search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98360"

    கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். நம்முடைய அனைத்து பாவங்களும் நீங்கும்.
    பெருமாளைக் கண்டதுமே மனமும், வாயும் “கோவிந்தா” என்றுதான் சொல்லும். ‘கோவிந்தா என்று சொன்னால் போனது வராது என்று அர்த்தமாகும். இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், பணம் கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது.

    கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை கோ இந்தா என்றும் பிரிக்கலாம். அப்போது கோ என்றால் பசு இந்தா என்றால் வாங்கிக்கொள் என்று பொருள் வரும். கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம்.

    எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் நமக்கு பூரணமாகக் கிடைக்கும்.
    கோவிந்தா என்ற சொல்லுக்கு ‘பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்’, ‘பூமியை தாங்குபவன்’ என்றும் பொருளாகும். எனவே தான் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்கிறார்கள். வழிபாடு செய்யும் போது, கோவிந்தா என்று அழைத்து வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

    “பார்வதி பதியே” என்று ஒரு பக்தர் சொன்னால், மற்ற பக்தர்கள் அவளது துணைவரான சிவபெருமானை குறிக்கும் வகையில் ‘ஹர ஹர மகாதேவ’ என்று சொல்வது வழக்கம். ஆனால், கோவிந்தநாமத்தைச் சொல்லும்போது முதலில் சொல்பவர் ‘கோவிந்தா’ என்று சொன்னால் கேட்பவர்களும் “கோவிந்தா கோவிந்தா” என்று தான் சொல்வார்கள்.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்பவர்கள் நீண்ட வரிசையில் நிற்கும்போது இந்த கோவிந்தா நாம கோஷத்தை கேட்டிருக்கலாம். ‘கோவிந்தா’ என்றால் ‘எல்லாக் காலத்திலும்’, ‘எல்லா இடத்திலும்’, ‘எங்கும்’ என்பது பொருள். காணும் இடத்தில் எல்லாம் அந்த கோவிந்தனே இருக்கிறான் என்று அர்த்தமாகும். இந்த கோவிந்தா பெயர் எப்போது உருவானது தெரியுமா? பசுக்கூட்டத்தோடு பாலகிருஷ்ணனாக திரிந்த வேளையில் ‘கோவிந்தன்’ என்ற பெயர் உருவானது.
    தன்னைத் துதிப்பவர்களை கிருஷ்ணர் கைவிட மாட்டார் என்பதை இந்த உணர்த்தும் ஆன்மிக நிகழ்ச்சியை விரிவாக பார்க்கலாம்.
    ஆயர்பாடியில் மழை வேண்டி ஆண்டு தோறும் இந்திரனுக்கு விழா எடுப்பது வழக்கம். இதை அறிந்த கிருஷ்ணர் இந்திரனுக்கு விழா எடுப்பதைத் தடுத்து விட்டார். அவர்களுக்கு வாழ்வளிக்கும் பசுக்களுக்கும் மலைகளுக்கும் விழா எடுக்க வேண்டியது அவசியம் என்றார்.

    எனவே, யாதவர்கள் கண்ணனின் ஆலோசனைப்படி கோவர்த்தனகிரி யாகத்தைத் தொடங்கினர். தூப தீபம் ஏற்றி ஆராதனை செய்து கோவர்த்தனகிரியைப் பூஜித்தார்கள்.

    பசுக்களையும் பூஜித்தனர். பின்பு, நன்றாக அலங்கரிக்கப்பட்ட பசுக்களும் கன்றுகளும் அந்த மலையை வலம் வந்தன. இவ்வாறு மலைக்கு ஆராதனை செய்தபோது, கிருஷ்ணன் ஒரு தேவரூபமாக அந்த கோவர்த்தன மலையின் சிகரத்தில் வீற்றிருந்து, யாதவர்கள் அருளிய நைவேத்தியங்களை எல்லாம் ஏற்று அமுது செய்து அருளினார். மலைச் சிகரத்தையும் அர்ச்சித்துப் பணிந்த பிறகு, யாதவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆயர்பாடிக்கு திரும்பினர்.

    இவ்வாறு கிருஷ்ணர் இந்திரனுக்குச் செய்ய வேண்டிய யாகத்தைத் தடுத்து அவனை அவமானப்படுத்தியதால், இந்திரன் கோபம் கொண்டு சர்வர்த்தகம் என்ற மேகக் கூட்டங்களை அழைத்து, ‘கிருஷ்ணன் வசித்து வரும் இடைச்சேரியில் பெருமழை பெய்வித்து, மாடுகளை எல்லாம் அழித்து விடுங்கள்’ என்று கட்டளையிட்டான்.

