search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரசம்ஹாரம்"

    சூரசம்ஹாரம் நடைபெறும் இன்றும்(செவ்வாய்க்கிழமை), திருக்கல்யாணம் நடைபெறும் நாளையும் (புதன்கிழமை) பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதி இல்லை.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் நேற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில், சூரசம்ஹாரம் நடைபெறும் இன்றும்(செவ்வாய்க்கிழமை), திருக்கல்யாணம் நடைபெறும் நாளையும் (புதன்கிழமை) பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதி இல்லை. ஆகவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் கோவிலுக்கு வரவேண்டாம்.

    கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா மற்றும் திருக்கல்யாணம் நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சி, யூடியூப் இணைய தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்’ என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
    சேலம் ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழனி ஆண்டவர் ஆசிரமத்தில் இன்று மாலை 4 மணிக்கு சூரசம்ஹார லீலை, நவவீரர் விஜயம், வீரபாகு தூது, சண்முகநாதர் புறப்பாடு மற்றும் சூரசம்ஹாரம் நடக்கிறது.
    சேலம் ஜாகீர்அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனி ஆண்டவர் ஆசிரமத்தில் கடந்த 4-ந் தேதி கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலை லட்சார்ச்சனை, காவடி பழனி ஆண்டவருக்கு 36 முறை சஷ்டி பாராயணம், சோடஷ உபசார பூஜை, தீபாராதனை நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக, இன்று (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. காலை 6 மணிக்கு சுப்ரபாதம், கோமாதாபூஜையுடன் நடைதிறப்பு நடக்கிறது. 9 மணிக்கு கந்த சஷ்டி, சத்ரு சம்ஹார ஹோமம், 36 தடவை சஷ்டி பாராயணம், 108 வலம்புரி சங்காபிஷேகம், கலசாபிஷேகம், லட்சார்ச்சனை நிறைவு பெறும். மதியம் 12 மணிக்கு காவடி பழனி ஆண்டவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு சூரசம்ஹார லீலை, நவவீரர் விஜயம், வீரபாகு தூது, சண்முகநாதர் புறப்பாடு மற்றும் சூரசம்ஹாரம் நடக்கிறது. தொடர்ந்து வெள்ளி மயில் புறப்பாடும், இரவு 7 மணிக்கு மகாஅபிஷேகம், செந்தூர்வேலன் அலங்காரம், 108 தங்க மலர்களால் அர்ச்சனை, மகா தீபாராதனை, திருப்புகழ் பஜனை நடைபெற உள்ளது.

    நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு சுப்ரபாதம், கோமாதா பூஜையுடன், நடைதிறக்கப்படும். காலை 11 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை வருதல், 12 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் தொடர்ந்து தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் எஸ்.சோமசுந்தரம், எஸ்.செல்வி ஆகியோர் செய்துள்ளனர்.
    திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன்கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் நேற்று வேல்வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கம்பத்தடி மண்டப வளாகத்தில் உற்சவர் சன்னதி முன்பாக சர்வ அலங்காரத்தில் சத்தியகிரிஸ்வரரும், முருகப்பெருமானும் எழுந்தருளினர். மேளதாளங்கள் முழங்க கோவர்த்தனாம் பிகையிடம் இருந்துசக்திவேலான நவரத்தினவேல் பெற்று சகல பரிவாரங்களுடன் நந்தியை வலம் வந்து முருகப் பெருமானிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் இன்று மாலை 4 மணியளவில் கோவிலுக்குள் நடக்கிறது. இந்த நிலையில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை 3 மணிநேரம் பக்தர்களுக்கு அனுமதிஇல்லை என்று கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நாளை (10-ந்தேதி) மாலையில் கோவிலுக்குள் பாவாடை தரிசனம் நடக்கிறது.

    அழகர் மலை உச்சியில் உள்ள சோலை மலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவில் இன்று பக்தர்கள் காலையில் இருந்து பகல் 12.30 மணிவரை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுவார்கள். அதன் பின்னர் மாலையில் நடைபெறும் சூரசம்ஹார விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.அதன் பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மேலும் நாளை நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவில் கலந்து கொள்ளவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருக்கல்யாண நிகழ்வு முடிந்ததும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப் படுவார்கள். அரசின் கொரோனா நோய் தடுப்பு நடைமுறை விதிமுறைகளை பக்தர்கள் பின்பற்ற ஒத்துளழப்பு தர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
    தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்து முருகன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வார்கள். சூரபத்மனை, முருகப்பெருமான் வதம் செய்யும் நாளன்று முருகப்பெரு மானை தரிசனம் செய்து பக்தர்கள் விரதத்தை முடிப்பார்கள்.

