search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98416"

    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் எஸ்கே 16 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. #SK16 #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர விக்னேஷ் சிவன் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இதில் பாண்டிராஜ் இயக்கும் எஸ்.கே.16 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது.

    சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகிகளாக அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிப்பதாக கூறப்படுகிறது. யோகி பாபு, சூரி காமெடி வேடத்திலும், ஆர்.கே.சுரேஷ், நட்டி நட்ராஜ், இயக்குநர் பாரதிராஜா, சமுத்திரக்கனி முக்கிய கதபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.

    டி.இமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும், வீரசமர் கலை பணிகளை மேற்கொள்கின்றனர். #SK16 #Sivakarthikeyan #AnuEmmanuel #AishwaryaRajesh #Bharathiraja #Samuthirakani 

    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் எஸ்கே 16 படத்தில் மேலும் 4 பிரபலங்கள் இணைந்துள்ளனர். #SK16 #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர விக்னேஷ் சிவன் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இதில் பாண்டிராஜ் இயக்கும் எஸ்.கே.16 படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஐஸ்வர்யா, சிவகார்த்திகேயனின் தங்கையாக ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுதவிர யோகி பாபு, சூரி, ஆர்.கே.சுரேஷ், நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா மற்றும் சமுத்திரக்கனியும் படக்குழுவில் இணைந்துள்ளனர். பாரதிராஜா சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடிப்பதாக கூறப்படுகிறது.


    டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷாவும், படத்தொகுப்பாளராக ஆண்டனி எல்.ரூபனும், கலை இயக்குநராக வீர சமரும் ஒப்பந்தமாகி உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. #SK16 #Sivakarthikeyan #Bharathiraja #Samuthirakani #NiravShah #AntonyLRuben

    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், இந்த படத்தை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #MrLocal #Sivakarthikeyan
    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்தை சக்தி பிலிம் பாக்ட்ரி சார்பில் பி.சக்திவேலன் வெளியிடுகிறார்.

    பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவிருக்கும் எஸ்.கே.16 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் நிலையில், மிஸ்டர்.லோக்கல் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


    காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #MrLocal #Sivakarthikeyan #Nayanthara

    வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே வாக்களித்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo
    சென்னை:

    சென்னையில் தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரத்தில் குற்றப்பதிவு செய்ய வேண்டி உள்ளது. அதற்கான உரிய விசாரணையை நடத்த வேண்டி உள்ளது. எனவே அதில் காலதாமதம் ஆகலாம்.



    அதன் பிறகு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தண்டனை விதிக்கப்படும். அதில் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையை தேர்தல் ஆணையம்தான் உறுதி செய்யும்.

    தற்போது அந்த விவகாரத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரிக்கிறார். அவரிடம் இருந்து அறிக்கை பெறப்படும். அலுவலர்கள் செய்த தவறு வரிசையாக பட்டியலிடப்படும். அதுபற்றி சம்பந்தப்பட்ட அலுவலரின் பதில் பெறப்படும்.

    அதற்கான விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுதான் விசாரணை நடத்தப்படும். அனைத்து நடைமுறையையும் பின்பற்றித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் இந்த பிரச்சினையில் காலதாமதம் ஏற்படும்.

    விசாரணை அதிகாரி அந்த நடிகர்களை சாட்சியாக விசாரிக்க முடியும். அலுவலர்கள் சொல்வது சரியா என்பதை நடிகர்கள் கூறும் கருத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். முதலில் குற்றப்பதிவு செய்யப்படும். இரண்டாவதாக, விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவார். மூன்றாவதாக, விசாரணை அதிகாரியின் அறிக்கை, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு அவர் தகுந்த தண்டனையை விதிப்பார். அந்தத் தண்டனையை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். இதுதான் நடைமுறை.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo
    வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #SatyabrataSahoo #sivakarthikeyan

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலின் போது நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கம் குட்ஷெப் பர்டு பள்ளி வாக்குச் சாவடியில் ஓட்டு போட்டார். அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை.

