search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷால்"

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள விஷால், அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். #SterliteProtest #Bansterlite
    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தூத்துக்குடி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

    இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 9 பேர் வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்தும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே போல் நடிகர் விஷாலும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். விஷால் கூறியிருப்பதாவது,



    ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்படட்டது கண்டனத்திற்குரியது. போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுநலனை கருத்தில் கொண்டே போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் சுயநலம் இல்லை. 50,000 பேர் கூடி போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் அந்த ஊரின் நலனை கருத்தில் கொண்டே போராடுகிறார்கள். 

    அன்பிற்குரிய பிரதமரே, அமைதி காத்தது போதும், இப்போதாவது பேசுங்கள். போராட்டம் என்பதே ஜனநாயகம் தான் என்னும் போது, மக்கள் ஏன் அதை செய்யக் கூடாது. 

    இந்த அரசு மக்களுக்காகத் தான் செயல்படுகிறதா. 2019-ஆம் ஆண்டே விழித்துக் கொள். என்று கூறியிருக்கிறார்.  #SterliteProtest #Bansterlite #SaveThoothukudi

    விவேக் - தேவயாணி நடிப்பில் உருவாகி இருக்கும் `எழுமின்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிம்பு, தான் இனி எங்கேயும் தாமதமாக வரமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன் என்றார்.
    விவேக் - தேவயாணி நடிப்பில் உருவாகி இருக்கும் `எழுமின்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த விழாவில் நடிகர் சிம்பு, விஷால், கார்த்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

    விழாவில் சிம்பு பேசியதாவது, 

    பொதுவாகவே நான் டிரைலர், ஆடியோ வெளியீடு போன்ற விழாக்களில் கலந்து கொள்வதில்லை. அதற்கு காரணம் மைக் தான். மைக் கையில் கிடைத்தால் நான் ஏதாவது பேசிவிடுவேன். அது ஏதாவது பிரச்சனையை கிளப்பும். 

    வாழ்க்கையில் ஒருவரை பிடிக்கும் என்று சொல்வதை விட, அவர்களை நாம் பின்பற்றுகிறோம் என்பதை நடைமுறையில் செய்து காட்ட வேண்டும். அப்படி செய்து காட்டுபவர் தான் விவேக். நான் எனது படம் ஒன்றில் ஒரு காமெடியனை அறிமுகம் செய்ய முயற்சி செய்தேன். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் விவேக் சார் தான் உச்சத்தில் இருக்கிறார், அவரை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றார். அந்த நிலையில், விவேக் விட்டுக் கொடுத்ததால் தான், சந்தானம் இன்று சினிமாவில் இருக்கிறார். இந்த படத்தில் நடித்துள்ள குழந்தைகளுக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க அனுமதி அளித்த பெற்றோருக்கு நன்றி.



    என் குழந்தையை நான் பள்ளிக்கு அனுப்ப மாட்டேன். படிக்க, கற்றுக்கொள்ள தான் பள்ளிக்கு அனுப்புகிறோம். முதலாவது வரும் ஒருவனை மட்டும் தான் பார்க்கிறார்கள். அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. ஒரு குழந்தைக்கு படிப்பு வரவில்லை என்றால் அந்த குழந்தைக்கு அதனை சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்கான பயிற்சி கொடுக்க முயற்சிப்பதில்லை. தண்டிக்க தான் செய்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோரும் அவர்களது குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டுவர அவர்களை ஊக்குவிக்க வேண்டும். நான் சினிமாவில் இந்த நிலைக்கு வர எனது பெற்றோர் தான் காரணம். 

    போட்டி, பொறாமை எதற்கு, எதை எடுத்துக் கொண்டு போகிறோம். மனதில் பட்டதை தான், நான் பேசுவேன். விஷால் நடிகர் சங்கத் தேர்தலில் நிற்கும் போது, அவரது பேச்சில், முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர் மீது கோபப்பட்டு, திட்டியிருக்கிறேன். அவர் செய்த ஒரு விஷயம் நமக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் செய்யும் அனைத்துமே தவறா, நடிகர் சங்கம் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கு மனிதாபிமானத்துடன் என்னை அழைத்த விஷாலுக்கு நன்றி. நான் திட்டுகிறேன் என்றால் பலரும் சும்மா திட்டுகிறார்கள்.



