search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த 11 பேரை கைது செய்து பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கடலூர்:

    தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள். இதனையொட்டி அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், திட்டக்குடி, சேத்தியாதோப்பு ஆகிய உட்கோட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி 11 இடத்தில் பட்டாசு விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த 11 பேரை கைது செய்து பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் ரூ.79.84 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்றுள்ளன.
    சென்னை:

    தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை அமோகமாக நடைபெறும்.

    கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக மதுவிற்பனை குறைந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டது. தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு அனைத்து பார்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டன.

    இந்த வருடம் மதுபானங்களை அதிகளவு விற்பதற்கான ஏற்பாடுகளை டாஸ்மாக் அதிகாரிகள் செய்திருந்தனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் போதுமான அளவு மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டன.

    இல்லை என்று சொல்லாத அளவுக்கு அனைத்து வகையான மதுபானங்களும் குவிக்கப்பட்டு இருந்தது. தீபாவளிக்கு முந்தைய நாளும், தீபாவளி பண்டிகையன்றும் அதிகளவு விற்பனை ஆகும்.

    இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ரூ.443 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது.

    புதன்கிழமை (3-ந் தேதி) ரூ.213.61 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. சென்னையில் ரூ.38 கோடியும், மதுரையில் ரூ.47.21 கோடியும், சேலம்யில் ரூ.44.27 கோடியும், திருச்சியில் ரூ.43.38 கோடியும், கோவையில் ரூ.41.75 கோடியும் விற்பனையாகி உள்ளது.

    மதுபானங்கள்

    4-ந் தேதி ரூ.229.42 கோடிக்கு மது விற்பனையானது. சென்னையில் ரூ.41.84 கோடி, மதுரையில் ரூ.51.68 கோடி, சேலத்தில் ரூ.46.62 கோடி, திருச்சியில் ரூ.47.57 கோடி, கோவையில் ரூ.41.71 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது.

    2 நாட்களையும் சேர்த்து மொத்தம் சுமார் ரூ.409 கோடிக்கு மதுவிற்பனை ஆகியுள்ளது.

    மற்ற மண்டலங்களைக் காட்டிலும் மதுரை மண்டலத்தில் அதிகமாக மதுவிற்பனை நடந்துள்ளது. அங்கு ரூ.98.89 கோடி மது விற்பனை நடந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் ரூ.79.84 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்றுள்ளன.

    கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த வருடம் மது விற்பனை குறைவாக நடந்து இருப்பதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டை விட இந்த வருடம் ரூ.24.66 கோடி மது விற்பனை குறைந்துள்ளது.

    கடந்த வருடம் தீபாவளிக்கு முந்தைய நாள் ரூ.227.88 கோடிக்கும், தீபாவளியன்று ரூ.239.81 கோடிக்கும் என மொத்தம் ரூ. 467.69 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது.

    கடந்த ஆண்டைவிட இந்த வருடம் மது விற்பனை குறைந்ததற்கு பணப்புழக்கம் குறைந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. தொழில் மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமல் வருவாய் குறைந்ததே இந்த சரிவுக்கு காரணம் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மதுபானங்களின் விலை உயர்வும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

    இதையும் படியுங்கள்... ஆவின் பொருட்கள் ரூ.83 கோடிக்கு விற்பனை- அமைச்சர் நாசர் பேட்டி
    தீபாவளி பண்டிகையையொட்டி 3-ந் தேதி ரூ.9 கோடியே 97 லட்சத்திற்கும், 4-ந் தேதி 10 கோடியே 96 லட்சத்திற்கும் என மொத்தம் 2 நாட்களில் மட்டும் ரூ.20 கோடியே 93 லட்சத்திற்கு மது பாட்டில்கள் விற்பனையானது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மது பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தீபாவளியையொட்டி மது பானங்கள் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து கடந்த 2 நாட்களாக நீண்ட வரிசையில் காத்து நின்று மது பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கி சென்றனர். இதனால் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சில மது பிரியர்கள் 5 மது பாட்டில்களை வரை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. இதனால் வழக்கத்தை விட 2 மடங்கு விற்பனை அதிகரித்தது.

