search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பும்ரா"

    வங்காள தேசம் 65 ரன்கள் அடிப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது. ஜடேஜா அபாரமாக பந்து வீசினார். #AsiaCup2018 #INDvBAN
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டார்.

    லிட்டோன் தாஸ், நஸ்முல் ஹுசைன் ஷான்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 5-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் லிட்டோன் தாஸ் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் நஸ்முல் ஹுசைன் 7 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    தொடக்க விக்கெட்டுக்களை 16 ரன்னுக்குள் இருவரும் வீழ்த்தினார்கள். அதன்பின் ஷாகிப் அல் ஹசன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த நினைக்கும்போது ஜடேஜா பந்தில் 17 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இலங்கைக்கு எதிராக சதம் அடித்த முஷ்பிகுர் ரஹிமை 21 ரன்னிலும், முமகது மிதுனை 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஜடேஜா வெளியேற்ற வங்காள தேசம் 65 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்து திணறியது.

    6-வது விக்கெட்டுக்கு மெஹ்முதுல்லா உடன் மொசாடெக் ஹுசைன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி வருகிறது. வங்காள தேசம் 25 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
    இந்தியாவிற்கு எதிராக பேட்டிங் செய்து வரும் பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் அடித்துள்ளது. #INDvPAK #PAKvIND #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் இடையிலான குரூப் பிரிவு ஆட்டம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷர்துல் தாகூர், கலீல் அகமது நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா, பும்ரா சேர்க்கப்பட்டனர்.

    பாகிஸ்தான் அணியின் இமாம்-உல்-ஹக் பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் ஓவரில் பாகிஸ்தான் இரண்டு ரன்கள் எடுத்தது. 2-வது ஓவரை பும்ரா வீசினார். பகர் சமான் இந்த ஓவரை சந்தித்தார். இந்த ஓவரில் பகர் சமான் ரன்ஏதும் அடிக்கவில்லை. இதனால் மெய்டன் ஓவராக அமைந்தது.

    3-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை முன்னால் வந்து அடிக்க முயன்றார் இமாம்-உல்-ஹக். பந்து பேட்டின் முனையில் உரசி டோனியிடம் தஞ்சம் புகுந்தது. இதனால் பாகிஸ்தான் இரண்டு ரன்களுக்குள் முதல் விக்கெட்டை இழந்தது. 2-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம் களம் இறங்கினார். இந்த அடுத்த ஐந்து பந்துகளையும் தடுத்து ஆடினார். இதனால் புவனேஸ்வர் குமார் மெய்டனுடன் விக்கெட் வீழ்த்தினார்.

    5-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பகர் சமான் சாஹலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் 3 ரன்னுக்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.



    3-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம் உடன் சோயிப் மாலிக் ஜோடி சேர்ந்தார். 6-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் சோயிப் மாலிக் ஒரு பவுண்டரி அடித்தார். 7-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஒவரில் பாபர் ஆசம் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். 9-வது மற்றும் 20-வது ஓவரில் பாகிஸ்தான் பவுண்டரி ஏதும் அடிக்கவில்லை.

    பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்துள்ளது. மாலிக் 10 ரன்னுடனும், பாபர் ஆசம் 13 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    ஆசிய கோப்பை குரூப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்ற பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #INDvPAK #PAKvIND #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் இடையிலான குரூப் பிரிவு ஆட்டம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் 4.30 மணிக்கு சுண்டப்பட்டது. ரோகித் சர்மா காய்ன் சுண்ட் சர்பிராஸ் அகமது டெய்ல் என அழைத்தார்.

    சர்பிராஸ் அழைத்தபடி டெய்ல் விழ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் ஷர்துல் தாகூர், கலீல் அகமது நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா, பும்ரா சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ஓவல் டெஸ்டில் சதம் அடித்த அலஸ்டைர் குக் ‘ஓவர் த்ரோ’ மூலம் ஐந்து ரன்கள் பெறுவதற்கு காரணமாக இருந்த பும்ராவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். #AlastairCook
    இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க பேட்ஸ்மேனும் ஆன அலஸ்டைர் குக் இன்றுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். நேற்று இந்தியாவிற்கு எதிரான ஓவல் டெஸ்டில் தனது கடைசி இன்னிங்சை விளையாடினார்.

