search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98360"

    விரிந்து பரந்து வளர்ந்திருக்கின்ற பாகவதத்தை படித்து மனதை அதில் லயித்து விட்டால், மோட்சம் என்ற சாம்ராஜ்யத்தை எளிதில் அடையலாம்.

    பேராபத்துகள் நிறைந்த கரையில்லாப் பிறவிப் பெருங்கடலே மானுட வாழ்வு. இப்பெருங்கடலை எந்தக் கப்பலைக் கொண்டு எந்த மாலுமியின் உதவியால் கடப்பது?

    நம்மைக் காப்பாற்றக் கருணை உள்ளம் கொண்ட வேதவியாஸர் என்னும் மாமுனி ‘ஸ்ரீமத் பாகவதம்’ என்னும் கப்பலைத் தயாரித்துக் கொடுத்துள்ளார். இக்கப்பலில் ஏற விருப்பமுள்ளவர்கள் சரணாகதி நெறியில் நின்று நித்ய பூஜை, தோத்திர பாராயணங்கள், கர்மானுஷ் டானாதிகள், பகவத் விஷயங்களைக் கேட்டல் முதலியவைகளைச் சோம்பலின்றி நம்பிக்கையுடன் செய்து வரவேண்டும்.

    அப்படி செய்தால் மனம் தெளிவடைந்த ஓர் நன்னாளில் பிறவிப் பெருங்கடலின் மறுகரையான பகவானுடைய திவ்ய சாசனங்களை அடைய முடியும். அந்தப் பகவானே அருளாயிருந்து கப்பலை ஓட்டிச் செல்வான். நம்மை கரையை அடையச் செய்வான். ஸ்ரீமத் பாகவதம் என்பது ஓர் கற்பக விருஷம். அதன் பெருங்கிளைகள் 12 ஸ்கந்தங்கள். சிறு சிறு கிளைகளாக இருக்கும் மேலான அத்தியாயங்களுடன் அது அடர்ந்து படர்ந்துள்ளது.

    அந்த மரத்தினுடைய இனிய நறுமணம் வீசுகின்ற பூங்கொத்துக்கள் தான், ஸ்ரீவியாச முனிவரால் உபயோகப்படுத்தப்பட்ட பதவின் யாசங்கள், அதன் குலைகள் தான் 3,000க்கும் மேலான செய்யுட்கள். இவ்வாறு விரிந்து பரந்து வளர்ந்திருக்கின்ற பாகவதத்தை படித்து மனதை அதில் லயித்து விட்டால், மோட்சம் என்ற சாம்ராஜ்யத்தை எளிதில் அடையலாம்
    கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். இதற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. அந்த காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசிமாலை அணிந்து கொள்வான்.

    வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான். பூச்சிகள் நுழையாமல் தடுக்க, நம் முன்னோர்கள் வீட்டின் பின்புறத்தில் துளசிமாடம் வைத்து, அதனை வழிபட்டார்கள்.
    கண்ணன் வணங்கும் அந்த ஆறு பேரை நாமும் வணங்கினால் வாழ்வில் அனைத்தும் வளமும் பெறலாம். கிருஷ்ண பகவான் சொன்ன அந்த ஆறுவகையான மக்களின் முழுப் பெருமைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    மக்கள் அனைவரும் தங்கள் துன்பங்கள் நீங்கவும், நோய் நொடி இல்லாமல் வாழவும், மறுபிறவி இல்லாமல் இறைவனின் திருப்பதத்தை அடையவும் இறைவனை வேண்டுகிறார்கள். ஆனால் இறைவனும் கூட சிலரை வணங்குகிறார் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா?

    ஆம்! திருப்பாற்கடலில் பள்ளி கொண்டபடி, அகிலத்தையே காத்தருளும் திருமாலின் அவதாரமாக விளங்கிய கிருஷ்ண பகவான் ஒரு முறை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். இதைக் கண்ட ருக்மணி தேவி, ‘சுவாமி! உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் உங்களை வழிபடுகின் றன. ஆனால் நீங்கள் யாரை வழிபட்டுக் கொண்டிருக் கிறீர்கள்?’ என்று கேட்டார்.

    அதற்கு கிருஷ்ண பகவான், ‘நான் இந்தப் பூமியில் வாழும் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன். நித்யான்ன தாதா (தினமும் அன்னதானம் செய்வோர்), தருணாக்னிஹோத்ரி (தினமும் அக்னி ஹோத்ரம் செய்வோர்), வேதாந்தவித் (வேதாந்தம் அறிந்தவர்கள்), சந்திர சஹஸ்ர தர்சீ (சகஸ்ர சந்திர தரிசனம் செய்தவர்), மாஸோபாவாசீச (மாதம் தோறும் உபவாசம் இருப்பவர்), பதிவ்ரதா (பதிவிரதையான பெண்கள்) ஆகிய ஆறு பேரை நான் வணங்குவேன்.

