search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98066"

    சட்டசபையில் பலப்பரீட்சையை சந்திக்காமல் எடியூரப்பா ராஜினாமா செய்தது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் கூறினர். #ChandrababuNaidu #MamataBanerjee #Victory
    கொல்கத்தா:

    கர்நாடக சட்டசபையில் தனக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், பலப்பரீட்சையை சந்திக்காமல் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்தார்.

    இதற்காக மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவே கவுடாவுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.

    அவர் தனது சமூக ஊடக பதிவில், “ஜனநாயகம் வென்றது. கர்நாடகாவை வாழ்த்துகிறேன். தேவே கவுடா, குமாரசாமி, காங்கிரஸ் மற்றும் அனைவருக்கும் பாராட்டுகள். இது பிராந்திய முன்னணிக்கு கிடைத்த வெற்றியாகும்” என்று குறிப்பட்டு உள்ளார்.



    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு விஜயவாடா நகரில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா ஜனநாயக நெறிமுறைகளை மீறி செயல்பட்டது. கவர்னர் பதவி தவறாக பயன்படுத்தப்பட்டது. எடியூரப்பாவின் பதவி விலகல் மூலம் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டனர். இப்போது இந்தியா மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

    அவர் மேலும் கூறுகையில், “கர்நாடகாவிலும், தமிழ்நாட்டிலும் கவர்னர் பதவி தவறாக பயன்படுத்தப்படுவது வருத்தமாக உள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் அமைப்பு முறையை பா.ஜனதா சீரழித்துவிட்டது. அதே முயற்சியை கர்நாடகாவிலும் கையாண்டது. முன்னேற்றம் அடைந்து வரும் மாநிலங்களை மத்திய அரசு பலவீனப்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் பா.ஜனதாவின் திட்டம் நிறைவேறி இருந்தால் அடுத்து ஆந்திராவைத்தான் குறி வைத்திருப்பார்கள்” என்றும் சாடினார்.

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவில், “கர்நாடகாவில் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பா.ஜனதா தோல்வியைத் தழுவி உள்ளது. குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்றும் அவர்களின் அதிகார வெறி இதில் முழுமையாக வெளிப்பட்டு இருக்கிறது. ஆனால் இதிலிருந்து பா.ஜனதா எந்த பாடத்தையாவது கற்றுக் கொள்ளுமா?... ”என்று கூறி உள்ளார்.

    எடியூரப்பாவின் பதவி விலகல் மதச்சார்பற்ற சக்திகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் டி.ராஜா டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

    அக்கட்சிக்கு இப்போதுதான் சரிவு தொடங்கி இருக்கிறது. ஒருங்கிணைந்து நின்றால் பா.ஜனதாவை வீழ்த்த முடியும் என்பதை மதச்சார்பற்ற சக்திகள் கர்நாடக அரசியல் பாடம் மூலம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  #ChandrababuNaidu #MamataBanerjee #Victory
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் ஆகியோர் தங்களது 2-வது சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். #RafaelNadal #SimonaHalep
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் குரோஷியாவின் பெட்ரா மார்டிச்சை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ 6-2, 7-5 என்ற நேர்செட்டில் சீனாவின் சாங் ஷூய்யை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.



    இன்னொரு ஆட்டத்தில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-1, 6-0 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீராங்கனை நோமி ஒசாகாவை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-3, 3-6, 5-7 என்ற செட் கணக்கில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) ஆகியோரும் 2-வது சுற்று தடையை வெற்றிகரமாக கடந்தனர். முன்னதாக முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ரஷியாவின் ஷரபோவா 7-5, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லிக் பார்டியை போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2½ மணி நேரம் நீடித்தது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் 5-7, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் மார்கோ செஷினாடோவை தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவரும், 7 முறை சாம்பியனுமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-1, 6-0 என்ற நேர்செட்டில் டாமிர் ஜூம்கர்ரை (போஸ்னியா) ஊதித்தள்ளினார்.

    இதே போல் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா) தன்னை எதிர்த்த பாசிலாஷ்விலியை (ஜார்ஜியா) 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெளியேற்றினார். நிஷிகோரி (ஜப்பான்), மரின் சிலிச் (குரோஷியா), ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா) உள்ளிட்டோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர். 
    கர்நாடக மாநிலத்தில் அமையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியின் முதல் மந்திரியாக பொறுப்பேற்கவுள்ள குமாரசாமி ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். #Kumaraswamywins
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி சன்னப்பட்னா, ராமநகரம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

    இந்நிலையில், ராமநகரம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் பாஷா என்பவரைவிட கூடுதலாக 22 ஆயிரத்து 636 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றுள்ளார். சன்னப்பட்னா தொகுதியில் தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ஜ.க. வேட்பாளர் யோகேஸ்வாராவை விட சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். எனவே, இந்த தொகுதியிலும் அவர் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. #Karnatakelection #karnatakaverdict #Kumaraswamywins
    கர்நாடக தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல் மந்திரி சித்தராமையா படாமி தொகுதியில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாமுண்டீஸ்வரியில் படுதோல்வி அடைந்துள்ளார். #Karnatakaverdict
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி சித்தராமையா சாமுண்டீஸ்வரி, படாமி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

    இந்நிலையில், இன்று வெளியான தேர்தல் முடிவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாமுண்டீஸ்வரி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் ஜி.டி.தேவேகவுடா என்பவரிடம் 36 ஆயிரத்து 42 வாக்குகள் வித்தியாசத்தில் சித்தராமையா படுதோல்வியை சந்தித்தார்.

    அதேவேளையில், படாமி தொகுதியில் தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ஜ.க. வேட்பாளர் பிம்மப்பா-வை விட 1696  வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்றுள்ளார். #Karnatakaelections2018 #Karnatakaverdict
    மலேசிய பாராளுமன்ற தேர்தலில் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #MalaysiaElection #Oppositecoalition #Won
    கோலாலம்பூர்: 

    222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 

    நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. அங்குள்ள வாக்கு சாவடிகளில் வரிசையில் நின்று பொதுமக்கள் ஓட்டு போட்டனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் ஒன்றரை கோடி மக்களில் 69 சதவிகிதம் பேர் வாக்களித்தனர்.

    இதையடுத்து, நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆளும் பி.என். கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் 54 இடங்களிலும், மகாதிர் முகமது தலைமையிலான பக்கட்டான் ஹரப்பான் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்கள் 51 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. 



    இந்நிலையில், மலேசியா தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
     
    இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் மகாதிர் முகம்மது இருவரும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சி அமைக்க 112 உறுப்பினர்களின் பலம் தேவை என்னும் நிலையில் இந்த தேர்தலில் மகாதிர் முகமதுவின் எதிர்க்கட்சி கூட்டணி 115 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றுகிறது என தெரிவித்தனர்.

    மலேசியா வரலாற்றில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு அங்குள்ள எதிர்க்கட்சியினர் ஆட்சியை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. #MalaysiaElection #Oppositecoalition #Won
    ×