search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பும்ரா"

    இந்திய 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக பும்ராவை நியமித்தால் பொருத்தமாக இருக்கும் என்று ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார். அப்போதிருந்தே, நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் கேப்டனாக யார் பொறுப்பேற்க வேண்டும் என்று விவாதித்து வருகின்றனர். 

    துணை கேப்டனான ரோகித் சர்மாவின் பெயர் அதிகமாக பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, “இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், லோகேஷ் ராகுலின் பெயர்கள் அடிபடுகின்றன. என்னை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை இந்த பதவிக்கு நியமித்தால் பொருத்தமாக இருக்கும். 

    அவர் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். போட்டியை நன்றாக புரிந்து செயல்படுகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார். 
    ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பும்ரா ஆகியோர் முதல் இடத்தில் உள்ளனர்.
    உலகக்கோப்பை போட்டியையொட்டி வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டு உள்ளது.

    பேட்டிங்கில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் இடத்தையும், பந்து வீச்சில் பும்ரா முதல் இடத்திலும் உள்ளனர். ரோகித் சர்மா 20-வது இடத்தை பிடித்து உள்ளார். வேறு யாரும் ‘டாப் 10-ல்’ இடம் பெறவில்லை.

    பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 7-வது இடத்திலும், யசுவேந்திர சாஹல் 8-வது இடத்திலும் உள்ளனர்.
    விராட் கோலி ரன் குவிக்க ஆரம்பித்துவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா கூறியுள்ளார்.
    லண்டன்:

    உலககோப்பை போட்டி தொடர் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா கூறியதாவது:-

    உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் விராட் கோலி மனிதரே அல்ல. அவர் ஒரு ரன் மிஷின். கோலி ரன் குவிக்க ஆரம்பித்துவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். அவரது ஆட்ட திறன் 80 மற்றும் 90 ஆண்டுகளில் விளையாடிய வீரர்களை நினைவுப்படுத்துகிறது.

    என்னை பொறுத்தவரை சச்சின் தெண்டுல்கர் என்றுமே மிகச்சிறந்த வீரர். அவருடன் கோலியை ஒப்பிட முடியாது. ஆனால் கோலியிடம் சிறப்பான திறமைகள் பல உள்ளன. இளம் வீரர்களுக்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பார்.

    அவரது தலைமையில் உலககோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன்.

    இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் வேகம் அனைத்து அணிகளையும் உற்றுநோக்க வைத்துள்ளது. தற்போது வரை மற்ற பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ள வழிகளை தேடி கொண்டிருக்கிறார்கள்.

    நான் அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள நிலை இருந்தால் எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு விட்டுவிடுவேன்.

    தற்போது பும்ரா சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இங்கிலாந்து உலகக்கோப்பையில் இந்தியாவின் முன்னணி வீரரான பும்ரா தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ஜெப் தாம்சன் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை தொடர் குறித்து நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜெப் தாம்சன் கூறியதாவது:-

    இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவார். அவர் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் தனது வேகத்தின் மூலம் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கிறார்.

    மேலும் விதவிதமான பந்துவீச்சை மாற்றி வீசுகிறார். அவரது பந்துவீசும் முறை கணிக்க முடியாத அளவில் உள்ளது. பும்ராவின் பந்துவீச்சை எந்த பேட்ஸ்மேனும் சரியாக கவனித்தனர் என்று நான் பார்க்கவில்லை.

    பும்ராவுடன் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடாவும் கவனிக்கப்படக் கூடியவர். அவரும் சிறப்பான நிலையில் உள்ளார்.



    அதேபோல் ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் பார்மில் இல்லாவிட்டாலும் அவர் அதில் இருந்து மீண்டு சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.

    அவர் மட்டும் நன்றாக பந்துவீச ஆரம்பித்துவிட்டால் அவர்தான் உலகிலேயே மற்றவர்களைவிட சிறந்த பந்து வீச்சாளராக இருப்பார். அதற்கு அவர் வேகத்தை கூட்ட வேண்டும். அதேவேளையில் சரியான அளவிலும் பந்துவீச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    உலகக்கோப்பையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என்று மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.

    இந்த அணியில் உள்ள விராட் கோலி மற்றும் பும்ரா முக்கிய துருப்புச்சீட்டுக்கள். அவர்கள் இருவரும் இல்லாமல் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியாது என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மைக்கோல் ஹோல்டிங் கூறுகையில் ‘‘விராட் கோலி, பும்ரா ஆகிய இரண்டு பெயர்களை நான் குறிப்பிடுகிறேன். குவாலிட்டி வீரர்களான இருவராலும் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியும்.



    இங்கிலாந்து அணி அதன் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. சமீப காலமாக அவர்கள் ஒருநாள் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அவர்கள் உண்மையிலேயே பேலன்ஸ் அணி.

