search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷால்"

    தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சுவர் ஏறி குதித்து ஓடினார் என்று ஒரு பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார். #Vishal
    தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இரண்டிலும் தலைமை பொறுப்பில் இருப்பவர் விஷால். ‘மீடூ’ என்ற இயக்கம் மூலம் சமூக வலைத்தளங்களில் சின்மயி உள்ளிட்ட பல பெண்கள் திரைப் பிரபலங்கள் மீது ‘மீடூ’ வில் பாலியல் புகார்களை கூறியிருந்தனர்.

    வைரமுத்து, முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுசி கணேசன் உட்பட பல்வேறு துறையை சேர்ந்த பல பிரபலங்கள் பாலியல் புகாரில் சிக்கினர். இதைத் தொடர்ந்து நடிகைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் குழு ஒன்று அமைக்கப்படும் என விஷால் அறிவித்தார்.

    இந்நிலையில், விஸ்வதர்ஷினி என்கிற பெண் தனது முகநூலில் நேரலையாக வீடியோவில் பேசும் போது நடிகர் விஷால் குறித்து பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.

    கோபாலபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு அதிகாலை 2 மணிக்கு வந்த விஷால், 2 மணி நேரம் கழித்து, அதாவது 4 மணியளவில் பின் வாசல் வழியாக சுவர் ஏறி குதித்து ஓடியது ஏன்? எதற்காக அங்கே வந்தார்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சி.சி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது விஷால் எப்படியெல்லாம் ஆட்டம் போட்டார் என தன்னிடம் ஆதாரம் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    விஷால் நடிப்பில் உருவாகி வரும் அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சன்னி லியோன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Ayogya #Vishal #SunnyLeone
    இந்தி முன்னணி கதாநாயகர்களும் சன்னிலியோனுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்க்கிறார்கள். 

    அதையும் மீறி சன்னிலியோன் நடித்துள்ள படங்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. போலீஸ் நிலையங்களிலும் புகார்கள் பதிவாகிறது. கர்நாடகத்தில் சன்னிலியோன் பங்கேற்க இருந்த நடன நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அரசு தடைவிதித்தது. இந்த நிலையில் தமிழ், கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகும் வீரமாதேவி சரித்திர படத்தில் சன்னிலியோன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

    இந்த படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் நடக்கின்றன. மதுரை கோர்ட்டிலும் வீரமாதேவி படத்தில் சன்னிலியோன் நடிக்க தடை விதிக்க வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சன்னிலியோன் நடிக்க கோர்ட்டு தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதனால் வீரமாதேவி படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடக்கிறது. வடிவுடையான் இந்த படத்தை டைரக்டு செய்கிறார். 



    இந்த நிலையில் அடுத்து விஷாலின் அயோக்கியா படத்துக்கும் சன்னிலியோனை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் ஒரு பாடலுக்கு அவர் கவர்ச்சி நடனம் ஆட இருப்பதாக கூறப்படுகிறது. வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார். #Ayogya #Vishal #SunnyLeone

    அதிமுகவினர் தொடங்கி இருக்கும் புதிய செய்தி சேனல் பற்றி நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். #Vishal
    ரஜினி, கமலுக்கு அடுத்து அந்த அரசியலில் நுழைய காத்திருப்பவர் நடிகர் விஷால். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கிய அவர் கடைசி நேரக் குளறுபடியால் போட்டியிடாமலேயே வெளியேறினார். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும் விஷாலுக்கும் மோதலும் ஏற்பட்டது.