    அவரது பெயர் எப்படி பட்டியலில் இல்லாமல் போனது என்பது குறித்து விசாரிக்க சொல்லி இருக்கிறோம். அவரை எப்படி ஓட்டு போட அனுமதித்தார்கள் என்பது பற்றியும் அறிக்கை கேட்டு இருக்கிறோம்.

    இதில் யார் தவறு செய்தார்கள் என்பது கண்டறியப்பட்டு தவறு செய்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே சிவகார்த்திகேயன் வாக்கு அளித்த விவரத்தை தேர்தல் கமி‌ஷனுக்கு தெரிவித்து இருக்கிறோம்.

     


     

    ஓட்டு எண்ணிக்கையின் போது வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க ஒரு ஓட்டு தேவை என்ற நிலை வந்தால் இவருடைய ஓட்டு கணக்கில் எடுக்கப்படாது. இதுபோல் நடிகர் ஸ்ரீகாந்த் ஓட்டு அளித்த விவகாரம் குறித்தும் அறிக்கை கேட்டுள்ளோம்.

    மதுரையில் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு தாசில்தார் சென்ற விவகாரம் தொடர்பாக சிறப்பு தேர்தல் அதிகாரி பாலாஜி விரிவான அறிக்கை தந்துள்ளார். அதை தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

    மாவட்ட தேர்தல் அதிகாரியான மதுரை கலெக்டர் மீது நடவடிக்கை இருக்குமா? இல்லையா? என்பதை தேர்தல் கமி‌ஷன் தான் முடிவு செய்யும்.

    கரூர் தொகுதியிலும் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு பாதுகாப்பு ஏற்பாடு சரியில்லை என காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி விசாரித்து அறிக்கை தர சிறப்பு தேர்தல் அதிகாரி ராஜாராம் சென்றுள்ளார். அவர் விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பார்.

    தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்தாலும் இன்னும் பறக்கும் படை கண்காணிப்பு குழு தொகுதிக்கு ஒன்று வீதம் செயல்பட்டு வருகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் தலா 3 பறக்கும் படைகளும், கண்காணிப்பு குழுக்களும் செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #SatyabrataSahoo #sivakarthikeyan

    சிவகார்த்திகேயனுக்கு ஓட்டு போட அனுமதி வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #Sivakarthikeyan
    பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. நடிகர்கள், நடிகைகள் பலரும் காலையிலேயே தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். இதில், நடிகர் சிவகார்த்திகேயன், ரமேஷ் கண்ணா மற்றும் ரோபோ சங்கர் ஆகியோருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது. 

    வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிக்க சென்ற சிவகார்த்திகேயனின் பெயர், வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது. பின்னர், அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சிவகார்த்திகேயன் வாக்களித்தார்.



    இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று நிருபர்களிடம் கூறும்போது, ‘நடிகர் சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத நிலையில் அவருக்கு வளசரவாக்கம் பள்ளியில் ஓட்டுப்போட அனுமதி வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ்டர்.லோக்கல் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக தியேட்டர் பிரச்சனையே காரணமாக கூறப்படுகிறது. #MrLocal #Sivakarthikeyan
    சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். இந்தப்படம் மே 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திடீரென மிஸ்டர்.லோக்கல் மே 17 அன்று வெளியாகும் என்று இப்படத்தை தயாரித்திருக்கும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்திருக்கிறது. 

    இதுகுறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் விசாரித்த போது, லாரன்ஸின் காஞ்சனா 3 படத்திற்கு திரையரங்குகளை ஒப்பந்தம் செய்கிறபோது குறைந்தபட்சம் மூன்று வாரங்கள் வரை படத்தை ஓட்ட வேண்டும் என்ற நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட பின்னரே ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் காஞ்சனா 3 படம் வெளியிடப்பட்டிருக்கும் சுமார் 450 திரையரங்குகளில் புதிய படங்களை திரையிட முடியாது.



