search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98817"

    கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் - அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. #Vikram #KamalHaasan #AksharaHaasan
    விக்ரம் நடிப்பில் `சாமி ஸ்கொயர்' ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்து வருகிறார். 

    விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கி இருக்கிறது. படத்தின் பூஜையில் கமல்ஹாசன், நடிகர் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், ராஜேஷ் எம்.செல்வா, ஜிப்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. அக்‌ஷரா ஹாசன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விக்ரமின் 56-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். #Vikram #KamalHaasan #AksharaHaasan

    தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதி வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFlood #Vikram
    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கேரள மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

    கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விக்ரம் தன் பங்குக்கு ரூ.35 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.



    முன்னதாக நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய்சேதுபதி, உதயநிதி, சிவகார்த்திகேயன், இயக்குனர் சங்கர், நடிகை ரோஹினி, நயன்தாரா உள்ளிட்டோர் கேரளாவுக்கு நிதி உதவி அளித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கமும் நதி அளித்துள்ளது. #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #Vikram
    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் சாமி ஸ்கொயர் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். வில்லனாக பாபி சிம்ஹாவும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற செப்டம்பர் மாதம் ரிலீசாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிபு தமீன்ஸ் கூறியிருப்பதாவது,

    `செப்டம்பர் மாதத்தை குறித்துள்ளோம். மத்திய மற்றும் மாநில தணிக்கை குழு அனுமதி கிடைத்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கிறோம்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

    தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் ஆயுத பூஜைக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SaamySquare #Vikram


    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், கருணாநிதி மறைவுக்கு நடிகர் விக்ரம் இரங்கல் தெரிவித்துள்ளார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆளுநர் பன்வாரி லால் பிரோகித், கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா உள்ளிட்ட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். 

    இதற்கிடையே நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, 

    தமிழின தலைவர், முத்தமிழ் அறிஞர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், ஐந்துமுறை தமிழக முதல்வர் என பன்முக ஆளுமைக் கொண்ட டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். 



    தற்போது வெளியூரில் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருக்கிறேன். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், கோடிக்கணக்கான தமிழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Vikram

    தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தேவி ஸ்ரீபிரசாத், தமிழிலும் மேஜிக் நிகழ்த்தி தன்னுடைய இடத்தை தக்க வைத்திருக்கிறார். #DeviSriPrasad
    ஒரு படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றியடைவது என்பது மிக அரிதாகவே நிகழ்கிறது. இந்த அரிய நிகழ்வு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் அரங்கேறியிருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத், விக்ரம் மற்றும் இயக்குநர் ஹரியின் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘சாமிஸ்கொயர்’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டாகியிருக்கிறது.

    இது குறித்து ஆடியோ தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிலரிடம் கேட்டபோது, ‘டி எஸ் பியின் இசையில் வெளியாகும் தெலுங்கு பட பாடல்கள் எப்போதும் ஆல்பமாகத்தான் ஹிட்டாகின்றன. அதே போன்றதொரு மேஜிக்கை இவர் தமிழிலும் நிகழ்த்தியிருக்கிறார். இவர் இசையமைப்பில் வெளியான ‘சாமிஸ்கொயர்’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

    ‘சாமிஸ்கொயர்’முதலில் வெளியான ‘அதிரூபனே...’ என்ற மெலோடி பாடலுக்கும், அதைத் தொடர்ந்து வெளியான ‘மிளகாபொடியே..’ என்ற பெப்பி நம்பருக்கும் பல மில்லியன் லைக்குகள் பெற்று இசையுலகை அதிரவைத்தது.

    அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியான ‘டர்னக்கா..’ என்ற பாடலும், ‘புது மெட்ரோ ரயிலு..’ என்ற பாடலும் ஏகோபித்த ஆதரவை அள்ளியது. இந்த பாடலை எழுதியவர் வேறு யாருமில்லை நம்முடைய டிஎஸ்பி தான். தமிழில் இதுவரை அவர் பல பாடல்களில் வரிகளை எழுதியிருந்தாலும் முழு பாடலையும் எழுதியது இதுவே முதல்முறை. தெலுங்கில் தான் எழுதிய பாடலுக்கு சிறந்த பாடலாசிரியர் விருதை டிஎஸ்பி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி தமிழில் நிறைய பாடல்களில் டிஎஸ்பியின் எழுத்துக்களை பார்க்கலாம் என்கின்றது சினிமா வட்டாரம்.

    அதேபோல் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்ட அம்மா ஸ்பெஷல் பாடலான ‘அம்மா அம்மா..’  என்ற பாடலுக்கும் மில்லியன் கணக்கிலான லைக்குகள் கிடைத்து டிரெண்டிங்கில் இருக்கிறது.



    அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆல்பமாக ஹிட்டான படங்களின் பட்டியலில் சாமிஸ்கொயரும் இடம்பெற்றிருக்கிறது என்பதை உறுதியாக சொல்லலாம்.’ என்றார்.

    ரசிகர்களும், திரையுலகினரும் இதை ஆமோதிக்கிறார்கள். இதனிடையே ஆகஸ்ட் =2 ஆம் தேதி பிறந்த நாளைக் கொண்டாடிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு இந்த சாமிஸ்கொயர் படத்தின் பாடல்கள் ஆல்பமாக ஹிட்டானது அவருக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதை அவரது அமெரிக்க இசைப்பயணம் மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இந்நிலையில் அவர் இந்த ஆண்டும் அமெரிக்காவில் இசை பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

    ஆகஸ்ட் 11, 18, 25 மற்றும் செப்டம்பர் 1, 8, 16 ஆகிய தேதிகளில் அமெரிக்காவிலுள்ள முன்னணி நகரங்களில் ராக் ஸ்டாரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஹரி, சாமி ஸ்கொயர் படத்தின் கதையை மேடையிலேயே போட்டுடைத்தார். #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்  சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, ஹரி, தேவி ஸ்ரீ பிரசாத், சிபு தமீன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் இயக்குநர் ஹரி பேசும் போது,

    மீண்டும் மீண்டும் எனக்கு தொடர்ந்து எனது படத்தை தயாரித்தவர் இயக்குநர் பாலச்சந்தர். இந்த தருணத்தில் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். சிபுவும் சிறந்த தயாரிப்பாளர். படத்திற்கான வெற்றி, தோல்வியை வெளிப்படையாக கூறுவார். இந்த படத்திற்காக அதிகமாக செலவு செய்திருக்கிறார். 5 மாநிலங்களுக்கு சென்று, பல முக்கிய இடங்களில் படத்தை உருவாக்கி இருக்கிறோம். 



    சாமி படத்தை 2003-ல் உருவாக்கினோம். அப்போவே சாமியின் வேட்டை தொடரும் என்று போட்டிருந்தேன். அப்போது ஒரு ஒன்லைன் இருந்தது. அதை அடுத்தடுத்து எடுத்த போலீஸ் படங்களில் அதை எடுத்துவிட்டேன். ஒரு நல்ல கதை இருந்தால் மட்டும் தான் பண்ண முடியும் என்று சொல்வேன். எனவே 14 வருடங்கள் காத்திருந்தோம். அப்போது தான் கதை அமைந்தது. நிறைய பேர், புதுசு புதுசாக கதை சொல்கிறார்கள், ரொம்ப யோசிக்க வேண்டாம், கதையை நானே சொல்கிறேன். பெருமாள் பிச்சை குடும்பத்துக்கும், ஆறுச்சாமி குடும்பத்துக்கும் நடக்கும் போராட்டம் தான் சாமி ஸ்கொயர் படத்தின் கதை. என்றார். #SaamySquare #Vikram

    ஹரி இயக்கியிருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரம், தூள், தில், சாமி படங்களுக்கு பிறகு சாமி ஸ்கொயர் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கூறினார். #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, ஹரி, தேவி ஸ்ரீ பிரசாத், சிபு தமீன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பேசியதாவது,

