search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறை"

    ஓசூர் ரவுடி கொலையில் கைதான 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஓசூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஒட்டர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராஜ் (வயது 32). பிரபல ரவுடி. இவர் மீது இரட்டை கொலை வழக்கு உள்பட மொத்தம் 3 கொலை வழக்குகள் இருந்தன.

    இவர் சூளகிரி அட்ட குறுக்கியில் உள்ள ஒரு தனியார் கிரானைட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 17-ந் தேதி இரவு வெங்கட்ராஜ் காமன்தொட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் கிரானைட் நிறுவனத்தில் காண்டிராக்ட் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் வெங்கட்ராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இந்த கொலை தொடர்பாக சூளகிரி அருகே உள்ள ஒட்டர்பாளையத்தை சேர்ந்த கேசவன் (26), அவரது தம்பி சந்தோஷ் (23), கர்நாடக மாநிலம் ஆவேனக்கல்லை சேர்ந்த பாலாஜி (25), சூளகிரி ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்த எர்ரமுனியப்பா என்பவரின் மகன் மாதேஸ்வரன் (27), அவரது சகோதரர் மல்லேகவுடு ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர். அவர்களில் கேசவன், அவரது தம்பி சந்தோஷ், மாதேஸ்வரன் ஆகிய 3 பேரும் கடந்த 19-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் போலீசார் தேடி வந்த பாலாஜி, மல்லேகவுடு ஆகிய 2 பேரையும் சூளகிரி போலீசார் நேற்று கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் ஓசூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கோவை சரவணம்பட்டி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை சரவணம்பட்டி விசுவாசபுரம் பஸ் நிறுத்தம் அருகே 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சரவணம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். 

    அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை பிடித்து அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சா மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த சித்து (வயது 25), கரூரை சேர்ந்த ராஜ்குமார் (23) ஆகியோர் என்பதும் அவர்கள் தனியார் கம்பெனியில் வேலை செய்த நேரம் போக மற்ற நேரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

    இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்காக உளவு பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய தூதரக முன்னாள் அதிகாரி மாதுரி குப்தாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. #ExDiplomat #MadhuriGupta #IndiaSpying #ISI
    புதுடெல்லி:

    பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இரண்டாம் நிலை செய்தி தகவல் தொடர்புத்துறை அதிகாரியாக கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து 2010 வரை பணியாற்றியவர் மாதுரி குப்தா. 

    பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததால் கடந்த 22-4-2010 அன்று டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்தியா தொடர்பான சில முக்கிய ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தகவல்களாக அனுப்பியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 

    ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளுடன் மாதுரி தொடர்பில் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இவருக்கு எதிரான வழக்கு டெல்லியில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மாதுரி குப்தா(61) மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால், அவர் குற்றவாளி என நீதிபதி சித்தார்த் சர்மா தீர்ப்பு வழங்கினார். 

    தண்டனை தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இன்று முடிவடைந்த நிலையில் மாதுரி குப்தாவுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிபதி சித்தார்த் சர்மா உத்தரவிட்டார்.  #ExDiplomat #MadhuriGupta #IndiaSpying #ISI 
    திண்டுக்கல் அருகே நர்சை கேலி- கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    குள்ளனம்பட்டி:


    திண்டுக்கல் அருகே வேம்பார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி முத்துலட்சுமி (24). திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

    கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (32). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.

    முத்துலட்சுமி வேலைக்கு பஸ்சில் சென்று வரும்போது ரஞ்சித்குமார் அவரை பின் தொடர்ந்து வந்து கேலி- கிண்டல் செய்து உள்ளார். இதனை முத்துலட்சுமி பலமுறை கண்டித்தும் ரஞ்சித்குமார் தொடர்ந்து கேலி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ரஞ்சித்குமார் மனைவியிடம் முறையிட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார் முத்துலட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து சாணார்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அபுதல்கா வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
    ×