search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பும்ரா"

    இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvIND
    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதலில் அயர்லாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதன்பின் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    மூன்றாவதாக 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த மூன்று தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம் பிடித்திருந்தார்.

    அயர்லாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியின்போது பும்ராவின் இடது கை பெருவிரலில் முறிவு ஏற்பட்டது. இதனால் கடந்த புதன்கிழமை லீட்ஸில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன்பின் இந்தியா திரும்பியுள்ளார்.



    ஒருநாள் போட்டி தொடங்குவதற்குள் பும்ரா காயம் குணமடைய வாய்ப்பில்லை. இதனால் பும்ராவிற்குப் பதிலாக மும்பையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    பும்ரா பிசிசிஐ-யின் மெடிக்கல் குழுவின் மேற்பார்வையில் குணமடைவதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளார். அவரது காயம் குணமடைவதற்கான கால அவகாசம் குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இதனால் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    கட்டை விரல் முறிவால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தீபக் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஐந்து டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக அயர்லாந்து அணியுடன் இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதில் இந்தியா 2-0 என எளிதாக வெற்றி பெற்றது.

    இந்நிலையில், அந்த தொடரின்போது இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.



    பும்ராவுக்கு அயர்லாந்து அணியுடனான இரண்டாவது போட்டியின்போது இடதுகை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. வாஷிங்டன் சுந்தருக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது.

    பும்ராவிற்குப் பதில் தீபக் சாஹர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பான வகையில் பந்து வீசினார். மேலும், தற்போது நடைபெற்று வரும் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான் முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் அசத்தி வருகிறார். இதனால் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. #JaspritBumrah #WashingtonSundar #BCCI #INDvENG #ENGvIND
    அயர்லாந்திற்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா பேட்டிங் செய்கிறது. டோனி, புவி, பும்ரா, தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #IREvIND
    இந்தியா - அயர்லாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டி20 போட்டி டப்ளினில் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் அயர்லாந்து கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது. முதல் போட்டியில் களம் இறங்கிய எம்எஸ் டோனி, புவனேஸ்வர் குமார், தவான், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கேஎல் ராகுல், 2. ரோகித் சர்மா, 3. விராட் கோலி, 4. சுரேஷ் ரெய்னா, 5. தினேஷ் கார்த்திக், 6. மணிஷ் பாண்டே, 7. உமேஷ் யாதவ், 8. குல்தீப் யாதவ், 9. சாஹல், 10. சித்தார்த் கவுல், 11. ஹர்திக் பாண்டியா.
    பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் பும்ரா பந்து வீச்சு அருமையாக இருந்ததாக மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பாரட்டு தெரிவித்துள்ளார்.#IPL2018 #MIvKXIP #MI #KXIP #RohitSharma
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த முக்கியமான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. இதில் மும்பை அணி நிர்ணயித்த 187 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்து மயிரிழையில் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 94 ரன்கள் எடுத்தார்.

    கடைசிகட்டத்தில் வியப்புக்குரிய வகையில் பந்து வீசிய மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்ததுடன் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

    2-வது பேட்டிங் (சேசிங்) செய்கையில் பஞ்சாப் வீரர் லோகேஷ் ராகுல் இந்த சீசனில் இதுவரை 482 ரன்கள் குவித்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் ஒரு சீசனில் 2-வது பேட்டிங் செய்த பேட்ஸ்மேன் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் இந்த வகையில் டேவிட் வார்னர் 468 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

    வெற்றிக்கு பிறகு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், ‘முக்கியமான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியின் தேவைக்கு தகுந்தபடி வீரர்கள் செயல்பட்டார்கள். இந்த ஆடுகளத்தின் தன்மையை வைத்து, இது அதிக ரன் குவிக்கும் ஆட்டமாக இருக்கும் என்பதை அறிந்து இருந்தோம். மிடில் ஓவர்களில் எங்களது ஆட்டம் சரியாக அமையவில்லை. நாங்கள் 15 முதல் 20 ரன்கள் அதிகமாக எடுத்து இருக்க வேண்டும். எதிரணியின் வலுவான பேட்டிங் வரிசையை இந்த ஸ்கோரை வைத்து சமாளிப்பது கடினமானது என்பது எங்களுக்கு தெரியும். எங்களது பந்து வீச்சு பாராட்டும் வகையில் இருந்தது. பும்ரா கடந்த 2 வருடங்களாக கடினமாக உழைத்து வருகிறார். அவர் தனது அருமையான பந்து வீச்சின் மூலம் எதிரணியினருக்கு சவாலாக விளங்கியதுடன், ஆட்டம் எங்களுக்கு சாதகமாக முடியவும் வழிவகுத்தார்’ என்றார். #IPL2018 #MIvKXIP #MI #KXIP #RohitSharma
    ×