search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமாரசாமி"

    தீவிர ஐயப்ப பக்தனான தனக்கு ஐயப்பன் அருளினால் மீண்டும் முதல்வர் பதவி கிடைத்துள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். #HDKumaraswamy
    திருவனந்தபுரம் :

    கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்றதை சிறப்பிக்கும் விதமாக கேரள மாநில மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஐயப்பனின் அருளினால் தான் மீண்டும் முதல்வரானதாக தெரிவித்துள்ளார். 

    கட்சி நிர்வாகிகள் மற்றும் கேரள நீர்வளத்துறை அமைச்சர் டி.தாமஸ் உடன் சபரிமலைக்கு சென்ற தன் முந்தைய சபரிமலை பயணங்களை நினைவு கூர்ந்த அவர், கடந்த 2005-ம் ஆண்டு ஐயப்பனை தரிசனம் செய்ததாகவும் ஐயப்பன் அருளினால் 2006-ம் ஆண்டே தாம் முதல்வரானதாகவும் கூறினார்.

    மேலும், போதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாமலேயே தற்போது மீண்டும் கர்நாடக முதல்வராகியிருப்பதற்கு ஐயப்பன் அருள் தான் முக்கிய காரணம் என குமாரசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். #HDKumaraswamy 
    பெங்களூர் நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் என பட்ஜெட் உரையில் அம்மாநில முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். #KarnatakaBudget
    பெங்களூர்:

    கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. நீண்ட இழுபறிக்கு பின்னர் அம்மாநில முதல்வர் குமாரசாமி இன்று பொது பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது 34 ஆயிரம் கோடி அளவிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் அறிவித்தார்.

    மேலும், பெங்களூர் நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க மத்திய அரசின் அனுமதி பெற்று காவிரி நதியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் என அவர் அறிவித்தார். மேற்கண்ட இரண்டு அறிவிப்புகளுக்கும் அம்மாநில விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனை அடுத்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டும் அதற்கான உறுப்பினரை கர்நாடகா நியமிக்காதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பான அறிவிப்பை அம்மாநில முதல்வர் குமாரசாமி வெளியிட்டுள்ளார். #CauveryIssue
    பெங்களூரு:

    சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த ஆணையத்துக்கான உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்தது. மத்திய அரசும் ஆணைய தலைவர் மற்றும் பிரதிநிதிகளை நியமித்தது.

    ஆனால், இதற்கான உறுப்பினர்களை நியமிக்காமல் கர்நாடக அரசு இழுத்தடித்து வந்தது. மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம் என அம்மாநில முதல்வர் குமாரசாமி முட்டுக்கட்டை போட்டு வந்தார். இந்நிலையில், ஆணையத்தின் கர்நாடக உறுப்பினராக அம்மாநில நீர்வளத்துறை செயலாளர் ராஜேஷ்சிங்கை நியமித்து முதல்வர் அறிவித்துள்ளார்.

    மேலும், காவிரி ஒழுங்காற்று குழுவின் உறுப்பினராக பிரசன்னாவை நியமித்துள்ளார். ஆணையம் அமைக்கப்பட்டது தொடர்பாக விவாதிக்க 3 நாட்களில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும், இந்த கூட்டத்தில் கர்நாடக மாநில எம்.பி.க்கள் கலந்து கொள்வார்கள் என்றும் குமாரசாமி இன்று தெரிவித்துள்ளார். 
    விவசாயிகளுக்கு தரமான விதைகளை விநியோகம் செய்ய வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவிட்டார்.
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் பருவமழைக்கு முன்பு நல்ல மழை பெய்துள்ளது. இதுகுறித்து விவசாயம், தோட்டக்கலை, பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் அந்த துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு விவரங்களை தாக்கல் செய்தனர். பின்னர் குமாரசாமி பேசியதாவது:-

    கர்நாடகத்தில் பருவமழைக்கு முன்பு பெய்யும் மழை 51 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. மேலும் பருவமழை 3 நாட்களுக்கு முன்னதாகவே கர்நாடகத்திற்கு வந்துள்ளது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் விவசாயிகள் உழவு பணிகளை தொடங்கி நடத்தி வருகிறார்கள். விவசாயிகள் விதைகள், உரம் கொள்முதல் செய்வதில் எந்த தொந்தரவையும் அனுபவிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். இந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது தலைமை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு தரமான விதைகளை விநியோகம் செய்ய வேண்டும். தரம் குறைந்த விதைகளை வழங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு நான் இஸ்ரேலுக்கு சென்று அங்கு விவசாய பணிகள் குறித்து ஆய்வு செய்தேன்.