    கண்ணன் வணங்கும் அந்த ஆறு பேரை நாமும் வணங்கினால் வாழ்வில் அனைத்தும் வளமும் பெறலாம். கிருஷ்ண பகவான் சொன்ன அந்த ஆறுவகையான மக்களின் முழுப் பெருமைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    நித்ய அன்ன தாதா


    அந்தக் காலத்தில் ஒருவருக்குக் கிடைக்கும் வருமானத்தில் அல்லது நிலத்தில் அறுவடையாகும் விளைச்சலில் ஆறில் ஒரு பகுதியை மன்னருக்குக் கொடுத்து விட வேண்டும். மீதி ஐந்து பகுதிகளை, அவர் ஐந்து பேரைப் பாதுகாக்கப் (பஞ்ச யக்ஞத்துக்கு) பயன்படுத்தவேண்டும். இதுபற்றி திருவள்ளுவரும் கூட ‘இறந்து போன நம் முன்னோர்கள், கடவுள், வீட்டிற்கு வரும் விருந்தாளி, சுற்றத்தார் (இதில் நாம் வளர்க்கும் பசு முதலிய பிராணிகளும், வீட்டில் ஊர்ந்து செல்லும் எறும்புகளும் அடங்கும்), தனது குடும்பம் என்ற ஐந்து பேரையும் போற்றுவது இல்வாழ்வானின் தலையாய கடமை’ என்கிறார்.

    ‘அதிதி தேவோ பவ’ என்று வேதம் சொல்கிறது. இதற்கு ‘விருந்தாளி என்பவர் இறைவனுக்கு சமம்’ என்று பொருள். முன் காலத்தில், நாம் உண்பதற்கு முன்பாக வாசல் திண்ணையில் சிறிது நேரம் உட்கார்ந்து, யாராவது விருந்தாளிகள் அல்லது வழிப்போக்கன் வருகிறார்களா? என்று பார்த்து விட்டே உணவருந்த செல்வார்கள். அப்படிப்பட்ட பிரதிபலன் பார்க்காது அன்னதானம் செய்பவர்களை இறைவன் வணங்குகிறார்.

    தருண அக்னிஹோத்ரி

    முன் காலத்தில், ஏழு வயதில் பூணூல் போட்டவுடன் அந்தணச் சிறுவர்கள் ‘சமிதாதானம்’ என்று, தினமும் அக்னி வளர்த்து சமித்துக்களை நெய்யுடன் அக்னியில் ஆகுதி கொடுப்பார்கள். குருகுலம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன் இளைய பருவத்திலேயே அவர்களுக்குத் திருமணமும் நடந்துவிடும். பின்னர் அவர்கள் தினமும் ‘ஔபாசனம்’ என்ற அக்னி காரியத்தைச் செய்து வருவர். இதை தவிர ‘அக்னிஹோத்ரம்’ என்ற அக்னி காரியம், சூரியனை உத்தேசித்து சரியாக சூரியன் உதிக்கும் காலத்திலும், அஸ்தமனம் ஆகும் காலத்திலும் செய்யப்படுவதாகும். இதை எல்லோரும் செய்துவிட முடியாது. தனது தந்தை ஒரு அக்னிஹோத்ரியாக இருந்தால் மட்டுமே, தானும் அக்னிஹோத்ரம் செய்ய முடியும். இப்படிப்பட்டவர்கள் காணக்கிடைப்பது அபூர்வம். இப்படித் தவறாமல் செய்துவருவோரையும் இறைவன் வழிபடுகிறார்.

    வேதாந்த வித்

    வேதங்கள் நான்கு. அதன் முடிவில் இருப்பது உபநிஷத் (வேத+ அந்தம்=முடிவு). அதை உணர்ந்தவர்கள் வேதாந்திகள். ‘அஹம் பிரம் மாஸ்மி’, ‘தத்வம் அஸி’ போன்ற ஞான உணர்வு படைத்தவர்கள். வேதாந் தத்தில் நாட்டம் ஏற்பட வேண்டும் என்றால், பலகோடி ஜென் மங்களில் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். உலக விஷயங்களை துறந்து, வேதாந்த விஷயங்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து வேதாந்த சிந்தனையிலேயே வாழ்வை கழிப்பவனே உண்மையான வேதாந்த வித். அந்த வேதாந்திகளையும் கிருஷ்ண பரமாத்மா வணங்குகிறார்.

