என் மலர்
நீங்கள் தேடியது "வெள்ளம்"
- பேரிடர் குழுவால் மீட்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேரிடர் குழுவால் மீட்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பன்னு, டேரா, கரக் மற்றும் லக்கி மார்வார்ட் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதில் சுமார் 70 வீடுகள் இடிந்து விழுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சண்டிகர் :
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று அரியானாவில் கனமழை வெளுத்து வாங்கியது. காலை முதலே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அந்த வகையில் பஞ்ச்குலா மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த பேய் மழையால் அங்குள்ள காக்கர் ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்ந்தது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் ஆற்றங்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது.
காரில் கோவிலுக்கு வந்த பெண், கோவிலில் இருந்து திரும்பி வந்து, காரில் அமர்ந்திருந்தபோது,திடீர் வெள்ளம் வந்து காரை இழுத்து சென்றது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
எனினும் மீட்பு குழுவினர் வருவதற்குள் கார் காட்டாற்று வெள்ளத்தின் நடுவே சிக்கிக்கொண்டது. இதையடுத்து, வெள்ளத்தில் சிக்கிய காரில் ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை கயிறு கட்டி மீட்க உள்ளூர் மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி அங்கிருந்த இளைஞர்கள் சிலர் ஒரு கம்பத்தில் கயிற்றை கட்டி, அதை பிடித்து மெல்ல மெல்ல நகர்ந்து, பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தின் நடுவே சிக்கிய காரை அடைந்தனர். அதன் பின்னர் நீண்ட போராட்டத்துக்கு பின் காரில் இருந்த பெண்ணை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக அந்த பெண் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பெண்ணை கயிறு கட்டி பத்திரமாக மீட்டதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
- யமுனை ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து, அருகிலுள்ள கிராமங்களில் வெள்ள அபாயம் உள்ளதால் மக்கள் மீட்பு.
- கிராம பகுதிக்கு சென்று மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற உத்தரவிட்டனர்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், யமுனை ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. யமுனை ஆற்றின் நீர் வெளியேறி சாலைகளுக்கு வரும் புகைப்படங்களும் வெளியேறி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல், அரியானா மாநிலம் பரீதாபாத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அபாயத்தைத் தொடர்ந்து யமுனை ஆற்றங்கரைக்கு அருகில் வசிக்கும் குறைந்தது 90 பேரை காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெளியேற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அமிபூர் கிராமத்தில் வசிப்பவர்கள் மற்றும் அங்குள்ள பண்ணைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
யமுனை ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து, அருகிலுள்ள கிராமங்களில் வெள்ள அபாயம் உள்ளதால், இந்த மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வருவதற்காக, பரிதாபாத் காவல்துறையுடன் இணைந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மீட்புப் பணியில் ஈடுபட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் சுபே சிங் கூறினார்.
மேலும், பரிதாபாத் துணை கமிஷனர் விக்ரம் சிங் மற்றும் துணை போலீஸ் கமிஷனர் (மத்திய) பூஜா வசிஷ்ட், மாவட்ட அதிகாரிகளுடன் சேர்ந்து, கிராம பகுதிக்கு சென்று மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற உத்தரவிட்டனர்.
- இந்திய விமானப் படையின் முயற்சிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- மணாலியில் மொபைல் நெட்வொர்க் இணைப்பு மீட்டமைக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளக்காடானது.
இதற்கிடையே, கடந்த 3 நாட்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என இமாச்சல பிரதேசம் மிக மோசமாக பாதிப்பு அடைந்துள்ளது. 1,300 சாலைகள் சேதமடைந்துள்ளன. 40 பாலங்கள் சிதைந்துள்ளன. 79 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாகின. 333 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. வெள்ள, நிச்சரிவில் சிக்கி இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக, சுற்றுலாத் தளங்களில் பயணிகள் சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், பயணிகளை மீட்பதற்கான உரிய நடவடிக்கையை இமாச்சல் அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கித் தவித்த 60,000 சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று காலை 9 மணி வரை, மொத்தம் 60,000 சுற்றுலாப் பயணிகள் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நான் தற்போது குலுவில் கடந்த மூன்று நாட்களாகத் தங்கி, நடந்து வரும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறேன்.
சாலை சேதம் காரணமாக கசோல் மற்றும் தீர்த்தன் பள்ளத்தாக்கில் சுமார் 10,000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
சாலை சேதமடைந்த இடத்திலிருந்து டிரான்ஸ்- ஷிப்மென்ட், ஜீப்கள் மற்றும் பேருந்துகள் மூலம் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை எளிதாக்கி உள்ளோம்.
தற்போதைய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் இந்திய விமானப் படையின் முயற்சிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீவிர மற்றும் சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், அவர்கள் ஏழு நபர்களை காப்பாற்றுவதன் மூலம் விதிவிலக்கான திறமையை வெளிப்படுத்தினர்.
மணாலியில் மொபைல் நெட்வொர்க் இணைப்பு மீட்டமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- கனமழையில் ஒட்டுமொத்த கிராமத்தையே வெள்ளம் அடித்து சென்றது.
- உள்ளூர் நிர்வாகம் கிராம மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது.