    கோவையை அடுத்த மருதமலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவில் பக்தர்களால் 7-வது படைவீடு என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் காலையிலும், மாலையிலும் வேள்வி பூஜை நடைபெற்றது.

    சூரசம்ஹார விழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை, 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து பால், பன்னீர், மஞ்சள் ஜவ்வாது போன்ற 16 வகை யான வாசனை திரவியங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதைத்தொடர்ந்து சண்முகார்ச்சனை நடக்கிறது.

    மதியம் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி, மதியம் 3 மணிக்கு முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    நாளை (புதன்கிழமை) காலை சுப்பிரமணிய சுவாமி, வள்ளி - தெய்வானை திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறு கிறது.

    இதிலும் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    இது போல் கோவையில் உள்ள முருகன் கோவில்களிலும் சூரசம்ஹார விழா இன்று நடைபெற உள்ளது. காந்திபார்க் பாலதண்டாயுதபாணி கோவிலில் அசுரர்களின் உருவபொம்மைக்கு வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    ஐந்து நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆறாம் நாளாம் இன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடால் உபவாசம் இருந்து மாலையில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை கண்ட பிறகு விரதத்தை முடிக்க வேண்டும்.
    முருகக் கடவுளின் பராக்கிரமங்களைச் சொல்வது சூரசம்ஹாரம். சூரபத்மன் ஆணவத்தில் முருகக் கடவுளோடு போர்புரிந்தான். தன் வலிமையாலும் மாயையாலும் முருகனை வெல்ல நினைத்தான். ஆனால், ஆதிமுதல்வானான ஈசனின் மகனுக்கு முன்பாக அவை தோற்றன. முருகனின் கை வேலுக்கு சக்திவேல் என்றுபெயர். அன்னையே தன் அம்சமாக அந்த வேலை முருகக் கடவுளுக்கு வழங்கினார். அந்த சக்திவேல் சூரர் படையை அழித்தது.

    வீரத்தால் முருகனை வெல்ல முடியாது என்றுணர்ந்த சூரபத்மன், இறுதியில் தன் மாயையால் வெல்ல நினைத்து மாமரமாகி நின்றான். வீரத்தை வெல்ல சக்தியாக நின்ற வேல், மாயையை வெல்ல ஞானவேலாக மாறியது. மாயையை இருகூராகக் கிழித்தது. ஞானத்தின் தீண்டுதலால் மாயை அகல அந்த மாமரம், மாயை அற்ற சேவலாகவும் மயிலாகவும் மாறியது. சூர சம்ஹாரம், ஞான உபதேசமாக மாறிப்போக பகைவனான சூரபத்மன் முருகக் கடவுளின் புகழ்போற்றும் கொடியும் வாகனமும் ஆனான். ஆணவம் அழிந்து ஞானமும் பெற்றுவிட்டால் எந்த ஆன்மாவுமந்தப் பரமாத்மாவோடு ஐக்கியமாகிவிடலாம் என்பது கந்த சஷ்டி சொல்லும் வாழ்க்கை ரகசியம்.

    கந்த சஷ்டி விரதத்தின் ஆறாவது நாளான இன்று சூரசம்ஹாரத்தை தரிசித்து நீராடிப் பின் முருகனை வழிபட வேண்டும். ஐந்து நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆறாம் நாளாம் இன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடால் உபவாசம் இருந்து மாலையில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை கண்ட பிறகு விரதத்தை முடிக்க வேண்டும். ஒருசிலர் சூரசம்ஹாரம் முடிந்ததும் விரதத்தை முடித்து உணவு எடுத்துக் கொள்வார்கள். அது தவறு. ஏழாவது நாள் காலையில் முருகப்பெருமானை தரிசித்த பின்பு உணவு உண்டு விரதம் முடிப்பதே சிறந்தது.

    விரதத்தில் முக்கியமானது பக்தி. இந்த ஆறுநாள்களும் முருகனை மனதில் நினைத்துத் துதித்த வண்ணம் இருக்க வேண்டும். அவ்வாறு விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருள் ஸித்திக்கும் என்பது நம்பிக்கை.
    7-ம் திருநாளான நாளை (புதன்கிழமை) இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்றைய தினமும் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்யவோ, நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கோ அனுமதி இல்லை.
    திருச்செந்தூர் :

    முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4-ந்தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    6-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கோவில் கடற்கரை நுழைவுவாயில் பகுதியில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    முதலில் மாயையே உருவான யானை முகனையும், பின்னர் கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரனையும், தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி ஜெயந்திநாதர் வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்கிறார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வரும் சூரபத்மனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி ஆட்கொள்கிறார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் சுவாமி வைத்துக்கொள்கிறார்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 2-வது ஆண்டாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. எனவே, வழக்கமாக பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் சூரசம்ஹாரம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையாக நடக்கிறது.