    சந்திர சகஸ்ர தர்சீ

    சிவனுடைய தலையில் இருப்பது மூன்றாம் பிறைச் சந்திரன். அதை மாதம் தோறும் அமாவாசைக்குப் பின்னர் மூன்றாம் நாளில் காணலாம். அடுத்த முறை காண 29 நாட்கள் காத்திருக்க வேண்டும். இப்படி ஆயிரம் முறை காண, 81 ஆண்டு கள் பிடிக்கும். அப்பொழுது அவர்கள் ‘சதாபிஷேகம்’ செய்து கொள்வார்கள். அப்படி ஆயிரம் பிறை கண்ட அதிசய சிகாமணிகளையும், கண்ணபிரான் வணங் குவார். இந்த பிறைச் சந்திரனைக் காணும் வழக்கம் பல மதங்களிலும் இருக்கிறது. ஒருவர் ஆயிரம் முறை சந்திரனைக் காண வேண்டுமானால், ஆயிரம் தடவை சிவனை நினைத்திருக்க வேண்டும்.

    மூன்றாம் பிறை சந்திரனை வழிபட நினைப்பவர்கள், ‘மேகம் மறைக்கிறதே என்ற கவலையில் சந்திரனைக் காண சிவபெருமானை துதித்து நிற்பார்கள். இன்னும் சிலர் தங்களது இஷ்ட தெய்வத்தையும், குலதெய்வத்தையும் வணங்குவார்கள். அப்படிப்பட்டவர் களையும் கிருஷ்ணன் வணங்குகிறார்.

    மாஸோபாவாசீச

    மாதம் தோறும் இரண்டு ஏகாதசிகளிலும் உபவாசம் இருப்பவர். அந்த நேரங்களில் உணவருந்தாமல் இருக்கும் முறையை ஒழுங்காக கடைப்பிடிக்க வேண்டும். சுத்த உப வாசம் என்பது நிர்ஜலமாக (தண்ணீர் கூட பருகாமல்) இருப்பது. அப்படி இருக்க முடியாதவர்கள் தண்ணீர் மட்டுமே பருகி உபவாசம் இருக்கலாம். எப்படியானாலும் மாதந்தோறும் இரண்டு முறை உபவாசம் இருப்பவர் களை கண்ணன் வணங்குவான். ஆனால் அப்படி உபவாசம் இருப்பவர்கள் மிகவும் குறைவு தான்.

    பதிவ்ரதா


    ‘பதிவிரதை’ என்பதற்கு கற்புக்கரசிகள் என்று பொருள். இப்படிப்பட்டவர்களை வணங்கும் முறை நம் நாட்டில் எப்போதுமே உண்டு. சாஸ்திரத்தில் சொல்லபட்ட எல்லா விஷயங்களையும் மூன்று வகையில் அனுஷ்டிக்க வேண்டும். அவை மனோ, வாக், காயம் என்பதாகும். இவற்றை தமிழில் உண்மை, வாய்மை, மெய்மை என்கிறோம். இந்த மூன்று உறுப்புகளாலும் வேறு ஒரு ஆடவனை நினைக்காது, கணவனை மட்டுமே தெய்வம் போல் கருதுபவர்களே ‘பதிவிரதை’ ஆவர்.

    அப்படிப்பட்ட கற்புக்கரசிகளால் எந்த இயற்கை சக்தியையும் கட்டப்படுத்த முடியும். எதையும் எதிர்த்து போரிட முடியும். ஆனால் அவர்கள் அதை எளிதில் பிரயோகிக்கக் மாட்டார்கள்.

    அசோகவனத்தில் சீதையைக் கண்ட அனுமன், ‘தாயே! உங்களைக் காணாமல் ராமன் தவிக்கிறார். என்னுடன் வாருங்கள். அடுத்த நிமிடமே உங்களை ராமபிரானிடம் சேர்க்கிறேன்’ என்றார்.

    அதைக் கேட்ட சீதை சிரித்தாள். ‘என் கற் பின் ஆற்றலால் ஈரேழு உலகங்களையும் எரிக் கும் சக்தி எனக்கு உண்டு. ஆனால் கண வனின் ‘வில்’ ஆற்றலுக்கு இழுக்கு உண்டாக் கும், எதையும் செய்ய மாட்டேன்’ என்றாள்.