    ஏஏஏ படத்திற்கும் அவரை திட்டினார்கள். ஏன் திட்டினார்கள் என்று தெரியவில்லை. அந்த ஏஏஏ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இந்த ஏஏஏ என்று விஷாலை குறிப்பிட்டு, (Arise, Awake, Acheive) இதை தான் அவரிடம் பார்த்தேன். 

    கட்அவுட் வைத்த தன் ரசிகர் இறந்தது வருத்தத்தை அளித்தது. அவரை கொலை செய்ததால், அவரது வாழ்க்கை மட்டுமில்லாமல், அவரை கொலை செய்த 9 பேரின் வாழ்க்கையும் பாலானது. 

    எனக்கு பிடித்ததை நான் மகிழ்ச்சியாக செய்கிறேன். ஆனால் தற்போது ஒரு விஷயத்தில் நான் உத்தரவாதம் அளிக்கிறேன். எனக்கு பிடித்த மாதிரி நான் இருந்து கொள்கிறேன். ஆனால் நான் தாமதமாக வருவது பலருக்கு கஷ்டமாக இருப்பதாக சொல்கின்றனர். அப்படி இருந்தால், இனி நான் தாமதமாக வர மாட்டேன். லேட்டாகவும் போவதில்லை என்று உறுதி அளிக்கிறேன் என்றார். #EzhuminTrailerLaunch #STR 
    வி.பி.விஜி இயக்கத்தில் விவேக், தேவயானி நடிப்பில் உருவாகி வரும் ‘எழுமின்’ படத்தின் டிரைலரை நடிகர்கள் சிம்பு, விஷால் மற்றும் கார்த்தி இணைந்து வெளியிடுகின்றனர். #Ezhumin #Vivekh
    வையம் மீடியாஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘எழுமின்’. சமீபத்தில் வெளியான ‘உரு’ படத்தை தயாரித்த வி.பி.விஜி இயக்கியிருக்கும் இந்த படத்தில் விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

    கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இடம் பெறும் எழுச்சி மிகு பாடல் ஒன்றை யோகி பி பாடி இருக்கிறார். 



    இந்த படத்தின் டிரைலர் வருகிற மே 21-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், இந்த டிரைலரை நடிகர் சிம்பு, விஷால் மற்றும் கார்த்தி இணைந்து வெளியிடுகின்றனர். #Ezhumin #Vivekh

    ‘இரும்புத்திரை’ வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஷால், நான் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணை தினமும் பார்த்துக் கொண்டுத்தான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
    அண்மையில் வெளியான 'இரும்புத்திரை' படம் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான படமாக எடுக்கப்பட்டு இருந்தது. ஆதார் அட்டை முதல் தேர்தல் முறை வரை எல்லா மின்னணு செயல்பாடுகளில் இருக்கும் சிக்கல்களை அலசி இருந்தது. படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான விஷால் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசினார். 

    அப்போது மின்னணி வாக்குப்பதிவு எந்திரம் பற்றி கேட்டபோது, ‘எனக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை. வாக்குசீட்டு முறையை தான் நம்புகிறேன். என்னிடம் ஆதார் அட்டை இருக்கிறது. ஆனால் இன்னும் வங்கியில் அதை இணைக்கவில்லை. முன்பைவிட இப்போது இன்னும் விழிப்புணர்வோடு இருக்கிறேன்.

    மெர்சல் அளவுக்கு இந்த படத்துக்கு பிரச்னை யாரும் பண்ணவில்லையே என்றால் அதற்கு காரணம் நாங்கள் உண்மையை தான் சொல்லி இருக்கிறோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்று பொருள்’ என்று பதிலளித்தார். விஷால் அடுத்து அரசியலுக்கு வரும் திட்டத்தில் இருக்கிறார்.