    ஒரு கட்டத்தில் 96 ரன்கள் அடித்திருந்தார். இன்னும் நான்கு ரன்கள் அடித்தால் சதத்துடன் விடைபெறலாம் என்ற நெருக்கடியில் குக் களத்தில் நின்றிருந்தார். அப்போது ஜடேஜா வீசிய பந்தை ஆஃப் சைடு அடித்தார். அது பும்ரா கைக்கு சென்றது. அப்போது குக் ஒரு ரன்னிற்காக மெதுவாக நடந்து வந்தார். ஏறக்குறைய க்ரீஸை நெருங்கி விட்டார்.

    அந்த சமயத்தில் மின்னல் வேகத்தில் பும்ரா ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்தார். இதை ஜடேஜா சற்றும் எதிர்பார்க்கவில்லை. பந்து அவரை நின்றிருந்த இடத்தை விட்டு வெகு தொலையில் சென்றது. இதனால் ஓவர் த்ரோ மூலம் பந்து பவுண்டரியை அடைந்தது.

    97 ரன்னில் நின்றிருந்த குக் எந்தவித சிரமமின்றி சதம் (101) அடித்தார். நேற்றைய ஆட்ட நேரம் முடிந்த பின்னர் அலஸ்டைர் குக் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சதம் அடிக்க வேண்டும் என்ற தலைவலியை பும்ரா குறைத்துவிட்டார். அவருக்கு நன்றி என்று தெரிவித்தார்.



    இதுகுறித்து அலஸ்டைர் குக் கூறுகையில் ‘‘நான் 97 ரன்களுக்காக ஒரு ரன் அடித்துவிட்டு வரும்போது, மேலும் மூன்று ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது. பும்ரா கைக்கு பந்து சென்றதும், அவர் கீப்பரிடம் த்ரோ செய்வார் என்று நினைத்தேன். ஆனால் பந்தை வேகமாக வீசினார். அப்போது நான் ஜடேஜாவை பார்த்தேன். அவர் பந்து செல்லும் திசைக்கு அருகில் இல்லை. அப்போது சதம் நெருங்குகிறது என்று நினைத்துக் கொண்டேன்.

    ஓவர் த்ரோ என்னுடைய தலைவலியை தீர்த்துவிட்டது. இந்த தொடர் முழுவதும் பும்ரா ஏராளமான தலைவலி தந்தார். தற்போது ஓவர் த்ரோ மூலம் ஒரு வாய்ப்பு தந்தார். இதற்கான நான் அவருக்கு நன்றி சொல்கிறேன்’’ என்றார்.
    இங்கிலாந்து கடைநிலை பேட்ஸ்மேன்களுக்கு எதிரான திட்டம் சரியான வேலை செய்யவில்லை என்று வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் இந்தியாவின் அபார பந்து வீச்சால் முதல் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 181 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்திருந்தது.

    நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது டெய்ல்எண்டர்ஸ்-களை வைத்து ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் கடைசி 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துவிட்டது. இதுதான் இந்தியாவிற்கு பின்னடைவாக அமைந்துவிட்டது. பட்லர் 89 ரன்களும், அடில் ரஷித் 15 ரன்களும், ஸ்டூவர்ட் பிராட் 38 ரன்களும் அடித்தனர்.

    இந்நிலையில் டெய்ல்எண்டர்ஸ் பெட்ஸ்மேன்களுக்கு எதிராக எங்களது திட்டத்தை செயல்படுத்த தவறிவிட்டோம் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து பும்ரா கூறுகையில் ‘‘கூடுதலாக ஒரு பந்து வீச்சாளருடன் களம் இறங்கும்போது, அது சில வசதிகளை ஏற்படுத்தும். நான்கு பந்து வீச்சாளர்களுடன் டெய்ல்எண்டர்ஸ்-க்கு பந்து வீசும்போது அதிக ஓவர்கள் வீசிய வேண்டியுள்ளது. ஏனென்றால், உடனடியாக அடுத்த ஸ்பெல் வீச வேண்டியுள்ளது.