    ‘எங்கு பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ, அங்கு தெய்வம் வாழும். எங்கு பெண்கள் மதிக்கப்பட வில்லையோ, அங்கு என்ன நல்லது செய்தாலும் அதற்குப் பலன் இல்லை’ என்கிறது மனு சாஸ்திரம். மேலும் ‘மரியாதைக் குறைவாக நடத்தப்பட்ட பெண்கள், சாபம் இட்டால் அந்தக் குடும்பம் அடியோடு அழிந்து போகும். தந்தை, கணவன், மைத்துனன், சகோதரர் ஆகியோருக்கு அதிர்ஷ்டம் வேண் டுமானால் அவர்கள் பெண்களை மதிப்போடு நடத்த வேண்டும்’ என்றும் சொல்கிறது.

    இப்படியெல்லாம் பாராட்டப்பட்ட பதிவிரதைகளைத் தான் கண்ணன் வழிபாடு செய்கிறான். 
    கிருஷ்ணன் தலையை மயில் இறகு அழகு செய்கிறது. இந்த அலங்காரம் அவருக்கு எப்படி ஏற்பட்டது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கிருஷ்ணன் தலையை மயில் இறகு அழகு செய்கிறது. இந்த அலங்காரம் அவருக்கு எப்படி ஏற்பட்டது தெரியுமா? கம்சனின் கொடுமை காரணமாக கிருஷ்ணருடைய பெற்றோர் சிறையில் வாடநேரிட்டது.

    தங்கத்தொட்டிலில் போட்டு சீராட்டப்பட வேண்டிய ராஜ குழந்தை மூங்கில் கூடையில் கிடத்தப்பட்டு கோகுலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டான்.
    இதனால் ஆயர்பாடி புழுதியில் விளையாட வேண்டி யவன் ஆகிறான். ஆனால் ராஜலட்சணம் பொருந்திய அவனது முகம் பார்ப்போரையெல்லாம் வசீகரித்தது. அவன் புதுப்புது உத்திகளைக் கையாண்டு சின்னச்சின்ன பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டான்.

    இதனால் கண்ணனை கவுரவிக்க ஆயர்பாடி சிறுவர்கள் விரும்பினார்கள். உடனே அங்கே சுற்றித்திரிந்த மயிலைப்பிடித்தார்கள்.

    அதனிடம் இருந்து ஓர் இறகை எடுத்து கிருஷ்ணனின் தலையில் கிரீடம் போல் செருகினார்கள். அன்று முதல் கிருஷ்ணனின் திருமுடியில் மயில் இறகு நீங்காத இடம் பிடித்து விட்டது.
    யார் ஒருவர் கண்ணபிரானின் குழலோசையினை ஒரு முறை கேட்டு விட்டார்களோ, அவர்கள் வானத்தில் உள்ள அமிர்தம், சொர்க்கம் ஆகியவற்றைக் கூட கூச்சமாக மதிப்பார்கள்.
    பிரணவத்தின் ஓர் அடையாளம் தான் புல்லாங்குழல், அந்தக் குழலோசை தான் பக்தி நிறைந்த கோபிகைகளைக் கவர்ந்தது. அவரது புல்லாங்குழலில இருந்து வந்த இனிய கானம் அவர்களை இன்பமூட்டி, கிளர்ச்சி உண்டாக்கும்படி செய்தது.

    கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசை இருதயத்தில் நுழைந்து, கேட்பவர் எவரையும், தனது சுற்றம், சுற்றியுள்ள உலகம் ஏன் தன்னையே கூட மறக்கடிக்கச் செய்யும். கேட்பவர் எவரையும் ஆனந்தக் கூத்தாடச் செய்து, அவர்களது இருதயம் முழுவதும் தூய அன்பை நிறைத்து விடும். தெய்வீகமான அப்புல்லாங்குழலிருந்து வரும் இனிய இசை வெள்ளம், கேட்பவரின் இருதயத்தில் பேரானந்தத்தை வழங்கி, புத்துணர்ச்சி மிக்க புதுவாழ்விற்கு கொண்டு செல்லும்.

    அது ஆன்மீக மயக்கத்தைத் தோற்றுவித்து, உயிரற்ற உணர்வற்ற பொருட்களில் கூட இயக்கத்தை ஏற்படுத்தி விடும். அக்குழலின் இனிமையை விட உயர்வானது ஒன்றுமில்லை. யார் ஒருவர் கண்ணபிரானின் குழலோசையினை ஒரு முறை கேட்டு விட்டார்களோ, அவர்கள் வானத்தில் உள்ள அமிர்தம், சொர்க்கம் ஆகியவற்றைக் கூட கூச்சமாக மதிப்பார்கள்.

