search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாசா"

    40 லட்சம் மைல்கள் தூரத்தில் உள்ள சூரியனை மிக நெருக்கமாக ஆராய்வதற்காக நாசா உருவாக்கிய ‘பார்க்கர் சோலார் புரோப்’ செயற்கைக்கோளை அமெரிக்கா இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. #NASA #ParkerSolarProbe
    வாஷிங்டன்:

    வெப்ப கிரகமான சூரியன் குறித்த வியத்தகு தகவல்களை திரட்டிவர கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ‘ஹீலியோஸ் 1’ மற்றும் ‘ஹீலியோஸ் 2’ செயற்கைக்கோள்களை ஜெர்மனியும், அமெரிக்காவும் கூட்டாக விண்ணில் செலுத்தின.

    பூமியில் இருந்து சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் உயரத்திற்கு சென்ற இந்த செயற்கைக்கோள்கள் சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடிந்தது. 

    இதனால் உலக அழிவை ஏற்படுத்தக்கூடிய சூரிய புயல் (Solar Wind)  தொடர்பான போதிய தகவல்களை இதுவரை திரட்ட முடியவில்லை.  கடந்த 1985-ம் ஆண்டுவரை சில தகவல்களை அனுப்பிய இந்த செயற்கைக்கோள்கள் பின்னர் செயலிழந்து சூரியனின் சுற்றுவட்ட பாதையில் நிறுத்தப்பட்டுள்ளன.

    இதற்கிடையில், நாற்பது லட்சம் மைல்கள் தொலைவில்ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கக்கும் சூரியனை மிக அருகில் சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பார்க்கர் சோலார் புரோப்’ (Parker Solar Probe) எனும் செயற்கைகோளை 20 லட்சம் டாலர்கள் செலவில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா உருவாக்கியுள்ளது.  

    இந்த ஆய்வு திட்டத்துக்கு சூரியனில் ஏற்படும் புயல்கள் பற்றி 60 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து கூறிய யூகேன் பார்க்கரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி அமெரிக்க நேரப்படி நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் செலுத்த நாசா நேரம் குறித்து இருந்தது.

    சூரியன் மற்றும் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய ‘சூரிய புயல்’ அல்லது சூரிய பருவநிலை தொடர்பான புதிய தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பக் கூடிய இந்த பார்க்கர் சோலார் புரோப், சூரிய பரப்பின் 64 லட்சம் கி.மீ பகுதியில் பறக்கும் என்றும், சுமார் 1,400 செல்சியஸ் (2,500 பாரன்ஹீட்) வெப்பம் மற்றும் மிகப்பெரிய கதிரியக்கத்தையும் தாங்கி, எதிர்கொண்டு ஆய்வு செய்யும் திறன்கொண்டது. சூரியனின்  வெப்பம் மிகுந்த கரோனா பகுதியில் பார்க்கர் சோலார் புரோப் பயணித்து ஆய்வு செய்யும் என்றும் கூறப்படுகிறது. 

    இந்த செயற்கைகோள் அதீத தட்பவெப்ப நிலைகளைத் தாங்கும் சுமார் 11.4 செ.மீ (4.5 அங்குலம்) தடிமன் உள்ள கார்பன் காம்போசிட்டால் ஆன கவசத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    மணிக்கு சுமார் 7,25,000 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடிய திறன்கொண்ட பார்க்கர் சோலார் புரோப், சுமார் 6 வருடங்கள் மற்றும் 11 மாதங்களில் சூரியனை 24 முறை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

    அமெரிக்காவின் அரிய முயற்சியான ‘பார்க்கர் சோலார் புரோப்’ (Parker Solar Probe) செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுவதை தொலைக்காட்சியில் காண்பதற்காக அந்நாட்டு மக்கள் நேற்று அதிகாலை வரை விழித்திருந்து காத்திருந்தனர்.

    இந்நிலையில், விண்ணில் செலுத்துவதற்கான இறங்குமுக கவுண்ட்டவுன் நேரத்தில் வெறும் ஒரு நிமிடம் 55 நிமிடங்கள் மிச்சமிருந்த நிலையில் இந்த செயற்கைகோளை சுமந்து செல்லும் ’டெல்ட்டா-4’ ( Delta IV ) ராக்கெட்டை உந்திசெலுத்தும் எரிசக்தியான ஹீலியம் கொள்கலத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டது, கம்ப்யூட்டர்களின் எச்சரிக்கை ஒலியால் தெரியவந்தது.