    லோ-ஆர்டன் பேட்ஸ்மேன்களுக்கு என ஸ்பெஷல் திட்டம் ஏதும் நாங்கள் வகுக்கவில்லை. எங்களுடைய திட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தோம். ஆனால், அது சரியாக வேலை செய்யவில்லை.’’ என்றார்.
    அலஸ்டைர் குக் தனது கடைசி டெஸ்டில் ரகானே கேட்ச் விட்டதால் அரைசதம் அடித்து 71 ரன்னில் ஆட்டமிழந்தார். #ENGvIND #AlastairCook
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    இந்த டெஸ்டோடு அலஸ்டைர் குக் ஓய்வு பெறுகிறார். இந்த தொடரில் அலஸ்டைர் குக் நான்கு டெஸ்டில் 7 இன்னிங்சில் பேட்டிங் செய்துள்ளார். ஆனால் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கும் அலஸ்டைர் குக் சதம் அடித்து பெருமிதத்துடன் விடைபெற வேண்டும் என்று இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் விரும்பினார்கள்.



    மதிய உணவு இடைவேளை வரை அலஸ்டைர் குக் ஆட்டமிழக்காமல் 77 பந்தில் 37 ரன்கள் எடுத்திருந்தார். மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. இஷாந்த் ஷர்மா வீசிய ஆட்டம் தொடங்கிய 3-வது ஓவரில் (30.5) 5-வது பந்தை குக் எதிர்கொண்டார். குக் அடித்த பந்து கல்லி திசையில் நின்றிருந்த ரகானே கைக்கு நேராக சென்றது. ஆனால் ரகானே பந்தை பிடிக்க தவறினார்.

    இதனால் அலஸ்டைர் குக் 37 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பினார். அதன்பின் 139 பந்தில் 4 பவுண்டரியுடன் அரைசதம் அடித்த அலஸ்டைர் குக், இறுதியாக 190 பந்தில் 71 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
    இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் நாங்கள் எதிர்பார்த்தை விட ஆடுகளத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆனது என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார். #ENGvIND #JaspritBumrah
    சவுதம்டன்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று சவுதம்டனில் தொடங்கியது.

    டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்தியாவின் வேகப்பந்து வீச்சில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. 86 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்தது. அதன்பின் மொய்ன் அலி, சாம் குர்ரன் ஜோடி சரிவில் இருந்து மீட்டது.

    சாம்குர்ரன் 78 ரன்னும், மொய்ன்அலி 40 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து 76.4 ஓவரில் 246 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    இந்திய தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும், இஷாந்த்சர்மா, முகமது சமி, அஸ்வின் தலா 2 விக்கெட்டும், பாண்ட்யா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் விளையாடிய இந்தியா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்து இருந்தது. ஷிகா தவான் 3 ரன்னுடனும், லோகேஷ் ராகவ் 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    நேற்றைய போட்டியில் காலை வேளையில் நன்கு வெயில் அடித்தது. இதனால் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாகதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். பந்தை நன்கு ஸ்விங் செய்து இங்கிலாந்து வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

    இதுகுறித்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியதாவது:-

    நாங்கள் எதிர்பார்த்தை விட ஆடுகளத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆனது. இதன் காரணமாகவே விரைவில் விக்கெட்டுகளை கைப்பற்ற முடிந்தது.

    இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND #JaspritBumrah
    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சுக்குழு 19 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. இதில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த டெஸ்டில் இந்தியா பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகிய பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. அஸ்வினைத் தவிர மற்ற நான்கு பேரும் வேகப்பந்து வீச்சாளர்கள்.



    இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் வீழ்த்தினார். அவரது பந்து ஓரளவிற்கு டர்ன் ஆகியது. இதனால் அஸ்வின் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    துரதிருஷ்டவசமாக அவருக்கு காயம் ஏற்பட்டது. இருந்தாலும் 2-வது இன்னிங்சில் சிறப்பாக பந்து வீச்சாளர். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 38.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. இதனால் அஸ்வின் பந்து வீசவில்லை. ஹர்திக் பாண்டியா ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இஷாந்த் ஷர்மா, பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.