    அதோடு ஏப்ரல் 26 அன்று மார்வெலின் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் என்ற ஆங்கிலப் படமும் வெளியாக இருக்கிறது. அதிக எதிர்பார்ப்பில் உள்ளதால் அவை 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை ஆக்கிரமித்துக்கொள்ளும். தமிழகத்தில் மொத்தம் இருப்பது 1100 திரையரங்குகள். இவற்றால் மிஸ்டர்.லோக்கல் படத்துக்கு முக்கிய நகரங்களில் அதிகமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் இந்த தேதி மாற்றம்” என்று கூறுகின்றனர். #MrLocal #Sivakarthikeyan

    சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் படமும், விஜய் சேதுபதியின் சிந்துபாத் படமும் மோதும் என்று எதிர்பார்த்த நிலையில், சிந்துபாத் படத்தை முன்னதாக ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. #MrLocal #Sindhubaath
    சு.அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் சிந்துபாத் படம் மே 16-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தை முன்னதாக திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர்.லோக்கல் படம் மே 1-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் மே 17-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் அறிவித்தது. இறுதிக்கட்ட பணிகள் இன்னமும் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    இதையடுத்து ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் படங்கள் மோதுவதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் சிந்துபாத் படத்தை மே 3-ந் தேதி ரிலீஸ் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    அருண்குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வன்சன் மூவிஸ் மற்றும் கே புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. #MrLocal #Sindhubaath #Sivakarthikeyan #VijaySethupathi

    சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர்.லோக்கல், கவுதம் கார்த்திக் நடித்துள்ள தேவராட்டம் படங்களின் ரிலீஸ் தேதிகளை படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் மாற்றி புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. #MrLocal #Devarattam
    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மிஸ்டர்.லோக்கல். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். மே 1-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதேபோல் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் தேவராட்டம் படத்தையும் இந்த நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் மே 17-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த இரு படங்களின் ரிலீஸ் தேதியை மாற்றி புதிய ரிலீஸ் தேதியை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.


    அதன்படி, கவுதம் கார்த்திக்கின் தேவராட்டம் வருகிற மே 1-ந் தேதியும், சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் மே 17-ந் தேதியும் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #MrLocal #Devarattam #Sivakarthikeyan #GauthamKarthik

    பாராளுமன்ற தேர்தலுக்கு ஓட்டு போன்ற சென்ற சிவகார்த்திகேயன், கடும் போராட்டத்திற்குப் பிறகு வாக்களித்திருக்கிறார். #Sivakarthikeyan #LokSabhaElections2019
    பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. நடிகர்கள், நடிகைகள் பலரும் காலையிலேயே தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். இதில், நடிகர் சிவகார்த்திகேயன், ரமேஷ் கண்ணா மற்றும் ரோபோ சங்கர் ஆகியோருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது. 

    நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அங்குள்ள பூத் எண் 303-ல் சிவகார்த்திகேயனின் மனைவி கிருத்திகாவிற்கு ஓட்டு உள்ளது. அதேசமயம் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது. 



    பின்னர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர், கடும் போராட்டத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார். அதன்பின் அவர் கூறும் போது, வாக்களிப்பது உங்கள் உரிமை; அந்த உரிமைக்காக போராடுங்கள் என கூறினார்.
    கிராமத்து கிரிக்கெட் வீரர்களை சென்னைக்கு வரவழைத்து விருந்து மற்றும் விருது கொடுத்து அவர்களை சிவகார்த்திகேயன் நெகிழ வைத்திருக்கிறார். #Sivakarthikeyan
    இயக்குனர் பொன்ராம், இயக்குனர் எம்.பி.கோபி அவர்களின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அணியினரை சென்னைக்கு வரவழைத்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் படப்பிடிப்பில் மதியம் விருந்தும், விருதும் கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தியுள்ளார்.



    கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு சென்னையில் சிவகார்த்திகேயனின் கரங்களால் விருது வழங்கியதை நினைத்து பெரும் அகிழ்ச்சியடைகிறோம் என்று வெற்றி பெற்ற அணியினர் கூறியுள்ளனர்.
    ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #MrLocal
    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

    ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    ஹிப் ஹாப் ஆதி இசையில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல்களை ஏப்ரல் 20ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மே 1ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
    ×