search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.இரஞ்சித்"

    ரஜினியுடன் கபாலி, காலா என இரண்டு படங்களில் பணியாற்றிய பா.இரஞ்சித், கமல்ஹாசனுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன், அரசியல் கட்சி தொடங்கிய பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம், ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் மகேஷ் நாராயணன் இயக்க உள்ள மலையாள படத்துக்கும் அவர் திரைக்கதை அமைக்க உள்ளார்.

    கமல்ஹாசன், பா.இரஞ்சித்
    கமல்ஹாசன், பா.இரஞ்சித்

    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக பா.இரஞ்சித் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம், இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து முடித்த பின் அவர் பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினியுடன் கபாலி, காலா என இரண்டு படங்களில் பணியாற்றிய பா.இரஞ்சித், கமல்ஹாசனுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் `மான்ஸ்டர்' படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக பா.இரஞ்சித்துடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    `பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியை தொடர்ந்து "நீலம் புரொடக்‌ஷன்ஸ்" சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகி இருக்கும் `இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தை அதியன் ஆதிரை இயக்கியிருக்கிறார்.

    இந்த படத்தை தொடர்ந்து பா.இரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்க இருப்பதாகவும், ஆகஸ்டில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் சமூக கருத்துடன் குடும்ப படமாக உருவாக இருக்கிறது.



    எஸ்.ஜே.சூர்யா தற்போது அமிதாப் பச்சனுடன் இணைந்து `உயர்ந்த மனிதன்' படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் `மான்ஸ்டர்' படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இயக்குநர் பா.இரஞ்சித்திடம் பணியாற்றிய சுரேஷ் மாரி இயக்கவிருக்கும் புதிய படத்தை ரஞ்சித் தயாரிக்க, நாயகனாக நடிக்க கலையரசன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Kalaiyarasan #AravindAkash
    நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியாகிய பரியேறும் பெருமாள் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்ததாக இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தை தயாரித்துள்ளார்.

    இந்த நிலையில், நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஷரத்தா என்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரிக்கின்றனர்.


    இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் இன்று துவங்கிய நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 

    பா.இரஞ்சித்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் மாரி இந்த படத்தை இயக்குகிறார். கலையரசன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். #Kalaiyarasan #AravindAkash #SureshMari #PaRanjith

    சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘பரியேறும் பெருமாள்’, ‘96’ சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டது. அமைச்சர் கடம்பூர் ராஜு இதில் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு விருது வழங்கினார் #CIFF #ChennaiInternationalFilmFestival
    சென்னையில் 16-வது சர்வதேச திரைப்படவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது.

    இந்தோசினி அப்ரிசியே‌ஷன் பவுண்டே‌ஷன் சார்பில் கடந்த 8 நாட்கள் நடந்த இந்த திரைப்பட விழாவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 150-க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

    சென்னையில் தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, தாகூர் திரைப்பட மையம், ரஷ்யக் கலாச்சார மையம் ஆகிய 6 அரங்குகளில் படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. அமைச்சர் கடம்பூர்ராஜூ இதில் கலந்து கொண்டு சிறந்த படங்களுக்கு பரிசுகளை அளித்தார்.

    சிறந்த தமிழ்ப் படங்கள் வரிசையில் ‘96’, ‘அபியும் அனுவும்’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘ஜீனியஸ்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘இரும்புத்திரை’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மெர்குரி’, ‘பரியேறும் பெருமாள்’, ‘ராட்சசன்’, ‘வட சென்னை’, ‘வேலைக்காரன்’ ஆகிய 12 படங்கள் திரையிடப்பட்டன. சிறப்புத் திரையிடலாக ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரையிடப்பட்டது.



    ‘பரியேறும் பெருமாள்’, ‘96’ ஆகியவை சிறந்த படங்களாகத் தேர்வு செய்யப்பட்டன. ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்துக்கு ரூ.1 லட்சமும், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ரூ.2 லட்சமும் பரிசு அளிக்கப்பட்டது.

    விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படமும் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. அந்த படத்தின் இயக்குனர் பிரேம்குமாருக்கும், தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.

    ‘வட சென்னை’ படத்தின் இயக்கத்துக்காவும், ‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் தயாரிப்புக்காகவும் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நடுவர் குழுவின் சிறப்புப் பரிசு அளிக்கப்பட்டது. அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.