    இந்தியா சிறப்பாக விளையாடுகிறது. மேலும், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அவர்கள் சிறந்த வீரர்களை பெற்றுள்ளது. நெருக்கடியான நிலையில் எப்படி விளையாட வேண்டும் என்று சாம்பியன் அணிக்கு தெரியும். இரண்டு அணிகளில் ஒன்று கோப்பையை வென்றால் நான் ஆச்சர்யம் அடைய மாட்டேன்’’ என்றார்.
    இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வீரராக திகழும் புஜாரா, சவுராஷ்டிரா பிரிமீயர் லீக்கில் ஜலாவாத் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். #Pujara
    இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் புஜாரா. நிதானமாக விளையாடும் சவுராஷ்டிராவைச் சேர்ந்த இவரை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட தேர்வுக்குழு ஆலோசிப்பதில்லை.

    ஐபிஎல் தொடரில் கூட இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. என்னால் அதிரடியாக விளையாட முடியும், என்னை எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

    இந்நிலையில் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் பிரிமீயர் லீக் தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த லீக்கில் ஜலாவாத் ராயல்ஸ் அணி பங்கேற்கிறது. இந்த அணி புஜாராவை எடுத்துள்ளது. இதன்மூலம் டி20 லீக்கில் புஜாரா தனது திறமையை வெளிப்படுத்த இருக்கிறார்.
    கிரிக்கெட் வீரர்கள் ஜடேஜா, ஷமி, பும்ரா மற்றும் பூனம் யாதவ் ஆகியோர், அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். #ArjunaAward #BCCI
    புதுடெல்லி:

    விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனை படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கி கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு சார்பில் அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, வில்வித்தையில் சிறந்த வீரரான அர்ஜுனனின் வெங்கலச் சிலையோடு, ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் கொடுக்கப்படுகிறது.

    இந்த விருதுக்கு அந்தந்த விளையாட்டு அமைப்புகள் சார்பில் தகுதிவாய்ந்த  வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.



    அவ்வகையில் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு, கிரிக்கெட் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி மற்றும் கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ் ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. #ArjunaAward #BCCI
    டி20 கிரிக்கெட்டில் பும்ராதான் தலைசிறந்த பவுலர் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாப்ரா ஆர்சர் தெரிவித்துள்ளார். #Bumrah
    இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்து வீச்சில் அசத்தி வருகிறார். அதேபோல் டி20 லீக் தொடரில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸில் பிறந்து, தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் ஜாப்ரா ஆர்சர் தற்போது ஏராளமான டி20 லீக்கில் விளையாடி வருகிறார். டி20 லீக்கில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமைக்குரிய வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.

    82 போட்டிகளில் ஓவருக்கு சராசரியாக 7 ரன்களுக்கு கீழ் கொடுத்து 105 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ள ஜாப்ரா ஆர்சரிடம் டி20 கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளர்கள் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது.



    இதற்கு ஜாப்ரா ஆர்சன் பதிலளிக்கையில் ‘‘டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த பந்து வீச்சாளர் என்றால் முதலிடம் பும்ராவிற்குதான். 2-வது இடம் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கானுக்கு கொடுப்பேன். நான், பும்ரா, ரஷித் கான் ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்கள்.

    பும்ரா அவரது பந்து வீச்சு ஸ்டைலில் யார்க்கர் வீசுவது சிறப்பானது. அவரது ஆக்சனில் ‘ஸ்லோ’ டெலிவரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லாவித பந்து வீச்சுக்கும் ஒரே மாதிரியான ஆக்சன்தான் இருக்கும். இதனால் ‘ஸ்லோ’ பந்து வீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினம்’’ என்றார்.
    மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ராவுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் கவலைப்படும்படி இல்லை என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #JaspritBumrah


    ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ரா தோள்பட்டையில் காயம் அடைந்தார். வேகப்பந்து வீச்சாளரான அவர் மே மாதம் நடக்கும் உலககோப்பை போட்டியில் முக்கிய துருப்பு சீட்டாக இருப்பார் என்ற நிலையில் காயம் அடைந்ததால் கிரிக்கெட் வாரியம் கவலை அடைந்தது.

    காயத்தின் தன்மை குறித்து பும்ராவுக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இதற்கிடையே, கிரிக்கெட் வாரிய தரப்பில் கூறும்போது, பும்ராவுக்கு தோள்பட்டையில் ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் கவலை கொள்ளும்படியான காயம் இல்லை. கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்த அனைத்து ஸ்கேன்களும் பும்ராவுக்கு செய்யப்பட்டது என தெரிவித்தனர். #JaspritBumrah

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீரர் பும்ரா, தொடக்க வீரர் ரோகித்சர்மா புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. #INDvAUS #RohitSharma #JaspritBumrah
    பெங்களூர்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது. ஏனென்றால் தோற்றால் தொடரை இழந்துவிடும். அதே நேரத்தில் ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா இன்றைய ஆட்டத்திலும் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் வேகப்பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா, தொடக்க வீரர் ரோகித் சர்மா புதிய சாதனை படைக்க வாய்ப்பு இருக்கிறது.