    தீபாவளி பண்டிகையையொட்டி 3-ந் தேதி ரூ.9 கோடியே 97 லட்சத்திற்கும், 4-ந் தேதி 10 கோடியே 96 லட்சத்திற்கும் என மொத்தம் 2 நாட்களில் மட்டும் ரூ.20 கோடியே 93 லட்சத்திற்கு மது பாட்டில்கள் விற்பனையானது.

    வழக்கமாக ஒரு நாளைக்கு 5 முதல் 6 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெறும் நிலையில் கடந்த 2 நாட்களும் ஒரு நாளைக்கு ரூ.10 கோடிக்கு மேல் மது விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வழக்கமான விற்பனையை விட இரு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னையில் ஒவ்வொரு பகுதிவாரியாகவும், காற்று மாசு தரக்குறியீடு அளவினை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதற்கு இடையே, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மக்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர். பட்டாசு புகை காரணமாக, வழக்கத்தைவிட காற்று மாசு சற்று அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக சென்னையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி, காற்று தரக்குறியீடு 153ஆக உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களில் 50 முதல் 80 வரை காற்று தரக்குறியீடு இருக்கும். எனவே, இது வழக்கத்தைவிட அதிகமானது என்றாலும் 153 தரக்குறியீடு என்பது மிதமான காற்று மாசு என்பதாகும்.

    காற்று மாசு

    இதேபோல், சென்னையில் ஒவ்வொரு பகுதிவாரியாகவும், காற்று மாசு அளவினை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, அதிகபட்சமாக பெருங்குடியில் 213 என்ற தரக்குறியீட்டில் காற்று மாசு அளவு பதிவாகி உள்ளது. இதேபோல், அரும்பாக்கம்-191, ராயபுரம்-160, மணலி-164, ஆலந்தூர்-121, வேளச்சேரி-53 என பதிவாகியுள்ளது. மாசு தரக்குறியீட்டை பொறுத்தவரை 0-50 என்ற அளவில் இருந்தால் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், நேற்று இரசு சாலை எங்கும் புகை மண்டலமாக காட்சியளித்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.


    தீபாவளியையொட்டி நேற்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டம் முழுவதும் ரூ.8 கோடியே 55 லட்சத்துக்கு மது விற்பனையாகி உள்ளதாக மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை நேற்று ஆரவாரமாக கொண்டாடப்பட்டது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடித்து, புத்தாடை அணிந்து மகிழ்ந்தனர்.

    பொதுவாக பண்டிகை என்றாலே குடிமகன்கள் தங்களுக்கு பிடித்த மது வகைகளை வாங்கி குடித்து மகிழ்வார்கள். இதனால் பண்டிகைக்கு முதல் நாள் இரவு மது விற்பனை அமோகமாக நடைபெறும்.

    தீபாவளி, புது வருடம், பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக்கு முதல் நாள் இரவு குடிமகன்கள் மதுக்கடைகளில் குவிந்து தங்களுக்கு வேண்டிய மது வகைகளை அள்ளிக் கொண்டு செல்வார்கள். இதனால் பண்டிகை நாட்களில் மட்டும் பல கோடி மதிப்பில் மது விற்பனை அமோகமாக இருக்கும்.

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 212 மது கடைகள் உள்ளன. பார் வசதியுடன் 100 மதுக்கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகளில் சாதாரண நாட்களில் மட்டும் ரூ.4 கோடி வரை மது விற்பனை நடைபெறும். ஆனால் அதேநேரம் பண்டிகை காலங்களில் கூடுதலாக மது விற்பனை நடைபெறும்.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் வழக்கம்போல் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை விற்பனை மந்தமாகவே இருந்தது. ஆனால் மாலை முதல் இரவு வரை விற்பனை களைகட்டியது. குடிமகன்கள் பிராந்தி, பீர், ஒயின் வகைகளை வாங்கிச் சென்றனர்.

