search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98817"

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விக்ரம், 18 ஆண்டுகளுக்கு பிறகு அன்வர் ரஷித் இயக்கும் மலையாள படமொன்றில் நடிக்கவிருக்கிறார். #ChiyaanVikram #MalabarKazhagam
    கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம், ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் படம் என நடித்து வரும் நடிகர் விக்ரம், அடுத்து வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை அன்வர் ரஷித் இயக்குகிறார்.

    மலபார் கலகம் அல்லது மாப்பிள்ளை கலகம் என்று அழைக்கப்படும் வரலாற்று கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகிறது. கேரளாவில் மலபார் பகுதியில், ஆங்கிலேயே அரசுக்கு எதிராக தொடங்கிய இந்த கலகம் பிறகு பெரும் இனக்கலவரமாக மாறியது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். 1921-ம் ஆண்டு நடந்த வரலாற்று சம்பவத்தை அன்வர் ரஷித் படமாக்கு கிறார்.இந்தக் கதையில் சுதந்திரப் போராட்ட வீரர், வரியன்குன்னத் குஞ்சாசமாகத் ஹாஜியாக விக்ரம் நடிக்கிறார். 

    மலபார் கலகத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி 2021-ஆம் ஆண்டு இந்த படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், நடிகர் விக்ரம் 18 வருடங்களுக்குப் பிறகு, மலையாள சினிமாவில் நுழைய உள்ளார். #ChiyaanVikram #MalabarKazhagam #MapillaiKazhagam

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன், நான் பார்த்ததுலயே ரொம்ப ரொம்ப நல்ல மனிதர் அவர்தான் என்று கூறியிருக்கிறார். #NithyaMenon
    நயன்தாரா, திரிஷா என முன்னணி நடிகைகள் போட்டி போட்டதில் ஜெயலலிதாவாக நடிக்கும் வாய்ப்பு நித்யா மேனனுக்கு சென்றிருக்கிறது. அவர் அளித்த பேட்டியில் இருந்து...

    நித்யா மேனன் எப்படிப்பட்ட கேரக்டர்?

    ரொம்ப இயல்பாக இருப்பேன். சாப்பாடு, தங்கும் இடம், சூழ்நிலை இதுக்கெல்லாம் ரொம்ப விட்டுக் கொடுத்து போகும் பொண்ணு நான். அதேசமயம் ரொம்பவே சென்சிட்டிவான பொண்ணும் கூட.

    தேர்ந்தெடுத்து நடிப்பது ஏன்?

    படத்தின் கதை எனக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட கதை உள்ள படங்களில் மட்டும் நடிக்க சம்மதிக்கிறேன். இந்த வி‌ஷயத்தில் நான் எடுத்த முடிவு இதுவரை தப்பானதில்லை. நிறைய படங்களில் நடிப்பதை விட நல்ல படங்களில் நான் இருக்க ஆசைப்படுகிறேன். எனக்கு நல்ல கதை அமையுறது இயல்பாகவே நடந்துடுது.

    தமிழ் ஹீரோக்கள் பற்றி?

    நான் பார்த்ததுலயே ரொம்ப ரொம்ப நல்ல மனிதர் சூர்யா. அவர்கூட வேலை செய்யறப்ப அவ்ளோ பாசிட்டிவ்வா இருந்துச்சு. துல்கரும் நானும் நல்ல நண்பர்கள். விஜய் சார் ரொம்ப அமைதி. இருக்கிற இடமே தெரியாதபடி இருப்பார். அவ்வளவா பேசமாட்டார். விக்ரம் மாதிரி நடிப்புக்கு மெனக்கெடும் யாரையும் நான் பார்த்தது இல்லை. கேரக்டருக்காக தன்னை மாற்றி கொள்ளும் வி‌ஷயத்தில் அவர் கில்லாடி. அவரை மாதிரி நடிக்க ஆசைப்படுகிறேன்.



    நெருக்கமான தோழி யார்?

    நடிகை ரோகிணி இருக்காங்க. சென்னை வந்தால் அவங்க வீட்டில் தான் இருப்பேன்; சாப்பிடுவேன். எனக்கு கொஞ்சம் நெருக்கமான தோழி அவங்க.

    அடுத்து?