    அதன் பின்னர் எந்தத் தேர்தலும் வரவில்லையென்றாலும் அ.தி.மு.க.வுக்கும் விஷாலுக்கும் இடையே பனிப்போர் இருந்து வருவதாகவே பலரும் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் ட்விட்டரில் நடிகர் விஷால் வெளியிட்டுள்ள ஒரு பதிவு, அ.தி.மு.க.வைச் சீண்டுவது போல அமைந்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    “மற்றுமொரு செய்திச்சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் மாதச் சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பைத் தொடங்க முடிகிறது? 2019ஆம் ஆண்டுக்காகக் காத்திருக்கிறேன்”.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


    முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்த அ.தி.மு.க. கட்சியின் அதிகாரபூர்வ டி.வி.யாக நியூஸ் ஜெ எனும் செய்திச் சேனல் தொடங்கப்பட்டிருக்கிறது. அதே நாளில்தான் நடிகர் விஷால் இப்படியாகக் கருத்து கூறியுள்ளார். எனவே, அ.தி.மு.க.வைத்தான் விஷால் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் என்று அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் புதிய படம் மூலம் விஷாலுடன் நடிகை திரிஷா இணைய இருக்கிறார். #Vishal #Trisha
    விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சண்டக்கோழி 2’. இப்படத்தை அடுத்து, தற்போது ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். மேலும் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    இந்நிலையில், விஷால் அடுத்ததாக இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கிறார். நாயை மையமாக வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது. இதில் நாயகியாக திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஏற்கனவே விஷாலுக்கு ஜோடியாக ‘சமர்’ படத்தில் திரிஷா நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படம் மூலம் இணைய இருக்கிறார்கள்.
    96 படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் நடிகர்களுக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக நடிகர் சங்கம் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதுகுறித்து எஸ்.நந்தகோபால் விளக்கம் அளித்துள்ளார். #MadrasEnterprises #ProducersCouncil
    விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான 96 படத்தை தயாரித்தவர் எஸ்.நந்தகோபால். இவர் தனது மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் மூலம் விஷால் நடித்த கத்தி சண்டை, விக்ரம் பிரபு நடித்த வீர சிவாஜி, உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

    இந்த படங்களில் நடித்துள்ள விஷால், விக்ரம் பிரபு, விஜய் சேதுபதி ஆகியோருக்கு தயாரிப்பாளர் நந்தகோபால் சம்பள பாக்கி வைத்து இருப்பதாகவும், இனிமேல் அவர் தயாரிக்கும் படங்களில் நடிகர்-நடிகைகள் நடிக்க கூடாது என்றும், அவருக்கு யாரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என்றும் நடிகர் சங்கம் அறிவித்திருக்கிறது.

    இந்த நிலையில், அதற்கு பதில் அளித்து நந்தகோபால் கூறியதாவது,

    கத்தி சண்டை படம் வெளியிடுவதற்கு முன்பே விஷாலுக்கு சம்பளத்தை கொடுத்து விட்டேன். இதுவரை நான் எடுத்த அனைத்து திரைப்படங்களிலும் மனசாட்சிபடி செயல்பட்டு வருகிறேன். 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கும் முழு ஊதியத்தையும் வழங்கி விட்டேன்.



    இந்த நிலையில் எனது படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்று நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதில் நடிகர் சங்க நிர்வாகிகள் கையெழுத்து இல்லாமல் மொட்டையாக இருக்கிறது. எனக்கு எதிரான இந்த அறிக்கையை சிலர் வேண்டுமென்றே அனுப்பி இருப்பதாக சந்தேகம் எழுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் இன்று (திங்கட்கிழமை) உரிய முடிவை எடுக்க வேண்டும். அதற்கு கட்டுப்படுவேன். தயாரிப்பாளர் சங்கம் பேசி முடிக்காமல் காலம் தாழ்த்தினால் தொழில் செய்ய விடாமல் என்னை தடுப்பதாக டெல்லியில் உள்ள இந்திய தொழில் போட்டி ஆணையத்தில் புகார் செய்வேன்.

    இவ்வாறு கூறியுள்ளார். #MadrasEnterprises #ProducersCouncil #SNanadgopal

    மீடூ இயக்கத்தின் மூலம், பலரும் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், பெண்களை தவறாக பயன்படுத்த வில்லை என்று விஷால் கூறியிருக்கிறார். #Vishal
    திரைத்துறையில் பெண்கள் பாலியல் ரீதியாக வேட்டையாடப்படுவதாக சமீப காலங்களில் புகார்கள் அதிகரித்துள்ளன. மீடூ இயக்கத்தின் மூலம், பலரும் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

    இது குறித்து பேசியுள்ள நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால், சினிமாவில் வாய்ப்புக்காக பெண்களை பணிய வைப்பது தடுக்கப்பட வேண்டும். இதை தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைத்துறையும் உறுதிசெய்ய வேண்டும். குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதற்காக தொடங்கப்பட்ட மீடூ இயக்கம் சிலரின் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. 