    இந்திரனின் கட்டளைக்கிணங்க மேகங்கள் யாவும் ஆயர்பாடி முற்றிலும் நாசமாகும்படி பெருங்காற்றுடன் பெருமழையையும் பெய்வித்தன. இதனால் பசுக்களும் கன்றுகளும் துன்பப்பட்டன. காற்றினாலும் கடுங்குளிரினாலும் நடுங்கின.

    பெருமழை காரணமாக கோகுலத்தில் உள்ள அனைவரும் துன்பப்படுவதைக் கண்ட ஸ்ரீகிருஷ்ணர், ‘இந்த நிலைக்கு இந்திரனே காரணம். ஆதலால், கோகுலத்தைக் காப்பாற்றுவது அவசியம்‘ என்று மலையை பெயர்த்து எடுத்து, ஒரு குடையைப் போல் தாங்கிப் பிடித்தார். இடையர் அனைவருக்கும் பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் பாதுகாப்பு அளித்தார். அவ்வாறு ஏழு நாட்கள் கோவர்த்தன கிரியைத் தாங்கிப் பிடித்து ஆயர்களைக் காத்தார் பகவான்.

    இந்திரன் தன் முயற்சி வீணானதைக் கண்டு மேகங்களின் செயல்களை நிறுத்தினான். மழை நின்றது. ஆயர்கள் அனைவரும் மகிழ்வுடன் தங்களுடைய இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றனர்.

    தேவேந்திரன் தன் தவறை உணர்ந்தான். மகா விஷ்ணுவே கிருஷ்ணராக அவதரித்திருக்கிறார் என்பதை அறிந்தவன் தன் செயலுக்காக கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கோரினான். தன்னைத் துதிப்பவர்களை கிருஷ்ணர் கைவிட மாட்டார் என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் உணரலாம்.
    பாகவதத்தில் இடம் பெறும் பல சுவையான நிகழ்ச்சிகளில் பாமாவுக்கும் ருக்மணிக்கும் இடையில் நடக்கும் போட்டிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.
    பாகவதத்தில் இடம் பெறும் பல சுவையான நிகழ்ச்சிகளில் பாமாவுக்கும் ருக்மணிக்கும் இடையில் நடக்கும் போட்டிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ருக்மணி போட்டிக்குப் போவதில்லை. பாமாதான் தொடங்கி வைப்பாள். ஆனால் அதன் உச்ச கட்டம் ருக்மணியின் பெருமையை விளக்குவதாகவே அமையும்.

    அப்படி நடந்த நிகழ்ச்சி களில் பாரிஜாத மலரால் ஏற்பட்ட விவகார மும் ஒன்றாகும். ஒரு முறை கண்ணன் நரகாசுரனை வென்ற பின் இந்திரலோகத் திற்கு சத்யபாமாவுடன் சென்றான். இந்திரன் அவருக்குக் காணிக்கையாக பாரிஜாத மலர் மாலையை அணிவித்தான். ஆனால் சத்யபாமாவைப் பொருட்படுத் தவில்லை.

    அங்கிருந்து வந்த கண்ணன் அந்த பாரிஜாத மலர் மாலையை ருக்மணிக்கு அன்பளிப்பாகத் தந்தான். நாரதர் அதைக் கண்டதும் கலகத்திற்கு ஒரு காரணம் கிடைத்ததென்று பாமாவிடம் வந்து, “நரகாசுரவதம் நடப்பதற்காக நீதானே கண்ணனுக்கு சாரதியாகச் சென்றாய். அதற்குப் பரிசாகத்தானே கண்ணனுக்கு இந்திரன் எப்போதும் வாடாத பாரிஜாத மலர்களால் கட்டப்பட்ட மாலையை அணிவித்தான். நியாயமாக அதைக் கண்ணன் உனக்குத்தானே அணிவித்திருக்க வேண்டும். ஆனால் அதை அப்படியே கொண்டு வந்து ருக்மணியிடம் தந்து விட்டானே. இது நியாயமா? என்று கேட்டார்.