    முதல்ல நான் பத்திரிகையாளர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். நான் படிச்சதே ஜார்னலிசம் தான். ஜார்னலிசத்துல புதுப்புது ஐடியா பண்ணணும்னு தான் படிச்சேன். அப்புறம் ஒளிப்பதிவாளர் ஆகணும்னு ட்ரை பண்ணேன். நடிக்கணுங்கிற எண்ணமே வந்தது கிடையாது. இப்ப இயக்குனர் ஆக ஆசை இருக்கு. உண்மை சம்பவங்களை படங்களா எடுக்க திட்டம் இருக்கு.
    சாமி ஸ்கொயர் படத்தை தொடர்ந்து விக்ரம் அடுத்ததாக நடிக்க இருக்கும் கதாபாத்திரம் அவருக்கு மூன்றாவது முறையாக அமைய இருக்கிறது. #Vikram
    விக்ரம் நடித்த சாமி 2 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்து கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. இதைத்தொடர்ந்து ராஜேஷ் செல்வா இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். கமல்ஹாசனை வைத்து தூங்காவனம் படத்தை டைரக்டு செய்தவர் ராஜேஷ் செல்வா. 

    படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. விக்ரம் நடிக்க உள்ள படம் 2016–ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பாக ஓடிய டோன்ட் ப்ரீத் என்ற ஹாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக் என்று பேசப்படுகிறது. பெடி அல்வரேஸ் இயக்கிய இந்த படத்தில் ஸ்டீபன் லாங், ஜேன் லெவி, டைலன் மின்னட் ஆகியோர் நடித்திருந்தனர், 

    கண்பார்வை இல்லாத ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் வீட்டில் தனியாக வசிக்கிறார். அந்த வீட்டில் திருட கொள்ளையர்கள் திட்டமிடுகின்றனர். பார்வையுள்ள திடகாத்திரமான கொள்ளையர்களை பார்வையற்றவர் எப்படி எதிர்கொண்டு ஒவ்வொருவராக கொலை செய்கிறார் என்பது கதை. இதில் பார்வையற்றவராக ஸ்டீபன் லாங் நடித்து இருந்தார். 



    இந்த படத்தின் கதையை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்து எடுப்பதாகவும், இதில் விக்ரம் கண்பார்வையற்றவராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை. விக்ரம் ஏற்கனவே காசி, தாண்டவம் ஆகிய படங்களில் பார்வையற்றவராக நடித்து இருந்தார்.
    ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில், துரைசிங்கமான சூர்யாவும், ஆறுச்சாமியான விக்ரமும் ஒரே படத்தில் இணைவது குறித்து ஹரி விளக்கம் அளித்துள்ளார். #Hari #SaamySquare
    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் சாமி ஸ்கொயர் ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் ஹரி அளித்த பிரத்யேக பேட்டியிலிருந்து,

    ஒரு பாகத்தின் தொடர்ச்சியை எடுப்பது எளிதில்லையே?

    ஒரு படத்தோட அடுத்தடுத்த பாகங்களை இயக்க வேண்டுமே என்று இறங்கிவிட்டு, பின்னர் யோசித்தால் அது கஷ்டம் தான். ஆனால் கதை இருக்கும் போது, அந்த கதையுடன் பயணிக்க வேண்டி இருந்தால் பயம் தேவையில்லை. வேலை பளு, வேலைக்காக மெனக்கிட வேண்டிய பரபரப்பு தான் இருக்கும். இந்த படம் வரை போலீஸ் ஸ்கிரிப்ட் எனக்கு திருப்தி தான். ஒருவேளை அடுத்த படம் பண்ணும் போது எனக்கு அந்த பயம் வரலாம்.

    சாமி ஸ்கொயர் வெறும் போலீஸ் கதையாக மட்டும் இருக்காது. என்னுடைய படங்களில் என்னென்ன இருக்குமோ, அதை கொடுத்திருக்கிறேன். அதில் எந்த குறையும் இருக்காது. ஒரு புல்மீல்ஸ் சாப்பிடுவது போல் தான் இருக்கும். 

    குடும்பம் சார்ந்த படங்களாக எடுப்பது ஏன்? 

