search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98381"

    பள்ளிக்கூட வகுப்பறையில் மாணவிக்கு, மாணவன் தாலி கட்டியுள்ளார். இதனை வீடியோ எடுத்து மற்றொரு மாணவன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம்-கேரள எல்லையில் களியக்காவிளை அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் கடந்த 3-ந் தேதி அன்று பிளஸ்-2 மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் சக மாணவிக்கு வகுப்பறையில் தாலி கட்டியுள்ளார். இதை இன்னொரு மாணவன் வீடியோ எடுத்துள்ளார்.

    இந்தநிலையில் அந்த மாணவன் வீடியோவை தன்னுடைய வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் பதிவிட்டுள்ளார். இதனை அந்த பள்ளியில் உள்ள மற்ற மாணவர்கள் பார்த்ததும் வீடியோவை பதிவிறக்கம் செய்து சக மாணவர்களுக்கு உற்சாகமாக அனுப்பியுள்ளனர். இவ்வாறு பள்ளி மாணவன், சக மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது.

    இந்த சம்பவம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். மேலும் இதுகுறித்து பளுகல் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.

    இதற்கிடையே பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவன், மாணவி மற்றும் வாட்ஸ்அப்பில் பரவ விட்ட மாணவன் ஆகிய 3 பேரையும் அழைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அதிரடியாக 3 பேரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

    இதற்கிடையே சம்பவம் தொடர்பாக போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிக்கூடம் திறந்ததால் ஏதாவது வித்தியாசமாக செய்ய நினைத்து சக மாணவிக்கு விளையாட்டாக தாலி கட்டியதாகவும், இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னை விட்டு விடுங்கள், இனிமேல் இதுபோன்றதொரு தவறு நடக்காது என அந்த மாணவன், போலீசாரிடம் கெஞ்சினான்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் இந்த விஷயத்தை இதற்குமேல் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், மாணவர்களிடம் எழுதி வாங்கி விட்டு அனுப்பும்படியும் போலீசாரிடம் கேட்டுக் கொண்டனர். போலீசாரும் மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.



    கொடைக்கானல் மலை கிராமத்தில் 9-ம் வகுப்பு மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகே உள்ள மலை கிராமமான புளியன்கோம்பையில் 9-ம் வகுப்பு படித்து முடித்த மாணவிக்கும் 37 வயதுடைய ஆணுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இது குறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சைல்டு லைன் குழுவினர், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காஞ்சனா, கிராம சேவகர் சந்திரா, குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தைச் சேர்ந்த பிரவீன் ஆகியோர் புளியன்கோம்பை கிராமத்துக்கு சென்றனர்.

    மாணவியின் பெற்றோரிடம் 18 வயதுக்கு குறைந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய கூடாது. அவ்வாறு செய்தால் குற்ற நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என எடுத்துரைத்து அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டனர்.

    18 வயது நிரம்பாமல் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என மாணவியின் பெற்றோர்கள் தெரிவித்தனர். பின்னர் சைல்டு லைன் அமைப்பின் துணை மைய இயக்குனர் ராஜா முகமது தெரிவிக்கையில் சிறுமிக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு 18 வயது வரை சைல்டு லைன் பாதுகாப்பில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளி இடை நிற்றல் குழந்தைகளால்தான் பெரும்பாலும் இளம் வயது திருமணங்கள் நடக்கிறது. இது குறித்து மலைகிராமங்களில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

    தனக்கு விருப்பமான பாடத்தை படிக்க எதிர்ப்பு தெரிவித்த தந்தை மீது மகள் போலீசில் புகார் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் துணை மேலாளராக உள்ளார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு தனுஸ்ரீ, யாமினிஸ்ரீ ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    தனுஸ்ரீ திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வுஎழுதி தேர்ச்சி பெற்று இருந்தார். விஜய பாஸ்கர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் தனியாக வசித்து வருவதாக தெரிகிறது.

    இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற தனுஸ்ரீ இதழியல் அல்லது பி.ஏ. (டிபன்ஸ்) படிக்க முடிவு செய்தார். ஆனால் இதற்கு அவரது தந்தை விஜயபாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்து தனக்கு விருப்பமான மேல்படிப்பை படிக்குமாறு கூறி வந்தார்.

    இதனால் தந்தை-மகள் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சான்றிதழ் வாங்க சரஸ்வதி சென்றபோது ஏற்கனவே அவரது சான்றிதழ்களை தந்தை விஜயபாஸ்கர் வாங்கி சென்றிருப்பது தெரிந்தது.

    மேலும் வீட்டில் இருந்த 10-ம் வகுப்பு சான்றிதழும் மாயமாகி இருந்தன. இதுபற்றி தனுஸ்ரீ தனது தந்தையிடம் கேட்டார். அப்போது விஜய பாஸ்கர் தனக்கு விருப்பமான பி.எஸ்.சி. இயற்பியல் அல்லது வேதியியல் படிக்குமாறு அறிவுறுத்தினார். இல்லையேல் மேல் படிப்பு படிக்க வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

    இதனால் மனவேதனை அடைந்த தனுஸ்ரீ இதுபற்றி வாட்ஸ்-அப் மூலம் போலீசில் புகார் செய்தார். அதில் மேல்படிப்பு படிக்க தனது பள்ளி சான்றிதழை தந்தை தர மறுப்பதாக புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க செவ்வாப்பேட்டை போலீசுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    போலீசார் விஜயபாஸ் கரையும் மாணவி தனுஸ்ரீயையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவியின் விருப்பத்துக்கு ஏற்ப படிக்க வைக்குமாறு விஜய பாஸ்கரிடம் அறிவுரை கூறினர்.
    கர்நாடகத்தில் கல்லூரி மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    தும்கூரு:

    கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம், குனிகல் வட்டம், மாதகோனஹள்ளியை சேர்ந்தவர் கவுசிக் (வயது26), இவர் தனது கிராமத்தின் அருகே உள்ள சிகேபாளையாவைச் சேர்ந்த பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவியை கடத்தி சென்று பெங்களூருவில் உள்ள தனது நண்பரின் அறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஹூலியூர்துர்கா போலீசார் கவுசிக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    சுரண்டையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சுரண்டையில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பாதுகாப்புக்காக சென்ற 2 போலீஸ்காரர்கள் அங்குள்ள மாணவிகளிடம் செல்போன் நம்பரை பெற்று ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக கல்லூரி மாணவிகள் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரிடம் புகார் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் போலீஸ்காரர்களான வெள்ளாளங்குளத்தைச் சேர்ந்த முருகேசன், வீரகேரளம்புதூரைச் சேர்ந்த கண்ணன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த பெண் போலீஸ் சரஸ்வதி ஆகிய 3 பேரையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஆலங்குளம் துணைபோலீஸ் சூப்பிரண்டு சுபாஷினிக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட மாணவிகளிடமும், போலீஸ்காரர்களிடமும் விசாரணை நடத்தினார். மேலும் அவர்களின் செல்போனையும் ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து அவர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமாரிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.

    அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீஸ் காரர்களான முருகேசன், கண்ணன், சரஸ்வதி ஆகிய 3 பேரையும் ‘சஸ்பெண்டு’ செய்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவிட்டார்.

    கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட இந்த சம்பவம் நெல்லை மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தேனி அருகே கோவிலுக்கு சென்ற கல்லூரி மாணவி மாயமானார்.

    தேனி:

    தேனி அருகே சின்னமனூர் ஓடைப்பட்டி சத்யாநகரை சேர்ந்தவர் செல்வம். இவர் தனது மனைவியுடன் கேரள மாநிலம் உடுமஞ்சோலையில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். செல்வத்தின் மகள் ரம்யா ஓடைப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கம்பம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் ரம்யா திரும்பாததால் அவரது தந்தைக்கு தெரிவிக்கப்பட்டது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட வள்ளியூர் ஆசிரியர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் வடக்கு மெயின் ரோட்டில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். மேலும் வெளியூரை சேர்ந்த மாணவ மாணவிகள் அருகில் உள்ள தனியார் தொண்டு நிறுவன விடுதியில் தங்கியிருந்து பள்ளிக்கு வந்து செல்கிறார்கள்.

