search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98381"

    கேரளாவில் கார் விபத்தில் காயமடைந்த மாணவி ஹனான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது பேஸ்புக்கில் நேரடி ஒளிப்பரப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். #Hanan
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஹனான், கல்லூரி மாணவி. படிப்பு செலவிற்காக மாணவி ஹனான் தெருக்களில் மீன் விற்று பணம் திரட்டினார். இந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து மாணவி ஹனான் பிரபலமானார்.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மாணவியை நேரில் அழைத்து பாராட்டினார். இச்சம்பவத்திற்கு பிறகு மாணவி ஹனானுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் குவிந்தன. அவர், தனது செலவிற்கு கிடைத்த பணத்தில் சிறு தொகையை கேரள வெள்ள நிவாரண நிதிக்கும் அளித்தார்.

    மேலும் ஹனான் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். நேற்று முன்தினம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு காரில் திரும்பினார். அப்போது ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது கார் நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதியது. இதில் ஹனான் படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் ஹனானை மீட்டு எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.


    அப்போது ஆஸ்பத்திரிக்கு வந்த வாலிபர் ஒருவர் மாணவி ஹனான்னுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கும் காட்சியை பதிவு செய்து அதனை பேஸ்புக்கில் நேரலையாக பதிவிட்டார். மேலும் ஹனானுக்கு சிகிச்சை அளிக்கும் காட்சியை நான்தான் முதலில் பதிவிட்டுள்ளேன் என்றும் குறிப்பு அனுப்பினார்.

    வாலிபரின் செய்கையால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை சிகிச்சை அறையில் இருந்து வெளியேறுமாறு கூறினர். ஆஸ்பத்திரியில் இருந்த மற்ற நோயாளிகளும் வாலிபரின் செய்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர் இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    இதுபற்றி எர்ணாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அனுமதியின்றி ஹனானின் சிகிச்சை காட்சிகளை பதிவு செய்த வாலிபரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அவர், பேஸ்புக்கில் பதிவிட்ட காட்சிகள் அடிப்படையில் அவரை தேடி வருகிறார்கள். #Hanan
    வகுப்பறையில் மயங்கி விழுந்து 10-ம் வகுப்பு மாணவி திடீரென பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள நல்லதேவன்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. கணவரை இழந்த இவர் அரசு விடுதியில் வார்டனாக பணியாற்றி வருகிறார்.

    இவரது மகள் சுபிக்ஷா (வயது 14). இவர் திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சுபிக்ஷாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் வகுப்பறையில் அமர்ந்து பாடங்களை கவனித்துக் கொண்டு இருந்தார்.

    அப்போது சுபிக்ஷா திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள் உடனே ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் மாணவியை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுபிக்ஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாலுகா போலீசார் மாணவியின் சாவு குறித்து விசாரித்து வருகின்றனர்.

    நாகை மாவட்டம் அருகே காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ்-2 மாணவியுடன் வாலிபர் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அருள்செல்வன். இவரது மகன் பரணிதரன்(வயது 21). இவர் சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி என்ஜினீயரிங் படித்து வந்தார். அப்போது பரணிதரனுக்கு, அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் ஒரு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இவர்களது காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வந்தது. இந்த காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த எதிர்ப்பை மீறி பரணிதரன் பெற்றோர், இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் தனது மகளை காணவில்லை என அந்த பெண்ணின் பெற்றோர் சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    இதற்கிடையே மாணவியின் பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு இருவரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் பெற்றோருக்கு பயந்து நாகையில் உள்ள உறவினர் வீட்டிற்கு காதல் ஜோடியினர் வந்துள்ளனர். அங்கு வந்த அவர்கள் இருவரும் நாகை காடம்பாடியில் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் உயிருக்கு போராடிய இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    இதுகுறித்து நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    மேட்டுப்பாளையத்தில் நடந்த குறுமைய விளையாட்டு போட்டிகளில் சிறுமுகை அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி 4 தங்கப்பதக்கங்கள் வென்றார்.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மேட்டுப்பாளையம் வட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கிடையேயான குறுமைய விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.