    பும்ரா கடந்த ஆட்டத்தில் 16 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் 50-வது விக்கெட்டை தொட்டு 2-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

    பெங்களூர் போட்டியில் பும்ரா 2 விக்கெட் கைப்பற்றினால் 20 ஓவர் சர்வதேச ஆட்டத்தில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். அஸ்வின் 46 ஆட்டத்தில் 52 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். பும்ரா 41 ஆட்டத்தில் 51 விக்கெட் கைப்பற்றி அதற்கு அடுத்த நிலையில் உள்ளார்.

    ரோகித் சர்மா 94 ஆட்டத்தில் 102 சிக்சர்கள் அடித்து சர்வதேச அளவில் 2-வது இடத்தில் உள்ளார். கிறிஸ்கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), மார்டின் குப்தில் (நியூசிலாந்து) தலா 103 சிக்சர்களுடன் முதல் இடத்தில் உள்ளனர்.

    விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியில் ரோகித்சர்மா 2 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 5 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இன்றைய போட்டியிலாவது அவர் சிறப்பாக விளையாடி 2 சிக்சர் அடித்து புதிய சாதனை நிகழ்த்துவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #INDvAUS #RohitSharma #JaspritBumrah
    ‘சில நாட்களில் இறுதி கட்ட பந்து வீச்சு நாம் நினைத்த மாதிரி அமையாமலும் போகும்’ என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்தார். #INDvAUS #Bumrah
    விசாகப்பட்டினம்:

    விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. 19-வது ஓவரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் இந்திய அணி வெற்றியை தன்வசப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    ஆனால் கடைசி ஓவரில் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 2 பவுண்டரிகள் உள்பட 14 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் இந்திய அணி வெற்றி வாய்ப்பை தாரை வார்த்தது. எனவே உமேஷ் யாதவின் கடைசி ஓவர் பந்து வீச்சு குறித்து பலரும் கடும் விமர்சனம் செய்தனர்.

    தோல்விக்கு பிறகு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடைசி ஓவரில் இதுபோல் நடக்க தான் செய்யும். எந்தவொரு சூழ்நிலையிலும் கடைசி கட்ட பந்து வீச்சு எப்பொழுதும் கடினமானது தான். இறுதி கட்ட பந்து வீச்சு இரண்டு வகையாகவும் போகும். உங்களது பந்து வீச்சில் சிறப்பாக முயற்சித்தாலும், தெளிவான திட்டத்துடன் பந்து வீசினாலும் சில நாட்களில் நமக்கு பலன் கிடைக்கும். சில நாட்களில் நினைத்த மாதிரியான பலன் கிடைக்காமலும் போகக்கூடும். எனவே அது பற்றி கவலைப்படக்கூடாது. நெருக்கமான போட்டி நிலவிய இந்த ஆட்டத்தில் எங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்க முயற்சித்தோம். ஆனால் அதற்கு தகுந்த பலன் கிடைக்கவில்லை.

    ‘டாஸ்’ வென்றது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக அமைந்தது. வெற்றி இலக்கு சிறியதாக இருந்ததால் ஆஸ்திரேலிய அணி ஒரு ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து விட்டால் அந்த ஓவரில் அடுத்த பந்துகளை ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டாத நிலை இருந்தது. நாங்கள் முதலில் ஆடியதால் நல்ல ஸ்கோரை எடுக்க அடித்து ஆட வேண்டிய நிலையில் இருந்தோம். இது தான் இந்த ஆட்டத்தில் இரண்டு அணிக்கும் இடையிலான வித்தியாசமாகும்.

    இந்த ஆடுகளத்தில் 140 முதல் 145 ரன்கள் எடுத்து இருந்தால் மிகவும் நல்ல ஸ்கோராக இருந்து இருக்கும். உயரம் குறைவாக பந்து பவுன்ஸ் ஆனதால் பெரிய ஷாட் அடிப்பது கடினமாகி விட்டது. இதுபோன்ற ஆடுகளத்தில் சேசிங் செய்வது கடினமானதாகும். 15 முதல் 20 ரன்கள் நாங்கள் குறைவாக எடுத்தாலும் போட்டி அளிக்கக்கூடிய ஸ்கோரை எட்டினோம். நாங்கள் நினைத்ததை விட இரண்டு, மூன்று விக்கெட்டுகளை கூடுதலாக இழந்து விட்டோம். இந்த ஆடுகளத்தில் அதிக ஸ்கோர் எடுப்பது என்பது கடினமானதாகும். நாங்கள் எல்லா வகையிலும் சிறப்பான முயற்சி எடுத்தோம். டோனியும் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் கிரிக்கெட்டில் இது போல் நடக்க தான் செய்யும்.

