search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98360"

    மனதால் கண்ணனை நினைத்தாலே நன்மைகள் தேடி வரும் என்பதற்கு பக்தர்களின் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை செய்து இருக்கிறார் பகவான்.
    துரியோதனன் சூதாட்டத்திற்கு பாண்டவர்களை அழைத்தபோது, தர்மர் மறுத்தாலும் பிறகு சபையில் கர்ணன், பாண்டவர்களை கிண்டல் செய்ய, அர்ஜூனன் கோபமாக பேச, தேவை இல்லாமல் வாக்குவாதம் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையில் தர்மரும் சூதாட்டம் ஆட தொடங்கினார்.

    என் சார்பாக என் மாமா சகுனி ஆடுவார் என்றான் துரியோதனன். பாண்டவர்களின் சார்பாக நான் ஆடுவேன் என்றார் தர்மர் யோசிக்காமல். சகுனியின் தந்திரத்தால் பாண்டவர்கள் சூதில் தோற்றார்கள்.

    தன்னால் எல்லாம் முடியும் என்று எண்ணிய தர்மர், கிருஷ்ணரை அழைக்கவில்லை. ஒருவேளை, “எங்கள் சார்பாக கிருஷ்ணர் விளையாடுவார்” என்று தர்மர் சொல்லி இருந்தால் நிச்சயம் மாயகண்ணன் கவுரவர்களை ஜெயித்து இருப்பார். இதை திரௌபதி உணர்ந்ததால்தான், துச்சாதனன் திரௌபதியின் துகில் உரித்தபோது, கண்ணனை நினைத்து “கோவிந்தா” என்று அழைத்தாள். அதனால் திரௌபதியின் மானம் சபையில் காக்கப்பட்டது.

    அதேபோல், போர் களத்தில் கிருஷ்ணனால்தான் ஜெயித்தேன் என்று அர்ஜுனனும் கடைசியில் உணர்ந்தான் என்கிறது வில்லிபாரதம். கிருஷ்ணபரமாத்மாவை நம்பினால் நிச்சயம் வெற்றிதான். மனதால் கண்ணனை நினைத்தாலே நன்மைகள் தேடி வரும் என்பதற்கு பக்தர்களின் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை செய்து இருக்கிறார் பகவான்.

    மனதால் கண்ணனை நினைத்தாலே நன்மைகள் தேடி வரும் என்பதற்கு பக்தர்களின் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை செய்து இருக்கிறார் பகவான்.
    கிருஷ்ணபரமாத்மாவை நம்பினால் நிச்சயம் வெற்றிதான். பக்தர்களின் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை செய்யும் கிருஷ்ணரின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

    கம்சனின் சகோதரி தேவகி. இவளை வசுதேவருக்கு கம்சன் திருமணம் செய்து கொடுத்தான். ஒருநாள் வசுதேவர், தேவகி இருவரையும் கம்சன் தனது தேரில் ஏற்றி அழைத்து சென்று கொண்டிருந்தான். அப்போது வானில் அசரிரீ ஒன்று கேட்டது. ‘கம்சா.... உன் சகோதரி தேவகிக்கு பிறக்கும் 8-வது குழந்தை உன்னை கொல்லும்’ என்று அசரிரீ ஒலித்தது.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கம்சன் வசுதேவரையும் தேவகியையும் சிறையில் அடைத்தான். அங்கு தேவகிக்கு 7 குழந்தைகள் பிறந்தன. அந்த 7 குழந்தைகளையும் பிறந்த உடனேயே கம்சன் அழித்தான். இந்த நிலையில் தேவகி 8-வது முறையாக கர்ப்பம் அடைந்தாள்.

    அதே சமயத்தில் வசுதேவரின் நண்பர் நந்தாவின் மனைவி யசோதாவும் கர்ப்பம் அடைந்தாள். ஆவணி மாதம் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திர தினத்தன்று தேவகிக்கு ஆண் குழந்தையும் யசோதாவுக்கு பெண் குழந்தையும் பிறந்தனர்.

    அப்போது மதுரா சிறையில் இருந்த வசுதேவர் முன்பு மகாவிஷ்ணு தோன்றினார். ‘இந்த ஆண் குழந்தை (கிருஷ்ணர்)யை கோகுலத்தில் உள்ள யசோதா வீட்டில் சேர்த்து விட்டு, அங்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கு கொண்டு வா” என்று உத்தரவிட்டார்.

    இதற்கிடையே கம்சன் தன் சகோதரி தேவகிக்கு 8-வது குழந்தை பிறந்து இருப்பதை அறிந்து சிறைக்கு வந்தான். அங்கு அவனுக்கு தெரியாமல் மாற்றி வைக்கப்பட்டிருந்த பெண் குழந்தையை பார்த்தான்.



    இந்த பெண் குழந்தையா என்னைக் கொல்லப் போகிறது என்று எக்காளமிட்டு சிரித்தான். பிறகு அந்த பெண் குழந்தையை தூக்கிப் பிடித்தப்படி வாளால் வெட்டி கொல்ல முயன்றான்.

    அப்போது அந்த குழந்தை, ‘உன்னை கொல்ல அவதாரம் எடுத்து இருப்பவர் கோகுலத்தில் வளர்ந்து வருகிறார். விரைவில் உன் கதை முடியப் போகிறது’ என்று கூறி விட்டு மறைந்தது. அந்த பெண் குழந்தைதான் பின்னாளில் பவானி அம்மனாக அவதாரம் எடுத்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது.