    தடுப்புகள் மற்றும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

    இதற்காக சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை நுழைவுவாயில் பகுதியில் 3 பக்கமும் தகரத்தினால் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கடற்கரை வழியாக பக்தர்கள் வரமுடியாதபடி நாழிக்கிணற்றில் இருந்து கடல்நீர் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் போலீசார் கண்காணிக்க வசதியாக, கண்காணிப்பு கோபுரங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதுதவிர போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    7-ம் திருநாளான நாளை (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து காலை 9 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து, மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்றைய தினமும் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்யவோ, நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கோ அனுமதி இல்லை.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்ய சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி இன்று மாலையில் நடக்கிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 4-ந்தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது. திருவிழாவையொட்டி கம்பத்தடி மண்டப வளாகத்தில் உள்ள விசாககொறடு மண்டபத்தில் தினமும் ஒருவேளை யாகசாலை பூஜை நடைபெற்று வருகிறது.

    உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை விசேஷ பூஜையும் தினமும் ஒரு அலங்காரம் நடைபெற்று வருகிறது.இதேபோல சண்முகர் சன்னதியில் தெய்வானை, வள்ளி சமேத சண்முகப் பெருமானுக்கு தினமும் 2 வேளை சண்முகார்ச்சனை நடைபெற்று வருகிறது. மேலும் 2 வேளையிலும் சுவாமிக்கும், அம்பாள்களுக்குமாக வெவ்வேறு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

    திருவிழாவையொட்டி நேற்று உற்சவர் சன்னதியில் தெய் வானையுடன் சுப்பிரமணியசாமி தபசு அலங்காரத்திலும், சண்முகர் சன்னதியில் தெய்வானை, வள்ளி சமேத சண்முகப் பெருமான் மயில்வாகன சேவை அலங்காரத்திலுமாக அருள்பாலித்தனர்.

    திருவிழாவின் முத்தாய்ப்பாக இன்று (திங்கட்கிழமை) மாலையில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக கோவிலுக்குள் நடக்கிறது. இருமாப்பு கொண்ட சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகை இடமிருந்து சக்திவேல் பெறுகிறார்.

    இதனையொட்டி கோவிலுக்குள் சத்தியகிரீஸ்வரரும், முருகப்பெருமானும் அடுத்தடுத்து எழுந்தருளுகின்றனர். இந்த நிலையில் கோவிலின் கருவறையில் அருள்பாலிக்கும் சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்பாள், கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய தெய்வங்களிடம் இருந்து அனுமதி பெறுதல்நடக்கிறது.

    தொடர்ந்து கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து சக்தி வேலான நவரத்தின வேல் பெற்று சகல பரிவாரங்களோடு மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு வந்து சத்தியகிரீஸ்வரர் முன்னிலையில் முருகப்பெருமானின் திருக்கரத்தில் சக்திவேல் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் 6-ம் நாளான (செவ்வாய்க்கிழமை) சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரமும், 10-ந் தேதி (புதன்கிழமை) உச்ச நிகழ்ச்சியாக பாவாடை தரிசனமும் நடக்கிறது.
    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹாரத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தீபாவளி, விடுமுறை தினங்களையொட்டி கடந்த 4 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் 5-ம் திருநாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான நாளை (செவ்வாய்க்கிழமை)நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருகிறார். பின்னர் கோவில் கடற்கரை முகப்பில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை நடைபெறும் சூரசம்ஹாரம், நாளை மறுநாள் நடக்கும் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், சுவாமியை தரிசிப்பதற்கும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

    நாளை சூரசம்ஹாரம் நடைபெறுவதையொட்டி கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

    சூரசம்ஹாரத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    திருச்செந்தூர் வரும் வழியில் 15 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சூரசம்ஹாரத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.அன்பு நேற்று இரவு பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். தொடர்ந்து சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதி மற்றும் நாழிகிணறு பஸ் நிலையம், தடுப்பு கம்பிகள் அமைக்கப்படும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார்.