    அதற்கு முன்பாக ஜனவரியில் நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட்டு அடுத்த முகூர்த்த நாளிலேயே அங்கே தனது திருமணம் நடக்கும் என்றும் கூறினார். மணப்பெண் யார் என்று கேட்டதற்கு ‘அவரை தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்’ என்று மறைமுகமாக சொன்னார். விஷாலும் வரலட்சுமியும் காதலிப்பதாக சில ஆண்டுகளாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    நான் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தை வெளிவராமல் இருப்பதற்கு நிறைய பேர் தடுத்தார்கள் என்று நடிகர் விஷால் வெற்றி விழாவில் பேசினார். #Vishal
    விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் திரைப்படம் இரும்புத்திரை. விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்து அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இத்திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் விஷால், அர்ஜுன், இயக்குனர் மித்ரன், உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

    இதில் விஷால் பேசும்போது, ‘இந்த படத்தில் நான் பல காட்சிகளில் மிகவும் உண்மையாக யதார்த்தமாக நடித்தேன். ஒரு காட்சியில் என்னுடன் பாங்க் ஏஜெண்டாக நடித்த சக நடிகரை அடித்தேவிட்டேன். படத்தில் என்னுடன் நாயகியாக நடித்த சமந்தாவுக்கு நன்றி. கல்யாணமானால் நடிக்கக்கூடாது என்று இருந்த ஒரு விஷயத்தை இன்று அவர் உடைத்துவிட்டார். அது எனக்கு சந்தோஷமாக உள்ளது. 

    இந்த படத்தை வெளியிட நான் மிகவும் போராடினேன். பணத்தின் அருமை அப்போது தான் எனக்கு தெரிந்தது. என்னுடைய நண்பன் வெங்கட் காரை விற்று எனக்கு பணம் கொடுத்தார். இன்னொரு நண்பன் பத்திரத்தை விற்று பணம் கொடுத்தார். ஏன் என்னுடைய படத்தை வெளிவராமல் தடுத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை எனக்கு இது போல் நடந்தது இல்லை. தயாரிப்பாளர் சங்க தலைவரான என்னுடைய படத்தையே இவர்கள் வெளிவராமல் தடுக்கிறார்கள் என்றால் யோசிக்க வேண்டிய ஒன்று தான். 

    ஒரு தயாரிப்பாளர் சங்க தலைவரின் படத்தையே தடுத்துவிட்டோம் என்று காட்ட முயற்சி செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். படத்தில் உள்ள ஆதார் கார்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க கோரி போராடுகிறார்கள். அவர்கள் அனைவரும், தியேட்டர் அருகே போராடாமல் வள்ளுவர் கோட்டம் போன்ற இடங்களில் போராடினால் யாருக்கும் இடைஞ்சல் வராது. 

    ஆர்யா தான் இதில் வில்லனாக நடிக்கவேண்டியது. அப்போது இருந்த வெர்ஷனே வேறு. இப்போது அர்ஜுன் சார் நடித்துள்ள இந்த கதாபாத்திரம் நல்ல பெயரை பெற்றுள்ளது. 

    படம் வெளியாக எனக்கு ஆதரவாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு நன்றி என்றார் விஷால்.
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் `சண்டக்கோழி-2' படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் விஷால் அறிவித்துள்ளார். #Vishal #Sandakozhi2
    விஷால் நடிப்பில் கடந்த வாரம் ரிலீசாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் `இரும்புத்திரை'. இந்த படத்தை தொடர்ந்து விஷால் தற்போது `சண்டக்கோழி-2' படத்தில் நடித்து வருகிறார். லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

    வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

    விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 



    விஷாலின் 25-வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரபேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விஷால் பேசும்போது, 

    `சண்டக்கோழி-2' முந்தைய படத்தை விட பல மடங்கு நன்றாக வந்திருக்கிறது. இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. செப்டம்பர் 18 அன்று விநாயகர் சதுர்த்தியில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். சங்கத்திலும் அனுமதி கேட்க இருக்கிறோம் என்றார். #Vishal #Sandakozhi2

    தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ.7 கோடி முறைகேடு செய்துள்ளதாக விஷால் மீது புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், ‘மடியில் கனம் இல்லை; யாருக்கும் பயப்படமாட்டேன்’ என்று நடிகர் விஷால் ஆவேசமாக கூறியுள்ளார். #Vishal #ProducerCouncil
    நடிகர் சங்கம் பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருக்கும் நடிகர் விஷால் அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- இணைய வழி குற்றங்களை அலசுகிறது உங்கள் படம். உங்களுக்கு அப்படி ஏதும் அனுபவம் நேர்ந்ததா?