    மாயமாய் மறைந்த பெண் குழந்தை சொன்னதைக் கேட்டு கம்சன் மேலும் அதிர்ச்சி அடைந்தான். தனது பணியாட்களை அனுப்பி விசாரித்தான். அப்போது கோகுலத்தில் வளரும் கிருஷ்ணர் தான் தேவகி பெற்ற 8-வது குழந்தை என்பது தெரிய வந்தது. இதையடுத்து கம்சன் தனது வீரர்களை அனுப்பி கிருஷ்ணரை கொல்ல முயன்றான். அந்த அசுரர்கள் அனைவரையும் கிருஷ்ணர் வதம் செய்தார்.

    இளவயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனதில் கிருஷ்ணர் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் தெய்வீகக் காதல் புரிந்தார்.
    பிறகு மதுரா சென்று கம்சனை வென்று தன் தாத்தாவான உக்கிர சேனரிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தார். தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அர்ஜூனனுடன் நட்பு கொண்டார்.

    பின்னர் துவாரகை எனும் ஊருக்கு மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார். பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடந்த குருசேத்திரப் போரில் தனது சேனையை கவுரவர்களிடம் கொடுத்து விட்டு தான் அர்ஜூனின் தேரோட்டியாக பணிபுரிந்தார். இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.

    பின்னர் துவாரகையில் தன் மனைவியான ருக்மணியுடன் வாழ்ந்து யாதவர்களின் அரசராக விளங்கினார். 
    ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். அது என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் ஞானகுருவான தட்சிணாமூர்த்தி நமக்கு ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன் னோர்கள் மோட்சம் பெற பித்ரு தர்ப்பணத் துக்குரிய பிண் டம் போடும் சடங்கை ஆல மத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள். எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான்.

    மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவ தில்லை. சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும்.

    ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது. கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான்.

    ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். அடே பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே. என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய். குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான். இதுதான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்.
    கண்ணன் சரியான, தீராத விளையாட்டு பிள்ளை ஆவார். ஆனால் அவரது ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு அர்த்தம், காரணம் இருக்கும்.
    கண்ணன் சரியான, தீராத விளையாட்டு பிள்ளை ஆவார். ஆனால் அவரது ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு அர்த்தம், காரணம் இருக்கும். அந்த வகையில், செய்த லீலைகள் கணக்கில் அடங்காது.

    வெண்ணெய் திருடி உண்டது, தயிரைத் திருடியது, பூதத்தை கொன்றது, கன்று மேய்த்தது, காளிங்க நர்த்தனம் செய்தது, உரலில் கட்டுண்டது, மரங்களை முறித்தது, பிருந்தாவனத்தில் கோபியரோடு ஆடியது, கம்சனை வதம் செய்தது என்று எத்தனையோ லீலைகளை விளையாட்டாகச் செய்து முடித்தார்.

    இதனை கண்ணன் பாட்டில், “தீராத விளையாட்டுப்பிள்ளை! கண்ணன் தெருவில் இருப்போருக்கு ஓயாத தொல்லை!” என்று பாரதியார் நகைச்சுவையாக பாடியிருக்கிறார்.