    இதைதொடர்ந்து,  ‘பார்க்கர் சோலார் புரோப்’ செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் திட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது. 

    இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.01 மணிக்கு புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கார்னிவல் விமானப்படை தளத்தில் இருந்து ‘பார்க்கர் சோலார் புரோப்’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. #NASA #ParkerSolarProbe 
    நெருப்புக் கோளமான சூரியனை நெருக்கமாக சென்று ஆய்வு செய்வதற்காக நாசா தயாரித்த செயற்கைகோளை இன்று விண்ணில் செலுத்தும் திட்டம் கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது. #NASA #ParkerSolarProbe
    நியூயார்க்:

    வெப்ப கிரகமான சூரியன் குறித்த வியத்தகு தகவல்களை திரட்டிவர கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ‘ஹீலியோஸ் 1’ மற்றும் ‘ஹீலியோஸ் 2’ செயற்கைக்கோள்களை ஜெர்மனியும், அமெரிக்காவும் கூட்டாக விண்ணில் செலுத்தின.

    பூமியில் இருந்து சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் உயரத்திற்கு சென்ற இந்த செயற்கைக்கோள்கள் சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடிந்தது. 

    இதனால் உலக அழிவை ஏற்படுத்தக்கூடிய சூரிய புயல் (Solar Wind)  தொடர்பான போதிய தகவல்களை இதுவரை திரட்ட முடியவில்லை.  கடந்த 1985-ம் ஆண்டுவரை சில தகவல்களை அனுப்பிய இந்த செயற்கைக்கோள்கள் பின்னர் செயலிழந்து சூரியனின் சுற்றுவட்ட பாதையில் நிறுத்தப்பட்டுள்ளன.

    இதற்கிடையில், நாற்பது லட்சம் மைல்கள் தொலைவில்ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கக்கும் சூரியனை மிக அருகில் சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பார்க்கர் சோலார் புரோப்’ (Parker Solar Probe) எனும் செயற்கைகோளை 20 லட்சம் டாலர்கள் செலவில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா உருவாக்கியுள்ளது.  

    இந்த ஆய்வு திட்டத்துக்கு சூரியனில் ஏற்படும் புயல்கள் பற்றி 60 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து கூறிய யூகேன் பார்க்கரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி அமெரிக்க நேரப்படி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் செலுத்த நாசா நேரம் குறித்து இருந்தது.

    சூரியன் மற்றும் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய ‘சூரிய புயல்’ அல்லது சூரிய பருவநிலை தொடர்பான புதிய தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பக் கூடிய இந்த பார்க்கர் சோலார் புரோப், சூரிய பரப்பின் 64 லட்சம் கி.மீ பகுதியில் பறக்கும் என்றும், சுமார் 1,400 செல்சியஸ் (2,500 பாரன்ஹீட்) வெப்பம் மற்றும் மிகப்பெரிய கதிரியக்கத்தையும் தாங்கி, எதிர்கொண்டு ஆய்வு செய்யும் திறன்கொண்டது. சூரியனின்  வெப்பம் மிகுந்த கரோனா பகுதியில் பார்க்கர் சோலார் புரோப் பயணித்து ஆய்வு செய்யும் என்றும் கூறப்படுகிறது. 

    இந்த செயற்கைகோள் அதீத தட்பவெப்ப நிலைகளைத் தாங்கும் சுமார் 11.4 செ.மீ (4.5 அங்குலம்) தடிமன் உள்ள கார்பன் காம்போசிட்டால் ஆன கவசத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    மணிக்கு சுமார் 7,25,000 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடிய திறன்கொண்ட பார்க்கர் சோலார் புரோப், சுமார் 6 வருடங்கள் மற்றும் 11 மாதங்களில் சூரியனை 24 முறை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

    அமெரிக்காவின் அரிய முயற்சியான ‘பார்க்கர் சோலார் புரோப்’ (Parker Solar Probe) செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுவதை தொலைக்காட்சியில் காண்பதற்காக அந்நாட்டு மக்கள் இன்று அதிகாலை வரை விழித்திருந்து காத்திருந்தனர்.

