search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபடி"

    தமிழக அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு நடக்கிறது. இதில் 1.1.2003-க்கு பின்னர் பிறந்தவர்கள் கலந்துகொள்ளலாம்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடிக்கழக செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்ட கபடி கழகத்தின் சார்பில் வருகிற 9-ந் தேதி மாலை 3 மணிக்கு மாவட்ட கபடி கழக அலுவலகத்தில் கெலோ இண்டியா தமிழக அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு நடக்கிறது. இதில் 1.1.2003-க்கு பின்னர் பிறந்தவர்கள் கலந்துகொள்ளலாம்.

    இவர்கள் ஆண்கள் 70 கிலோவும், பெண்கள் 65 கிலோவும் இருக்க வேண்டும். தேர்வுக்கு வரும் வீரர், வீராங்கனைகள் ஆதார் அட்டை, பள்ளி மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் நகல் கண்டிப்பாக கொண்டுவரவேண்டும், மேலும் ஷூ கொண்டுவர வேண்டும்.

    இதில் தேர்ந்தெடுக்கப் படும் வீரர், வீராங்கனைகள் வருகிற 14-ந் தேதி சென்னையில் மாநில கபடிக்கழகம் நடத்தும் தேர்வுக்குமாவட்ட கபடிக்கழகத்தின் சார்பில் அழைத்துச் செல்லப் படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    66-வது மாநில சீனயர் கபடி சாம்பயின்ஷிப் தொடருக்கான சென்னை மாவட்ட கபடி அணிக்கான வீராங்கனைகள் தேர்வு நாளை நடக்கிறது.
    66-வது மாநில சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 19 மற்றும் 20-ந்தேதிகளில் திருச்செங்கோட்டில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான சென்னை மாவட்ட பெண்கள் கபடி அணி தேர்வு ராணி மேரி கல்லூரியில் நாளை (10-ந்தேதி) காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது. 75 கிலோவுக்கு கீழ் உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம்.

    ஆண்கள் அணிகள் தேர்வு வருகிற 12-ந்தேதி நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது. 85 கிலோவுக்கு கீழ் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். இந்தத்தேர்வில் பங்கேற்பவர்கள் ஆதார் அடையாள அட்டை மற்றும் புகைப் படத்துடன் வர வேண்டும் என்று சென்னை மாவட்ட கபடி சங்க செயலாளர் கோல்டு எம். ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
    ×