    இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), உலக தரவரிசையில் 57-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் டுசன் லாஜோவிச்சை சந்தித்தார். இதில் பெடரர் 6-1, 6-3, 6-4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.



    மற்றொரு ஆட்டத்தில், கடந்த ஆண்டில் 2-வது இடம் பிடித்தவரான மரின் சிலிச் (குரோஷியா) 6-1, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷிகாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் சாம் குயரி 6-2, 6-4, 6-3 என்ற நேர்செட்டில் ஜோர்டான் தாம்சனை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-0, 6-3 என்ற நேர்செட்டில் வர்வரா லெப்செங்கோவை (உஸ்பெகிஸ்தான்) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவரான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 1-6, 3-6 என்ற நேர்செட்டில் குரோஷியா வீராங்கனை டோனா வெகிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6-4, 6-2 என்ற நேர்செட்டில் அஜ்லா டாம்ஜனோவிச்சை(ஆஸ்திரேலியா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.  #RogerFederer #MarinCilic #tamilnews
    கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறினார். #Srikanth
    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-18, 21-9 என்ற நேர்செட்டில் டென்மார்க் வீரர் ஜான் ஜோர்ஜென்செனை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 26-24, 21-15 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 12-21, 7-21 என்ற நேர்செட்டில் சீன தைபே வீரர் வாங் சு வெய்யிடம் தோல்வி கண்டு வெளியேறினார். 
    ‘8 தோட்டாக்கள்’ படத்தை தயாரித்த வெற்றிவேல் சரவணா சினிமாஸ் அடுத்ததாக ‘ஜீவி’ என்ற புதிய படத்தை தயாரிக்கிறார்கள். #Jiivi
    ‘8 தோட்டாக்கள்’ வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸ் எம்.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் இரண்டாவது படமாக ‘ஜீவி’ திரைப்படம் உருவாகின்றது. இதில் 8 தோட்டாக்கள் படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி, மோனிகா இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், மைம் கோபி, ரோகிணி, ரமா நடிக்கிறார்கள்.

    பாபு தமிழ் கதை, வசனம் எழுத, புதுமுக இயக்குனர் வி.ஜே.கோபிநாத் இயக்குகிறார். படத்தைப்பற்றி இயக்குனர் கூறும்போது, ‘இப்படம் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் இடையில் உள்ள மனித உணர்வுகள் சார்ந்த தொடர்பியல் ரீதியில் கதை அமைக்கப்பட்டுள்ளதால் இது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி வருகிறது’ என்றார்.



    சுந்திர மூர்த்தி இசையமைக்கும் இப்படத்திற்கு இப்படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் இப்படத்தை லைன் பிரொட்யூஸ் செய்கிறார்.
    துபாயில் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் விற்கப்படும் பிரசித்தி பெற்ற பிக் டிக்கெட் அபுதாபி என்ற லாட்டரியில் இந்தியர் ஒருவர் 18 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார்.
    அபுதாபி:

    அபுதாபியின் சர்வதேச விமானநிலையத்தில் பல காலமாக விற்கப்படும் பிரசித்தி பெற்ற லாட்டரியாக பிக் டிக்கெட் அபுதாபி திகழ்ந்து வருகிறது.

    சமீபத்தில், பிக் டிக்கெட் அபுதாபி வெளியிட்ட 10 அதிஷ்டசாலிகள் பட்டியலில் 5 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக நைஜீரியாவில் வாழும் இந்தியரான திக்சன் கட்டிதாரா ஆபிரகாம் என்பவருக்கு 10 மில்லியன் திர்காம் பரிசு அறிவிக்கப்பட்டது.

    இது இந்திய ரூபாய் மதிப்பில் 18 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே பிக் டிக்கெட் அபுதாபி லாட்டரியில் இந்தியர்கள் அதிக அளவில் பரிசு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    அணுஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்து செல்லக்கூடிய நவீன ‘அக்னி-5’ ரக ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது. #AgniV #AbdulKalamisland
    புவனேஸ்வர்:

    அணுஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்து செல்லக்கூடிய நவீன ‘அக்னி-5’ ரக ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

    இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மூன்றுகட்ட உந்துதல் செயல்பாட்டுடன் 1.5 டன் எடையை சுமந்துச் செல்லக்கூடிய வகையில் 17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட ‘அக்னி–5' ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.

    அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் இந்த 'அக்னி–5' ஏவுகணைகள் சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை, கண்டம்விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில் (பழைய பெயர் வீலர் தீவு) இருந்து இன்று காலை 9.48 மணியளவில் 'அக்னி–5' ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டது.

    இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை குறிதவறாமல் 'அக்னி–5' பாய்ந்து தாக்கி, அழித்ததாகவும் தெரியவந்துள்ளது. #AgniV #AbdulKalamisland
    அமெரிக்காவில் நடைபெற்ற சிக்கலான ஆங்கில எழுத்துகளை வாசிக்கும் ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கார்த்திக் நெம்மானி தேசிய விருது வென்றுள்ளார். #SpellingBee
    நியூயார்க்:

    அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான, 'ஸ்பெல்லிங்' சொல்லும், 'தேசிய ஸ்பெல்லிங் பீ' போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம். இந்த போட்டிகளில், உலக நாடுகளை சேர்ந்த, நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர்கள் பங்கேற்பர். அவர்களில், மிகச் சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதிச் சுற்றுப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.

    இதுவரை நடந்த போட்டிகளில், தொடர்ந்து, 11 ஆண்டுகளாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த போட்டியாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளனர். கடந்த ஆண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த அனன்யா வினய் என்ற மாணவி இந்த பட்டத்தை வென்றிருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான 91-வது 'தேசிய ஸ்பெல்லிங் பீ' போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 516 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    அவர்களில் சிறந்த போட்டியாளர்கள் 41 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 16 பேர் மட்டும் இறுதிச்சுற்று போட்டிக்கு நுழைந்தனர்.  9 சிறுமிகள் மற்றும் 7 சிறுவர்கள் என இறுதிப் போட்டியில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் 11 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள்.  

    இதில் கடைசியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கார்த்திக் நெம்மானி மற்றும் நயாசா மோடி இடையே கடும் போட்டி நிலவியது. இருவருக்கும் இடையில் 20 வார்த்தைகள் தொடர்பான ஆங்கில ஸ்பெல்லிங் போட்டியில் இவர்கள் இருவருக்கும் இடையில் இழுபறி நீடித்தது.

    இறுதியாக, "koinonia" என்ற சொல்லுக்கான எழுத்துகளை மிகச்சரியாக உச்சரித்து, டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் நெம்மானி 'தேசிய ஸ்பெல்லிங் பீ' பட்டத்தை தட்டிச் சென்றார்.

    இதையடுத்து, 14 வயது சிறுவனான கார்த்திக் நெம்மானிக்கு பரிசுக்கான சுழல்கேடயத்துடன் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசளிக்கப்பட்டது. மேலும், மெர்ரியம் - வெப்ஸ்ட்டர் சுற்றுலா நிறுவனத்தின் சார்பாக நியூயார்க், ஹாலிவுட் நகரங்களுக்கான சுற்றுலா பேக்கேஜ் மற்றும் 2500 அமெரிக்க டாலர்களும், கார்த்திக் பயிலும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கு பிட்ஸா விருந்தும் அளிக்கப்பட்டது. #SpellingBee
    பிரெஞ்ச் ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். #FrenchOpen #SerenaWilliams
    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று போட்டி நடந்தது. 2-ம் சுற்று ஒன்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்- பார்டி (ஆஸ்திரேலியா) ஆகியோர் மோதினர்.

    இதில் செரீனா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த சுற்றில் செரீனா, ஜெர்மனி வீராங்கனை ஜார்ஜசுடன் மோதுகிறார்.

    மற்ற ஆட்டங்களில் கார்சியா (பிரான்ஸ்), பெகு (ரூமேனியா) ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டங்களில் ரபெல் நடால் (ஸ்பெயின்), இஸ்னர் (அமெரிக்கா), ஹர்பர்ட் (பிரான்ஸ்), டெல்போட்ரோ (அர்ஜென்டினா), மரின் சிலிச் (குரோஷியா) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.#FrenchOpen #SerenaWilliams
    பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சல்வடோர் வீரர் மார்செலோ அரிவலோவை வீழ்த்தினார். #Gunneswaran #FrenchOpen2018
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது. இதற்கான தகுதி சுற்று போட்டி தற்போது நடந்து வருகிறது. இதன் 2-வது ரவுண்டில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சல்வடோர் வீரர் மார்செலோ அரிவலோவை வீழ்த்தினார். குணேஸ்வரன், தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் இலியாஸ் மெரை (சுவீடன்) இன்று சந்திக்கிறார். இதில் குணேஸ்ரன் வெற்றி பெற்றால் பிரதான சுற்றை எட்டுவார். 
    200 கிலோ வெடிப் பொருளுடன் பாய்ந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட ’பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.#BrahMostestfire
    புதுடெல்லி:

    இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான  ’பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். 200 கிலோ வெடிப் பொருளுடன் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஏவுகணை, நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லும்போது, தேவைப்பட்டால் இலக்கிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்கின் போக்குக்கு ஏற்ப திசைமாறி விலகிச் சென்றும் தாக்கும்.

    கடந்த 2001-ம் ஆண்டு முதன்முதலாக பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை தொடர்ந்து 2003-ம் ஆண்டு கடலில் இருந்தபடி விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில், ஒடிசா மாநிலம், பலசோர் மாவட்டத்தில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் உள்ள சாந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து ’பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை இன்று மீண்டும் பரிசோதிக்கப்பட்டது.

    இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாக இந்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.#BrahMostestfire
    ×