    குழலோசை கோபிகைகளின் ஆத்மாவில் கலந்தது. அவர்களை அவர்களே மறந்தார்கள். உலகமே அவர்களுக்கு ஒன்றுமில்லாமல் போனது. ஸ்ரீகிருஷ்ணரை நோக்கித் தங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாதபடி அவரது கானம் கவர்ந்திழுத்தன. அவரவர் தங்களது வீட்டை விட்டு வர பயமோ, தயக்கமோ காட்டவில்லை. அவர்களுக்குள்ளே இருந்த ஆத்மா விழிப்புணர்வு பெற்றது. அவர்களது எண்ணம், மனம் இவ்வுலகில் இல்லை. அந்த அளவுக்கு கிருஷ்ணரின் புல்லாங்குழல் கானம் சக்தி பெற்றிருந்தது.
    பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு அனுக்கிரகம் செய்வார் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.
    ஒருநாள் பாண்டவர்களும், கிருஷ்ணரும் தோட்டத்தில் இருந்த குளத்தில் நீராடினர். அனைவரும் கரையேறிய பின்பும் கிருஷ்ணர் நீரிலேயே இருந்தார். ‘கண்ணா, சீக்கிரம் வா!’ என்று குரல் கொடுத்து விட்டு அர்ஜுனன் உலர் ஆடையை அணிந்து கொள்ளப் போய்விட்டான். பெண்கள் பகுதியில் கடைசியாக கரையை அடைந்த திரவுபதி, ‘கண்ணன் இன்னும் ஏன் வெளியே வராமல் நீரிலேயே துலாவிக் கொண்டிருக்கிறான்!’ என நின்று யோசித்தாள்.

    அவன் கட்டியிருந்த உடை நீச்சலடிக்கும் போது நழுவி விழுந்திருக்கும். அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறான் என யூகம் செய்து புரிந்து கொண்டாள். உடனே தன் புடவையில் ஒரு பகுதியை கிழித்து கண்ணனை நோக்கி வீசி விட்டு நகர்ந்தாள். திரவுபதி கொடுத்த துணியை இடுப்பில் சுற்றிக் கொண்டு கண்ணன் கரையேறினான்.

    இப்படி கண்ணன் அணிந்து கொள்ள திரவுபதி செய்த உதவியே, துரியோதனன் அவையில் அவளை துச்சாதனன் துகிலுரிய முற்பட்டபோது, அவளது மானம் காக்கப்பட பிரதிஉபகாரமாக அமைந்தது என சான்றோர்கள் கூறுகின்றனர். பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு அனுக்கிரகம் செய்வார் என்பதையே இது காட்டுகிறது.
    ஸ்ரீகிருஷ்ணர், கோபிகைகளின் மேல் வைத்திருந்த தீராத அன்பின் காரணமாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று வெண்ணெயினைத் திருடி ஆசை தீர உண்பார்.
    ஆயர்பாடியில் உள்ள கோபியர் கண்ணபிரானிடம் கொண்ட வேட்கை மிகுதியால் அவன் தம்மைக் காதலிக்க வேண்டி நோன்பு நோற்றனர். முடிவில் யமுனையில் நீராடச் சென்றனர். அங்கே அவர்கள் சேலைகளைக் கரையில் வைத்து விட்டு நீராடினர்.

    கண்ணன் அந்த ஆடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறிக் கொண்டான். சிறிது நேரம் அவர்களை அலைக்கழித்தான். பின்பு அவர்கள் கைகூப்பி வணங்கிக் கேட்க, ஆடைகளைத் திருப்பி கொடுத்தான்.

    ஸ்ரீகிருஷ்ணர், கோபிகைகளின் மேல் வைத்திருந்த தீராத அன்பின் காரணமாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று வெண்ணையினைத் திருடி ஆசை தீர உண்பார். ஆனால் அவர் உண்மையிலேயே திருடியது தனது பக்தர்களின் மனங்களில் உள்ள கெட்ட குணங்களைத் தான். பின்னர் அம்மனங்களைத் தனது தெய்வீகச் சக்தியால் நிரப்பி விடுவார்.

    அதன் பயனாக அவர்கள் உவகை மறந்து ஸ்ரீகிருஷ்ணரிடமே அதிதீவிர பக்தி பூண்டு, அவரது பாதாரவிந்தத்தையே நினைத்துக் கொண்டிருந்தனர். அதனால் அவர்கள் எல்லையற்ற பேரானந்தத்தை அடைந்தனர்.