    இந்நிலையில், விண்ணில் செலுத்துவதற்கான இறங்குமுக கவுண்ட்டவுன் நேரத்தில் வெறும் ஒரு நிமிடம் 55 நிமிடங்கள் மிச்சமிருந்த நிலையில் இந்த செயற்கைகோளை சுமந்து செல்லும் ’டெல்ட்டா-4’ 
    ( Delta IV ) ராக்கெட்டை உந்திசெலுத்தும் எரிசக்தியான ஹீலியம் கொள்கலத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டது, கம்ப்யூட்டர்களின் எச்சரிக்கை ஒலியால் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து, ‘பார்க்கர் சோலார் புரோப்’ செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் திட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த குறைபாடு சீரடைந்த பின்னர் நாளை விண்ணில் ஏவப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #NASA  #ParkerSolarProbe 
    அமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விரைவில் விண்வெளிக்கு செல்லும் 9 ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸ் இடம்பெற்றுள்ளார். #NASA #SunitaWilliams #SpaceCraft
    நியூயார்க்:

    பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்- வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வுசெய்து வருகின்றனர்.

    சுழற்சி முறையில் இவர்கள் மாற்றப்பட்டு புதிய ஆராய்ச்சியாளர்கள் நாசாவின் விண்வெளி ஓடம் மூலம் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. மேலும், விண்வெளி மையத்தில் தங்கி இருப்பவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர உபகரணங்களும் அனுப்பப்படுகிறது.

    இதுவரை இந்த பணிக்கு ரஷிய நாட்டு தயாரிப்பான ‘ஸ்பேஸ் கேப்ஸ்யூல்’ எனப்படும் விண்வெளி ஓடம் மூலம்தான் இந்த போக்குவரத்து நடைபெற்று வந்தது.

    இதற்கிடையில், பூமியை தவிர இதரசில கிரகங்களில் மனித குடியேற்றங்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆய்வு மையங்கள் ஈடுபட்டு வருகின்றன.


    அவ்வகையில், சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு மனிதர்களை ஏற்றிச்செல்லும் வகையில் வர்த்தகரீதியிலான விண்வெளி ஓடங்களை அமெரிக்காவை சேர்ந்த பிரபல தனியார் ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உருவாக்கியுள்ளது.

    நாசா விண்வெளி மையத்தில் இருந்து செல்ல இருக்கும் இந்த குழுவினருக்கான ‘டிராகன் கேப்ஸ்யூல்’  மற்றும் போயிங் சி.எஸ்.டி.-100 ஸ்டார்லைனர்’  என இரண்டு வகையான விண்வெளி ஓடங்களை (ஸ்பேஸ்கிராப்ட்) வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.

    அமெரிக்க விண்வெளி ஆய்வு திட்டத்தில் தனியார் நிறுவனம் கைகோர்த்துள்ளது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், வரும் 2019-ம் ஆண்டில் சோதனை ஓட்டமாக விண்வெளிக்கு இந்த ஓடங்கள் செல்லும் முதல் பயணத்தில் இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் உட்பட ஒன்பது பேர் அடங்கிய குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ஜோஷ் கஸ்ஸாடா ( 45 ), சுனிதா வில்லியம்ஸ் ( 52), ராபர்ட் பென்கென் (48), டக்லஸ் ஹர்லே (51), எரிக் போயி (53), நிக்கோலே மன் (41), கிறிஸ்டோபர் ஃபெர்குசென் (56), விக்டர் க்ளோவர் (42), மைக்கேல் ஹாப்கின்ஸ் (49) ஆகிய 9 பேர் கொண்ட குழுவினர் இதில் பயணிக்க உள்ளனர்.



    அமெரிக்காவின் சார்பில் 2011-ம் ஆண்டிற்கு பின்பு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் குழு இதுவாகும்.

    மேலும் இவர்களுடன் ரஷ்யாவைச் சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர்களும் பயணிப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களின் பெயர் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க மண்ணில் இருந்து இந்த விண்வெளி ஓடங்கள் புறப்பட்டு செல்வது நமது நாட்டின் விண்வெளி ஆய்வுத்துறையின் மிக முக்கியமான வளர்ச்சியாகும் என ஹூஸ்டன் நகரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாசா ஜான்சன் ஆய்வு மையத்தின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் குறிப்பிட்டுள்ளார்.

    இவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண்மணியான சுனிதா வில்லியம்ஸ் ஏற்கனவே இரண்டு முறை சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று 321 நாட்கள் அங்கு  தங்கி ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. #NASA #SunitaWilliams #SpaceCraft
    நாசாவை மிஞ்சும் வகையில் 140 டன் எடையை சுமந்து செல்லும் வகையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் ராக்கெட்டை சீனா தயாரித்து வருகிறது. #NASA #Heavyliftrocket

    பெய்ஜிங்:

    விண்வெளி துறையில் சீனா முன்னேற்றம் அடைந்து வருகிறது. ‘லாங் மார்ச்-9’ என்ற அதிக சக்தி படைத்த ராக்கெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    இந்த ராக்கெட் 10 மீட்டர் அகலம் கொண்டது. 4 சக்தி வாய்ந்த ‘பூஸ்டர்’கள் பொருத்தப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தலா 5 மீட்டர் அகலம் கொண்டவை. இது பூமியின் கீழ்மட்ட சுற்று பாதையில் 140 டன் எடையை சுமந்து செல்லும் திறன் படைத்தது. இந்த ராக்கெட் வருகிற 2030-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சீன தொழில்நுட்ப அகாடமி இதை உருவாக்கி வருகிறது.