    ஏற்கனவே இந்திரன் தன்னை சரியாக கவுரவிக்க வில்லை என்று கொதித்துக் கொண்டிருந்த பாமாவிற்கு இது மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. கண்ணன் வந்தபோது அவனிடம் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். காரணம் கேட்டபோது இந்திரனின் பாரிஜாத மரம் இங்கு வர வேண்டும். அப்போதுதான் பேசுவேன் என்றாள்.

    உடனே கண்ணன் அந்த மரத்தை சில நாட்கள் தங்களிடம் இருக்க தந்தனுப்ப வேண்டும் என்று இந்திரனுக்கு செய்தி அனுப்பினான். ஆனால் இந்திரனோ, பாரிஜாத மரத்தை தர முடியாது என்று மறுத்து விட்டான். அதனால் கண்ணன் இந்திரன் மீது போர் தொடுத்து வென்று அந்த பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்து பாமாவின் அரண்மனைத் தோட்டத்தில் பதித்து வைத்தார்.

    ஆனால் அந்த மரம் அங்கேயிருந்தாலும் அந்த மலர்கள் ஒவ்வொரு நாளும் ருக்குமணியின் அரண்மனையில் போய் விழுந்தன என்பது வேறு கதை.
    கிருஷ்ணர் இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை ‘கோகுலாஷ்டமி’ என்றும் சொல்வார்கள்.
    மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும்.

    கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா பிரசித்தமாக நடைபெறும்.

    மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.

    சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும், ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    கிருஷ்ணர் இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை ‘கோகுலாஷ்டமி’ என்றும் சொல்வார்கள்.

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.

    கோகுலாஷ்டமியில் குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.

    கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை, ‘ராசலீலா’ என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.

    கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-வது வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.

    கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்ம சிலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

    பெண்கள், கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால், திருமண தடைகள் விலகும்.

    ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா தலத்தில் அருள்புரியும் ‘ஸ்ரீநாத்ஜீ’க்கு என்னென்ன நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை, ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, லட்டு, இனிப்பு பூரிகள், மோர்க்குழம்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள்.

    துவாரகையில் கோவில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு ‘துவாரகீசன்’ என்று பெயர். ஜகத் மந்திர் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில், பிரதான வாசலின் பெயர் சொர்க்க துவாரம். இது எந்த நேரமும் திறந்தே இருக்கும். இதைத்தாண்டி சென்றால் ‘மோட்ச துவாரம்’ வரும். அதையும் தாண்டி சென்றால்தான் கண்ணன் தரிசனம் கிடைக்கும்.

    கண்ணனின் லீலைகளை விளக்கும் `கர்பா’ என்ற நாட்டியம் குஜராத்தில் பிரபலம். இது தமிழ்நாட்டு கும்மி, கோலாட்டம் போல் நடத்தப்படுகிறது. நீராடும் கோபியர்களின் ஆடைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்லுதல், வெண்ணெய் திருடி உண்ணுதல் என்று கண்ணன் புரிந்த லீலைகள், அந்த நாட்டியத்தின் மூலம் அழகாக எடுத்துரைக்கப்படுகின்றன.

    கேரளாவில், ஆலப்புழை அருகேயுள்ள அம்பலம்புழை ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில், கிழக்கு நோக்கி அருள்கிறார் கிருஷ்ணன். இவருக்கு பால் பாயசம் நைவேத்தியம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு ஒரு லிட்டர் பாலில் இரண்டரை கிலோ சீனி கலந்து, பாலை சுண்டக்காய்ச்சி பால் பாயசம் தயாரிக்கின்றனர்.

    குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த தலமான குருவாயூரில் உள்ள உன்னிக் கிருஷ்ணன் விக்கிரகம், ‘பாதாள அஞ்சனம்’ என்னும் அபூர்வ மூலிகை பொருளால் ஆனது.

    வைணவத் திருத்தலங்களில் பெருமாள் சயன கோலத்தில் சேவை சாதிப்பது போல் முக்தி தரும் திருத்தலமாக துவாரகையில் அமைந்துள்ளது கிருஷ்ணன் கோவில். பகவான் கிருஷ்ணர் இங்கு சயனக் கோலத்தில் அருள்புரிகிறார்.

    மதுராவில் தேவகி-வசுதேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தார் கிருஷ்ணர். அவர் பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை. தற்போது அந்த இடத்திற்கு மேல், `கத்ர கேஷப்தேவ்’ என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. 
    ×