    தீபாவளியையொட்டி நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ரூ.8 கோடியே 55 லட்சத்துக்கு மது விற்பனையாகி உள்ளதாக மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும் இது சாதாரண நாட்களை விட 2 மடங்கு அதிகமாக விற்பனை நடந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
    இனிப்பு வகைகளை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு 270 டன் விற்பனை ஆனது. இந்த ஆண்டு 400 டன் விற்பனை ஆகியுள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்.
    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    ஆவின் நிறுவனம் வரலாற்றில் இல்லாத அளவில், தீபாவளி விற்பனை அமைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் 83 கோடி ரூபாய்க்கு ஆவின் பொருட்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு தீபாவளியின்போது ஆவின் விற்பனை ரூ.55 கோடியாகத்தான் இருந்தது.

    குறிப்பாக, கடந்த ஆண்டு ஆவின் நெய் 600 டன் விற்பனை ஆனது. ஆனால் இந்த ஆண்டு 900 டன் விற்பனை ஆகியுள்ளது. இனிப்பு வகைகளை பொறுத்த வரையில் கடந்த ஆண்டு 270 டன் விற்பனை ஆனது. இந்த ஆண்டு 400 டன் விற்பனை ஆகியுள்ளது.

    ஆவின் நெய்

    பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.330 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அரசு துறைகளை சார்ந்த அனைவரும் ஆவின் இனிப்புகளை வாங்கி உள்ளனர். 27 லட்சத்து 60 ஆயிரம் வீடுகளுக்கு தினமும் ஆவின் பால் விநியோகிக்கப்படுவதால், பால் கவர்களில் ஆவின் இனிப்புகள் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த வகையில் ஆவின் பொருட்கள் பற்றிய விளம்பரம் ஒரே நேரத்தில் 27 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கும் நேரடியாக சென்றடைந்துள்ளது.

    அடுத்தவாரம் சிங்கப்பூருக்கு ஆவின் பொருட்களை அளிக்க உள்ளோம். மிக விரைவில் பக்கத்து மாநிலம் மற்றும் நாடுகளுக்கும் ஆவின் பொருட்களை விற்பனைக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    காற்றின் தரத்தை பெறுத்தவரை தரக்குறியீடு 50 இருந்தால் நல்லது என்றும், 401-ல் இருந்து 500-க்குள் இருந்தால் கடுமையானது எனவும் கருதப்படுகிறது.
    புதுடெல்லி :

    நாட்டின் தலைநகரான டெல்லி நாட்டிலேயே அதிக காற்று மாசுபாடு உள்ள நகரமாக கருதப்படுகிறது. இங்கு அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதற்கு பலனும் கிடைத்து வந்தது. இந்தநிலையில் டெல்லியில் தீபாவளி கொண்டாட்டங்களை முன்னிட்டு நேற்று முன்தினம் எடுத்த அளவீட்டின் படி தலைநகரில் காற்றின் மாசுபாடு அதிகமாகவே உள்ளது. அன்று மாலை 4 மணி அளவில் காற்றின் தர குறியீடு 314 ஆக இருந்தது. நேற்று காலை 8 மணிக்கு 341 ஆக இருந்தது.

    காற்றின் தரத்தை பெறுத்தவரை தரக்குறியீடு 50 இருந்தால் நல்லது என்றும், 50 முதல் 100-க்குள் இருந்தால் திருப்திகரமானது என்றும், 101 முதல் 200-க்குள் இருந்தால் மிதமானது என்றும், 201-ல் இருந்து 300-க்குள் இருந்தால் மோசமானது என்றும் 301-ல் இருந்து 400-க்குள் இருந்தால் மிக மோசமானது என்றும், 401-ல் இருந்து 500-க்குள் இருந்தால் கடுமையானது எனவும் கருதப்படுகிறது.

    இந்த கணக்கின்படி நேற்று காற்றின் தரம் மோசமாக இருந்தது. தீபாவளியை கொண்டாட்டத்தை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்படும் என்பதால் இன்று இன்னும் மோசமான நிலைக்கு காற்றின் தரம் செல்லாம் என அஞ்சப்படுகிறது.
    உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
    முசாபர்பூர்:

    தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் பட்டாசு வெடிப்பதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலாக மாறியது. சிவ காலனியில் நேற்று மாலை ஏற்பட்ட இந்த மோதலின்போது கற்களை வீசி கடுமையாக தாக்கிக்கொண்டனர். 