    நான் நடித்த படங்களிலேயே முக்கியமான படம் சாமி. என்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக பெரிய ஆளாக நிறுத்தியதற்கு ஹரிக்கு நன்றி கூறினேன். கதை கேட்டு படத்தின் தலைப்பு கேட்டேன். சாமி என்று ஹரி சொல்லும் போதே எனக்கு ஒரு உத்வேகம் இருந்தது. பின்னர் அருள் படத்தில் இணைந்தோம். சாமி படத்தின் இரண்டாம் பாகம் பற்றி முன்பே பேசினோம். ஆனால் சும்மா தொடர்ச்சியாக இல்லாமல், ஒரு கதை அமைந்தால் பண்ணலாம் என்றேன். எத்தனை வருடம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்று ஹரியிடம் சொன்னேன். 



    முன்பு கதை சரியாக அமையவில்லை, தற்போது அமைந்துள்ளது. இது ஒரு சரியான நேரம் என்று தோன்றியது. தூள், தில், சாமி போன்ற படங்கள் பண்ணி ரொம்ப நாள் ஆகிவிட்டது. சாமி ஸ்கொயர் அந்த வகையில் எனக்கு ஒரு மைல்கல்லாக அமையும் என்று நினைக்கிறேன். தவம் செய்வது போல, படத்திற்காக ஹரி ரொம்ப மெனக்கிட்டிருக்கிறார். #SaamySquare #Vikram

    ஹரி இயக்கியிருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், வார்த்தைக்கு வார்த்தை அவரை அண்ணா என்று தான் அழைக்கிறேன் என்று கூறினார். #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்  சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, ஹரி, தேவி ஸ்ரீ பிரசாத், சிபு தமீன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பேசும் போது,

    நேரத்தை எப்படி சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஹரி சார் படத்தில் நடித்தால் கற்றுக்கொள்ள முடியும். தயாரிப்பாளர் பாராட்டும் இயக்குநர் ஹரி சார் தான். ஹரி சார் தயாரிப்பாளர்களின் இயக்குநர். ஹரி சார் இருக்கும் போது சாமி ஸ்கொயர் படத்தில் செட்டே பரபரப்பாக இருக்கும். யாருமே சாதாரணமாக இருக்க மாட்டார்கள். மற்ற படங்களில் பணிபுரியும் போது ஒரு சிறிய தூக்கத்தை போடலாமா என்று நினைக்க ஒரு சிறிய இடைவேளையாவது இருக்கும். ஆனால் ஹரி இயக்கும் படத்தில் அதை நினைக்க கூட முடியாது. 



    தொடக்கத்தில் இருந்து சூரி அண்ணாவை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவரை எனது சொந்த அண்ணனாகவே பார்க்கிறேன். வார்த்தைக்கு வார்த்தை அண்ணா, அண்ணா என்று அழைப்பது சூரி அண்ணாவை தான். இந்த படத்தில் எனக்கும், சூரி அண்ணாவுக்கும் நிறைய காட்சிகள் உள்ளது. பேசவே பயமாக இருக்கிறது. 

    ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது தான் எனது ரசிகையாகி இருக்கிறார். காக்கா முட்டை படத்தில் இருந்தே நான் அவரது ரசிகை. மிகச்சிறந்த நடிகை. நாங்கள் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் ஒரே படத்தில் இணைந்து நடித்திருக்கிறோம். 



    அந்நியன் படத்தின் போது ரெமோவாக விக்ரம் சாரை ரசித்தேன். தற்போது அவருடன் இணைந்து நடித்திருப்பதில் மகிழ்ச்சி. சாமி முதல் பாகம் போலவே இரண்டாவது பாகத்திலும் இருக்கிறார். ஹரி சார் மாதிரியே துறுதுறுவென்று இருப்பார். இந்த படத்தின் மூலம் என்னை பாடகியாக அறிமுகப்படுத்திய தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு நன்றி. இவ்வாறு பேசினார். #SaamySquare #Vikram #KeerthySuresh

    ஹரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் விக்ரமுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து பாடியிருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். #ChiyaanVikram #KeerthySuresh
    சாமி படத்தின் இரண்டாம் பாகமாக சாமி ஸ்கொயர் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரி. இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஜஸ்வர்யா ராஜேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினர் பலர் கலந்துக் கொண்டனர். 