    பகவத் கீதையில் கிருஷ்ணர் அருளியவற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    யாருக்காகத் துன்பப்படக்கூடாதோ அவர்களுக்காக நீ துன்பப்படுகிறாய். இதிலே ஞானப்பேச்சும் பேசுகிறாய். இறந்தவர்கள்; வாழ்பவர்களாகிய இருவருக்குமே அறிஞர்கள் துயரப்படமாட்டார்கள்.
    *****
    கிழிந்த துணிகளைக் களைந்து எறிந்து விட்டு, மனிதன் புதிய துணிகளை அணிந்து கொள்வதுபோல, ஆத்மா, சிதைந்துபோன உடம்புகளைக் களைந்து விட்டுப் புதிய உடம்பைப் பெற்றுக் கொள்கிறது.
    *****
    உனக்கு வேண்டாதவர், சொல்லக்கூடாத வார்த்தைகளை எல்லாம் சொல்லுவார்கள். உன் வலிமையையும், திறமையையும் பழிப்பார்கள். அதைவிடக் கொடிய துன்பம் ஏது?
    *****
    உன் கடமை தொழில் செய்வது; அதன் லாப நஷ்டங்கள் உன்னைச் சேர்ந்தவையல்ல. என்ன வரப்போகிறதென்று நினைக்காதே; அதற்காகத் தொழில் செய்யாமலும் இராதே.
    *****
    புத்தியுள்ளவன், இங்கு நல்ல செய்கை, தீய செய்கை இரண்டையுமே துறந்து விடுகிறான். செய்வதைத் திறமையாகச் செய்வதே யோகம்.
    *****
    புத்தியுடைய உண்மைப் பேரறிஞர்கள், தங்கள், செய்கை களுக்குக் கிடைக்கும் லாபத்தைத் துறந்து, பிறப்போடு பூட்டப்பட்ட விலங்குகளை நீக்கி ஆனந்தம் என்னும் பதவி அடைகிறார்கள்.
    *****
    மோகம் என்பது ஒருவகைக் குழப்பம். உனது அறிவு அதைக் கடந்து சென்று விடுமானால், அப்போது நீ கேட்டது, கேட்கப்போவது, இரண்டிலும் உனக்கு வேதனை வராது.
    *****
    மனிதன் ஒன்றை உணர்ச்சி பூர்வமாக நினைக்கும்போது அதில் ஒருவகைப் பற்றுதல் உண்டாகிறது; பற்றுதலால் ஆசை உண்டாகிறது. ஆசையால் கோபம் உண்டாகிறது.
    *****
    கோபத்தால் மயக்கம் வருகிறது; மயக்கத் தால் நினைவு தடுமாறுகிறது. நினைவு தடுமாறுவதால் அறிவு கெட்டுப் போகிறது. அறிவு கெடுவதால் அழிந்து போகிறான்.
    *****
    விருப்பு வெறுப்பில்லாமல் புலன்களை மனதால் ஆட்டி வைத்தபடி, தனக்குத் தானே விதி வகுத்துக் கொண்டு நடக்கும் மனிதன் ஆறுதலடைகிறான்.
    *****
    அமைதி வந்துவிட்டால் ஒரு மனிதனுக்கு எல்லாத் துன்பங்களும் ஓடிவிடுகின்றன. மனம் அமைதி அடைந்ததும், எவனுடைய அறிவும் ஒருமுகமாகி விடுகிறது.
    *****
    தன்வரைக்கும் திருப்தியடைகிறவன், தன்வரைக்கும் மகிழ்ச்சியடைகிறவன், எவனுக்கும் தொழில் இல்லை.
    *****
    உலகத்தில் உள்ள பொருட்களால் சுகமும் ஏற்படுகிறது; துக்கமும் ஏற்படுகிறது. காரணம் என்ன? அந்தப் பொருட் களுக்கு ஆரம்பமும் உண்டு, முடிவும் உண்டு. புத்தி உள்ளவன் அழியக்கூடிய விஷயங்களில் நாட்டம் செலுத்த மாட்டான்.
    *****
    எவனொருவன் உடம்பு நன்றாக இருக்கும் போதே, இந்தப் பிறப்பிலேயே, காமக் குரோதங்களால் உண்டாகும் வேகத்தைத் தடுக்கும் சக்தி உள்ளவனோ அவனுக்குப் பெயர்தான் யோகி. அவன்தான் நிம்மதியடைந்த மனிதன்.
    *****
    களங்கங்களை நீக்கியவர்கள்; சந்தேகத்தை அறவே ஒழித்தவர்கள்; மனத்தை முழுக்க முழுக்கக்கட்டுப்படுத்தியவர்கள்; முடிந்த அளவு எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்வதிலேயே நாட்டம் கொண்டவர்கள் அவர்கள் மட்டுமே பிரம்மானந்தத்தை அடைகிறார்கள்.
    *****
    எவனால் மனத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையோ, அவனுக்கு எதுவுமே கிடைக்காது. எவன் மனத்தை ஒழுங்குப்படுத்தி ஜாக்கிரதையாக முயற்சி செய்கிறானோ, அவனுக்கு எல்லா யோகமும் கிட்டும்.
    *****
    அர்ஜுனா! பிரம்ம லோகத்திற்குக்கூட அழிவிருக்கிறது. ஆகையால், அங்கே செல்கிறவர்கள் கூட, மறுபிறவி எடுக்க வேண்டிவரும். ஆனால் என்னை அடைந்துவிட்டாலோ மறுபிறவியே கிடையாது.
    *****
    அங்கிங்கெனாதபடி எங்கும் என்னைக் காண்பவன், எல்லாமே என்னிடம் இருப்பதைக் காண்பவன் எவனோ அவன் கண்களுக்கு நான் காட்சி தருவேன். அது மட்டுமல்ல; அவனை நானும் கண்டு கொள்வேன்.
    *****
    சாப்பிடுவதில் ஒரு அளவு; நடமாட்டத்தில் ஒரு அளவு; காரியங்களில் ஒரு அளவு; தூக்கத்தில் ஒரு அளவு; விழித்திருப்பதில் ஒரு அளவு - இதுவே ஒருவகை யோகம். இதுவே துன்பம் இல்லாமலிருக்க வழி.
    *****
    ஆத்மாவுக்கு ஞானம் வந்துவிட்டால், அஞ்ஞானம் அழிந்துவிடும். அந்த ஞானம் சூரியனைப்போல் அந்தப் பொருளைப் பிரகாசமாகக் காட்டுகிறது.
    *****
    பரம்பொருள் என்னும் அந்தப் பரமாத்மாவின் தத்துவத்தில் சகலத்தையும் காணிக்கை வைத்து, தன் சொந்த அறிவாலேயே களங்கங்களைத் தீர்த்துக் கொண்டவர்கள், மறுபிறப்பில்லாத முத்தியை அடைகிறார்கள்.
    *****
    சகல ஞானங்களும் கைவரப் பெற்ற ஒருவன், தனக்குப் பிரியமான ஒன்று கிடைத்துவிட்டால், ஓகோ என்று குதிக்கவும் கூடாது; தான் விரும்பாததை அடைய நேர்ந்தால் அழவும் கூடாது.
    *****
    நல்லன காக்க, தீயன அழிக்க, அறத்தை நிலை நிறுத்த, ஒவ்வொரு யுகத்திலும் நான் வடிவமெடுக்கிறேன்.
    *****
    இது என் தெய்வீகம். என் பிறப்பும், செயலுமே தெய்வீகம். இதனை நன்றாக உணர்ந்தவன் இறந்து போனால், அவனுக்கு மறுபிறப்பு இல்லை. காரணம் அவன் என்னோடு சங்கமமாகி விடுகிறான்.
    *****
    ஆசையை விட்டு, அச்சத்தை விட்டு, கோபத்தை விட்டு, என் நினைவே ஆகி, என்னையே அடைக்கலம் என்று நம்பி, அறிவாலே தவம் செய்து பரிசுத்த மாகி என்னுடைய இயல்புகளை அடைந்தவர்கள் பலர்.
    *****
    எப்போதும் பற்றுதலை விட்டுச் செய்யக் கூடிய தொழில் எதுவோ, அதைச் செய்து கொண்டிரு. பற்றில்லாமல் தொழிலைச் செய்கிறவன் தான், பரம்பொருளை அடைகிறான்.
    *****
    உயர்ந்த மனிதன் எதை எதைச் செய்கிறானோ அதையே மற்றவர்கள் பின்பற்றுகிறார்கள். அவன் எதை நியாயப்படுத்துகிறானோ, அதையே மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
    *****
    அர்ஜுனா! புலன்கள் மனத்தால் இழுக்கப்படாமல், மனத்தால் புலன்களைக் கட்டுப்படுத்தி, எவன் கரும யோகம் என்னும் தொழில் நிலையில் ஈடுபடுகிறானோ, அவன் சிறந்தவன்.
    *****
    அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட எண்ணற்ற சந்தேகங்களுக்கு, பகவான் கண்ணன் கூறிய விளக்கங்கள் ‘பகவத் கீதை’ என்ற புனித நூலாக மனித சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கிறது.
    அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட எண்ணற்ற சந்தேகங்களுக்கு, பகவான் கண்ணன் கூறிய விளக்கங்கள் ‘பகவத் கீதை’ என்ற புனித நூலாக மனித சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கிறது. பகவான் அந்த கீதையை உபதேசித்தது பற்றியே ஒரு சந்தேகத்தை எழுப்பினான் அர்ச்சுனன். அவனுக்குள் எழுந்த சந்தேகம் இது தான்.