    இதனால் முதல் இன்னிங்சில் வேகப்பந்து வீச்சாளர்களே 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள். 2-வது இன்னிங்சில் பும்ரா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா, ஷமி, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    ஒட்டுமொத்தமாக வேகப்பந்து வீச்சாளர்கள் 19 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். இதன்மூலம் ஒரே டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட் வீழ்த்திய 2-வது போட்டி இதுவாகும். இதற்கு முன் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற போட்டியில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக வேகப்பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்கள்.



    1996-ல் டர்பனில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 18 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்கள். 1997-ல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராகவும், 2001-ல் கண்டியில் 18 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளனர்.
    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை லைவ் ஆக வைத்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து வெற்றிக்கு 521 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா. பும்ராவின் அபார பந்து வீச்சால் நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. அடில் ரஷித் 30 ரன்களுடனும், ஆண்டர்சன் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 96.2 ஓவரில் 9 விக்கெட்டை இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு ரஷித்- ஆண்டர்சன் ஜோடி 8.3 ஓவர்கள் விளையாடியதால் இந்தியா நேற்று வெற்றியை ருசிக்க முடியாமல் போனது.



    இந்நிலையில் இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றைய ஆட்டத்தின் 3-வது ஓவரை அஸ்வின் வீசினார். 5-வது பந்தில் ஆண்டர்சன் ரகானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 317 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ஆகவே இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா 7 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா 6 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது. 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.
    டிரென்ட் பிரிட்ஜியில் வருகிற சனிக்கிழமை தொடங்கும் 3-வது டெஸ்டில் பும்ரா, ரிஷப் பந்த் களம் இறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

    இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம்பிடித்துள்ளார். ஆனால் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் காயம் ஏற்பட்டதால், கடந்த ஒரு மாதக் காலமாக ஓய்வில் இருக்கிறார். லார்ட்ஸ் டெஸ்ட் தொடங்கும்போது பும்ரா தயாராகிவிட்டார். ஆனால், காயம் முழுவதுமாக குணமடைய வேண்டும் என்று இந்திய நிர்வாகம் அவரை களம் இறக்கவில்லை.

    சனிக்கிழமை தொடங்கும் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் டிரென்ட் பிரிட்ஜ் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்காது. இதனால் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு பும்ராவை களம் இறக்க வாய்ப்புள்ளது. பும்ரா தென்ஆப்பிரிக்கா தொடரின்போது 3 போட்டியில் 14 விக்கெட்டுக்கள் கைப்பற்றியிருந்தார்.



    டெஸ்ட் அணியின் ரெகுலர் விக்கெட் கீப்பரான சகா காயம் அடைந்ததால் தினேஷ் கார்த்திக் நீண்ட காலத்திற்குப் பிறகு வாய்ப்பு பெற்றார். ஆனால்  0, 20, 1, 0 என மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இதனால் அவருக்கு மாற்று விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரிஷப் பந்த் முதல் தர போட்டியில் 54.50 சராசரி வைத்துள்ளார். இதில் நான்கு சதங்களும், 8 அரைசதங்களும் அடங்கும். அத்துடன் 19 வயதில் முச்சதம் அடித்த வீரர் என்ற பெருமையும்  பெற்றுள்ளார். சமீபத்தில் இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்தில் விளையாடியது. அப்போது ரிஷப் பந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
    புவி மற்றும் பும்ரா ஆகியோர் இல்லாவிடிலும் இந்தியாவிடம் மோதுமான வேகப்பந்து வீச்சு பலம் உள்ளது என முன்னாள் வீரர் டேரன் காக் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. புவனேஸ்வர் குமார், பும்ரா, இசாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகிய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களை தயார் செய்து வைத்திருந்தது.