    பதில்:- ஆமாம். ஒருமுறை வெளிநாட்டில் இருந்தபோது எனது வங்கிக்கணக்கில் இருந்து 80 ஆயிரம் ரூபாய் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது. என்னால் அதனை மீட்கவே முடியவில்லை.

    ஒரே ஒரு முறை தவறான ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் மொத்த பணத்தையே இழக்கும் சூழ்நிலை இன்று நிலவுகிறது. சமூக வலைதளங்களில் நாம் பகிரும் தனிப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் கூட நமக்கு பெரிய ஆபத்தை விளைவிப்பவைதான். முக்கியமாக சமூக வலைதளங்களில் பிரபலங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

    கே:- தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க பொதுச்செயலாளர், நடிகர், தயாரிப்பாளர் எப்படி முடிகிறது இத்தனை பொறுப்புகளை கவனித்துக் கொள்ள?

    ப:- நேர மேலாண்மை தான் காரணம். ஆறு மணி நேரம் மட்டும்தான் தூக்கத்துக்கு ஒதுக்குகிறேன். மீதி 18 மணி நேரத்தை ஒவ்வொரு வேலைக்கும் பிரித்துக் கொள்கிறேன். ஒரு வேலையில் இருக்கும்போது இன்னொரு வேலை பற்றி நினைக்கவே மாட்டேன். இத்தனையையும் நான் கவனிப்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. தயாரிப்பாளர் சங்க தலைவரான பிறகு என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கவே முடியவில்லை. பரவாயில்லை. ஒரு நல்ல செயலுக்காக நமது சந்தோ‌ஷத்தை இழப்பதில் தவறு இல்லை.



    கே:- சண்டக்கோழி 2 படம் எப்படி வந்திருக்கிறது?

    ப:- முந்தைய படத்தை விட பல மடங்கு நன்றாக வந்திருக்கிறது. இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. செப்டம்பர் 18 அன்று விநாயகர் சதுர்த்தியில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். சங்கத்திலும் அனுமதி கேட்க இருக்கிறோம்.

    கே:- உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை?

    ப:- ஒவ்வொரு ஆண்டும் படம் இயக்க திட்டமிடுகிறேன். ஆனால் முடியாமல் போகிறது. இந்த ஆண்டு நடிகர் சங்க கட்டிட வேலையை முதலில் முடிக்க வேண்டும். அதன் பின்னர்தான் அடுத்தகட்ட நடவடிக்கை.

    கே:- லைக்காவுடன் நீங்கள் இணைந்ததன் பின்னணி என்று ஒரு கட்டுரை வந்திருக்கிறதே...?

    ப:- இது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு. அந்த இணையதளம் இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டவேண்டும். நான் தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பதால் எனது படங்களை யாருமே தயாரிக்க கூடாதா? அல்லது எனது படங்களுக்கு நிதி உதவியே செய்யக்கூடாதா? கேரள காவல்துறையினர் தமிழ்ராக்கர்ஸ் அட்மினை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். பைரசி இணையதளங்களுக்கு படங்கள் செல்லும் வழிகளை அடைத்து வருகிறோம்.



    கே:- வெளியீட்டில் உங்கள் படத்துக்கு முன்னுரிமை கொடுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறதே?

    ப:- சென்சார் செய்யப்பட்ட தேதியை வைத்து தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மற்ற தயாரிப்பாளர்களை கேட்டு பாருங்கள். என் படத்துக்கு எந்த முன்னுரிமையும் தரப்படவில்லை. யார் வேண்டுமானாலும் வந்து உறுதி செய்து கொள்ளலாம்.

    கே:- உங்கள் மீதான ரூ.7 கோடி முறைகேடு புகார் குறித்து பதில் என்ன?

    ப:- எனது தனிப்பட்ட கணக்கு வழக்குகளோ, சங்கம் தொடர்பானதோ எல்லாம் சரியாக முறையாக பராமரிக்கப்பட்டுவருகிறது. எனது மடியில் கனமில்லை. எனவே யாருக்காகவும் எந்த குற்றசாட்டுக்காகவும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Vishal #ProducerCouncil
    நேற்று நடந்த தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் டி.ராஜேந்தர் கூறிய புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார். #Vishal #TRajendar
    என் மீது எதிரணியினர் சுமத்தியுள்ள குற்றசாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் விஷால்.