    “கிருஷ்ணர், மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாக கீதையை அருளியிருக்கிறார். நுட்பமான அரிய பல உண்மைகளை எடுத்துச் சொல்ல கிருஷ்ணர் நம்மை ஏன் தேர்ந்தெடுத்தார்? பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர். ஒரு வேளை, அவர் எதிர்முகாமில் இருப்பதால், அவரைத் தவிர்த்தது நியாயமாக இருக்கலாம்.

    ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே, அவரைவிட கீதையைக் கேட்கப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்? மூத்தவர், தரும நீதிகளை உணர்ந்தவர். அவரை ஏன் கிருஷ்ணர் புறக்கணித்தார்? அண்ணன் பீமன் வெறும் பலசாலி மட்டுமல்ல; மிகச் சிறந்த பக்திமானும் கூட. பூஜை நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர். இப்படி சிறந்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு, என்னைப் போய் கீதை போன்ற புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக எப்படி கிருஷ்ணர் தேர்ந்தெடுத்தார்?” என்பதுதான் அர்ச்சுனன் மனதில் உதித்த சந்தேகம்.

    தன் சந்தேகத்தை கிருஷ்ணரிடமே சென்று கேட்டான், அர்ச்சுனன். அதற்கு கிருஷ்ணன் பதிலளிக்கத் தொடங்கினார்.

    “அர்ச்சுனா! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என்னிடம் தோழமை கொண்டவன் என்பதால் நான் உனக்கு கீதையை உபதேசிக்கவில்லை. நீ நினைப் பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்தும் உணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருத முடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது; கடைப்பிடித்தால்தான் சிறப்பு. கவுரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசீர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம். ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது. எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை.

    தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான். ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. அவர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை. பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.

    ஆனால் நீ, அவர்களைப் போன்றவனல்ல, மாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட, நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு. இப்போதும் கூட, உன்னைவிட வயதிலும், அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து, அவர்களுக்காக என்னிடம் வாதிட்டுக் கொண்டிருக்கிறாய்.

    களத்திலே நின்றபோதும் ‘உற்றார், உறவினர், மதிப்பிற்குரிய பெரியோர் களையெல்லாம் எப்படிக் கொல்வது? இந்த யுத்தமும் இழப்பும் தேவைதானா?’ என்றெல்லாம் நீ யோசித்தாய். ‘அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும்’ என்று கலங்கினாய். ‘பிச்சை எடுத்து வாழவும் நான் தயார்’ என்று என்னிடம் கூறினாய். நீ பதவி வெறியனல்ல.

    பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க முன்பு நீ நினைத்திருந்தாய் என்றாலும், களத்தில் நின்றபோது அவர்களை மன்னித்து, ‘போரிட வேண்டாம்’ என்று சொல்லும் உள்ளம் உன்னிடம் இருக்கிறது. ஓரளவு நீதி எது? அநீதி எது? என்று சிந்திக்கிறவனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய். இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள். நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு.

    நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல; உன்னிடம் இருந்த தனிச் சிறப்புதான் காரணம்” என்றார் கிருஷ்ணன்.