     


    அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையம் 13 டன் எடையை சுமந்துசெல்லும் திறன் படைத்த ராக்கெட்டை தயாரித்து வருகிறது. அது 2020-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதை மிஞ்சும் வகையில் 140 டன் எடையை சுமந்து செல்லும் வகையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் இந்த ராக்கெட்டை சீனா தயாரித்து வருகிறது. ஐரோப்பாவின் அரீனே 5 ராக்கெட் 20டன் எடையையும், எல்கான் முஸ்கின் பால்கான் ராக்கெட் 64டன் எடையையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது. #NASA #Heavyliftrocket

    விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியை 70 சதவீதம் குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். #NASA #FlightSound #noisereductiontechnology

    வாஷிங்டன்:

    விமானங்கள் இயக்கப்படும் போது அதிக அளவிலான இரைச்சல் சத்தம் ஏற்படும். பொதுவாக வானில் பறக்கும் விமானத்தில் இருந்து வரும் ஒளியை நிலத்தில் இருந்தே கேட்க முடியும். அப்படி இருக்கையில் விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்கள் இந்த இரைச்சல் சத்தத்தினால் அதிக அளவில் பாதிப்படைகின்றனர். விமானத்தில் செல்லும் பயணிகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். 

    இந்நிலையில், விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியைக் குறைக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) நீண்ட காலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தது. பல்வேறு சோதனைகளுக்குப் பின் தற்போது அந்த சோதனையில் குறிப்பிடத்தக்க வெற்றியை எட்டியுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. 



    நாசாவின் சோதனை விமானங்களில் நடத்தப்பட்ட பல்வேறு மாற்றங்களுக்குப் பின் அவை இயக்கப்பட்டபோது இரைச்சல் ஒலி 70% குறைந்துள்ளதாகவும், இதற்காக விமான அமைப்பில் மூன்று தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த அளவுக்கு விமானத்தின் இரைச்சல் குறைக்கப்படுவது விமான நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாதபடி உதவும் என தெரிவித்துள்ளனர். #NASA #FlightSound #noisereductiontechnology
    செவ்வாய் கிரகம் அடுத்த மாதம் 27-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து பார்த்தால் செவ்வாய் கிரகம் நன்றாக தெரியும். இத்தகைய அதிசய நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். #Mars #Earth
    சான்பிரான்சிஸ்கோ:

    சூரிய மண்டலத்தில் உள்ள 9 கிரகங்களும் சூரியனை சுற்றி வருகின்றன.

    அவ்வாறு சுற்றி வரும் செவ்வாய் கிரகம் அடுத்த மாதம் (ஜூலை) 27-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து பார்த்தால் செவ்வாய் கிரகம் நன்றாக தெரியும்.

    ஏனெனில் சூரிய கதிர்களால் பிரதிபலிக்கப்பட்டு அது பிரகாசிக்கும். இந்த தகவலை அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தெரிவித்துள்ளது.

    இத்தகைய அதிசய நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக கடந்த 2003-ம் ஆண்டு பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வந்தது.

    தற்போது நிகழும் இந்த சம்பவம் சுமார் ஒரு வாரம் வரை நீடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். #Mars #Earth
    செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த தடயங்கள் இருப்பதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கண்டுபிடித்துள்ளது. #NASA #Mars
    நியூயார்க்:

    அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தில் நகர்ந்து சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் பூமியில் இருப்பது போன்று 3 பொருட்களை செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி கண்டுபிடித்துள்ளது. அவற்றில் அதிக அளவில் மீத்தேன் உள்ளது.

    பெரும்பாலும் ஒரு காலத்தில் உயிர் இருந்த பொருட்களின் மீதிகளில் தான் மீத்தேன் வாயு இருக்கும். எனவே இந்த பொருட்களுக்கு உயிர் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.