    ஸ்ரீகிருஷ்ணரின் தனிப்பட்ட ஆத்மா, உலக உயிர்களி லெல்லாம் வாசம் செய்கின்றது என்பது இதன் மூலம் தெளிவாக விளங்குகின்றது.
    எப்போதெல்லாம் உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் அவதரிக்கிறேன்... என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார்.
    “எப்போதெல்லாம் உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் அவதரிக்கிறேன்... என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார். விஷ்ணு தசாவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம்தான் கிருஷ்ணாவதாரம். அவர் இந்த பூலோகத்தில் அவதரித்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமியாக கொண்டாடுகிறோம்.

    ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் கம்சனின்சிறைச்சாலையில் இருந்த வசுதேவர்- தேவகிக்கு மகனாக கிருஷ்ணர் அவதரித்தார். 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும் , 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணரின் இளம் வயது நாட்கள் கழிந்தன.

    தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி பெற்றோரை விடுவித்தார் கிருஷ்ணர்.தீராத விளையாட்டுப் பிள்ளையான கிருஷ்ணரின் இளமைப் பருவம் பற்றி கேட் பதற்கே இனிமையாக இருக்கும். நாளரு மேனியும், பொழு தொரு வண்ண முமாக வளர்ந்த கிருஷ்ணர், ஆயர்கள் கட்டி வைத்த கன்றுகளை அவிழ்த்து விடுவது... நீர் ஏந்தி வரும் பெண் களின் குடங்களை கல் விட்டு உடைப்பது... வெண்ணையை திருடி உண்பது... போன்ற பல்வேறு சேட்டைகளில் ஈடுபட்டார்.

    கிருஷ்ணர் இரவு 12 மணிக்கு பிறந்ததை நினைவு கூறும் வகையில் வடஇந்தியாவில் இரவு 12 மணி வரை யிலும் உபவாசம் இருந்து, பஜனை செய்வார்கள்.
    ஆயர்பாடியில் வளர்ந்த கண்ணன் இளமையில் வெண்ணை திருடி உண்டவர் என்பதால் கோகுலாஷ்டமி அன்று கண்ணனுக்கு பால், தயிர், வெண்ணை ஆகியவற்றை தவறாது நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு.

    ஆயர்பாடியில் மாடுகளை மேய்த்து திரிந்த கண்ணன், பகல் நேரம் முழுவதும் மாடுகளை நன்றாக மேய்த்து விட்டு மாலை நேரத்தில் தான் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதனால் மாலை நேரம்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்ய ஏற்ற நேரமாகும்.

    புல்லாங்குழல்

    கிருஷ்ண பகவான் எப்போதும் புல்லாங்குழலை இசைப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அதிலிருந்து பிறக்கும் இசையில் பசுக்களும், பறவைகளும், விலங்குகளும், புல் முதல் மரம் வரையிலான தாவரங்களும், ஆறுகளும், மலைகளும், கோபியரும், ஏன் அகில உலகங்களும் கட்டுண்டு கிடந்ததை, ‘திவ்விய பிரபந்தம்’ அழகாகப் பாடுகின்றது.

    நமது உடல் ஒன்பது துவாரங்கள் உடையதாக உள்ளது. அவை கழிவுகளை வெளியேற்றப்பயன்படுகின்றன. ஆனால் அழியக்கூடிய இந்த உடலை ‘கிருஷ்ண சேவை’க்காக அர்ப்பணித்துவிட்டால் இந்தப் பூதவுடலே புல்லாங்குழல் போல் புனிதமாகிவிடும்.
    பக்தியுடன் கிருஷ்ணன் நாமத்தைச் சொல்லி ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் பகவான் கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொள்வார் என்பதையே இந்த துலாபார நிகழ்ச்சி காட்டுகிறது.
    ஒருமுறை கிருஷ்ணரிடம் யாருக்கு அன்பு அதிகம் என்பதை, ருக்மணியும் சத்திய பாமாவும் சோதித்துப் பார்க்க விரும்பினார்கள். தங்களுடைய கருத்தை கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.