    அர்ச்சுனன் அப்போதும்கூட அகந்தை எதுவுமற்றவனாய், அடக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரை நோக்கி வணங்கி நின்றான். 
    கிருஷ்ண ஜெயந்தியன்று மட்டும் இருக்காமல் ஒவ்வொரு மாதமும் வரும் பெருமாளுக்குரிய ஏகாதசி திதியில் தொடர்ந்து கிருஷ்ணனை நினைத்து விரதம் இருந்தால் குழந்தை வரம் நிச்சயமாக பலன் கிடைக்கும்.

    கிருஷ்ண மந்திரம் கூறுவது, கிருஷ்ண நாமம் கூறுவது கலியுகத்தில் புண்ணியம் தரக்கூடிய செயல்களாகும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குருவாயூர் கிருஷ்ணனை வணங்கலாம். கிருஷ்ண ஜெயந்தியன்று விரதம் இருக்கலாம். கிருஷ்ண ஜெயந்தியன்று மட்டும் இருக்காமல் ஒவ்வொரு மாதமும் வரும் பெருமாளுக்குரிய ஏகாதசி திதியில் தொடர்ந்து கிருஷ்ணனை நினைத்து விரதம் இருந்தால் நிச்சயமாக பலன் கிடைக்கும்.

    திருமணமாகி நீண்ட காலமாக குழந்தை இல்லாதவர்கள், கிருஷ்ண ஜெயந்தி அன்று காலையில் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். கிருஷ்ணர் பாதத்தை வீடு முழுவதும் மாக்கோலமாக வரைந்து, பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். கிருஷ்ணரின் வாழ்க்கையை விவரிக்கும் பாகவதம் என்ற நூலின், பத்தாவது அத்தியாயத்தை படிக்க வேண்டும்.

    நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களையும் பாடலாம். கண்ணனுக்குப் படைத்த நைவேத்யத்தை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இதனால் சிறுவரல்& சிறுயர்களின் மனம் குளிரும். அந்த குளர்ந்த வாழ்த்து உங்கள் வயிற்றில் புத்திரபாக்கியத்தை சுமக்கும் பேற்றைத் தரும். இரவில் கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபட வேண்டும். இதன் மூலம் விரைவில் வீட்டில் மழலைக் குரல் கேட்கும்.

    விரதம் இருப்பது எப்படி?

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் தம்பதி சகிதமாகவே விரதம் இருக்க வேண்டும். பகலில் விரதம் இருக்க வேண்டும். இரவில் ஸ்ரீகிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும். மறுநாள் கிருஷ்ணருக்கு மீண்டும் பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தி அன்னதானம் செய்ய வேண்டும். அதன்பிறகு விரதத்தை பூர்த்தி செய்வது மிகவும் சிறந்தது.
    கிருஷ்ண பக்தி நமக்கு அளவற்ற ஆனந்தத்தை வாரி வழங்கும். நாளை கிருஷ்ண ஜெயந்தி பூஜையை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    கிருஷ்ணர் நடு இரவில் அவதரித்ததால், இவருக்கான பூஜையை நடு இரவில் செய்வது நல்லது. என்றாலும் காலம் மற்றும் நேரம் கருதி பலரும் இரவு வேளையிலேயே பூஜையை முடித்து விடுவதுண்டு. வீடு முழுக்கக் கழுவி சுத்தம் செய்து விட்டு, வாசல் படியில் இருந்து பூஜையறை வரை கிருஷ்ணரின் பிஞ்சு பாதங்களை மாக்கோலத்தால் வரைய வேண்டும்.

    அதாவது, கிருஷ்ணனே தன் பிஞ்சுப் பாதங்களை வைத்து நடந்து, நம் இல்லத்து பூஜை அறைக்கு வருவதாக ஐதீகம். பூஜை அறையில் ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் அல்லது படம் ஏதேனும் ஒன்றை வைத்து பொட்டு இட்டு, மாலை அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும். விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குத் தேவையான மங்களப் பொருட்களான தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம், பூ போன்ற வற்றையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பூஜைப் புத்தகத்தை வைத்துக் கொண்டு ஸ்ரீகிருஷ்ணருக்கு சொல்லப்பட்டிருக்கும் அஷ்டோத்திர (108) மந்திரங்களை உளமாரச் சொல்லுங்கள். ஒவ்வொரு மந்திரத்துக்கும் உதிரி பூக்களை ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் மேல் அர்ச்சிக்க வேண்டும். மந்திரம் சொல்ல நமக்குத் தெரியவில்லை, நேரம் இல்லை என்றாலும் கவலை வேண்டாம். ‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’ என்ற நாமத்தைச் சொல்லி வழிபட்டாலும் சரிதான். பூஜை முடிந்த பின் தூபம், தீபம் காண்பிக்க வேண்டும்.

    ஸ்ரீகிருஷ்ணர் பலகாரப் பிரியர். எனவே பல ஆகாரங்களை அவருக்கு வைத்துப் படைத்து விட்டு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு விநியோகிக்க வேண்டும்,. அதன் பிறகே நாமும் பிரசாதம் உட்கொள்ள வேண்டும். வெல்லச் சீடை, உப்பு சீடை, முறுக்கு, தேன்குழல், லட்டு, திரட்டுப்பால், அதிரசம், அப்பம், வடை, பாயசம், அவல், நாட்டுச் சர்க்கரை, வெண்ணெய், தயிர் போன்றவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.