    செவ்வாய் கிரகத்தின் நிலப்பகுதியை கியூரியாசிட்டி தோண்டியிருக்கிறது. பெரிய அளவில் தோண்டாமல் வெறும் 5 செ.மீட்டர் மட்டுமே தோண்டியுள்ளது. இதை வைத்து இன்னும் பல மாதங்களுக்கு ஆய்வு செய்ய நாசா முடிவெத்துள்ளது. #NASA #Mars
    சந்திரனில் நடந்த அமெரிக்காவின் நாசா மையத்தை சேர்ந்த விண்வெளி வீரர் ஆலன் பீன் உடல்நல குறைவால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். #NASA #AlanBean
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ‘நாசா’ மையத்தை சேர்ந்த விண்வெளி வீரர் ஆலன் பீன் (86). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட இவர் ஹீஸ்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இவர் 2 தடவை விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டவர். அப்பல்லோ விண்கலம் மூலம் முதன் முதலில் நீல் ஆம்ஸ்ட்ராங்  சந்திரன் சென்று திரும்பினார். அதன் பின்னர் 4 மாதங்கள் கழித்து அப்பல்லோ விண்கலம் மூலம் 4 பேர் கொண்ட குழுவுடன் ஆலன் பீன் சந்திரன் சென்றார்.

    அப்போது அவர் சந்திரனில் இறங்கி நடந்தார். இச்சம்பவம் கடந்த 1969-ம் ஆண்டு நவம்பர் 19-ந் தேதி நடந்தது. இதன் மூலம் இவர் சந்திரனில் நடந்த 4-வது விண்வெளி வீரர் ஆனார்.

    சந்திரனில் தரை இறங்கி நடந்த அவர் அங்கு 32 அங்குலம் தோண்டி பாறைகள், தாதுக்கள் மற்றும் தூசிகளை எடுத்து வந்தார்.

    அவரது மரண செய்தியை நாசா மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆலன் பீன் அமெரிக்க கடற்படை சோதனை ஓட்ட விமானத்தின் விமானி ஆக இருந்தார். 1963-ம் ஆண்டில் ‘நாசா’ விண்வெளி மையத்தில் இணைந்து பணியாற்றினார். #NASA #AlanBean
    அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’, முதல்முறையாக செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டரை அனுப்பி வைக்க முடிவு செய்து உள்ளது. #NASA #Helicopter #Mars
    வாஷிங்டன்:

    அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’, முதல்முறையாக செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டரை அனுப்பி வைக்க முடிவு செய்து உள்ளது.

    இதற்காக ஒரு குழுவினர், 4 ஆண்டு காலம் உழைத்து, சிறிய அளவிலான ஹெலிகாப்டரை வடிவமைத்து அதன் எடையை 1.8 கிலோ அளவுக்கு குறைத்து உள்ளனர்.

    இந்த ஹெலிகாப்டர் பூமியை விட 100 மடங்கு மெல்லிய செவ்வாய் கிரகத்தின் காற்று மண்டலத்தில் பறப்பதற்கு உகந்ததாக உருவாக்கப்பட்டு உள்ளது.

    இது பற்றி ‘நாசா’ நிர்வாகி ஜிம் பிரைடன்ஸ்டைன் கூறும்போது, “மற்றொரு கிரகத்தின் வான்வெளியில் ஹெலிகாப்டரை பறக்க விடுவது என்பது மெய் சிலிர்க்க வைக்கக்கூடியதாக அமைந்து உள்ளது” என்று குறிப்பிட்டார்.

    மேலும் அவர் கூறும்போது, “நமது வருங்கால அறிவியல், கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டங்களை உறுதி செய்ய இந்த ஹெலிகாப்டர் உதவும்” என்றார்.

    ‘ட்ரோன்’ என்று அழைக்கப்படக்கூடிய ஆளில்லாத விமானத்துக்கு பதிலாக பறக்க உள்ள இந்த ஹெலிகாப்டருக்கு விமானி கிடையாது.

    பூமியில் இருந்து இந்த ஹெலிகாப்டர் 5½ கோடி கி.மீ. தொலைவுக்கு பறக்கும். எனவே ‘ரிமோட் கண்ட்ரோல்’ சமிக்ஞை எதையும் அனுப்புவதற்கு முடியாது.

    2020-ம் ஆண்டு ஜூலை மாதம் ரோவருடன் இணைத்து அனுப்பப்படுகிற இந்த ஹெலிகாப்டர், செவ்வாய் கிரகத்தை 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்று அடையும் என்று ‘நாசா’ விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.  #NASA #Helicopter #Mars
    ×