    கிருஷ்ணரும் அதற்குச் சம்மதித்தார். அங்கே ஒரு துலாபாரம் (தராசு) கொண்டு வரப்பட்டது. கிருஷ்ணர் அதில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அவரும் மறுவார்த்தை பேசாமல் துலாபாரத்தில் தராசின் ஒரு பக்க தட்டில் ஏறி அமர்ந்தார். ஏதும் அறியாதவர் போல் நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

    முதலில் சத்தியபாமா தன்னிடம் இருந்த நகைகள் மொத்தத்தையும் ஒரு தட்டில் வைத்தாள். ஆனால் கண்ணன் அமர்ந்திருந்த தட்டில் அசைவே இல்லை. தனது முயற்சியில் சற்றும் தளராது சத்தியபாமா மேலும் தனது கழுத்தில், காதில், உடலில் அணிந்திருந்த எல்லா நகைகளையும் எடுத்து தராசில் வைத்தாள். அப்போதும் நகைகள் வைக்கப்பட்ட தட்டு கீழே வரவில்லை. சத்தியபாமா வெட்கத்தால் தலை குனிந்தாள்.

    அதன் பிறகு ருக்மணி, தராசின் அருகில் வந்தான். கிருஷ்ணரை மனம் உருக பிரார்த்தித்தாள். பின்னர் ஒரு துளசி இலையில் கிருஷ்ணரின் பெயரை எழுதி, தராசின் நகைகள் இருந்த தட்டில் வைத்தாள். என்ன ஆச்சரியம். அது கிருஷ்ணனுடைய எடைக்கு சமமாக நின்றது.

    இறைவனுக்கும், அவனது திருநாமத்துக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. பக்தியுடன் அவன் நாமத்தைச் சொல்லி ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் பகவான் கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொள்வார் என்பதையே இந்த துலாபார நிகழ்ச்சி காட்டுகிறது. எனவேதான் தற்போதைய கலியுகத்தில், கிருஷ்ண பகவானின் நாம சங்கீர்த்தனத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
    கிருஷ்ணனின் 8 வகையான வடிவங்கள் சிறப்பானவை. 8 வகையான கிருஷ்ணன் உருவ வடிவங்களையும், அதற்கான விளக்கத்தையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    1. சந்தான கோபால கிருஷ்ணர்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.

    2. பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். பலரின் பூஜை அறையில் இப்படத்தையே காணலாம்.

    3. காளிய கிருஷ்ணன்:காளிங்க மர்த்தனம் புரியும் கிருஷ்ணன்.

    4. கோவர்த்தனதாரி:கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

    5. ராதா-கிருஷ்ணன்(வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.

    6. முரளீதரன்: இதில் கிருஷ்ணன் நான்கு கைகளுடன்,ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதனாய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.

    7. மதன கோபால்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் முரளீதரன்.

    8. பார்த்தசாரதி: அர்ஜூனனுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.
    பாண்டவர் 5 பேரில் கிருஷ்ணனிடம் அதிக பக்தி கொண்டவர் யார்? இதை பிரித்து பார்த்து வரையறுத்து சொல்ல முடியாது. ஆனால் சற்றும் வெளியில் தெரியாத பக்தி சகாதேவன் பக்தி என்பார்கள்.
    பாண்டவர் 5 பேரில் கிருஷ்ணனிடம் அதிக பக்தி கொண்டவர் யார்? இதை பிரித்து பார்த்து வரையறுத்து சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் அவர் மீது தங்கள் உள்ளத்தில் மிகுந்த பக்தி கொண்டிருந்தனர். ஆனால் சற்றும் வெளியில் தெரியாத பக்தி சகாதேவன் பக்தி என்பார்கள்.

    அந்த சகாதேவன்தான் பாண்டவர் ஐவரும் பாரத யுத்தத்தில் உயிர் பிழைத்து வாழக் காரணமாக இருந்தவன். கிருஷ்ண பரமாத்மாவிற்கு வேண்டியவர் வேண்டாதவர், உற்றவர், மற்றவர் என்ற பேதங்கள் இல்லை. குருசேத்திரப் போரில் அவர் அனைவரையும் அழித்திருப்பார். அதில் பாண்டவரும் மாண்டிருப்பர். அந்த ரகசியத்தை அறிந்தவன் சகாதேவன்.

    தருமரின் வேண்டுகோளை ஏற்று தூது செல்ல கிருஷ்ணர் புறப்படுகிறார். அப்போது பாண்டவர் ஐவரிடமும் சண்டையா- சமாதானமா என்று கேட்கிறார்.
    தருமர் மட்டுமே சமாதானம் என்கிறார். பீமன், அர்ஜுனன், நகுலன் மூவரும் சண்டைதான் வேண்டும் என்கின்றனர்.