    பழ வகைகளில் நாவல், கொய்யா, வாழை, விளாம்பழம் போன்றவற்றை நிவேதிக்கலாம். வீடுகளில் பாகவதம், கீத கோவிந்தம், ஸ்ரீமந் நாராயணீயம், க்ருஷ்ண கர்ணாம்ருதம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவற்றை வாசிக்கலாம். பூஜை முடிந்த பின் வீட்டில் உள்ளவர்கள் தங்களுக்குத் தெரிந்த ஸ்ரீகிருஷ்ணர் பாடல்களைப் பாடலாம்.

    இரவில் கண் விழித்து கிருஷ்ணரின் கதைகளைக் கேட்கலாம். இயன்ற அளவில் அன்னதானம் செய்யலாம். கிருஷ்ண பக்தி நமக்கு அளவற்ற ஆனந்தத்தை வாரி வழங்கும். கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம், விவசாயம் போன்ற அனைத்துப் பிரார்த்தனைகளுக்கும் இந்த தினத்தில் விரதம் இருப்பது உரிய பலனைத் தரும்.

    கிருஷ்ண ஜெயந்தி விழா உலகம் எங்கும் நாளை கொண்டாடப்பட உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு உகந்த வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    பூஜைக்குரியவை

    பூஜைக்குரிய இலை : துளசி இலை
    பூஜைக்குரிய மலர் :- மல்லிகை.
    நிவேதனப் பொருட்கள் :--பால், வெண்ணை,
    தயிர், அவல், சீடை, முறுக்கு முதலியன.
    படிக்க வேண்டிய நூல் :- பகவத்கீதை, கிருஷ்ண அஷ்டோத்ர
    நாமாவளி, கிருஷ்ணாஷ்டக ஸ்தோத்திரம்,
    ஆண்டாள் அருளிய அஷ்டோத்ர நாமாவளி,
    ஸ்ரீமத் பாகவதம், மகாபாரதக் கதைகள்.

    வழுக்குமரம் ஏறுதல்

    கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது கிராமங்களில், கோவில்களில் ஒரு மரத்தை நட்டு அதில் எண்ணெயைத் தடவிவிடுவார்கள். அதன் உச்சியில் பரிசுப் பொருள்களாக பழங்கள், பணம் ஆகியவற்றைக் கட்டிவிடுவார்கள்.

    வழுக்குமரத்தின் மீதேறி உச்சியில் இருக்கும் பரிசுப் பொருளை எடுக்க வேண்டும். இளைஞர்கள் வழுக்கு மரத்தில் ஏறி பரிசுப்பொருட்களைப் பிடிக்க முயலும்போது தண்ணீரை அவர்கள்மீது ஊற்றுவார்கள்.

    எண்ணெய் பூசப்பட்ட மரம் வழுக்கும். தண்ணீரை ஊற்றும்போது மேலும் வழுக்கும். யாராவது ஒருவர் கஷ்டப்பட்டு வழுக்குமரத்தில் ஏறி பரிசுப்பொருளை அடைந்துவிடுவார்கள்.

    உறியடி :

    உறி ஒன்றில் சிறு மண் சட்டி ஒன்றைக் கட்டி வைத்து கயிற்றில் தொங்கவிட்டிருப்பார்கள். கம்பால், உறியில் உள்ள சட்டியைத் தட்டி உடைக்க வேண்டும். அவ்வாறு உடைக்க முயற்சி செய்யும்போது கயிறை மேலும் கீழும் ராட்டினம் போன்ற கருவி மூலம் இழுப்பார்கள்.

    அப்போது பெண்கள், உறியை அடிக்க முயற்சி செய்யும் இளைஞர்களின் மீது தண்ணீரை ஊற்றித் தடை செய்ய முயற்சிப்பார்கள். சிரமப்பட்டு யாராவது ஒருவர், கம்பால் உறியிலுள்ள சட்டியை உடைத்துவிடுவார். அவருக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். விளையாட்டாகவும் பொழுது போக்காகவும் நடைபெறும். இது, கோகுலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் வெண்ணெய் திருடிய நிகழ்ச்சியை நினைவு கூறவே நடத்தப்படுகிறது.

    சிறுவர்களுக்கு கிடைக்கும் நன்மை :


    கிருஷ்ண ஜெயந்தி பூஜை மற்றும் வழிபாடுகளில் சிறுவர், சிறுமிகளை மறக்காமல் ஈடுபடுத்த வேண்டும். அவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவ-மாணவி களுக்கு பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்தசாலித்தனம் கூடும். அதோடு பாடங்களை எளிமையாகவும், சுருக்கமாகவும் புரிந்து கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.

    திருப்பாதத்தின் மகிமை :


    கிருஷ்ணஜெயந்தியன்று குழந்தை பாத சுவட்டை மாக்கோலமாக வரைவது நாடெங்கும் எல்லா இடங்களிலும் மரபுவழி பழக்கமாக உள்ளது. இப்படி பாதம் வரைவதில் சைவ- வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.

    குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு எட்டு (8) போன்ற வடிவுடன் இருக்கும். அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும். அதாவது ஓம் ‘நமோ நாராயணா’ என்ற எட்டு எழுத்து மந்திரமும் ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரமும் ஒருங்கிணைந்து இருப்பதை திருப்பாதம் பிரதிபலிக்கிறது.

    கிருஷ்ணர் சிறுவனாக இருந்தபோது வெண்ணை திருடி தின்றார். அப்போது வெண்ணை சிதறி அவர் உடம்பு மற்றும் கால்களில் விழுந்தது. அதோடு கிருஷ்ணர் நடந்ததால் கிருஷ்ணர் கால் தடம் பதிந்தது. அதை நினைவுப்படுத்தும் விதமாக கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று மாவால் கால் சுவடு பதிக்கப்படுகிறது.