    லோகேஷ் ராகுல் நன்றாக பேட்டிங் செய்தார். புதிய ஷாட்களை அவர் விளையாடினார். அவரை போன்ற சிறந்த வீரர் பார்முக்கு திரும்பி இருப்பது அணிக்கு நல்ல விஷயமாகும். கம்மின்ஸ் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி அடித்ததுடன், கடைசி பந்தில் 2 ரன் சேர்த்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார். அவர் நம்பிக்கையுடன் விளையாடக்கூடிய திறமையான வீரர்.

    இவ்வாறு ஜஸ்பிரித் பும்ரா கூறினார்.

    43 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் அளித்த பேட்டியில், ‘உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெறுவேனா?. எந்த வரிசையில் நான் பேட்டிங் செய்வேன் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்வேன். இந்த ஆட்டத்தை போல் வரும் ஆட்டங்களிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற முடியும்.

    இந்த ஆண்டில் வரும் ஆட்டங்களில் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இங்கு இதுபோன்ற நெருக்கமான போட்டிகளில் நாங்கள் நிறைய முறை தோல்வியை சந்தித்து இருக்கிறோம். நெருக்கமான இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நாங்கள் உத்வேகத்தை திரும்ப பெற்றுள்ளோம். கடைசி ஓவரில் எங்களுக்கு நெருக்கடி இருந்தது. கம்மின்ஸ், ஜெயே ரிச்சர்ட்சன் அருமையாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். இந்த போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று இருப்பது எங்களுக்கு சிறப்பான ஊக்கமாகும். இந்த உத்வேகத்தை தொடர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    உலக கோப்பை போட்டிக்கு தயாராகுவதில் எங்களது ஆரம்பம் நல்ல அறிகுறியாக அமைந்துள்ளது. டோனி உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்றாலும் இந்த ஆடுகளத்தில் பெரிய ஷாட் ஆடுவது என்பது யாருக்கும் கடினமானது தான்’ என்று தெரிவித்தார். #INDvAUS #Bumrah
    டோனி 37 பந்துகளை சந்தித்து 29 ரன்கள் மட்டுமே எடுத்து, கடைசி நேரத்தில் ஒரு ரன் எடுக்க முயற்சி செய்யவில்லை என்பதே தோல்விக்குக் காரணம் என விமர்சிக்கப்படுகிறது #SAvSL
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தியா முதல் 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் சேர்த்திருந்தது. 3-வது விக்கெட்டாக ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததும் டோனி களம் இறங்கினார்.

    அதன்பின் இந்தியாவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. டோனி 37 பந்துகளை சந்தித்து 29 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் ஒரு சிக்சர் மட்டுமே அடித்தார். கடைசி நான்கு ஓவர்களில் பெரும்பாலும் ஒரு ரன்னிற்கு அவர் ஓடவில்லை.

    இதனால் அவர் மீது விமர்சனம் எழும்பியுள்ளது. இந்நிலையில் மேக்ஸ்வெல், பும்ரா ஆகியோர் டோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

    டோனி ஆட்டம் குறித்து பும்ரா கூறுகையில் ‘‘நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தோம்.  பாதாளத்திற்குச் சென்ற ஆட்டத்தை திரும்பவும் நல்ல நிலைமைக்கு எடுத்துச்செல்ல டோனி முயற்சி செய்தார்.



    நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் என்று நினைக்கிறேன். ஆனால், நாங்கள் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு கடும் நெருக்கடி கொடுத்தோம். ஆகவே, டோனி அவரது திட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்ததாக நினைக்கிறேன்’’ என்றார்.

    ‘‘டோனி 37 பந்தில் 29 ரன்கள் அடித்தது போதுமான ஸ்டிரைக்-தான். ஆடுகளத்தை பொறுத்த வரைக்கும் எந்தவொரு பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் ரன் குவிக்க இயலாத வகையில் கடினமாக இருந்தது. டோனி உலகத்தரம் வாய்ந்த பினிஷர். நடு பேட்டில் பந்தை மீட் செய்வதற்காக டோனி கடினமாக முயற்சி செய்தார்.



    இறுதியாக கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தார். கடைசி 7 ஓவரில் அது மட்டும்தான் பவுண்டரி கோட்டை தாண்டியது. இதில் இருந்தே ஆடுகளம் எப்படி இருந்திருக்கும் என்பது தெரியவரும். கடைசி சில ஓவர்களுக்கு முன் டோனி இந்த சிக்ஸை அடித்திருந்தால், அது மிகப்பெரிய முயற்சியாக இருந்திருக்கும்’’ என்றார்.
    ×