    ஆனால் சகாதேவன் மட்டும் “எங்களை ஏன் கேட்கிறீர்கள்? நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுதானே நடக்கப் போகிறது. அதைச் செய்யுங்கள்” என்கிறான்.
    சகாதேவன் ஜோதிடத்தில் சிறந்தவன் என்பதால் இவன் ஏதோ உள்ளர்த்தம் வைத்துப் பேசுகிறான் என்பதை உணர்கிறார் கிருஷ்ணர்.

    சகாதேவனைத் தனிமையில் சந்தித்த கிருஷ்ண பரமாத்மா “பாரதப் போர் வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று சொல்” என்று கேட்டார்.

    “உங்களைக் கட்டிப் போட்டால் பாரத யுத்தம் வராமல் தடுக்க முடியும்” என்றான் சகாதேவன்.

    “எங்கே என்னைக் கட்டு பார்க்கலாம்!” என்ற கண்ணன் மறுகணம் பதினாறாயிரம் வடிவம் கொண்டு நின்றார்.

    ஆயினும் சகாதேவன் தயங்கவில்லை. தன் மனத்தால் உண்மை வடிவத்தைக் கட்டினான்.

    அதற்கு மகிழ்ந்த கிருஷ்ணர் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, சகாதேவன் ஐவர் உயிரையும் காத்தருள வேண்டும் என்று கேட்க அவ்விதமே அருள்புரிந்தார்.

    பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் உருவான சூழ்நிலையில் பாண்டவர்களின் சார்பில் கிருஷ்ணர் கவுரவர்களிடம் தூது சென்றார். அப்போது கிருஷ்ணன் அமைத்த வியூகம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் உருவான சூழ்நிலையில் பாண்டவர்களின் சார்பில் கிருஷ்ணர் கவுரவர்களிடம் தூது சென்றார். ஆனால் அவர் கவுரவர்களின் அரண்மனைக்குச் செல்லாமல், அவர்களது சித்தப்பாவான விதுரரின் மாளிகைக்குச் சென்றார். அங்கு அவர் விருந்துண்டார்.

    இதனால் துரியோதனனுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. முதலில் தங்களைத் தேடி வராத கிருஷ்ணரை அவமதிக்க முடி வெடுத்தான். அவையில் இருந்தவர்களிடம், “யாரும் கிருஷ்ணர் வரும்போது எழுந்திருக்கக் கூடாது. அவரை அவமதிக்க வேண்டும்” என்று துரியோதனன் கட்டளையிட்டான். ஆனால், கிருஷ்ணரைக் கண்டதும் அவருடைய தேஜஸில் மயங்கி அனைவரும் தங்களையும் அறியாமலேயே இருக்கையில் இருந்து எழுந்துவிட்டனர்.

    துரியோதனன் மட்டும் ஏளனத்துடன், “கிருஷ்ணா! நீர் தூது வந்ததன் நோக்கம் என்ன?” என்று கேட்டான். வனவாசம் முடிந்த பாண்டவர்களுக்கு பாதிநாட்டை கொடுக்கும்படி கேட்டார் கிருஷ்ணர். ஆனால், துரியோதனனோ ஒருபிடி மண்கூட கிடையாது என்று மறுத்துவிட்டான்.

    நல்லவரான விதுரர் மட்டும் துரியோதனனிடம் தர்மத்தை எடுத்துச் சொன்னார். ஆனால் விதுரரின் பிறப்பைப் பற்றி பேசி, துரியோதனன் அவமதித்தான். “தர்மத்தின் பக்கம் தான் நிற்பேன் என்னுடைய வில்லைக் கொண்டு அதர்மத்திற்கு உதவ எனக்கு மனமில்லை” என்று சொல்லி, அவர் தன் வில்லை முறித்து விட்டார்.

    நல்லவரான விதுரர், செஞ்சோற்றுக் கடனுக்காக துரியோதனுக்கு உதவினால், பாண்டவர்களால் அந்த பாரதப் போரில் வெல்ல முடியாது என்ற நிலை இருந்தது. இதை கிருஷ்ணர் நன்கு அறிந்திருந்தார். எனவே கவுரவர்களிடம் இருந்து விதுரரைப் பிரிக்க கிருஷ்ணர் முடிவு செய்தார். அதற்கு ஒரு வியூகம் வகுத்தார். அந்த வியூகத்தின்படிதான் அவர் முதலில் விதுரர் வீட்டுக்கு சென்று விருந்து சாப்பிட்டார். இதனால் துரியோதனனுக்கும், விதுரருக்கும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்தே விதுரர் தனது கையாலேயே முக்கியமான ஒரு வில்லை ஒடித்தார். கிருஷ்ணரின் வியூகத்திற்கு வெற்றி கிடைத்தது.
    ×