    இதில் சிறுமுகை அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி மகாலட்சுமி 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நீளம் தாண்டுதல் குண்டு எறிதல் 100 தடை தாண்டி ஓட்டம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று 4 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
    சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சேகரித்த பணத்தை வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய மாணவியின் மனித நேயத்தை பாராட்டி அவருக்கு சைக்கிள் நிறுவனம் ஒன்று புது சைக்கிளை பரிசாக வழங்கியது.
    குளச்சல்:

    குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் அப்துல் ஆசிம்(வயது48). கடந்த சில வருடங்களாக இவர் குடும்பத்துடன் நாகர்கோவிலில் வசித்து வருகிறார். இவரது மகள் சஜீரா பாத்திமா. 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த மாணவிக்கு உண்டியலில் பணம் சேரிக்கும் பழக்கம் உண்டு. கடந்த சில நாட்களாக இவர் சைக்கிள் வாங்க ஆசைப்பட்டு அதற்காக உண்டியலில் பணம் சேகரித்து வந்தார்.

    கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கேரளாவில் பெய்த கன மழையில் பலர் வீடு, உடமைகளை இழந்து தவித்து உள்ளனர். இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நினைத்த சஜீரா பாத்திமா தான் சேகரித்து வைத்திருந்த பணத்தை எடுக்க உண்டியலை திறந்தார். அதில் ரூ. 600 சேர்ந்திருந்தது.

    உடனே அவர் பெற்றோரின் அனுமதியுடன் ரூ.600ஐ கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார். இந்த தகவல் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பரவியது. இதனை அறிந்த நாகர்கோவிலை சேர்ந்த தனியார் சைக்கிள் நிறுவனம் ஒன்று மாணவியின் மனித நேயத்தை பாராட்டி சைக்கிள் ஒன்றை பரிசாக வழங்கியது.

    இதுகுறித்து மாணவி சஜீரா பாத்திமா(12) கூறுகையில், சிறு வயதில் இருந்தே சைக்கிள் வாங்க ஆசையாக இருந்தது. அதற்காக பெற்றோர் உறவினர்கள் தரும் காசுகளை சேமித்து வந்தேன்.

    இந்த வேளையில் கேரளாவில் வெள்ளப்பெருக்கால் மக்கள் கஷ்டப்படுவதை பார்த்து எனக்கு கஷ்டமாக இருந்தது. நம்மால் முடிந்த உதவியை செய்ய பெற்றோரிடம் கூறினேன். மேலும் நான் சேமித்த ரூ.600ஐ வெள்ள நிவாரண நிதியாக அளித்தேன். இதனை எனது தந்தை பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்து ஒரு சைக்கிள் நிறுவனம் நான் படித்த பள்ளியில் வந்து சைக்கிளை பரிசாக வழங்கினர் என்றார். #tamilnews
    திருப்பதியில் காதல் தோல்வியால் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பதி:

    திருப்பதி சிவஜோதி நகரை சேர்ந்தவர் கீதிகா (வயது19). திருப்பதி வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் கல்லூரி மாணவி கீதிகா நேற்று மாலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பதி போலீசார் மாணவியின உடலை மீட்டு திருப்பதி ரூயா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சித்தூர் கலெக்டர் பிரதியும்னா கூடுதல் இணை கலெக்டர் சந்திரமவுலி ஆகியோர் ரூயா ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    தற்கொலை செய்த கல்லூரி மாணவியும், வங்கியில் பணிபுரியும் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். வங்கி ஊழியர் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து மாணவியை காதலித்து வந்துள்ளார். இது மாணவிக்கு தெரிய வரவே மாணவி விரக்தியில் இருந்துள்ளார். இதனால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் தற்கொலைக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

    இதே கல்லூரியில் எம்.டி. படித்து வந்த டாக்டர் ஷில்பா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து விசாரணையே தொடங்கவில்லை. இந்நிலையில் மற்றொரு மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மும்பை மாநகராட்சி பள்ளியில் வழங்கப்பட்ட இரும்புச்சத்து மாத்திரையை சாப்பிட்ட மாணவி திடீரென உயிரிழந்தார்.
    மும்பை:

    மராட்டிய மாநிலம் மும்பையில் மாநகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு ரத்தசோகை குறைபாடு ஏற்படுவதை தடுப்பதற்காக சுகாதாரத்துறை சார்பில் இரும்புச்சத்து மற்றும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    கோவண்டி பைங்கன்வாடி சஞ்சய் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கும் இரும்புச்சத்து மற்றும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு இருந்தன. கடந்த திங்கட்கிழமை அன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அந்த மாத்திரைகளை வழங்கினார்கள்.

