search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98381"

    அரூர் அருகே பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிராம மக்களுடன் கலெக்டர் மலர்விழி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். #DharmapuriGirlStudent #GirlMolested

    கம்பைநல்லூர்:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த மாணவி சவுமியா கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத கோட்டப்பட்ட போலீசாரை கண்டித்து சிட்லிங் கிராமத்தில் இன்று 2-வது நாளாக மலைவாழ் மக்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்கள். சிட்லிங் மட்டும் அல்லாமல் இதர மலை கிராமங்களை சேர்ந்த மக்களும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் அந்த கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது. போலீசார் மற்றும் அதிகாரிகளை உள்ளே விடாமல் கிராமத்துக்கு வரும் சாலையில் மரத்தை வெட்டி போட்டு இருந்தனர். மண்களையும் குவியலாக கொட்டி இருந்தனர்.

    இந்த நிலையில் கிராம மக்களுடன் பேச்சு நடத்த தருமபுரி கலெக்டர் மலர்விழி தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பொறுப்பு வகிக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மகேஸ்குமார் ஆகியோர் அந்த கிராமத்துக்கு விரைந்தனர். அவர்கள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    மாணவி சவுமியா இறந்த விவகாரத்தில் ஒருவாரமாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்ட கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை சஸ்பெண்டு செய்ய வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு ரூ 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் உள்ள அவரது சகோதரருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    மாணவிக்கு சிகிச்சை அளித்த டாக்டரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும். சிறப்பு மருத்துவ குழுவை அமைத்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதுவும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது. வேறு மருத்துவமனையில் தான் அந்த பிரேத பரிசோதனையை செய்ய வேண்டும். அதை வீடியோ எடுக்க வேண்டும். தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #DharmapuriGirlStudent #GirlMolested 

    பாலியல் வழக்கில் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு குற்றப்பத்திரிகையில் போதிய முகாந்திரம் இல்லாததால் விடுதலை செய்யக்கோரி நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். #NirmalaDevi
    விருதுநகர்:

    கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜாமீன் கோரி 7 முறை தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இந்த நிலையில் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு குற்றப்பத்திரிகையில் போதிய முகாந்திரம் இல்லை. எனவே எங்கள் 3 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று இன்று விருதுநகர் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனு மீது விசாரணை நடைபெற உள்ளது. #NirmalaDevi
    சேலம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து பிளஸ்-2 மாணவி பரிதாபமாக இறந்தார்.
    அயோத்தியாப்பட்டணம்:

    சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்தவர் சேகர், விவசாயி. இவருடைய மகள் கிருத்திகா(வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாட்டுக்கு புல் அறுப்பதற்காக கிருத்திகா தோட்டத்திற்கு சென்றார்.

    பின்னர் அவர் அங்கு புல் அறுத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பினார். பாரம் அதிகமாக இருந்ததால் அவர் தள்ளாடியபடியே தோட்டத்து வழியே நடந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக கிருத்திகா தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கம் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    செங்கம்:

    செங்கம் கண்ணக்குருக்கை அடுத்த மேல்நாச்சிப்பட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், திருவண்ணாமலை தாமரை நகரை சேர்ந்த கண்ணன் (46) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    ஆசிரியர் கண்ணன், பாலியல் தொல்லை கொடுத்ததாக 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரின் தரப்பில் செங்கம் அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில், நேற்று பள்ளிக்குள் புகுந்த 50-க்கும் மேற்பட்ட கும்பல் ஆசிரியர் கண்ணனை பயங்கரமாக தாக்கினர். இதில் ஆசிரியர் பலத்தகாயமடைந்தார்.

    இதைத்தொடர்ந்து, மாணவி கொடுத்த புகாரின் பேரில் ‘போக்சோ’, பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமை, தீண்டாமை உள்பட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் கண்ணனை கைது செய்தனர்.

    மேலும், வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்- ஆசிரியர் கழகம் சார்பில் பாய்ச்சல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    மாணவியின் பெற்றோரை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஆசிரியரை தாக்கியவர்களுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினர்.

    மேல்நாச்சிப்பட்டு அடுத்த வடமாத்தூரை சேர்ந்த கும்பல் தான் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தினர் என்பது தெரியவந்தது. தாக்குதலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட கும்பல் பிடிபட்டனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், தனிப்பட்ட காரணங்களால் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. ஆசிரியரை தாக்கிய புகாரில் முதற்கட்டமாக 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் 2-வது நாளாக இன்றும் பதட்டமான சூழல் நீடிக்கிறது. பள்ளியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
    செங்கம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது 50 பேர் கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்நாச்சிப்பட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கண்ணன் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவர், 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம் சில்மி‌ஷம் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    ஆயுதபூஜை விடுமுறைக்கு முன்பு சிறப்பு வகுப்பு என்று அந்த மாணவியை தனியாக அழைத்து சீருடையை கழற்றுமாறு கூறி ஆசிரியர் கண்ணன் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் புகார் கூறப்படுகிறது.