    இந்நிலையில்தான் புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. முதல் இரண்டு டெஸ்டில் இவர்கள் பங்கேற்பார்களா? என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. ஸ்விங் மன்னனான புவனேஸ்வர் குமார் இல்லது இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் புவனேஸ்வர்குமார் மற்றும் பும்ரா ஆகியோர் இல்லாவிடிலும் இந்தியாவிடம் மோதுமாக வேகப்பந்து வீச்சு உள்ளது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேரன் காக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டேரன் காக் கூறுகையில் ‘‘புவனேஸ்வர் மிகப்பெரிய இழப்புதான். அவர் ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, ஏனென்றால் அவருக்கு காயம் ஏற்பட்டிருந்தது. ஆனால், இந்தியா தற்போதைய நிலையில் ஒரு வீரரை சார்ந்திருக்கவில்லை.

    முன்னதாக, இந்திய அணி அனில் கும்ப்ளே, ஸ்ரீநாத் அல்லது ஜாகீர்கானை சார்ந்திருந்தது. இந்த நிலை நீண்ட நாட்களாக இல்லை. எந்தவொரு ஆடுகளத்தை கொடுத்தாலும், அதற்கு ஏற்றவாறு தங்களை தயார் செய்வார்கள். இந்த தொடரிலும் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.



    இன்றைய நிலையில் சொந்த மைதானத்திலோ அல்லது வெளி நாட்டிலோ விளையாடியால் இந்தியாவை தோற்கடிக்க வேண்டுமென்றால், உங்களுடைய தலைசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். புவி ஸ்விங் செய்வார். பும்ரா ஸ்கிட்டிங் சீம் பவுலர், உமேஷ் யாதவ் புதுப்பந்தில் அதிக வேகத்துடன் வீசுவார். முகமது ஷமி ஸ்டிராங்க் மற்றும் ஹிட்ஸ். இசாந்த் ஷர்மா அனுபவம் வாய்ந்தவர். ஆக்ரோஷமாக விளையாடக்கூடியவர். அத்துடன் அதிக ஓவர்கள் வீசுவார்.

    அதேபோல் சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் அசத்தக்கூடியவர்கள். ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வது இந்திய நிர்வாகத்திற்கு பெரிய தலைவலியாக இருக்கும். குறிப்பாக சுழற்பந்து வீச்சில்’’ என்றார்.
    ஒரு புவனேஸ்வர் குமார் அல்லது பும்ராவால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை வெல்ல முடியாது என்று முன்னாள் பயிற்சியாளர் மதன்லால் தெரிவித்துள்ளார். #Bhuvi #Bumrah
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக இந்தியா புவனேஸ்வர் குமார், பும்ரா, இசாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களை தயார் செய்து வைத்திருந்தது.

    அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது பும்ராவின் பெருவிரலில் முறிவு ஏற்பட்டது. இங்கிலாந்துக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியின்போது புவனேஸ்வர் குமாருக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

    பும்ரா முதல் இரண்டு மூன்று போட்டிகளில் பங்கேற்க முடியாது நிலையிலும், புவனேஸ்வர் குமார் எந்த போட்டியில் களம் இறங்குவார் என்பதும் தெரியாமல் உள்ளது. அவர்கள் காயம் இந்திய அணிக்கு பின்னடைவை கொடுக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகிறார்கள்.



    இந்நிலையில் ஒரு புவனேஸ்வர் குமார் அல்லது பும்ராவால் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெற்றி பெற வைக்க முடியாது என்று முன்னாள் ஆல்ரவுண்டரும், இந்திய அணி பயிற்சியாளரும் ஆன மதன் லால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மதன்லால் கூறுகையில் ‘‘ஒரு புவனேஸ்வர் குமார் அல்லது பும்ராவால் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்ல முடியாது. அனைத்து பவுலர்களும் ஒன்றிணைந்து தீயாக பந்து வீச வேண்டும். ஒரு செசனில் கூட எதிரணியை ஆதிக்கம் செலுத்த விடக்கூடாது. சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் வேகப்பந்து வீச்சாளர்கள் நெருக்கடியை உருவாக்க வேண்டும்’’ என்றார்.
    ×