    அந்த மாத்திரையை சாப்பிட்ட சந்தினி சாஹில் சேக்(வயது12) என்ற மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவள் செவ்வாய்க்கிழமை அன்று பள்ளிக்கு செல்லவில்லை. பின்னர் வியாழன் இரவு மாணவி திடீரென ரத்தவாந்தி எடுத்து இருக்கிறாள். இதை பார்த்து அவளது குடும்பத்தினர் பதறி போனார்கள். அடுத்த சிறிது நேரத்தில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள்.

    பள்ளியில் வழங்கப்பட்ட இரும்புச்சத்து மாத்திரையை சாப்பிட்ட பின்னர் தான் அவள் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக மாணவியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பீதி அடைந்தனர். மேலும் பள்ளியில் மாணவ, மாணவிகள் சிலர் தங்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் வருவதாக தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக அங்கு படிக்கும் 160 மாணவ, மாணவிகள் அருகில் உள்ள ராஜவாடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

    ஆனால் அவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அனைவரும் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதற்கிடையே, மாணவி சந்தினி சாஹில் சேக் குழந்தை காசநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என மாநகராட்சி சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. மேற்படி 12 வயது மாணவி இறந்ததற்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது.
    சிதம்பரம் அருகே தோழிகளுடன் விளையாடி விட்டு வீடு திரும்பிய 8-ம் வகுப்பு மாணவி திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பள்ளிபடைபூதக்கேணி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜலாவுதீன். இவரது மகள் ஜாஹீத் பர்வின் (வயது 13).

    இவள் அங்குள்ள அரசு ஆரம்ப நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று மாலையில் ஜாஹீத் பர்வின் வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தின் கீழ் தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

    பின்னர் அவள் தனது வீட்டுக்கு சென்றாள். சிறிது நேரத்தில் ஜாஹீத் பர்வின் திடீரென்று மயங்கி விழுந்தாள். இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அவளை சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இது குறித்து கிள்ளை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி ஜாஹீத் பர்வின் மர்ம சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை பீளமேட்டில் மாணவிகளிடம் விடுதி உரிமையாளர் அத்துமீறி சில்மி‌ஷத்தில் ஈடுபட முயன்ற வீடியோ காட்சிகள் போலீசாருக்கு கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கோவை:

    கோவை பீளமேட்டில் விடுதி மாணவிகள் 5 பேரை ஓட்டலுக்கு அழைத்து சென்று விருந்து கொடுத்து பெண் வார்டன் பாலியலுக்கு அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட விடுதி உரிமையாளர் ஜெகநாதன் (45) நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். தலைமறைவான பெண் வார்டன் புனிதா(32) கடந்த 1-ந் தேதி கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 2 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.

    புனிதா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நான் கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தேன். எனக்கு 2குழந்தைகள் உள்ளனர். ஜெகநாதன் கூறியதால் மாணவிகளை ஓட்டலுக்கு விருந்துக்கு அழைத்து சென்று பீர் வாங்கி கொடுத்தேன். மாணவிகள் மறுத்த போது அவர்களை ஜெகநாதனுடன் செல்போனில் ‘வீடியோ கால்’ பேசி ஜாலியாக இருக்குமாறும், அவ்வாறு செய்தால் வசதியாக இருக்கலாம் என கூறி தவறான பாதைக்கு அழைத்தேன்.

    இதற்கு முன்பு எந்த பெண்ணையும் ஜெக நாதனுடன் பேச வைக்க வில்லை. முதல் முறையாக பேச வைத்த போது சிக்கலாகி விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டதை அறிந்ததும் நான் தப்பி சென்று உறவினர் வீட்டில் பதுங்கினேன். அப்போது தான் ஜெகநாதன் இறந்தது தெரியவந்தது. அவர் தற்கொலை செய்வார் என எதிர்பார்க்கவில்லை.