    இதுப்பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது, விவகாரம் வெளியே தெரிந்தால் உன் படிப்புக்கு தான் பிரச்சினை’ என்று மிரட்டியுள்ளார்.

    ஆயுதபூஜை உள்ளிட்ட 4 நாள் தொடர் விடுமுறைக்கு பின்னர், இன்று வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால், மாணவி பள்ளிக்கு செல்லவில்லை.

    பெற்றோர் கேட்டதற்கு அழுது கொண்டே தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி கூறினார். இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர்களுடன் பள்ளிக்கு சென்றனர்.

    இவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர்.

    வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியர் கண்ணனை பயங்கரமாக தாக்கி அடித்து உதைத்தனர். வகுப்பறையில் இருந்த மாணவ-மாணவிகள் அலறி கூச்சலிட்டனர்.

    மாணவியின் உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் கண்ணனை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர்.

    வகுப்பறையில் இருந்த நாற்காலிகள், மேஜைகளை தூக்கி ஆசிரியர் கண்ணனை அடித்தனர். இதில் ஆசிரியர் நிலை குலைந்து போனார். அப்போதும், அவரை விடாமல் தொடர்ந்து தாக்கி கொண்டே இருந்தனர்.

    தகவலறிந்ததும், செங்கம் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். பலத்த காயமடைந்த ஆசிரியர் கண்ணனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews
    சிதம்பரம் அருகே விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ள கீழ்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மகள் காவியா (வயது 16). இவர், சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காவியா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.

    கடந்த 14-ந் தேதி கடைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், காவியாவை தேடினர். இதனிடையே அதே ஊரில் உள்ள பாவாடைராயர் கோவில் அருகே காவியா, மயங்கி கிடப்பதாகவும், அவரது வாயில் இருந்து நுரைவெளியேறுவதாகவும் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் அவரது பெற்றோரிடம் கூறினர்.

    உடனே பதறியடித்துக்கொண்டு அவர்கள், அங்கு சென்று பார்த்தனர். அப்போது காவியா, விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடப்பதும், உயிருக்கு போராடியதும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவர், சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காவியா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து காவியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை தொடர்ந்து அதை வீடியோ எடுத்து வாட்ஸ்-அப்பில் அனுப்பிய காதலனை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரப்பாரை பகுதியை சேர்ந்தவர் நீலமேகம். இவரது மகன் சதீஷ் (20). இவருக்கும், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட் டது.

    அவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்தார். பின்னர் மாணவியை பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    அதை செல்போன் மூலம் மாணவிக்கு தெரியாமல் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோ பதிவை வாட்ஸ்-அப் மூலம் தங்களது நண்பர்களுக்கு சதீஷ் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

    வாட்ஸ்-அப் வீடியோ அந்தபகுதிகளில் உள்ள பல்வேறு நபர்களுக்கு பரவியது. இந்த நிலையில் வாட்ஸ்-அப் வீடியோ பற்றிய தகவல் அந்த மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.

    உடனே இந்த சம்பவம் குறித்து மாணவியிடம் அவரது பெற்றோர் விசாரித்தனர். நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தின் தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரனுக்கு மாணவியின் பெற்றோர் தகவல் தெரிவித்தனர்.

    உடனே அவர் பாதிக்கப்பட்ட மாணவியை நேரில் அழைத்து விசாரித்தார். அதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் கடலூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் மாணவி தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் ஜெயந்தி ரவிச்சந்திரன் புகார் செய்தார். இதையொட்டி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீசை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று சதீஷ் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் பண்ருட்டி கோர்ட்டில் சதீஷ் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை நீதிபதி கணேஷ் விசாரித்து சதீஷை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கடலூர் சிறையில் சதீஷ் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    டியூசன் படிக்க வந்த மாணவியை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பஞ்சாப்பில் இருந்து ராமேசுவரத்துக்கு கடத்தி வந்துள்ளார். ராமேசுவரம் போலீசார் அவர்களை பஞ்சாப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். #FormerHeadMaster #StudentAffair
    ராமேசுவரம்:

    பஞ்சாப் மாநிலம் அபோகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65). பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த மகத் (20) என்ற கல்லூரி மாணவி டியூசன் படித்து வந்தார். இந்த நிலையில் இருவரும் திடீரென்று மாயமாகி விட்டனர்.