    அங்கு தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். அதேபோல் கர்நாடகத்திலும் விவசாயிகள் தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடியும். இது விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். மண்டியா மாவட்டத்தில் 900 ஏக்கர் பரப்பளவில், விசுவேஸ்வரய்யா கால்வாய் பண்ணை நிலத்தில் சோதனை அடிப்படையில் இஸ்ரேல் தொழில்நுட்ப பயன்பாட்டு திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளேன். இதுதொடர்பாக இஸ்ரேல் நாட்டில் இருந்து தொழில்நுட்ப நிபுணர்களை கர்நாடகத்திற்கு வரவழைத்து நமது விவசாயிகளுக்கு பயிற்சி கொடுக்கப்படும்.

    தோட்டக்கலைத்துறையில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். இதனால் விவசாயிகள் பயன் பெறுவார்கள். கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி நிலுவைத்தொகை வழங்க வேண்டியுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி பேசினார்.
    கர்நாடக மாநில விவசாயிகளின் 53 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையை தள்ளுபடி செய்வது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல் மந்திரி குமாரசாமி நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. முதல் மந்திரி வேட்பாளராக போட்டியிட்ட எடியூரப்பா, கவர்னரின் அழைப்பை ஏற்று அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக பொறுப்பேற்றவுடன் முதல் உத்தரவாக விவசாய கடனை தள்ளுபடி செய்து அறிவித்தார்.

    ஆனால், அவரது தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால், போதிய மெஜாரிட்டி இல்லாமல் மூன்று நாட்கள் மட்டுமே முதல் மந்திரியாக இருந்த எடியூரப்பாவின் உத்தரவு பலனற்றுப் போனது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்.

    இதை தொடர்ந்து முதல் மந்திரி குமாரசாமி இன்னும் ஒருவாரத்துக்குள் விவசாய கடனை தள்ளுபடி செய்தாக வேண்டும் இல்லாவிட்டால் கர்நாடத்தில் போராட்டம் வெடிக்கும் என எடியூரப்பா மிரட்டி வருகிறார்.

    கர்நாடக அரசின் சார்பில் பிறப்பிக்க வேண்டிய அனைத்து உத்தரவுகளுக்கும் காங்கிரஸ் தலைமையின் தயவை நாடும் நிலையில் மிக குறைந்த அளவிலான சொந்த கட்சி எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் குமாரசாமி, விவசாய கடன்களை நிச்சயமாக தள்ளுபடி செய்வேன். இல்லாவிட்டால், முதல் மந்திரி பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்காக கர்நாடக மாநில தலைமை செயலகமான விதான் சவுதாவில் நாளை காலை 11 மணியளவில் முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்த வருமாறு கர்நாடக மாநிலத்தில் உள்ள விவசாய சங்கங்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
    ஜனதாதளம்(எஸ்) கட்சியிடம் 30 மாதங்கள் முதல்-மந்திரி பதவி வழங்கும்படியும், 20 மாதங்களுக்கு ஒருமுறை மந்திரிசபையை மாற்ற வேண்டும் என்றும் காங்கிரஸ் புது கோரிக்கையை வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #Kumaraswamy #Congress
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் பதவி ஏற்றுள்ளனர். மந்திரிசபையில் 22 இடங்கள் காங்கிரசுக்கும், 12 இடங்கள் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் மந்திரிசபை விரிவாக்கம் செய்வதில் 2 கட்சிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதாவது நிதித்துறை, பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை 2 கட்சிகளும் கேட்கிறது.