    ஹீரோவுக்கு யாருமே இல்லை என்று நான் படங்கள் பண்ணுவதில்லை. யாராவது ஒருவர் ஹீரோவுக்கு உயிராக இருப்பது போல் தான் இயக்கியிருக்கிறேன். ஆறு படத்தில் மட்டும் தான் அப்படி இருக்காது. வில்லனாகவே இருந்தாலும், தன் பையன் தப்பு செய்வதை பார்த்துக் கொண்டிருக்கும் வில்லனை காட்டுவதற்கு எனக்கு கஷ்டமாக இருக்கும். வில்லனுக்கே இப்படி யோசிக்கும் போது ஹீரோவுக்கு குடும்பம் இல்லையென்றால் எப்படி? என்று தோன்றும். 



    துரைசிங்கம், ஆறுச்சாமி ஒரே படத்தில் இணைவார்களா?

    சிங்கம் 3 படத்தில் ஒரு காட்சியில் துரைசிங்கம், ஆறுச்சாமி இருவரும் ஒரு இடத்தில் சந்தித்து பேசுவது போல கற்பனை செய்திருந்தேன். ஆனால் அது நிஜத்தில் நடப்பது சாத்தியமில்லை. இருவருமே மிகப்பெரிய ஸ்டார்கள். ஒரு சிறிய காட்சிக்கு அவர்களிடம் சென்று கேட்பது சரியாக இருக்காது.

    டிரைலர்ல ஆறுச்சாமி ஆவி ராமசாமி மேல வருவதுபோல் இருக்கிறதே?

    படத்துல ஆறுச்சாமியே இருக்கிறாரே, அப்புறம் ஏன் ராமசாமி உடம்பில ஆறுச்சாமி வரப்போகிறார். இருவருமே படத்தில் இருக்கிறார்கள். படத்தை பாருங்கள். #Hari #SaamySquare #Vikram #Suriya

    ஹரி பேசிய வீடியோவை பார்க்க:


    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சாமி ஸ்கொயர்' படத்தின் விமர்சனம். #SaamySquareReview #Vikram #KeerthySuresh
    சாமி படத்தின் முடிவில் பெருமாள் பிச்சையான கோட்டா சீனிவாச ராவை ஆறுச்சாமியான விக்ரம் எரித்து கொன்று விடுவார். ஆனால் ஊரைப் பொறுத்தவரை பெருமாள் பிச்சை தலைமறைவு, போலீஸ் வலைவீச்சு என்று தான் முடிவு இருக்கும். அதன் தொடர்ச்சியாக சாமி ஸ்கொயர் படம் உருவாகி இருக்கிறது.

    ஒருபுறத்தில் திருநெல்வேலியில் ரவுடிசத்தை ஒழித்துக்கட்டிய ஆறுச்சாமி, தனது மனைவி ஐஸ்வர்யா ராஜேசுடன் சொந்த ஊரான பழனிக்கு திரும்புகிறார். மறுபுறத்தில் பெருமாள் பிச்சையின் குடும்பத்தினர் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். பெருமாள் பிச்சைக்கு ஓ.ஏ.கே.சுந்தர், ஜான் விஜய் மற்றும் பாபி சிம்ஹா என மூன்று மகன்கள் உள்ளனர். போலீசுக்கு பயந்து தனது தந்தை தலைமறைவாகி விட்டதாக பாபி சிம்ஹா கிண்டல் செய்யப்படுகிறார். 



    இதையடுத்து தனது அப்பா பற்றிய உண்மையை தெரிந்துகொள்ள திருநெல்வேலி வரும் பாபி சிம்ஹா  திருநெல்வேலியையே அலறவிடுகிறார். திருநெல்வேலியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அவர், ஆறுச்சாமிக்கும் - பெருமாள் பிச்சைக்கும் இடையே நடந்த மோதல் பற்றி தெரிந்து கொண்டு ஆறுச்சாமியை கொல்ல திட்டம் போடுகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார்.

    அதேநேரத்தில் கர்ப்பம் தரித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது மகனை பெற்றெடுத்து விட்டு இறந்துவிடுகிறார். ராமசாமி என்னும் பெயரில் வளரும் அந்த குழந்தையை ஆறுச்சாமியின் மாமானாரான டெல்லி கணேஷ் டெல்லிக்கு எடுத்துச் சென்று விவேக்கின் குழந்தையாக வளர்க்கிறார்.



    கலெக்டராக வேண்டும் என்ற கனவோடு வளரும் ராமசாமி, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுகிறார். அதேநேரத்தில் மத்திய அமைச்சரான பிரபுவிடம் முக்கிய பொறுப்பிலும் பணியாற்றுகிறார். வெளிநாட்டில் படிப்பை முடித்துக் கொண்டு இந்தியா வரும் பிரபுவின் மகள் கீர்த்தி சுரேஷுக்கு விக்ரம் மீது காதல் வருகிறது.