    நேற்று பாரதிராஜா தலைமையில் டி.ராஜேந்தர், கே.ராஜன், ராதாகிருஷ்ணன், ஜே.கே.ரித்திஷ், விடியல் ராஜு, கலைப்புலி சேகரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலர் கூடி பேசினார்கள். 

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘தயாரிப்பாளர் சங்கத்தில் வைப்பு நிதியாக இருந்த 7 கோடி ரூபாய் என்ன ஆனது என்று கணக்கு காட்டவில்லை’ என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்துள்ள விஷால், தயாரிப்பாளர் சங்க பணத்தை யாரும் கையாடல் செய்யவில்லை. எல்லாக் கணக்குகளும் முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    பைரசி இணையதளங்களை வேரோடு அழிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆதாரம் இருந்தால் நிரூபிக்கலாம். வார்த்தைகளை விட செயல் மூலம் பேசுவதே சரியாக இருக்கும்’ இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.
    வாக்குறுதிகளை மீறி செயல்பட்ட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். #Vishal #ProducerCouncil
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுன்சில் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இதில் டைரக்டர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், நடிகர்கள் ராதாரவி, ஜே.கே.ரித்தீஸ், ராஜன் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் அவர்கள் கூட்டாக பேட்டி அளித்தனர்.

    நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவர் ஒராண்டில் நிறைவேற்ற வில்லை என்றால் பதவி விலகுவேன் என்று கூறி இருந்தார். 2 ஆண்டுகள் ஆகியும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

    54 நாட்கள் சினிமா ஸ்டிரைக் காரணமாக கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. விஷால் படத்துக்கு மட்டும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் கிடைக்கிறது. மற்றவர்களது படங்களுக்கு 200 தியேட்டர்கள் கூட கிடைப்பதில்லை.

    எனவே விஷால் உடனடியாக பதவி விலக வேண்டும். அல்லது நாங்கள் விரட்டுவோம். புதிதாக தேர்தல் நடத்தி தமிழர்களை நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும். தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து தயாரிப்பாளர் சங்கத்தை மாற்ற முன்வர வேண்டும். தமிழர்கள், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளாக வரவேண்டும். விஷால், தனது படத்தை பற்றி மட்டும் கவலைப்படாமல், மற்ற படங்களை பற்றியும் கவலைப்பட வேண்டும் என்று அனைவரும் பேசினார்கள்.
    துப்பறிவாளன் படத்தில் நடித்து விட்டால் நீ என்ன பெரிய துப்பறிவாளனா என்று நடிகர் விஷாலுக்கு இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். #Vishal #TRajendar
    விஷால் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘இரும்புத்திரை’. மித்ரன் இயக்கியுள்ள இப்படம் டிஜிட்டல் இந்தியாவில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகி இருந்தது. இப்படம் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

    இந்நிலையில், வாக்குறுதிகளை மீறி விஷால் செயல்பட்டு விட்டதாக கூறி இயக்குனர் பாரதிராஜா, ராதாரவி, டி.ராஜேந்தர் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் பேட்டியளித்தனர்.

    இதில் டி.ராஜேந்தர் பேசும்போது, ‘தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் போட்டியிடவில்லை. துப்பறிவாளன் படத்தில் நடித்தால் நீ என்ன பெரிய துப்பறிவாளனா? தமிழ் ராக்கர்சை பிடித்து விட்டேன். நெருங்கி விட்டேன் என்றெல்லாம் கூறினார். எங்கே போனார்கள் தமிழ் ராக்கர்ஸ். ஏன் இன்னும் சொல்ல வில்லை. எங்கே போனது ரூ.7 கோடி வைப்புநிதி? பதில் சொல்ல முடியுமா? பொதுக்குழுவை நடத்த முடியாதபோது, ஸ்டிரைக் நடத்தியது ஏன்? ஒரு படத்திற்கு 200 திரையரங்குகள் தான் ஒதுக்கப்படும் என்று வாக்குறுதி கூறிவிட்டு, அவருடைய ‘இரும்புத்திரை’ படத்தை மட்டும் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட்டிருக்கிறார். 