    இதுகுறித்து அந்த மாணவியின் தந்தை அங்குள்ள போலீசாரிடம் புகார் செய்தார். அதில், தனது மகளை ஜெய்கிருஷ்ணன் கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தார்.

    பஞ்சாப் போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில், இதுதொடர்பாக அனைத்து பகுதிக்கும் தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் அவர்கள் ராமேசுவரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருப்பது தெரியவந்தது.

    ராமேசுவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், வேலம்மாள் ஆகியோர் நடவடிக்கை எடுத்து அவர்கள் இருவரையும் பிடித்தனர். போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பான தகவலை இருவரும் தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

    ஜெய்கிருஷ்ணனுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 மகன், ஒரு மகள் உள்ளனர். அவருடைய மனைவி இறந்து விட்டார். அவர் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து வந்த பள்ளியில்தான் மகத் படித்து வந்துள்ளார். அப்போது, மாணவி மீது பிரியமாக இருப்பதாக கூறி தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் சில உதவிகளை செய்து கொடுத்துள்ளார். மகத் கல்வியில் மிகுந்த அக்கறை இருப்பது போன்று பேசியுள்ளார்.

    பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும், மாணவிக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கூறியுள்ளார். டியூசனும் எடுத்துள்ளார். இதனால் தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் மீது மாணவிக்கு ஈர்ப்பு உருவானது. ஆனால் இதை யாரும் ஒரு பொருட்டாக கருதவில்லை.

    ஆசிரியர், மாணவி உறவு முறை என்றே நினைத்துக்கொண்டனர். ஆனால் இருவரும் காதல் வயப்படுவதற்கு அந்த ஈர்ப்புதான் காரணமாகி இருக்கிறது. இருவரும் வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்ற தொடங்கினர்.

    ஜெய்கிருஷ்ணனுக்கு மாதத்தில் முதல் வாரம் பென்சனாக ரூ.25 ஆயிரம் வருமாம். பணம் வந்ததும் இருவரும் ஜாலியாக வெளியே சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அதன்படி இந்த மாதம் பணம் கிடைத்ததும் கடந்த 11-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியே கிளம்பியுள்ளனர். முதலில் டெல்லி சென்று சுற்றிப்பார்த்து விட்டு அங்கிருந்து பல இடங்களுக்கு போயுள்ளனர்.

    இரு தினங்களுக்கு முன்பு ராமேசுவரம் வந்தனர். இருவரும் தந்தை-மகள் என்று கூறி விடுதியில் அறை எடுத்துள்ளனர். பின்னர் கன்னியாகுமரிக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையே மகளை காணாததால் மகத்தின் தந்தை அங்குள்ள போலீசில் புகார் கொடுத்துள்ளார். செல்போன் சிக்னலை வைத்து தேடியபோது ராமேசுவரத்தில் அவர்கள் இருப்பது தெரிய வந்தது. பஞ்சாப் போலீசாரின் தகவலை தொடர்ந்து ராமேசுவரம் போலீசாரிடம் அவர்கள் சிக்கினர்.

    இதையடுத்து பஞ்சாப் போலீசார் ராமேசுவரம் வந்தனர். அவர்களுடன் மகத்தின் தந்தையும் வந்திருந்தார். அப்போது, தானும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனும் ஏற்கனவே திருமணம் செய்துவிட்டதாக மாணவி மகத் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இருவரையும் ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு உத்தரவுப்படி இருவரும் பஞ்சாப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை போலீசார் பஞ்சாப்புக்கு அழைத்துச்சென்றனர். #FormerHeadMaster #StudentAffair
    மாணவியின் உறவினர் தாக்கியதால் பள்ளி காவலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #suicide

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த தளக்கான் சேரியை சேர்ந்தவர் முனுசாமி (65). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் இந்த பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் ஒரு மாணவியை பள்ளி வேனில் இருந்து கீழே இறக்கிவிட்டார்.

    அந்த மாணவியின் அக்கிளில் கைவைத்து இறக்கி விட்டதாக மாணவியின் உறவினர் அவரிடம் தகராறு செய்தனர். அவரை தாக்கிய தாகவும் கூறப்படுகிறது.

    இதனால் அவமானமும், மனவேதனையும் அடைந்த முனுசாமி சில நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் இன்று அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஆத்திரம் அடைந்த அவருடையை உறவினர்கள் காவலாளி முனுசாமி உடலை பள்ளி முன்பு வைத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். காவலாளியை தாக்கியவர்களுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர்.

    இதையடுத்து திருவள்ளூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரங்கநாதன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். காவலாளியின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர்.