    இதற்கிடையே தேர்வில் வெற்றி பெறும் ராமசாமி, ஐ.பி.எஸ் ஆக தேர்வு செய்யப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்தின் துணை கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்படுகிறார். இந்த தகவல் அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகும் டெல்லி கணேஷ், ராமசாமிக்கு அந்த வேலை வேண்டாம் என்று நிர்பந்திக்கிறார்.



    கடைசியில், ராமசாமி திருநெல்வேலிக்கு சென்றாரா? தனது அப்பா ஆறுச்சாமியின் வேட்டையை தொடர்ந்தாரா? ஆறுச்சாமியை பழிவாங்கியவர்களை பழிதீர்த்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    அப்பா, மகன் என இரு கெட்-அப்களில் விக்ரம் ஆறுசாமியாகவும், ராமசாமியாகவும் திருநெல்வேலி, பழனி, டெல்லி என  கலக்கியிருக்கிறார். ஆறுச்சாமி கதாபாத்திரத்தில் பழைய விக்ரமை பார்க்க முடிகிறது. ராமசாமி கதாபாத்திரத்தில் முறுக்கு மீசையுடன் தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ற போலீசாக விக்ரம் வலம் வருகிறார். மாடர்ன் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் அழகு தேவதையாக வலம் வருகிறார். முதல் பாதியை ஐஸ்வர்யா ராஜேஷும், இரண்டாவது பாதியை கீர்த்தி சுரேஷும் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.



    பாபி சிம்ஹா பார்வையாலேயே மிரட்டுகிறார். இளமையான மற்றும் வயதான தோற்றத்தில் பாபி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சூரி தனது காமெடியால் ஓரளவுக்கு ரசிக்க வைத்திருக்கிறார். ஜான் விஜய், ஓ.ஏ.கே.சுந்தர், பிரபு, டெல்லி கணேஷ், உமா ரியாஸ், ரமேஷ் கண்ணா என மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்துக்கு துணையாக நிற்கின்றனர்.

    பெருமாள் பிச்சை - ஆறுச்சாமி, இந்த இரு குடும்பத்திற்கும் இடையே நடக்கும் பழிவாங்குதலையே படமாக இயக்கியிருக்கிறார் ஹரி. தனது பாணியில், அதிரடி, காதல், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். படத்தின் தொடர்ச்சியை உருவாக்குவது எளிதல்ல, அதை சாமர்த்தியமாகவே கையாண்டிருக்கிறார். 

    தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ப்ரியன், வெங்கடேஷ் அங்குராஜ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `சாமி ஸ்கொயர்' டபுள் ட்ரீட். #SaamySquareReview #Vikram #KeerthySuresh

    சாமி ஸ்கொயர் படத்தின் வீடியோ விமர்சனம்:

    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சாமி ஸ்கொயர்' படத்தின் முன்னோட்டம். #SaamySquare #Vikram #KeerthySuresh
    தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சாமி ஸ்கொயர்'.

    விக்ரம் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - ப்ரியன், வெங்கடேஷ் அங்குராஜ், இசை - தேவி ஸ்ரீ பிரகாஷ், எடிட்டிங் - வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய், பாடலாசிரியர் - விவேகா, கலை - பி.சண்முகம், பி.வி.பாலாஜி, சண்டைப்பயிற்சி - கனல் கண்ணன், ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பு - நீராஜா கோனா, தயாரிப்பு - சிபு தமீன்ஸ், ஸ்ரீனிவாச சித்தூரி, எழுத்து, இயக்கம் - ஹரி.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹரி பேசியதாவது,

    தொடர்ந்து எனது படத்தை தயாரித்தவர் இயக்குநர் பாலச்சந்தர். இந்த தருணத்தில் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். சிபுவும் சிறந்த தயாரிப்பாளர். படத்திற்கான வெற்றி, தோல்வியை வெளிப்படையாக கூறுவார். இந்த படத்திற்காக அதிகமாக செலவு செய்திருக்கிறார். 5 மாநிலங்களுக்கு சென்று, பல முக்கிய இடங்களில் படத்தை உருவாக்கி இருக்கிறோம். 