    அவர் கூறும்போது, திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா முடிந்த பின்னர் வருகிற 11-ந்தேதி முதல் பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 4-ம் நாளான நேற்று சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். கடலில் புனித நீராடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் 4-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கோவில் மூலவர் மற்றும் சண்முகருக்கு உச்சிகால தீபாராதனை நடந்த பின்னர், யாகசாலையில் உள்ள சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள ஐராவத மண்டபம் வழியாக 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்தார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

    மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் யாகசாலைக்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும், தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கோவில் கடற்கரை முகப்பில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    7-ம் திருநாளான நாளை மறுநாள் (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து, மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சூரசம்ஹாரம், திருக்கல்யாணத்தையொட்டி நாளையும், நாளை மறுநாளும் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்யவோ, நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கோ அனுமதி கிடையாது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    சோலைமலை முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் 16 வகை மலர்களால் சாமிக்கு சண்முகார்ச்சனை நடந்தது. 10-ந்தேதி அன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
    மதுரை மாவட்டம் அழகர் மலை உச்சியில் பிரசித்தி பெற்ற முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழா சிறப்புடையதாகும். இந்த விழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது.அன்னம், காமதேனு, யானை போன்ற வாகனங்களில் சுவாமி எழுந்தருளி தினமும் புறப்பாடு நடந்தது. நேற்று 4-ம் திருவிழாவில் யாகசாலை பூஜைகளும், பின்னர் உற்சவர் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், விபூதி, உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தன. ஆட்டு கிடாய் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி வலம்வந்தார்.

    அங்குள்ள சஷ்டி மண்டபத்தில் வள்ளி தெய்வானை, சண்முகருக்கு ரோஜா, மல்லிகை, முல்லை, மல்லிகை, வில்வம், சம்மங்கி உள்ளிட்ட 16 வகையான 6 கூடை மலர்களால் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க சண்முகார்ச்சனை நடத்தினர். பின்னர் 6 சர விளக்குகளால் தீபாராதனைகள் நடந்தது. முன்னதாக மூலவர் சாமிகளுக்கும், வித்தக விநாயகர், வேல்சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    5-ம் திருநாளில் சப்பர வாகனத்தில் சுவாமி புறப்பாடும் வழக்கம் போல் பூஜைகளும் நடைபெறும். நாளை (செவ்வாய்க்கிழமை) 6-ம் திருநாள் காலையில் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, மாலை 4.30 மணிக்கு வேல் வாங்குதல், 5.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறும். இதில் வெள்ளி மயில்வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி அசுரனை வதம் செய்தல் நடைபெறும். 10-ந் தேதி 7-ம் திருநாள் அன்று காலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். இத்து டன் கந்த சஷ்டி திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகிய 2 நாள் நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கடந்த 4-ந் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலசந்தி, விளா பூஜை ஆகியவை நடைபெற்று வருகிறது. தினமும் காலையும், மாலையும் யாகசாலை பூஜை நடைபெறுகிறது.

    5-ம் திருநாளான இன்று(திங்கட்கிழமை) பகல் 11 மணிக்கு கோவில் மேல வாசலில் உள்பிரகாரத்தில் வைத்து தாரகாசுரன் வதம் நடைபெறுகிறது. நாளை(செவ்வாய்க்கிழமை) சஷ்டியை முன்னிட்டு பகல் 11 மணிக்கு சண்முக அர்ச்சனை மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு கோவில் மேலவாசல் உள்பிரகாரத்தில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    12-ந் தேதி இரவு கழுகாசலமூர்த்தி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 14-ந் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நிறைவு பெறுகிறது. சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகிய 2 நாள் நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், கோவில் தலைமை எழுத்தர் செண்பகராஜ் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளான நாளை (சூரசம்ஹாரம்) மௌன விரதம் அனுஷ்டிப்பதால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    ஐப்பசி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு தினங்கள் விரதம் இருக்க வேண்டும். இந்த ஆறு நாளும் விரதம் இருக்க முடியாதவர்கள் கடைசி நாளான நாளை (சூரசம்ஹாரம்) முழு நாளும் விரதம் அனுஷ்டிக்கலாம்.

    அதிகாலை எழுந்து நீராடி தோய்த்து உலர்த்திய தூய ஆடையை அணிந்து இரவில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகனைப் பூஜித்து வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து பிற உபசாரங்களும் செய்தல் வேண்டும். முருகன் சன்னிதி சென்று வலம் வந்து வணங்க வேண்டும்.

    நாளைய தினம் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும். முடியாதவர்கள் பால், பழம், நீர் ஆகாரங்களை அருந்தலாம். நாளை பேசாமல் மௌன விரதம் அனுஷ்டிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    நாளை திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் ஆகியவற்றை ஆசாரத்துடன் ஓதி கந்தபுராணம் படிக்க வேண்டும்.

    பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும். கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும். பாராயணம் புரிதல் வேண்டும். தியானம், ஜெபம் செய்தல் வேண்டும். மௌன விரதம் அனுஷ்டிப்பதால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

    சூரசம்ஹாரத்தை முடிந்த பிறகு முருகப்பெருமான வணங்கி நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய பின்னர் உங்கள் விரதத்தை நிறைவு செய்யலாம்.
    சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்று பொருள்.
    ×