    இதில் 2 நபர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 
    ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியின்போது உயிரிழந்த வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். பிரதமராக பதவியேற்ற முதல் ஆண்டில் சியாச்சின் சென்று வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். 

    அவ்வகையில் இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதிக்கு ராணுவ உடை அணிந்து சென்ற பிரதமர் மோடி, நவ்ஷேரா செக்டாரில் உள்ள வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். பணியின்போது உயிரிழந்த வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் ராணுவ வீரர்களிடையே உரையாற்றினார். 

    உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை

    பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அவர் சென்ற பாதையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. 

    பூஞ்ச்-ரஜோரி பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை 26வது நாளாக இன்றும் நீடிக்கும் நிலையில், பிரதமர் மோடி அப்பகுதிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
    தீபாவளி பண்டிகையை தூய்மையான மற்றும் பாதுகாப்பான முறையில் கொண்டாடி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பங்களிப்பதாக உறுதிமொழி எடுப்போம் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார்.
    புதுடெல்லி,

    நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள்  தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    “தீபாவளி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தீமை விலகி நன்மையும், இருள் விலகி ஒளி பிறக்கும் பண்டிகை தீபாவளி. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த பண்டிகையை தூய்மையான மற்றும் பாதுகாப்பான முறையில் கொண்டாடி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பங்களிப்பதாக உறுதிமொழி எடுப்போம்’’ என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார்.

    பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள். இந்த தீபத்திருநாள்  தீபத்திருவிழா மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்’என பதிவிட்டுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘தீப ஒளி பாகுபாடின்றி அனைவரையும் ஒளிரச்செய்கிறது. இதுவே தீபாவளிச் செய்தி. உங்கள் அன்புக்குரியவர்களுடன் தீபாவளியை கொண்டாடுங்கள். அனைவரின் இதயங்களையும் இணைப்பவராக இருங்கள். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்’ என கூறி உள்ளார்.
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்கின்றனர்.

    இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த நன்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, பலகாரங்கள், உணவுப் பொருட்களை இறைவனுக்கு படைத்து வணங்குவார்கள்.

    பட்டாசுகளை வெடித்தும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்புகள் வழங்கியும், தீபாவளி வாழ்த்தினை பகிர்ந்தும் இப்பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். பெரும்பாலான மக்கள் கோவில்களுக்கு சென்று இறைவனை வணங்குவர்.

    திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்கள்

    அவ்வகையில் தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகாலையிலேயே தீபாவளி களைகட்டத் தொடங்கியது. காலையில் எழுந்து நீராடிவிட்டு பூஜைகள் செய்து, புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். கோவில்களுக்கு சென்றும் பலர் வழிபாடு செய்கின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்கின்றனர். 

    தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் பட்டாசு வெடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். 


    நரகாசுரன் கிருஷ்ணர் வதம் செய்ததை நினைவுபடுத்தும் வகையில், வடமாநிலங்களில் நரகாசுன் உருவ பொம்மைகளை எரித்து தீபாவளி கொண்டாடுகின்றனர். கோவா மாநில தலைநகர் பனாஜியில் இன்று நரகாசுரன் உருவ பொம்மைகளுக்கு தீவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர். 

    கொரோனா பெருந்தொற்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக இருந்தபோதிலும், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து பலர் இன்னும் மீளவில்லை. எனவே ஒருசில பகுதிகளில் பொதுமக்கள் எளிமையாக தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

    அயோத்தி அனுமன் கோவில்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலுக்குள் பக்தர்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு இடங்களில் தனிமனித இடைவெளியின்றி மக்கள் செல்வதை பார்க்கமுடிகிறது. 

    இதேபோல் உலகம் முழுவதிலும் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர். 
    பொதுமக்கள் திறந்த வெளியில் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும்.இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

    அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியவர்கள் மற்றும் நோய் வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

    சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல், பேணிக் காக்க பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

    பொதுமக்கள் திறந்த வெளியில் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில், வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×