    கிருஷ்ணர் வேஷம் :

    சில ஊர்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று உற்சவர் புறப்பாட்டின்போது, முன்னால் ஆண்களும் பெண்களும் கோலாட்டம் ஆடியபடி, கிருஷ்ண கானங்களை இசைத்தபடி செல்வர். கரகாட்டம், சிலம்பாட்டம், தீப்பந்த சாகசங்களும் நடைபெறும். ஊரைச் சுற்றிவந்து உற்சவரைத் திரும்பவும் ஆலயத்துக்குள் எழுந்தருளச் செய்வார்கள்.

    பஜகோவிந்தம் :

    கிருஷ்ணரை வழிபடும் போது மறக்காமல் பஜகோவிந்தம் பாட வேண்டும். ஆதி சங்கரர் சென்ற இடங்களில் எல்லாம் ‘பஜகோவிந்தம்’ பாடுங்கள் என்பதை வலியுறுத்தி கூறினார். பஜகோவிந்தம் பாடினால் மரண பயம் நீங்கும் என்பது ஐதீகமாகும்.
    கிருஷ்ணர் சிறுவயதில் செய்த லீலைகள் எண்ணிலடங்காதவை. அவற்றில் ஒன்று ஏழை வியாபாரியான, ஒரு பழம் விற்கும் பெண்ணுக்கு அனுக்கிரகம் செய்தது.
    கிருஷ்ணர் சிறுவயதில் செய்த லீலைகள் எண்ணிலடங்காதவை. அவற்றில் ஒன்று ஏழை வியாபாரியான, ஒரு பழம் விற்கும் பெண்ணுக்கு அனுக்கிரகம் செய்தது. ஒரு முறை பழம் வியாபாரம் செய்யும் வயது முதிர்ந்த பெண் ஒருத்தி, நந்தகோபரின் இல்லத்திற்கு முன்பாக நின்று கொண்டு, ‘பழம் வேண்டுமா? பழம் வாங்குறீங்களா?’ என்று கூவிக்கொண்டிருந்தாள்.

    அந்த சத்தத்தைக் கேட்ட கிருஷ்ணர், வீட்டில் இருந்து தன் சின்னஞ் சிறிய கைக்குள் அடங்கும் அளவிலான தானியத்தை எடுத்துக் கொண்டு பழக்காரியை நோக்கி தளிர் ஓட்டம் ஓடினார். தன் தாயார் யசோதா, தெருவுக்கு வியாபாரம் செய்ய வருபவர்களிடம் இதேபோல் தானியங்களை கொடுத்து விட்டு, தனக்கு தேவையான பொருட்களை வாங்குவதை பல முறை கிருஷ்ணர் பார்த்திருக்கிறார். அதனால் தான் தானும் கொஞ்சம் தானியத்தை எடுத்துக் கொண்டு அந்த பழக்காரியிடம் வந்தார்.

    சிறிதளவான தானியத்தை மூதாட்டியிடம் கொடுத்தார். அப்போது அந்தச் சிறிய கையில் இருந்து தானியங்கள் பெருமளவு தரையில் கொட்டின. பழம் வியாபாரம் செய்யும் மூதாட்டி, கிருஷ்ணனின் அந்த கொள்ளை கொள்ளும் அழகில் மயங்கிப் போனாள். கண்ணன் கொடுத்த தானியத்திற்கு பழத்தை கொடுக்க முடியாது என்றாலும், கண்ணனின் கையால் எவ்வளவு பழங்களை பிடிக்க முடியுமோ, அவ்வளவு பழங்களை அந்த மூதாட்டிக் கொடுத்தாள். ஒன்றிரண்டு தரையில் உருண்டு ஓடினாலும், குழந்தைக்கே உரிய ஆசையைப் போல் அனைத்து பழங்களையும் வாங்க ஆவல் கொண்டார் கிருஷ்ண பரமாத்மா.

    பழங்களை வாங்கிக்கொண்டு, இல்லத்திற்குள் ஓடி மறைந்தார் கிருஷ்ணர். மூதாட்டி மகிழ்ச்சியில் திளைத்தாள். பின்னர் புறப்படத் தயாரானவள், தன் பழக் கூடையை தூக்க முயன்றபோது, அதில் விலைமதிப்பற்ற ரத்தினங்களும், மாணிக்கங்களும் இருப்பதைக் கண்டு வியந்தாள்.

    உண்மையான அன்பும், பாசமும் நிறைந்த உள்ளத்திற்கு, இறைவன் கொடுத்த விலை மதிப்பற்ற பரிசு அது என்பதை உணர்ந்துகொள்ள அந்த மூதாட்டிக்கு வெகுநேரம் ஆனது. 
    கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி. கிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்களை இன்று பார்க்கலாம்.
    1. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும்.

    2. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும்.

    3. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.

    4. சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    5. கிருஷ்ணர் தமிழ்நாட்டில் கண்ணன் என்றும் வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.

    6. கிருஷ்ணருக்கு கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களும் உண்டு.

    7. கிருஷ்ண இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள்.

    8. கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால்திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.

    9. கிருஷ்ண ஜெயந்தியன்று குழந் தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ் ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.

    10. கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்றழைக்கிறார்கள்.

    11. கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ராசலீலா என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.

    12. கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது.