    க்யூப் கட்டணம் குறைப்பதற்காக விஷால் ஸ்டிரைக் நடித்தினார். ஆனால், க்யூப் கட்டணம் குறைந்ததா? மூத்த உறுப்பினர்கள் பிரிந்து கிடப்பதால் யார் யாரோ பதவிக்கு வருகிறார்கள். இந்தநிலை மாற வேண்டும்’ என்றார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களுள் ஒருவரான விஷால் வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம் என்று கூறியிருக்கிறார். #Vishal #Varalakshmi
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களுள் ஒருவரான நடிகர் விஷால் சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியில் வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம் என்று கூறினார். விஷால் கூறியதாவது, 

    துணை இயக்குநராக சினிமா பயணத்தை துவக்கிய என்னை நடிகனாக பார்த்தவர் நடிகர் அர்ஜுன் தான். அதன் பின்னர் தான் செல்லமே படத்தில் நடித்தேன். நான் நடிகனாக அவர் தான். நான் துணை இயக்குநராக பணிபுரியும் போது நான் வாங்கிய முதல் சம்பளம் 100 ரூபாய் தான். 

    படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு முதலில் கமர்ஷியல் படங்களில் நடித்தேன். அதற்காக தொடர்ந்து கமர்ஷியல் படங்களை மட்டுமே பண்ண கூடாது என்பதால் பாலாவின் `அவன் இவன்' எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதனால் தொடர்ந்து பெயருக்காக மட்டுமே படம் பண்ண முடியாது. வித்தியாசமான படங்களை பண்ணவே ஆசைப்படுகிறேன். அடுத்ததாக புதுமுக இயக்குநருடன் இணைகிறேன். அந்த படமும் சமூகத்தின் ஒரு முக்கிய பிரச்சனையை பற்றி பேசும் படம் தான். 



    எனது வாழ்க்கையில் நண்பர்கள் முக்கியமானவர்கள். நமது நிறை, குறைகளை எடுத்துச் சொல்வது நண்பர்கள் தான். எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றால் எனது நண்பர்களை தான் சொல்வேன். 

    அந்த வகையில், வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம். அவரை 8 வயதில் இருந்தே எனக்கு தெரியும். நாங்கள் குடும்ப நண்பர்கள். வரலட்சுமி அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர் நல்ல தன்னம்பிக்கையான பெண். எனது தவறுகளைசுட்டிக்காட்டி, நல்வழிப்படுத்தி ஊக்கப்படுத்துவார். எனது வாழ்க்கையில் முக்கியமான நபர் அவர். எனது நெருங்கிய தோழி. நாங்கள் நல்ல நண்பர்கள். எனது குறிக்கோள் நடிகர் சங்க கட்டிடம் கட்டிடுவது தான். நல்லது, கெட்டது என அனைத்தையும் வரலட்சுமியுடன் பகிர்ந்து கொள்வேன் என்றார். 

    மிஷ்கின் பற்றி பேசும் போது, வருடத்திற்கு ஒரு படத்திலாவது அவருடன் இணைய ஆசைப்படுகிறேன். அடுத்ததாக துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் அவருடன் இணையவிருக்கிறேன். சண்டைக் காட்சிகளில் என்னையே வியக்க வைத்தவர் மிஷ்கின் தான். இவ்வாறு விஷால் பேசினார். #Vishal #Varalakshmi

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் - அர்ஜுன் - சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் `இரும்புத்திரை' படத்தின் விமர்சனம்.
    ராணுவத்தில் உயரிய பொறுப்பில் இருகிறார் நாயகன் விஷால். கிராமத்தில் வசிக்கும் தன் அப்பா டெல்லி கணேஷ், அம்மா, தங்கை என யாரிடமும் அதிக தொடர்பு இல்லாமல் தன்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

    டெல்லி கணேஷ் ஊர் முழுவதும் கடன் வாங்கி பல செலவுகள் செய்கிறார். கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான விஷாலின் அம்மா உயிரிழக்கிறார். 