    சாமி படத்தை 2003-ல் உருவாக்கினோம். அப்போவே சாமியின் வேட்டை தொடரும் என்று போட்டிருந்தேன். அப்போது ஒரு ஒன்லைன் இருந்தது. அதை அடுத்தடுத்து எடுத்த போலீஸ் படங்களில் அதை எடுத்துவிட்டேன். ஒரு நல்ல கதை இருந்தால் மட்டும் தான் பண்ண முடியும் என்று சொல்வேன். எனவே 14 வருடங்கள் காத்திருந்தோம். அப்போது தான் கதை அமைந்தது. நிறைய பேர், புதுசு புதுசாக கதை சொல்கிறார்கள், ரொம்ப யோசிக்க வேண்டாம், கதையை நானே சொல்கிறேன். பெருமாள் பிச்சை குடும்பத்துக்கும், ஆறுச்சாமி குடும்பத்துக்கும் நடக்கும் போராட்டம் தான் சாமி ஸ்கொயர் படத்தின் கதை. என்றார். 

    `சாமி ஸ்கொயர்' உலகமெங்கும் நாளை (செப்டம்பர் 21-ஆம் தேதி) ரிலீசாக இருக்கிறது. #SaamySquare #Vikram #KeerthySuresh

    சாமி ஸ்கொயர் படத்தின் டிரைலர்:

    சிங்கப்பூரை போல் சென்னையிலும் பெண்கள் பயமின்றி நடமாடும் காலம் விரைவில் வரும் என்று நடிகர் விக்ரம் கூறியுள்ளார். #Vikram #ChiyaanVikram
    விக்ரம் நடிப்பில் தற்போது ‘சாமி ஸ்கொயர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்கள். ஹரி இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 21ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. 

    இந்நிலையில், வீடுகள், கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து ‘மூன்றாவது கண்’ என்ற குறும்படத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். இந்த குறும்படத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று சென்னையில் வெளியிட்டார்.



    இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பேசும்போது, ‘சிங்கப்பூரைபோல் சென்னையிலும் பெண்கள் பயமின்றி நடமாடும் காலம் விரைவில் வரும். சிசிடிவி கேமராவால் குற்றங்கள் குறையும், சிசிடிவி கேமரா பொருத்துவது காலத்தின் கட்டாயம்’ என்றார்.
    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். வில்லனாக பாபி சிம்ஹாவும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    இந்த படத்தின் புதிய டிரைலர் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டது. டிரைலர் வெளியாகி 15 மணிநேரத்தில் இதுவரை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பேர் பார்த்துள்ளனர். மேலும் யூடியூப் டிரெண்டிங்கிலும் முதல் இடத்தில் உள்ளது.

    படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை வருகிற 20-ந் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசைமைத்திருக்கிறார். #SaamySquare #Vikram

    சாமி ஸ்கொயர் டிரைலர் பார்க்க:

    ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலர் வெளியாகி, எனக்கு தேவை மூணு தல என்ற வசனம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சாமி ஸ்கொயர்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர், டிரைலர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது புதிய டிரைலர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

    இதில் விக்ரம் பேசும் வசனமான, எனக்கு தேவை மூணு தல, நான் போலீஸ் இல்ல... பொறுக்கி... என்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஏற்கனவே வந்த டிரைலரில், ‘நான் தாய் வயத்தில பொறக்கல... பேய் வயத்தில பொறந்தேன். நான் சாமி இல்ல... பூதம்’ போன்ற வசனங்கள் இடம் பெற்றிருந்தது.



    `சாமி ஸ்கொயர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

    தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது. #SaamySquare #Vikram


    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சாமி ஸ்கொயர்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். வில்லனாக பாபி சிம்ஹாவும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற 20-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    தேவி ஸ்ரீ பிரசாத் இசைமைத்திருக்கும் இந்த படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார். #SaamySquare #Vikram

    அதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் கர்ணன் படத்திற்காக உடை எடையை விக்ரம் ஏற்றி வருகிறார். #Chiyaan #Vikram #ChiyaanVikram
    விக்ரம் நடிப்பில் 'துருவ நட்சத்திரம்', 'சாமி 2' என 2 படங்கள் வெளியீட்டிற்கு தயாராகிவிட்டன. கமல் தயாரிப்பில் நடிப்பதை அடுத்து விக்ரம் இந்தியில் நடிக்க இருக்கிறார்.

    மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் கர்ணன் என்னும் சரித்திர படத்தில் கர்ணனாக நடிக்க இருக்கிறார். இதற்காக தனது உடலை ஆஜானுபாகுவான தோற்றத்துக்கு மாற்றி இருக்கிறார்.



    பீமா படத்தில் நடித்தபோது இருந்ததைவிட அதிகமாக உடல் எடையை ஏற்றி இருக்கிறார். இந்த தோற்றம் காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் தவிர்த்து வருகிறார்.
    பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சேது’ படத்தை நினைத்து நினைத்து நடிகர் விக்னேஷ் வருத்தப்பட்டு வருகிறார். #Vignesh
    தமிழ் சினிமாவின் பெரிய பெரிய ஜாம்பவான்களான பாரதிராஜா, பாலுமகேந்திரா, வி.சேகர் உட்பட பல பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தவர் விக்னேஷ்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று 52 படங்களில் நாயகனாக நடித்து தனது 52வது படமான ஆருத்ரா படத்தில் கொடூரமான வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார் விக்னேஷ்.

    இப்படம் குறித்து விக்னேஷ் கூறும்போது, ‘எனக்கு சினிமா மோகம் அதிகம். 24 மணி நேரத்தில் தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்கள் எல்லாமே சினிமா தான்.

    பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்தும் எனக்கென்று ஒரு பிரேக் வரவில்லை என்கிற ஏக்கம் எனக்கு உண்டு. அதற்காக நான் சோர்ந்து போய் விட வில்லை.

    சொந்தமாக தொழில் செய்து அதில் முன்னேறி இருக்கிறேன். பா.விஜய்யும் நானும் நண்பர்கள். ஒரு நாள் ஒரு கதையை சொல்லி என்னை நடிக்க கேட்டார். கதையை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இவ்வளவு கொடூர வில்லனா என்று தயங்கினேன். ஏன் விக்னேஷ் தயக்கம். இந்த கதையில் சித்தார்த் ஹீரோவாகவும் நான் வில்லனாகவும் நடிக்க இருந்த படம் இது. மிஸ்ஸாகி விட்டது இப்ப நான் ஹீரோ நீங்க வில்லன், இந்த படத்து மூலமா மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படனும்னு நினைத்து தான் இந்த படத்தை எடுக்கிறோம். நீங்க நடிங்க கெட்டவனா நடிச்சாலும் நல்ல பேர் கிடைக்கும்னு சொன்னார். நடிச்சேன் படத்தோட டப்பிங் முடிச்சிட்டு யோசிச்சேன் இவ்வளவு கொடூரமான வில்லனாகவா நடிச்சோம் என்று.

    படத்தில் செய்த தவறுக்கு பிராயசித்தம் செய்கிற மாதிரி காட்சியை எடுத்த இயக்குனர் அதை கட் செய்தது எனக்கு வருத்தம் தான்.

    இதன் மூலம் ஒவ்வொரு பெற்றோருக்கும் நான் வைக்கும் வேண்டுகோள். தயவு செய்து நண்பர்கள் சொந்தக்காரர்கள் யாராக இருந்தாலும் அளவோடு பழக விடுங்கள் என்பது தான்.



    சேது படத்தில் நீங்கள் நடிப்பதாக இருந்து அது மிஸ்ஸான காரணம் என்ன விக்னேஷ்? என்று கேள்வி கேட்டோம். 

    அதை நினைத்து தினமும் வருத்தப்படுவேன். பாலாவும் நானும் ரூம் மேட்ஸ்.

    பல பிரச்சனைகளை சந்தித்ததால் நான் நடிக்க முடியாமல் போச்சி. ஆனாலும் என் நண்பன் இன்னிக்கி ஜெயிச்சி தலை நிமிர்ந்து இருக்கிறது எனக்கு பெருமையா இருக்கு.

    இதை விட கொடூரமான வில்லனா பாலா கூப்பிட்டு நடிக்க சொன்னா...?

    நடிப்பேன். நடிப்பு தானே. சேது மாதிரி பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படமும் ஏழு நாட்கள் நடிச்ச பிறகு மாற்றப்பட்டேன். அந்த வலியெல்லாம் இன்னும் போகலே. போராடிட்டே இருப்பேன். நிச்சயம் ஜெயிப்போம்’ என்றார்.
    ×