சிம்லா:
இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட மிக கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. கனமழையில் ஒட்டுமொத்த கிராமத்தையே வெள்ளம் அடித்து சென்றது.
ஸ்பிதி பகுதிக்கு அருகே அமைந்துள்ள கோலாக்சா என்ற கிராமத்தில் இருந்த வீடுகளும், விளை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி சின்னாபின்னமாகின. உள்ளூர் நிர்வாகம் கிராம மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது.
அந்த கிராமத்தில் வாழும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அனைத்துமே தற்போது வீடற்றவர்களாக இருக்கின்றனர்.
- யமுனை ஆற்றின் இரு கரைகளையும் தாண்டி வெள்ள நீர் செல்வதால் அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
- தாஜ்மகால் வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது.
டெல்லியில் பலத்த மழை பெய்ததால் யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணையின் நீர்மட்டம் 206.01 மீட்டராக அதிகரித்துள்ளது. யமுனை ஆற்றின் இரு கரைகளையும் தாண்டி வெள்ள நீர் செல்வதால் அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இதற்கிடையே 45 ஆண்டுகளுக்கு பிறகு யமுனை ஆற்றின் வெள்ளம் தாஜ்மகாலுக்குள் புகுந்தது. தாஜ்மகால் வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. தாஜ்மகால் சுவரை தொட்டுக் கொண்டும் வெள்ள நீர் செல்கிறது.
- பலத்த மழை காரணமாக டெல்லியில் முக்கிய சாலைகளில் வெள்ளம் இடுப்பளவுக்கு இருந்தது.
- டெல்லியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல இடங்களில் நிவரண முகாம் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
புதுடெல்லி:
வடமாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முதல் தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய பெய்தது.
தொடர் மழை காரணமாக டெல்லியில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவிலும் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது.
பலத்த மழை காரணமாக டெல்லியில் முக்கிய சாலைகளில் வெள்ளம் இடுப்பளவுக்கு இருந்தது. இதனால் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்தபடி சென்றன. பெரும்பாலான இடங்களில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
டெல்லியில் தொடர்ந்து மழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் யமுனை நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
டெல்லியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பல இடங்களில் நிவரண முகாம் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
- மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, அந்த நபர் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு.
- கடந்த வாரத்தில் செனாப் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் மாவட்டத்தில் உள்ள 40 கிராமங்கள் மற்றும் பகுதிகளை மூழ்கடித்தது.
பாகிஸ்தான், லாகூரிலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள பஞ்சாபின் கசூர் மாவட்டத்தில் உள்ள கந்தா சிங் வாலா அருகே
சட்லஜ் ஆற்றின் வெள்ளத்தில் பாகிஸ்தானுக்குள் அடித்துச் செல்லப்பட்ட இந்தியக் குடிமகன் ஒருவர் உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மீட்புக்குழு 1122ன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், " 50 வயதுடைய இந்தியர் காது கேளாதவர் மற்றும் சைகை மொழி மூலம் தொடர்பு கொள்கிறார். அவர் ஒரு இந்து என்று கூறினார். வெள்ள நீர் அவரை இங்கு இழுத்துச் சென்றது" என்றார்.
இதைதொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, அந்த நபர் புலனாய்வு அமைப்பிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் சட்லஜ் ஆற்றில் கந்தா சிங் வாலா என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் கந்தா சிங் வாலாவை ஒட்டிய தாழ்வான பகுதிகள் பாதிக்கப்பட்டன.
இதற்கிடையே, "கடந்த வாரத்தில் செனாப் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் மாவட்டத்தில் உள்ள 40 கிராமங்கள் மற்றும் பகுதிகளை மூழ்கடித்தது. இதன் காரணமாக 48,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று பஞ்சாப் அரசு கூறியுள்ளது.
- மழை வெள்ளத்தால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள கிராமத்தை சூழ்ந்தது.
- நாய்க்குட்டிகள் இருப்பதை கண்டனர் குட்டிகளை மீட்டு தாய்நாயிடம் ஒப்படைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நந்திகம் அருகே உள்ள அய்த்தாபுரம் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி நதி ஒன்று உள்ளது.
நதிக்கரையை ஒட்டி உள்ள மாட்டுக்கொட்டகையில் நாய் ஒன்று குட்டிகளை ஈன்றது. நேற்று அதிகாலை தாய் நாய் உணவு தேடி மறுக்கரைக்கு வந்தது.
அப்போது திடீரென ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள கிராமத்தை சூழ்ந்தது.
இது குறித்து தகவல் அறிந்த நந்திகம் அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அங்கிருந்த தாய் நாய் அங்கும் இங்கும் அலறியபடி மறுக்கரையை நோக்கி குறைத்தது.
இதனை கண்ட போலீசார் படகு மூலம் மறுகரைக்கு சென்று பார்த்தனர். அங்கு இருந்த கொட்டகையில் நாய்க்குட்டிகள் இருப்பதை கண்டனர் குட்டிகளை மீட்டு தாய்நாயிடம் ஒப்படைத்தனர்.
தனது குட்டிகளை கண்ட நாய் போலீசாருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வாலை ஆட்டியபடி ஆனந்த கண்ணீர் வடித்தது.
