என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உத்தரகாண்ட்"
- முதல்வரின் உத்தரவின் பேரில் புல்கிட் ஆர்யாவின் ரிசார்ட் இடிக்கப்பட்டது.
- பாஜக தலைவர் வினோத் ஆர்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்
ஹரித்வார்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆரியாவின் ஓய்வு விடுதி உள்ளது. இங்கு வரவேற்பாளராக பணியாற்றிய 19 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இளம்பெண்ணின் உடல் கால்வாய் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையை விரைவு படுத்தினர்.
விசாரணையில் அந்த பெண்ணின் கொலையில், அந்த பெண் வேலைபார்த்த விடுதியின் முதலாளியான புல்கிட் ஆர்யாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து புல்கித் ஆர்யா, விடுதி ஊழியர்கள் இரண்டு பேர் என மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். முதல்வரின் உத்தரவின் பேரில் நேற்று நள்ளிரவில் புல்கிட் ஆர்யாவின் ஓய்வு விடுதியும் இடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து பாஜக தலைவர் வினோத் ஆர்யா மற்றும் அவரது மற்றொரு மகன் அன்கிட் ஆர்யா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க, சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
- விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்தார்.
- கங்கோத்ரி, யமுனோத்ரியில் மே 3 ஆம் தேதி நடை திறக்கப்பட்டதன் மூலம் சார் தாம் யாத்திரை தொடங்கியது.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரை தொடங்கி உள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் சார்தாம் தலங்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், முன்னெப்போதும் இல்லாத அளவு யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் யமுனோத்ரி நோக்கி பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மலைப் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் சிதைந்தது. பேருந்தில் பயணித்த 22 பக்தர்கள் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்தார். மேலும் உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
6 மாத கால இடைவெளிக்குப் பிறகு கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களில் மே 3 ஆம் தேதி நடை திறக்கப்பட்டதன் மூலம் சார் தாம் யாத்திரை தொடங்கியது. அதன்பின்னர் கேதார்நாத்தில் மே 6 ஆம் தேதியும், பத்ரிநாத்தில் மே 8 ஆம் தேதியும் நடை திறக்கப்பட்டது.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பலாகச் சேர்ந்து தாக்குவது, கொலை செய்வது போன்ற வன்முறைச் சம்பவங்கள் உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில், அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, பசு வதையை தடுப்பதாகக் கூறிக்கொண்டு, கால்நடை வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் மீது கண்மூடித்தனமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இந்த, வன்முறைச் சம்பவங்களுக்கு சிலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த, சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்களை தடுக்க உத்தராகண்டில் உண்மையான பசு பாது காவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பசு சேவா கமிஷனின் தலைவர் என்.எஸ். ராவத் கூறுகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து பசு பதுகாவலர்களையும் தனியாக அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி பசு பாதுகாவலர்கள் அனைவருக்கும் விரைவில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
மேலும், மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் உள்ள அனைத்துப்பசு பாதுகாவலர்களுக்கும் விரைவில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக 6 மாவட்டங்களில் கணக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளாக அவர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்