    இவ்விழாவில் படக்குழுவினர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் இடம் பெறும் ‘புது மெட்ரோ ரயில்’ என்ற பாடலை விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து பாடியிருப்பதாக கூறியிருக்கிறார்கள்.



    ஏற்கெனவே வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் வெளியிட்ட சிங்கள் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 
    ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் சாமி ஸ்கொயர் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #SaamySquare #Vikram
    ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கிறது. `அதிரூபனே', `மொளகாப்பொடியே' என துவங்கும் அந்த இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை நிலையில், படத்தின் முழு இசையும் வருகிற ஜூலை 23-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 
    தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். வில்லனாக பாபி சிம்ஹாவும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. #SaamySquare #Vikram

    விவேகம் படத்திற்கு பிறகு அக்‌ஷரா ஹாசன் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் நாசர் மகன் அபி மெக்தி ஜோடியாக அக்‌‌ஷரா ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vikram #AksharaHaasan #AbiMehedhi
    கமல்ஹாசன், திரிஷா நடித்த `தூங்காவனம்' படத்தை இயக்கியவர் ராஜேஷ் செல்வா. இவர் அடுத்ததாக விக்ரம், அக்‌‌ஷரா ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படம் பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியான நிலையில், இந்தப் படத்தில் நடிகர் நாசரின் இளைய மகன் அபி மெக்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

    இதுவே அபி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அபியின் சகோதரர் லுத்புதீன் ஏற்கனவே சைவம், பறந்து செல்ல வா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    அபி ஏற்றுள்ள இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தெலுங்கு நடிகர் நிதினிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் நடிக்க மறுத்துவிட்டார். ஆக்‌‌ஷன் மற்றும் எமோ‌ஷனல் திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் ஆரம்பமாக உள்ளன.



    அக்‌ஷராஹாசனுக்கு ஜோடியாக அபிமெக்தி நடிப்பதாக தகவல் வருகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். #Vikram #AksharaHaasan #AbiMehedhi

    ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. #SaamySquare #Saamy
    ஹரி இயக்கத்தில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பாகஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட்டு வருகிறார்கள். இதில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்கும் டூயட் பாடலாக உருவாக்கி வருகிறார்கள்.

    இந்தப் பாடல் படத்தின் முதல் பாடல் என்றும், விக்ரமுக்கு அறிமுகப் பாடல் இல்லை என்றும் இயக்குனர் ஹரி கூறியுள்ளார். மேலும், முதல் முறையாக டூயட் பாடலை படத்தில் முதல் பாடலாக உருவாக்கி இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். சாமி படத்தின் முதல் பாகம் எடுத்த பிறகு, இதன் தொடர்ச்சி உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், முடியவில்லை. அதற்கான கதையை சிங்கம் பாகத்தின் தொடர்ச்சிக்கு உபயோகப்படுத்தி விட்டேன். சிங்கம் படத்திற்காக யோசித்ததை சாமி ஸ்கொயர் படத்திற்கு உபயோகப்படுத்தி இருக்கிறேன் என்றும் ஹரி கூறியிருக்கிறார்.

    சாமி முதல் பாகத்தில் அறிமுகப்பாடலான ‘திருநெல்வேலி அல்வாடா’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அதுபோல், இந்தப் படத்திலும் விக்ரமுக்கு அறிமுகப்பாடல் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால், அந்த அறிமுகப்பாடல் இல்லை என்று ஹரி கூறியிருப்பது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் அடைந்திருக்கிறது.



    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்கள். வில்லனாக பாபி சிம்ஹாவும் நடித்துள்ளனர். 

    தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #SaamySquare #Vikram
    ×