    துறைகளை பங்கிட்டு கொள்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் மந்திரிசபை விரிவாக்கம் செய்வதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையில், ஜனதாதளம்(எஸ்) கட்சியிடம் 30 மாதங்கள் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்கும்படியும், 20 மாதங்களுக்கு ஒரு முறை மந்திரிசபையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் புது கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆனால் 30 மாதங்கள் முதல்-மந்திரி பதவியை விட்டு கொடுக்க குமாரசாமி மறுத்து விட்டதாகவும், மந்திரிசபை 20 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    ஏனெனில் காங்கிரஸ் கட்சியில் 77 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களில் பலர் மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதனால் 20 மாதங்களுக்கு ஒருமுறை மந்திரிசபையை மாற்றி அமைப்பதன் மூலம் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் ஆட்சியை சுமுகமாக நடத்தலாம் என்று குமாரசாமி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. #Kumaraswamy #Congress
    குமாரசாமி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பெங்களூர் சென்ற கமல்ஹாசன் அங்கு சோனியா காந்தி, சீத்தாராம் யெச்சூரி, சந்திரபாபு நாயுடு, டி.ராஜா ஆகியோரை சந்தித்து பேசினார். #KamalHaasan
    பெங்களூர்:

    கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழாவுக்காக பெங்களூர் சென்றிருந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து சிறிது நேரம் பேசினார். 

    குமாரசாமி, துணை முதல்வராக பதவியேற்றுள்ள பரமேஸ்வரா ஆகியோருக்கு கமல்ஹாசன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.



    மேலும், இந்த விழாவுக்கு வந்திருந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி, மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ராஜா, ஆகியோரை சந்தித்து பேசினார்.
    கர்நாடகாவில் குமாரசாமி பதவியேற்பு விழாவில் அகிலேஷ் யாதவ், மாயாவதி, சந்திரசேகர ராவ் மற்றும் நவீன்பட்நாயக் ஆகியோர் புறக்கணிப்பதாக தெரிவித்தனர். #Kumarasamy #AkhileshYadav #Mayawati
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். தலைவர் குமாரசவாமி காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்கிறார். இன்று மாலை பெங்களூரில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்.

    பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ்கட்சி, மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் எதிரும் புதிருமாக இருந்து வந்தனர். ஆனால் அங்கு பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு இந்த இரு கட்சி தலைவர்களும் கைக்கோர்த்து செயல்படும் நிலை உருவானது. உத்தரப்பிரதேசத்தில் நடந்த கோரக்பூர், புல்பூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவும், மாயாவதி கூட்டணி அமைத்து போட்டி போட்டு பா.ஜனதா வேட்பாளர்களை தோற்கடித்தார். ஆனாலும் இருகட்சி தலைவர்களும் இதுவரை ஒரே மேடையில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டது கிடையாது.

    இந்த நிலையில் குமாரசாமி பதவியேற்பு நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் ஒரே மேடையில் பங்கேற்கிறார்கள். இது உத்தரப்பிரதேசத்தில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜனதாவுக்கு எதிராக மற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முக்கிய நிகழ்ச்சியாகவே குமாரசாமியின் பதவியேற்பு விழா அமைய இருக்கிறது.

    பதவியேற்பு விழாவில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளவில்லை. தனக்கு முக்கிய அரசு அலுவல் பணி இருப்பதால் நேற்றே அவர் பெங்களூர் வந்து தேவேகவுடாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து சென்றுவிட்டார்.


    இதேபோல் பா.ஜனதாவின் முன்னாள் கூட்டணி தலைவரான ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தேவேகவுடா தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தார். ஆனால் அவரும் பதவி ஏற்பு விழாவுக்கு வரவில்லை. கடந்த ஜனவரி மாதம், நவீன் பட்நாயக் தனது தந்தை பிஜின் பட்நாயக் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள தேவேகவுடாவுக்கு அழைப்பு விடுத்தார் ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை இதன்காரணமாக தற்போது தேவேகவுடா அமைப்பை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், குமாரசாமி பதவியேற்பு விழாவுக்கு செல்லவில்லை. அவருக்கு பதில் 4 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட தி.மு.க. குழு பெங்களூர் சென்று பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

    மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனுக்கும் குமாரசாமி அழைப்பு விடுத்து இருந்தார். இதை ஏற்று கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். காவிரிக்காக கர்நாடகத்துடன் பேச்சு நடத்துவதற்காக முதல் அடியாகவே இதில் கலந்து கொள்வதாக கமல்ஹாசன் கூறினார். #KarnatakaFloorTest #Kumarasamy #AkhileshYadav #Mayawati #ChandrashekarRao #NaveenPatnaik
    நாளை பதவியேற்க உள்ள கர்நாடக மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 22 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். #Karnataka #Kumaraswamy #Congress
    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் - மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன. மஜத தலைவர் குமாரசாமி நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். மந்திரிசபையில் யாருக்கு எத்தனை இடம், துணை முதல்வர் பதவி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இன்று இரு கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    கூட்டத்தின் முடிவில், அம்மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள பரமேஸ்வரா துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.  குமாரசாமி, பரமேஸ்வரா தவிர 32 பேர் மந்திரிகளாக நாளை பதவியேற்க உள்ளனர். துணை முதல்வர் பதவி தவிர்த்து 21 மந்திரிகள் காங்கிரஸ் தரப்பிலும், முதல்வர் பதவி தவிர்த்து 11 மந்திரிகள் மஜத தரப்பில் பதவியேற்க உள்ளனர். சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த பின்னர், மந்திரிகளுக்கான துறை ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Karnataka #Kumaraswamy #Congress
    கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்க உள்ள குமாரசாமி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தியை சந்தித்து மந்திரிசபை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். #JDS_Cong_Alliance #Kumaraswamy
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் கர்நாடக முதல்வராக நாளை குமாரசாமி பதவியேற்க உள்ளார். மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சிக்கும் இடம் அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், மந்திரிசபை தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து குமாரசாமி விவாதித்தார்.

    அப்போது, எந்தெந்த துறைகளை காங்கிரசுக்கு ஒதுக்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 40 நிமிட சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த குமாரசாமி, “கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உடன் மந்திரி சபை தொடர்பாக விவாதிக்க ராகுல் அனுமதி அளித்துள்ளார். உள்ளூர் தலைவர்களுடன் ராகுல் நாளை ஆலோசனை நடத்தி முடிவுகளை இறுதி செய்வார்” என தெரிவித்தார்.

    நாளை நடக்க உள்ள பதவியேற்பு விழாவுக்கு இருவரும் வருவதாக உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
    கர்நாடகாவில், முதல்-மந்திரியாக பதவியேற்க இருக்கும் குமாரசாமி தலைமையிலான புதிய அமைச்சரவையில் காங்கிரசை சேர்ந்த 20 பேருக்கு மந்திரி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #KarnatakaAssembly #Kumarasamy
    பெங்களூர்:

    கர்நாடகா முதல்-மந்திரியாக நாளை மறுநாள் (புதன்கிழமை) குமாரசாமி பதவியேற்க உள்ளார். கர்நாடகாவின் 25-வது முதல்வராக உள்ள அவர் இன்று (திங்கிட்கிழமை) பதவியேற்க திட்டமிட்டார். ஆனால் இன்று ராஜீவ்காந்தியின் நினைவு தினம் என்று தெரிய வந்ததால் புதன்கிழமைக்கு பதவியேற்பு விழாவை தள்ளி வைத்துள்ளார்.

    23-ந் தேதி பதவியேற்பு விழா முடிந்ததும் மறுநாள் (24-ந் தேதி வியாழக்கிழமை) சட்டசபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக் காட்ட குமாரசாமி திட்டமிட்டுள்ளார். காங்கிரசின் 78 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் மெஜாரிட்டிக்கு தேவையான 111 என்ற இலக்கை அவரால் மிக, மிக எளிதாக நிரூபித்துக்காட்ட முடியும்.


    இதையடுத்து அன்றே சபாநாயகர் தேர்வும் நடைபெற உள்ளது. அதற்கு அடுத்த நாள் (25-ந் தேதி வெள்ளிக்கிழமை) மந்திரிகள் பொறுப்பேற்று கொள்வார்கள் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில் குமாரசாமி தலைமையிலான புதிய அமைச்சரவையில் காங்கிரசை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இடம் பெறுவார்கள்? மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் முதல்வர் பதவியையும் சேர்த்து மொத்தம் 34 பேர் அமைச்சராக முடியும்.

    இதில் கணிசமான பதவிகளைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் இருவரையும் சந்தித்துப் பேச இன்று குமாரசாமி டெல்லி சென்றார். அந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.


    முதல்-மந்திரி பொறுப்பு ஏற்க உள்ள குமாரசாமி, 5 ஆண்டுகளுக்கு முழுமையாக பதவியில் இருப்பேன். அதில் சுழற்சி முறை கிடையாது என்று திட்டவட்டமாக உறுதிபட கூறி விட்டார். மேலும் நிதி, உள்துறை, பொதுப்பணித்துறை, தொழில், நீர்ப்பாசனம் ஆகிய 5 முக்கியத் துறைகளை தனது கட்சிக்காரர்களுக்கு வழங்க குமாரசாமி ஆலோசித்து வருகிறார்.