    13. கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தா வனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.

    14. கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.

    15. கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற கீதகோவிந்தம், ஸ்ரீமந் நாராயணீயம், கிருஷ்ண கர்ணாம்ருதம் ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும்.



    16. கிருஷ்ண ஜெயந்தியன்று சிறுவர் - சிறுமிகளை கண்ணன், ராதைபோல வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    17.கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்மசீலராக வாழ்வார்கள். அரசியல் வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

    18. பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.

    19. விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும்.

    20. தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.

    21. கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.

    22. கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.

    23. பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அந்த பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.
    24. கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    25. ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால் கிருஷ்ணரின் அருள் பார்வை நம் மீது படும்.

    26. அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியர், மருத்துவ தொழிலை தொடங்குபவர்கள் கிருஷ்ணனை வழிபட்ட பிறகே தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.

    27. அலெக்சாண்டருடன் போரிட்டு வென்ற போரஸ் தனது படைகளுக்கு முன்பு கிருஷ்ணனின் உருவத்தை நிறுத்தியிருந்தார். போரில் வெற்றி பெற கிருஷ்ணனே காரணம் என கருதினார்.

    28. யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ் தானிஸ் தனது வரலாற்று குறிப்புகளில் எழுதியுள்ளார்.

    29. சிலப்பதி காரத்தில் கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் என்றும், மனைவி நப்பின்னை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நப்பின்னை யாதவர் குலத்தைச் சேர்ந்தவள் என்றும், ராதையை கிருஷ்ணனின் காதலி என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ராதை மற்றும் ருக்மணியை விட நப்பின்னை மேன்மையானவள் என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. நப்பின்னையை ஆழ்வார்களும் பாராட்டி யுள்ளனர்.

    30. ஒரு சமயம் அசுரர்கள் சூரியனை தடுத்து மறைத்து விட்டால் பூமி இருளடைந்து தவித்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் செய்ததாக புறநானூறு குறிப்பிடுகிறது.
    முன்னொரு சமயம் குருவாயூரப்பனின் தீவிர பக்தையாக ஒரு மூதாட்டி இருந்தாள். அந்த மூதாட்டிக்கு குவாயூரப்பன் உதவிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    முன்னொரு சமயம் குருவாயூரப்பனின் தீவிர பக்தையாக ஒரு மூதாட்டி இருந்தாள். அவள் அனுதினமும் காலையும், மாலையும் குருவாயூரப்பன் சன்னிதிக்கு வந்து, கண்ணனை மனநிறைவோடு வழிபட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தாள்.

    ஒரு நாள் அந்த மூதாட்டி, இரவு நேர தரிசனம் முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று பெருங்காற்றுடன் கனமழை பெய்தது. அந்நாட்களில் சாலை விளக்குகள் கிடையாது என்பதால், எங்கும் இருள் சூழ்ந்திருந்தது.

    ‘இந்த பெருமழையில் எப்படி வீட்டிற்குச் செல்வது?’ என்று கலங்கிய மூதாட்டி, குருவாயூரப்பனின் நாமங்களைச் சொல்லியபடியே தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டிருந்தாள்.

    அப்போது ஒரு சிறுவன் அங்கு வந்து, ‘பாட்டி! கவலைப்படாதீர்கள். உங்களை நான் வீட்டில் கொண்டு விடுகிறேன்’ என்று அழைத்துச் சென்றான்.

    பேசிக் கொண்டே பாட்டியின் வீட்டை அடைந்தார்கள். மழையில் இருவரும் முழுவதுமாக நனைந்து விட்டனர்.

    மூதாட்டி ‘நீ செய்திருக்கும் உதவிக்கு, உனக்கு ஏதாவது நான் தர வேண்டும். என்ன வேண்டும்? கேள்’ என்றாள்.

    சிறுவனோ, ‘மழையில் என் துணி நனைந்துவிட்டது. உங்களின் புடவையில் இருந்து ஒரு பகுதியைத் தாருங்கள்’ என்றான்.

    மூதாட்டி தன்னிடம் இருந்த சிவப்பு நிறப் புடவையில் கொஞ்சத்தைக் கிழித்து சிறுவனிடம் கொடுத்தாள்.

    மறுநாள் அதிகாலையில் குருவாயூரப்பன் சன்னிதியைத் திறந்த அர்ச்சகருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்.. முன்தினம் இரவு பட்டுபீதாம்பரம் உடுத்தி நன்றாக அலங்காரம் செய்திருந்த, கண்ணனின் திருமேனியில், சிவப்பு நிற கோவணம் மட்டுமே இருந்தது. ஆனாலும் அந்த திவ்ய காட்சி அனைவரையும் மயக்கும் விதமாக இருந்தது.

    காலையில் வழக்கம்போல் தரிசனத்திற்காக வந்திருந்த மூதாட்டியும் இந்தக் காட்சியைக் கண்டு அகமகிழ்ந்து போனாள். முன்தினம் இரவு நடந்ததைச் சொன்னதுடன், தான் கிழித்துக் கொடுத்த சிவப்பு நிற புடவையையும் காண்பித்தாள். அவள் கிழித்துக் கொடுத்த ஒரு பகுதியே, குருவாயூரப்பன் இடையில் கோவணமாக காட்சியளித்தது.

    அன்று முதல் குருவாயூரப்பனுக்கு இரவில் ‘சிவப்புக் கௌபீனம்’ சாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. 
    ×