    இதற்கிடையே சென்னையில் விஷால் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பக்கத்து வீட்டில் உள்ளவரின் வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் பணம் காணாமல் போகிறது. இதனால், அவர் தற்கொலை செய்துவிடுகிறார். அவருக்கு பணம் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து மனைவி மட்டும் மகளிடம் பணம் கேட்பது போல் தவறாக நடந்துக் கொள்கிறார்கள். இதைப் பார்க்கும் விஷால் அவர்கள் மீது கோபப்பட்டு அடித்து விடுகிறார்.



    இது போலீஸ் நிலையம் வரை சென்று விஷாலின் வேலைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. விஷாலின் உயரதிகாரி, மன அழுத்தம் சரியாக இருக்கிறதா அறிந்துக் கொண்டு சான்றிதழ் பெற்று வரும் படி அனுப்புகிறார்.

    அதன்படி மருத்துவர் சமந்தாவை சந்திக்க செல்கிறார் விஷால். சமந்தாவோ உங்கள் குடும்பம் மீது அக்கறை காட்டுங்கள். அவர்களுடன் பழகுகள் என்று அறிவுரை கூறி அனுப்ப, கிராமத்திற்கு சென்று குடும்பத்தினருடன் நேரம் செலவிடுகிறார். 

    அங்கு தங்கைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். இதற்கு 10 லட்சம் தேவைப்படுகிறது. இதற்காக தன் அம்மாவின் சொத்தை விற்று 4 லட்சம் ஏற்பாடு செய்கிறார். மீதமுள்ள 6 லட்சத்திற்கு வங்கி சென்று கடன் வாங்க முயற்சி செய்கிறார். ஆனால், ராணுவ வீரர் என்பதால் கடன் கொடுக்க மறுத்து விடுகிறார்கள். 



    பின்னர், புரோக்கர் மூலமாக போலி ஆவணங்களை வைத்து வங்கியில் கடன் வாங்குகிறார் விஷால். சொத்தை விற்று 4 லட்சம், லோன் 6 லட்சம் ஆக 10 லட்சம் பணத்தை வங்கி வைத்திருக்கிறார். ஆனால் திடீரென 10 லட்சம் பணமும் காணாமல் போகிறது. அதிர்ச்சியடையும் விஷால், எப்படி காணாமல் போனது என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதுபோல் பலருடைய வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் பணம் காணாமல் போகிறது என்பதை தெரிந்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அர்ஜுன் தான் இதற்கு காரணம் என்று கண்டறிகிறார்.

    இறுதியில் அர்ஜுனை விஷால் எப்படி நெருங்கினார்? பணம் எப்படி காணாமல் போகிறது? பணம் அவருக்கு திரும்ப கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகன் விஷால், அவருக்கே உரிய பாணியில் திறமையாக நடித்திருக்கிறார். இராணுவ அதிகாரியாக கம்பீரமாகவும், தங்கைக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் அண்ணனாகவும், பணம் பறிபோன பிறகு, கண்டுபிடிக்க அசுர வேகத்தில் முயற்சி செய்வது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஷால்.



    நாயகியாக நடித்திருக்கும் சமந்தாவின் நடிப்பு அருமை. துறுதுறுவென ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

    வில்லனாக நடித்திருக்கும் அர்ஜுனின் நடிப்பு மிரள வைத்திருக்கிறது. மாடர்ன் வில்லனாக நடித்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார். விஷாலின் அப்பாவாக வரும் டெல்லி கணேஷ், வெகுளித்தனமாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதில் நிற்கும் கதாபாத்திரம்.

    வித்தியாசமான திரைக்கதையை கையில் எடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மித்ரன். தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் கதைக்களத்தை உருவாக்கி, தெளிவான திரைக்கதை அமைத்திருக்கிறார். டிஜிட்டல் இந்தியாவில் ஏற்படும் விளைவுகளை அழகாக பதிவு செய்திருக்கிறார். நம்மளுடைய தகவல்களை இன்டர்நெட்டில் பதிவு செய்து வைத்தால், என்னென்ன விளைவுகள் வரும் என்பதை காண்பித்திருக்கிறார். கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து, அவர்களிடம் சரியாக வேலை வாங்கி இருக்கிறார்.

    யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘இரும்புத்திரை’ அசைக்க முடியாது. 

    ×