    ஆட்சி நீடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக குமாரசாமியின் இந்த நிபந்தனைகளை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கும் நிலையில் உள்ளனர். அதே சமயத்தில் அதை ஈடுகட்டும் வகையில் அமைச்சரவையில் அதிக மந்திரி பதவிகளை பெற காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை விட இரு மடங்கு எம்.எல்.ஏ.க்களை வைத்திருப்பதால் காங்கிரசுக்கு அதிக மந்திரி பதவிகளை விட்டுத்தர குமாரசாமியும் சம்மதம் தெரிவித்துள்ளார். எனவே காங்கிரஸ் சார்பில் 20 பேர் வரை மந்திரிகளாக வாய்ப்புள்ளது.

    மேலும் காங்கிரசில் இருந்து ஒருவருக்கு துணை முதல்-மந்திரி அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இந்த வேண்டுகோளையும் குமாரசாமி ஏற்றுள்ளார். ‘தலித்’ இனத்தை சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்வர் பொறுப்பை கொடுக்க காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் விரும்புகின்றன.


    கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தலித் இனத்தை சேர்ந்தவராவார். மூத்த தலைவரான அவர் எம்.எல்.ஏ. ஆகவும் தேர்வாகியுள்ளார். எனவே அவர் துணை முதல்வராவது உறுதியாகி விட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒருவர் துணை முதல்வர் ஆக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் காங்கிரசில் உள்ள லிங்காயத் எம்.எல்.ஏ.க்கள், தங்கள் சமுதாயத்துக்கு துணை முதல்-மந்திரி பதவி தரவேண்டும் என்று வலியுறுத்தியபடி உள்ளனர். காங்கிரசில் உள்ள 78 எம்.எல். ஏ.க்களில் 17 பேர் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அது போல மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியில் உள்ள 36 எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் லிங்காயத்துக்கள்.

    எடியூரப்பா முதல்வராக நீடிக்க முடியாமல் போனதால் லிங்காயத் சமுதாய மக்களிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் லிங்காயத் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் துணை முதல்வராக வாய்ப்புள்ளது. இதையடுத்து லிங்காயத் எம்.எல்.ஏ.க்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சம்னூர் சிவசங்கரப்பா லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர். எனவே துணை முதல்-மந்திரியாக அவருக்கே அதிக வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே சபாநாயகர் பதவி தனது கட்சியிடமே இருக்க வேண்டும் என்பதில் குமாரசாமி தீவிரமாக உள்ளார். காங்கிரசும் சபாநாயகர் பதவியை கேட்கிறது. சோனியா- குமாரசாமியின் இன்றைய பேச்சில் இது பற்றியும் முடிவு ஏற்பட உள்ளது. #KarnatakaElection2018 #Kumarasamy #Congress #KarnatakaAssembly
    மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை ஏற்றுகொண்ட குமாரசாமி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கோரி கர்நாடக கவர்னரை இன்று மாலை சந்தித்தார். #Kumarasamy #KarnatakaElection2018
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று பிற்பகல் ஐந்தரை மணி நிலவரப்படி பா.ஜ.க. வேட்பாளர்கள் 91 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 70 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிள்ளனர்.

    பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை ஏற்றுகொண்ட குமாரசாமி கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டு கொள்வதற்காக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பினார்.

    இதற்கிடையில், பா.ஜ.க. மாநில தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான எடியூரப்பா, அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க எங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாலை சுமார் 5 மணியளவில் கவர்னர் வஜுபாய் வாலா-வை சந்தித்தார்.

    சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 7 நாள் அவகாசம் தாருங்கள் என கவர்னரை எடியூரப்பா கேட்டுகொண்டதாக தெரிகிறது.

    இந்த சந்திப்பு முடிந்த சில நிமிடங்களில் ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு கோரி கர்நாடக கவர்னரை குமாரசாமி இன்று மாலை சந்தித்தார்.

    குமாரசாமியுடன் முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் காங்கிரஸ் எம்.எம்.எல்.ஏக்கள் உடன் சென்றிருந்தனர்.

    ஆட்சி அமைக்க தனக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தை கவர்னரிடம் குமாரசாமி அளித்தார். #Kumarasamy #KarnatakaElection2018

    ×