    இந்த பள்ளியில் நாகர் கோவிலை சேர்ந்த டேவிட் (வயது 52) என்பவர் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வள்ளியூர் லுத்தா நகரில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் ஆசிரியர் டேவிட் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி புகார் தெரிவிக்க பயந்து, ஆசிரியர் டேவிட் செயலை கண்டும் காணாமல் இருந்து வந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர் அந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

    இதுகுறித்து நெல்லை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் தேவ் ஆனந்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் ரகசிய விசாரணை நடத்தினார். விசாரணையில், ஆசிரியர் டேவிட் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து நெல்லை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் சார்பில் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் டேவிட்டை கைது செய்தனர்.

    பின்னர் அவர் வள்ளியூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    சடையம்பாளையம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் சிறுமுகை அடுத்துள்ளது சடையம்பாளையம். இந்த பகுதியில் உள்ள தொட்டபாவியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் சுவேதா (வயது 18). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 7-ந்தேதி வீட்டில் இருந்த சுவேதா குளியல் அறைக்கு சென்றார். அங்கு திடீரென தூக்குப் போட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தங்கை சத்தம்போட்டு அலறினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சுவேதாவை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுவேதா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது சுவேதா செல்போனில் அதிக நேரம் பேசி விளையாடிததால் பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவருவதாக போலீசார் கூறினர்.

    பெருந்துறை அருகே ஆஸ்டலில் தங்கி படித்த கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு மருத்துவகல்லூரியின் நர்சிங் படித்து வரும் மாணவி ஹாஸ்டலில் இருந்து மாயமான சம்பவம் தொடர்பாக முதல்வர் கொடுத்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், காசிபாளையம் பகுதியை சேர்ந்த  சிவராஜ் என்பவரது மகள் உமாதேவி (வயது 20). இவர் பெருந்துறை, சேனடோரியத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் மூன்றாமாண்டு நர்சிங் படித்து வருகிறார்.

    கல்லூரி வளாகத்தில் உள்ள ஹாஸ்டலிலேயே தங்கி படித்து வரும் இவர் நேற்று முன்தினம் காலை திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டிரெயினிங் சென்று விட்டு மதியம் ஹாஸ்டலுக்கு திரும்பி வந்துள்ளார்.

    பின்னர் அங்கிருந்து வார்டன் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் அனுமதி பெறாமல் வெளியே சென்றாராம். அவர் மீண்டும் ஹாஸ்ட லுக்கு வராததால் கல்லூரி முதல்வர் மனோண்மணி பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுகவனம் காணாமல் போன மாணவியை தேடிவருகிறார்.

    கோவையில் விரும்பிய கல்லூரியில் ‘சீட்’ கிடைக்காததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.

    இவரது மகள் தாரணி (வயது 20) பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பே‌ஷன் டெக்னாலஜி படித்துள்ளார்.

    இவர் கொச்சியில் உள்ள ‘நே‌ஷனல் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி’ மேல்படிப்பு படிக்க விரும்பினார். ஆனால் அவருக்கு அந்த கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த தாரணி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த தகவலின் பேரில் பீளமேடு போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பற்றிய விவரங்களை வெளியிட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறிய மதுரை ஐகோர்ட்டு, அந்த மாணவிக்கு ரூ.25 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
    மதுரை:

    பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக, திருச்சியை சேர்ந்த இளமுகில் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    சமூக வலைத்தளங்களால் கல்வி, தகவல்தொடர்பு போன்ற பல்வேறு நன்மைகள் இருந்தும், தீமைகள் அதிக அளவில் உள்ளன. பாலியல் உள்பட பல்வேறு கொடூர குற்றங்கள் தொடர்பான வீடியோ, புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு பரப்பப்படுகிறது.

    பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களையும், அடையாளங்களையும் முதல் தகவல் அறிக்கை மற்றும் கோர்ட்டு ஆவணங்கள், ஊடகங்களில் வெளியிடக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதை மீறினால் இந்திய தண்டனைச் சட்டம் 228ஏ பிரிவின் கீழ் 6 மாதத்தில் இருந்து 2 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கலாம்.

    சமீபத்தில் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் புகார் அளித்த பெண்ணின்(கல்லூரி மாணவி) விவரங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டார்.

    பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், பாலியல் வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு விசாரணை படை அமைக்கவும், பாலியல் வழக்கு விசாரணையில் சுப்ரீம்கோர்ட்டு பிறப்பித்த வழிகாட்டுதல்களை பின்பற்றவும், பொள்ளாச்சி பாலியல் சம்பவ வீடியோ, புகைப்படம், ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் தனது மனுவில் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் என்.செந்தில்குமார், ஏ.கே.மாணிக்கம் ஆகியோர் வாதாடுகையில், “பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடாது என சட்டம் உள்ளது. இதை கடைபிடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டும் உரிய உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆனால் பொள்ளாச்சி விவகாரத்தில் இது முறையாக கடைபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையிலும் கூட பாதிக்கப்பட்டவர் தொடர்பான அடையாளம் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது ஏற்புடையதல்ல” என்று கூறினார்கள்.

    இதையடுத்து நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் நூற்றுக் கும் மேற்பட்ட பெண்கள் பாதிக் கப்பட்டுள்ளது தெரியவருகிறது. துணிச்சலாக முன்வந்து புகார் அளித்த பெண்ணின் தனிப்பட்ட விவரத்தை வெளியிட்டது ஏன்? இனி இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க யார் முன்வருவார்கள்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது மனுதாரர் வக்கீல்கள், “இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ‘பார்’ நாகராஜ் சம்பந்தப்பட்ட வீடியோக்களும் பரவி வருகின்றன. இதை பார்த்த உள்ளூர் மக்கள் அவருடைய பாருக்குள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கினர். இதற்கிடையே பாலியல் விவகாரத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கோவை கலெக்டரிடம் ‘பார்’ நாகராஜ் மனு கொடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன” என்றும் தெரிவித்தனர்.

    அதற்கு நீதிபதிகள், இது எப்படி சாத்தியமாகும்? என்று கேள்வி எழுப்பினர்.

    விசாரணையின் முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஒருவனை நம்பிச் சென்ற பெண்ணை சில விரோதிகள் சூழ்ந்து துன்புறுத்தும் சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த வீடியோவை லட்சக்கணக்கானவர்கள் சமூக வலைத்தளங்களில் பார்த்து உள்ளனர். இந்த வீடியோவை பார்ப்பவர்கள் இதுபோல நடப்பதற்கு தூண்டுவதாக அமையும் என்று மனநல டாக்டர் ஷாலினி தெரிவித்து உள்ளார்.

    எனவே பொள்ளாச்சி சம்பவ வீடியோக்களை பொதுநலன் கருதி சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும். இதற்காக மத்திய அரசையும், இணையதள சேவை வழங்குபவர்கள் சங்கத்தின் செயலாளரையும் எதிர்மனுதாரராக இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து சேர்க்கிறது.

    பாலியல் சம்பவ வீடியோக்கள் அடங்கிய செல்போன்களுடன் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது சகோதரரும் போலீசில் புகார் செய்து, செல்போன்களையும் ஒப்படைத்து உள்ளனர். செல்போன்களில் இருந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவாமல் போலீசார் தடுத்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

    பொள்ளாச்சி சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. அவர்களை மிரட்டி மீண்டும், மீண்டும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.

    அவர்களில் ஒரே ஒரு பெண் மட்டும் தைரியமாக, மனிதாபிமானமற்றவர்களின் அட்டூழியங்கள் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் போலீசில் புகார் செய்து உள்ளார். ஆனால் அவரது பெயர் உள்ளிட்ட தகவல்களை ரகசியமாக வைக்க போலீசார் தவறிவிட்டனர். இந்த வழக்கின் தொடக்கத்திலேயே பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை போலீசார் வெளியிட்டது கண்டிக்கத்தக்கது.

    இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடக்கூடாது என்ற சட்டத்தையும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும், பொள்ளாச்சி விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகள் பின்பற்றவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை வைத்து ஆயிரக்கணக்கான வீடியோக்கள் எடுக்கப்பட்டு உள்ளன. இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய தனிப்பட்டவரின் விவரங்களை போலீசார் வெளிப்படுத்தி உள்ளனர்.

    அதிகாரிகளின் இந்த செயல்பாட்டால் சம்பந்தப்பட்ட பெண்ணின் மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும். எனவே அவரை வெளிமாவட்டத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று மனநல ஆலோசனை வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அவருக்கு இழப்பீடாக ரூ.25 லட்சத்தை வழங்க வேண்டும். அவருடைய பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாக காரணமாக இருந்த போலீஸ் சூப்பிரண்டு மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

    பலாத்கார வழக்குகளை கையாள ஒரு தனி மையத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி அந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுகின்றனவா? என்பதை அடுத்த விசாரணையில் தெளிவுபடுத்த வேண்டும்.

    இணையதளத்தின் நன்மை, தீமைகளை அனைவரும் அறியும் வகையில், குறிப்பாக குழந்தைகள் தெரிந்து கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நம் நாட்டில் நூறு கோடி பேரின் கைகளில் செல்போன்கள் உள்ளன. தினமும் செல்போன் இல்லாமல் சிறிது நேரத்தை கூட நம்மால் கழிக்க முடியாது என்ற நிலையில் உள்ளோம். ஒரு சிலர் செல்போன்களுக்கு அடிமையாகி கிடக்கின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளை மத்திய, மாநில அரசுகள் சினிமா, குறும்படம், துண்டு பிரசுரங்கள் மூலம் எச்சரிப்பதுடன், அனைவருக்கும் விழிப்புணர்வு செய்து தெரியப்படுத்த வேண்டும்.

    அதுமட்டுமல்லாமல் இணையதளம், செல்போனின் நன்மை, தீமைகளை பள்ளி, கல்லூரி பாடங்களிலும் சேர்க்க வேண்டும். பெற்றோரின் அரவணைப்பு இல்லாததன் காரணமாக பெண் குழந்தைகள் பாதை மாறிச் செல்கின்றனர். இதை தவிர்க்க, நாள்தோறும் தங்களது குழந்தைகளிடம் குறிப்பிட்ட நேரத்தை பெற்றோர் செலவிடுவது அவசியம். தேவையான அன்பை செலுத்தினால் குழந்தைகள் பாதை மாறி செல்வது தடுக்கப்படும்.

    பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை திரும்பப்பெற்று, பாதிக்கப்பட்டவரின் தகவல்களை நீக்கி, புதிதாக அரசாணை வெளியிட வேண்டும்.



    இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் இணையத்தளங்களில் இருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வீடியோக்கள், புகைப்படங்களை வைத்திருப்பதும், பகிர்வதும் குற்றம். இதுதொடர்பாக தமிழக அரசு விரிவாக விளம்பரம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

    அத்துடன் இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டின் வரம்புக்கு அப்பாற்பட்டது என்பதால், இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டின் முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுவதாகவும் அப்போது நீதிபதிகள் கூறினார்கள். #PollachiAbuseCase #MaduraiHighCourt
    ஊத்தங்கரை அருகே மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அருகேயுள்ள மேட்டுசூளகரை பகுதியை சேர்ந்தவர் ரஜினி (வயது40). இவர் சந்துக்கடையில் திருட்டுதனமாக மதுவாங்கி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவரது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவளது தோழி அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    நேற்று ரஜினி மகள் வீட்டில் அவளது தோழி பேக்கை வைத்து விட்டு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து தோழி பேக்கை எடுக்க வீட்டிற்கு வந்தார். அப்போது ரஜினி தனது மகள் தோழியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். உடனே அந்த மாணவி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அவர்கள் வருவதற்குள் அங்கிருந்து ரஜினி தப்பி ஓடி விட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கல்லாவி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×