    என்னிடம் ரூ.10 ஆயிரம் மட்டுமே இருந்தது. இதை வைத்து அதிக நாட்கள் வெளியூரில் தங்கியிருக்க முடியாது என நினைத்தேன். எனது செல்போன் எண் மூலம் போலீசாரும் தேடுவதால் எப்படியும் மாட்டிக் கொள்வேன் என நினைத்து கோர்ட்டில் சரண் அடைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புனிதாவின் வாக்கு மூலத்தை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர்.

    போலீஸ் காவல் முடிந்து புனிதா நேற்று மாலை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14-ந் தேதி வரை நீதி மன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு கண்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து புனிதா கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

    பெண்களிடம் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் அத்துமீறி சில்மி‌ஷத்தில் ஈடுபட முயன்ற காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன. இந்த காட்சிகள் ஓட்டலில் எடுக்கப்பட்டதா? அல்லது வேறு எங்காவது வைத்து எடுக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை.

    சம்பவத்தன்று ஓட்டலில் என்ன நடந்தது? மாணவிகளுக்கு விருந்து கொடுத்து ஜெகநாதன் அத்துமீறினாரா? என்பதை கண்டுபிடிக்க ஓட்டல் உரிமையாளரை நேரில் வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெகநாதன் பெண்களிடம் அத்து மீறிய வீடியோ காட்சிகளை வழக்கின் முக்கிய ஆதாரமாக கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    கலசப்பாக்கம் அருகே 5-ம் வகுப்பு மாணவியிடம் சில்மி‌ஷம் செய்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் ஆதமங்கலம் புதூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளி தலைமை ஆசிரியராக சுப்பிரமணியன் என்பவர் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, இப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறாள்.

    இந்த நிலையில், தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் தனக்கு தலைவலி உள்ளது. தைலம் தேய்த்து விடுமாறு கூறி 5-ம் வகுப்பு மாணவியை தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அப்போது, அந்த மாணவியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

    பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் யாரிடமும் இதுப்பற்றி கூறக் கூடாது என்று மாணவியை மிரட்டியுள்ளார். மாலையில் வகுப்பு முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவி தன்னிடம் தலைமை ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதை பெற்றோரிடம் கூறினாள்.

    ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். மேலும் தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தனர். தகவலறிந்ததும், கடலாடி போலீசார் விரைந்து வந்தனர்.

    பெற்றோரை சமரசப்படுத்திய போலீசார், தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் தலைமை ஆசிரியரை பிடித்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் விசாரணை நடத்தி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    கூடலூர் அருகே மாணவியை கடத்தி சென்றது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். #Kidnapped
    கூடலூர்:

    கூடலூர் தாலுகா மண்வயல் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த வாலிபர் அந்த மாணவியை கடத்தி சென்றார். இது குறித்து பெற்றோர் கூடலுார் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ். சதீஷ், சியாபுதீன், சிஜூ உள்ளிட்ட போலீசார் மாணவி மற்றும் அவரை கடத்திய வாலிபரை தேடி வந்தனர்.

    அப்போது கூடலூர் சளிவயலை சேர்ந்த மணி (வயது 20) என்பவர் மாணவியை கடத்தியது தெரிய வந்தது. இந்த நிலையில் கூடலூர் நகர பகுதியில் மணி நடந்து சென்றதை போலீசார் கண்டனர். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். பின்னர் மாணவியை போலீசார் மீட்டனர். இது குறித்து மணி மீது போலீசாார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்தனர். 
    திருமங்கலம் அருகே 13 வயது மாணவி ஒருவர், தாயின் கள்ளக்காதலன் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கல்லப்பட்டியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய மாணவி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

    அதில், எனது தாயார் ஜீவா குடும்ப பிரச்சினை காரணமாக தந்தையை பிரிந்து வாழ்ந்து வருகிறார். எங்களது வீட்டுக்கு மாசானம் (வயது 45) என்பவர் அடிக்கடி வந்து போவார்.

    கடந்த வாரம் மாசானம் என்னை கற்பழிக்கும் நோக்கத்தில் பாலியல் தொந்தரவு செய்தார். இதற்கு உடந்தையாக எனது தாயும் இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதன் அடிப்படையில் ஜீவா, அவரது கள்ளக்காதலன் மாசானம் ஆகியோர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×