- வெள்ளத்தில் சிக்கி 11 ஆயிரம் பேர் வரை பலியாகிவிட்டனர்.
- அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததாக கூறி 8 பேரும் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு சட்ட மந்திரி தெரிவித்துள்ளார்.
டொர்னா:
லிபியா நாட்டில் சமீபத்தில் புயல் , மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டெர்னாவில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த 2 அணைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி 11 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.
இந்த நிலையில் இந்த 2 அணைகள் உடைந்தது தொடர்பாக நீர் வளத்துறையை சேர்ந்த 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 7 பேர் முன்னாள் அதிகாரிகள். ஒருவர் தற்போது பணியாற்றி வருகிறார். இவர்களின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததாக கூறி 8 பேரும் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு சட்ட மந்திரி தெரிவித்துள்ளார்.
- பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள், ஊழியர்கள் ரெயில் போக்குவரத்தை தான் முழுமையாக நம்பி உள்ளனர்.
- நியூயார்க் நகர சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரவு முழுவதும் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்நகரமே முடங்கி போய்விட்டது. மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறு போல ஓடியது. விமான நிலையம் மற்றும் ரெயில் நிலைய சுரங்க பாதைகளை வெள்ளம் சூழ்ந்தது.
நியூயார்க் நகரை பொறுத்தவரை ரெயில் போக்குவரத்து மிக முக்கியமாக உள்ளது. சுமார் 420 ரெயில் நிலையங்களுடன் உலகின் மிகப்பெரிய வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள், ஊழியர்கள் ரெயில் போக்குவரத்தை தான் முழுமையாக நம்பி உள்ளனர்.
இந்த ரெயில் நிலையங்களில் பயணிகள் செல்வதற்காக சுரங்கபாதைகள் உள்ளன. பலத்த மழையால் இந்த சுரங்க பாதைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளநீரில் பயணிகள் நடந்து சென்றனர். ரெயில் நிலையங்களில் உள்ள நகரும் படிக்கட்டு மற்றும் மேற்கூரைகளில் இருந்து அருவி போல தண்ணீர் கொட்டியது. இதனால் ரெயில் நிலைய சுரங்கபாதைகள் அனைத்தும் மூடப்பட்டன. ரெயில்களும் ரத்து செய்யப்பட்டதால் பல மணி நேரம் பயணிகள் தவிப்புக்கு உள்ளானார்கள். விமான நிலையமும் மூடப்பட்டதால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தார்கள்.
நியூயார்க் நகர சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள்.பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.
- மழைக்கு 1,173 வீடுகள் சேதம் அடைந்துவிட்டது. 6,875 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், அவர்கள் அங்குள்ள 22 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
- வெள்ளத்தில் சிக்கி தவித்த 2,413 பேரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
காங்டாக்:
வடக்கு சிக்கிம் மாநிலம் லோனாக் ஏரி பகுதியில் கடந்த 4-ந்தேதி அதிகாலை மேகவெடிப்பால் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்தது.
இடைவிடாமல் கொட்டி தீர்த்த கன மழையால் அங்குள்ள தீஸ்தா ஆற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுங்தாங் பகுதியில் நீர் மின் திட்ட அணை உடைந்தது. இதன் காரணமாக மங்கன், கேங்டாக், நாம்லி,பாக்யாங் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. தீஸ்தா ஆற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ளத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பல பாலங்கள் இடிந்தது.
பர்டாங் என்ற இடத்தில் 23 ராணுவ வீரர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டனர். ராணுவ வாகனங்கள் மற்றும் ஆயுதங்களும் வெள்ளத்தோடு வெள்ளமாக சென்றது. இதையடுத்து மீட்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. மாயமானவர்களை தேடும் பணி நடந்தது. இதில் பலர் சடலமாக மீட்கப்பட்டனர்.
கடந்த 3 நாட்களில் சிக்கிமின் அண்டை மாநிலமான மேற்கு வங்காளம் தீஸ்தா ஆற்றில் இருந்து ராணுவ வீரர்கள் உள்பட 27 பேர் உடல்கள் மீட்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இதுவரை மொத்தம் வெள்ளத்தில் சிக்கி 53 பேர் இறந்துவிட்டதாக அம்மா நில அரசு தெரிவித்துள்ளது.
இன்னும் 140 -க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்கள் கதி என்ன வென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருவதாக அம்மாநில முதல் - மந்திரி பிரேம் சிங் தமாங் தெரிவித்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த மழைக்கு 1,173 வீடுகள் சேதம் அடைந்துவிட்டது. 6,875 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், அவர்கள் அங்குள்ள 22 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கி தவித்த 2,413 பேரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
லாச்சென் மற்றும் லாச்சுங் பள்ளத்தாக்கு பகுதியில் சிக்கி தவிக்கும் 3 ஆயிரம் சுற்றுலா பயணிகளை மீட்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பணியில் இந்திய விமான படையை சேர்ந்த ராணுவ ஹெலி காப்டர்கள் பயன்படுத்தபட்டு உள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
மங்கன் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் இன்னும் 5 நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.