    இது தவிர சிறந்த மாணவர் பட விருது வரிசையில் ஏஞ்சலினா படமும், ஈஸ்ட்மேன் கிராமம் படமும் தேர்வு செய்யப்பட்டன. ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வரும் ‘அமிதாப் பச்சன் யூத் ஐகான்’ விருது இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு வழங்கப்பட்டது. #CIFF #ChennaiInternationalFilmFestival #PariyerumPerumal #96The Movie

    கபாலி, காலா படங்களை தொடர்ந்து பா.இரஞ்சித் அடுத்ததாக சுதந்திர போராட்ட தியாகி பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தியில் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். #PaRanjith #BirsaMunda
    கபாலி, காலா படத்திற்கு பிறகு பா.இரஞ்சித் தனது தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலம் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தார். இந்த நிலையில், அவர் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

    அந்த படம் இந்திய சுதந்திர போராட்டத் தியாகியும், பழங்குடியின மக்களின் சுதந்திரதத்திற்கு போராடிய பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. பியாண்ட் தி கிளெவ்ட்ஸ் படத்தை தயாரித்த நமா பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.



    படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், இயக்குநர் பா.இரஞ்சித் தனது குழுவினருடன் பீகார், ஜார்க்கண்ட் பகுதியில் பிர்சா முண்டா பற்றிய, மக்களின் கருத்துக்களை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. 

    அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படமும் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #PaRanjith #BirsaMunda

    அசுரவதம் படம் ரிலீசாகியிருக்கும் நிலையில், அட்டகத்தி படத்திற்கு பிறகு ரஞ்சித்துடன் இணையாதது, ஐஸ்வர்யாவுடனான நட்பு என தனது சினிமா அனுபவங்கள் குறித்து நடிகை நந்திதா பகிர்ந்து கொண்டார். #NanditaSwetha
    அட்டகத்தி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நந்திதா, தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் மட்டுமே நடிக்கிறார். அவரிடம் பேசியதில் இருந்து...

    ஐஸ்வர்யா ராஜேஷுடனான நட்பு எப்படி தொடர்கிறது?

    அட்டகத்தி படத்தில் தான் நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்தோம். அந்த நட்பு அப்படியே நீடிக்கிறது. அவரது வளர்ச்சி ஒரு தோழியாக எனக்கு பெருமையாக இருக்கிறது. நாங்கள் இருவருமே எவ்வளவு கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்தோம். கதாநாயகி ஆனோம் என்பது இருவருக்குமே தெரியும். எனவே எங்களிடம் எந்த பொறாமையும் கிடையாது.

    தொடர்ந்து அம்மா வேடங்களில் நடித்தால் இமேஜ் பாதிக்காதா?

    இமேஜ் பற்றிய கவலையோ, பயமோ எனக்கு இல்லை. அசுரவதம் படத்தின் கதையே முதலில் ஐஸ்வர்யாவுக்கு தான் சென்றது. அவர் என்னிடம் படத்தை பற்றியோ, கதை பற்றியோ எதுவும் கூறாமல் நீ அம்மாவாக நடிப்பாயா? என்று மட்டும் கேட்டார். நடிக்க தயார் என்றதும் கதை கேட்க சொன்னார். நான் எந்த வேடத்திலும் நடிக்க தயார். அடுத்து டாணா என்ற படத்தில் கவர்ச்சியான மாடர்ன் கதாபாத்திரத்தில் ஐடி பெண்ணாக நடிக்கிறேன். வணங்காமுடியில் போலீஸ் வேடம். கதையில் நமது கதாபாத்திரம் முக்கியமானதா, இல்லையா என்பதை தான் பார்க்கிறேன்.



    அட்டகத்திக்கு பிறகு ரஞ்சித் உங்களை நடிக்க வைக்கவில்லையே?

    அதன் பிறகான அவர் படங்களில் எனக்கு ஏற்ற கதாபாத்திரம் இல்லை. எனக்கே அது தோன்றியது. என்னை அறிமுகப்படுத்தியதே அவர் தான். எனவே எனக்கு பொருத்தமான வேடம் இருந்தால் கண்டிப்பாக அழைப்பார். இன்னமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.

    சென்னையில் எப்போது வீடு வாங்கி செட்டில் ஆகப்போகிறீர்கள்?

    எப்போது சென்னையில் நான் நடிக்கும் 4 படங்களுக்கான படப்பிடிப்பு நடக்கிறதோ, அப்போது வாங்கி செட்டில் ஆகிவிடுவேன்.

    காதல்?

    அதற்கு எல்லாம் நேரமே இல்லை. தொடர்ந்து படப்பிடிப்புகளில் தான் இருக்கிறேன். #NanditaSwetha

    ×