    அதன்பிறகு காவலாளி முனுசாமி உடல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    மராட்டியத்தில் மாணவியை தவறான பாதைக்கு அழைத்த ஆசிரியர்கள் பிரவீன் சூர்யவன்சி, சக்கின் சோனாவானே ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். #Maharashtra #TeachersArrest #HSCExam
    மும்பை:

    மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் அட்காவ் பகுதியில் ஒரு தனியார் ஜூனியர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ஆசிரியர்கள் 2 பேர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். மேலும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி அடைய செய்வதற்காக தங்களிடம் படுக்கையை பகிர வேண்டும் என்று கூறி தவறான பாதைக்கு அழைத்தனர்.



    இந்த நிலையில் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட மாணவி கல்லூரி வகுப்பறையில் இருந்தார். அப்போது தொடர் சீண்டல்களில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களில் ஒருவர், மாணவியின் கையைப்பிடித்து, உடலில் தொட்டு பேசியுள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதனையடுத்து மாணவி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார், கல்லூரி ஆசிரியர்கள் பிரவீன் சூர்யவன்சி, சக்கின் சோனாவானே ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
    அரியானாவில் சிபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்து ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவியை 3 பேர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Haryana
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் சிபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி, நேற்று முன் தினம் கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த மூன்று பேர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    பின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, மாணவி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக இன்னும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாத நிலையில், குற்றவாளி தெரிந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் மாணவியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குற்றவாளிகளை தேடி வருவதாகவும், சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 
    பாலியல் புகார் கூறிய மாணவி கல்லூரியில் இருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவரும் சென்னையை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    விடுதி காப்பாளர்களாக உள்ள பேராசிரியைகள் மைதிலி, புனிதா பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்ததாக மாணவி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கோவை வேளாண் பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி தலைமையில் 5 பேர் குழு கடந்த மாதம் 24-ந் தேதி திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் விசாரணை நடத்தியது.

    கல்லூரி முதல்வர், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியைகள், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தி வீடியோக பதிவு செய்தனர்.

    பின்னர், விசாரணை அறிக்கையை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமியிடம் சமர்பித்தனர். முதற்கட்ட விசாரணையின் போது பாதிக்கப்பட்ட மாணவியை ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு அழைத்தது.

    அப்போது, மாணவி நீதிமன்ற அனுமதிபெற்று விசாரணையில் பங்கேற்பதாக தெரிவித்தார். இதனால், மாணவியிடம் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராக மாணவிக்கு 31-ந் தேதி ஒழுங்கு நடவடிக்கை குழு சம்மன் அனுப்பியது.

    நீதிமன்ற அனுமதி பெற்று மாணவி நேற்று மதியம் 1 மணிக்கு வேளாண் கல்லூரி வளாகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு ஆஜரானார். மாலை 5.30 மணிவரை சுமார் 4 மணி நேரம் மாணவியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணை முழுவதும் ஒழுங்கு நடவடிக்கை குழு வீடியோவில் பதிவு செய்தது. தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து மாணவி விரிவாக விளக்கமளித்தார். மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, துணை வேந்தரிடம் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது.

    இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு பேராசிரியைகளும், மாணவ, மாணவிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்லூரியை விட்டு வெளியேறுமாறு கோ‌ஷம் எழுப்பினர். இதனால் மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

    தனது வகுப்பறைக்கு சென்று அமர்ந்தார். அப்போது, வகுப்பறையில் இருந்த சக மாணவ, மாணவிகளை பேராசிரியைகள் ‘வாருங்கள் வெளியே போகலாம். அந்த மாணவி மட்டும் தனியாக இருக்கட்டும்’ என்று கூறி அனைவரையும் வெளியே அழைத்து சென்றனர்.

    இதேபோல் மற்ற வகுப்புகளில் இருந்த மாணவ, மாணவிகளையும் பேராசிரியைகள் வெளியே அழைத்து செல்வதாக கூறினர். மாணவி மட்டும் தனது வகுப்பறையில் தனியாக அமர்ந்திருந்தார். பாலியல் புகார் கூறிய மாணவியை வகுப்பறையில் இருந்து வெளியேற்றினால் தான் நாங்கள் உள்ளே வருவோம் என்று பேராசிரியைகளும், மாணவ, மாணவிகளும் கூறினர்.

    இதையடுத்து, மாணவி வலுகட்டாயமாக கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால், அவருடைய படிப்பு கேள்வி குறியாகியுள்ளது. மாணவி கூறியபோது, பாதிக்கப்பட்ட எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பமுடியவில்லை என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    இதையறிந்த வாழவச்சனூர் கிராமமக்கள் ஏராளமானோர் மாணவிக்கு ஆதரவாக கல்லூரி முன்பு திரண்டனர். கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்களை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews
    ×