    காலம் தாழ்த்துதல், வாய்ப்பு தருவதாக உறுதியளித்துவிட்டு அது நடக்காமல் போனால் பழிவாங்குவதற்காக மீடூவை ஆயுதமாக எடுக்கும் நிலையும் உள்ளது. அது நிறுத்தப்பட வேண்டும். மனம் ஒத்து பழகுவதற்கும் ஒருவரை தவறாக உபயோகிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நானும் சில பெண்களுடன் டேட்டிங் சென்றிருக்கிறேன், அதனால் அவர்களை தவறாக பயன்படுத்தினேன் என்று அர்த்தமில்லை’ என்றார்.
    விஜய் சேதுபதியின் 96 படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சங்க உறுப்பினர்கள் யாரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. #96TheMovie #MadrasEnterprises
    விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 96 படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு சங்க உறுப்பினர்கள் யாரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விஷால் நடித்த கத்தி சண்டை, துப்பறிவாளன், விக்ரம் பிரபுவின் வீரசிவாஜி, விஜய் சேதுபதியின் 96 உள்ளிட்ட படங்களை எஸ்.நந்தகோபால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் மூலம் தயாரித்துள்ளார். இந்த நிலையில், இந்த படங்களில் நடித்த, நடிகர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களான நடிகர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதால் சங்க உறுப்பினர்கள் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
     
    இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    விஷாலின் துப்பறிவாளன், விக்ரம்பிரபுவின் வீரசிவாஜி படங்களில் சம்பள பாக்கி வழங்கப்படாமல் உள்ளது. மேலும் 96 என்ற திரைப்படத்தில் நடித்த விஜய்சேதுபதியின் ஊதிய பாக்கி பெற்றுக்கொள்ளாமலேயே திரைப்படம் திரையிடப்பட்டது.

    மேற்கண்ட திரைப்படங்கள் திரையிடும் கடைசி நேரத்தில் நடிகர்களின் சூழ்நிலையை இந்த தயாரிப்பு நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தொடர்ந்து ஊதியம் வழங்காமல் படங்களை திரையிட்டுள்ளது.



    படம் வெளியீட்டின் போது இக்கட்டான சூழ்நிலையில், நடிகர்கள் தங்கள் வருமானத்தை விட்டுக்கொடுத்தே தயாரிப்பாளர்களுக்கு உதவி வருகிறார்கள். ஆனால் அந்த நற்செயலை சில தயாரிப்பாளர்கள் தவறாக பயன்படுத்திக் கொண்டு, நடிகர்களை நிர்பந்தப்படுத்துவது அல்லது பரஸ்பரம் ஒத்துக்கொண்ட சம்பளத்தை தர மறுப்பது என்பதை வழக்கமாகி வருகிறது.

    கடந்த காலங்களிலிருந்தே பல தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு இதுப்போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் இதுகுறித்து நிர்வாகக்குழு கலந்து ஆலோசித்தது.

    அதனடிப்படையில் இனிவரும் காலங்களில் இதுப்போன்று செயல்படும் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் அல்லது தயாரிப்பாளருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்ந்த உறுப்பினர்கள் (நடிகர்கள்/நடிகையர்கள்) எந்த ஒரு நிகழ்விற்கும் திரைப்படங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது. 

    அதனடிப்படையில் தற்போது மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பு நிறுவனம் சம்பந்தமான எந்த ஒரு நிகழ்விற்கும், திரைப்படங்களுக்கும் நமது சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக்கொள்கிறது. 

    இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #96TheMovie #MadrasEnterprises

    பிரஷாந்த் நீள் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கே.ஜி.எஃப் படத்தின் டிரைலரை வெளியிட்ட விஷால் இந்த படத்தின் தமிழ் பதிப்பை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். #KGF #KGFTrailer #Yash
    பிராஷாந்த் நீள் இயக்கத்தில் கன்னடத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் கே.ஜி.எஃப். ராக்கிங் ஸ்டார் யாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக அறிமுகமாகிறார். வசிஸ்டா என்.சிம்ஹா, ரம்யா கிருஷ்ணன், மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    பாகுபலி, 2.0 படங்களுக்கு பிறகு கே.ஜி.எஃப் படமும் இந்திய அளவில் பேசப்படும் படமாக இருக்கும் என்றும், கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் படக்குழுவினர் மற்றும் திரையுலகினர் பங்கேற்றனர்.

    கன்னடத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. தமிழில் இந்த படத்தை நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தின் தமிழ் பதிப்பின் டிரைலரை வெளியிட்ட விஷால் பேசும் போது,

    இந்த படத்தின் மூலம் கன்னட சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. இந்த மாதிரியான ஒரு படத்தில் தானும் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறேன். 



    1951-ல் நடந்த இந்த கதை தங்கச் சுரங்கத்தை கண்டுபிடிப்பதை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. மும்பையில் வளரும் யாஷ், தங்கச் சுரங்கத்திற்குள் சென்று அங்கு அடிமையாய் இருக்கும் மக்களை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    ஹோம்பேல் பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படம் ரூ.80 கோடியில் உருவாகி இருக்கிறது. படத்தை வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. #KGF #KGFTrailer #Yash

    கே.ஜி.எஃப் படத்தின் டிரைலர்:


    தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், அடுத்ததாக நாயை மையமாக வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார். #Vishal
    விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சண்டக்கோழி 2’. லிங்குசாமி இயக்கிய இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    இப்படத்தை அடுத்து, தற்போது ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். மேலும் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    இந்நிலையில், விஷால் அடுத்ததாக இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கிறார். நாயை மையமாக வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது. 
    சண்டக்கோழி 2 படத்தின் வெற்றி சந்திப்பில் விஷாலிடம் எப்போது திருமணம், வரலட்சுமியுடனா என்று கேட்டதற்கு அவர் பதில் அளித்துள்ளார். #Vishal #VaralakshmiSarathkumar #Sandakozhi2
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சண்டக்கோழி 2’. விஷால் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    தமிழை விட தெலுங்கில் இப்படத்தின் வசூல் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வெற்றி சந்திப்பு ஆந்திராவில் நடைபெற்றது. இதில் விஷால் கலந்து கொண்டார். அப்போது ‘டெம்பர்’ தமிழ் ரீமேக்கான ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருவது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார் விஷால். 



    ‘வரலட்சுமியுடன் தான் திருமணமா? எப்போது?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, “வரலட்சுமி எனது பால்ய நண்பர். என் மனதுக்கு நெருக்கமானவர் சமயம் வரும்போது எனது திருமணம் குறித்தும், யாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்பது குறித்தும் தெளிவுபடுத்துவேன்” என்று விஷால் பதிலளித்தார். #Vishal #VaralakshmiSarathkumar #Sandakozhi2

    விஷாலுடன் காதலுமில்லை, திருமணமும் இல்லை என்று கூறியுள்ள வரலட்சுமி, தான் விரைவில் அரசியலில் நுழையப்போவதாக கூறியுள்ளார். #Varalakshmi #Vishal #Sarkar
    “போடா போடி” படம் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார்.

    சமீபத்தில் வெளியான சண்டக்கோழி-2 படத்தில் வில்லியாக நடித்து உள்ளார். அடுத்து விஜய்யுடன் “சர்கார்” படத்தில் நடித்து இருக்கிறார்.

    அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது:-

    ’நடிகர் விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா வி‌ஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மை இல்லை.

    விஷாலுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தால் நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தயார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். எதற்காக விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.



    தமிழகத்தில் அரசியல் காலியிடம் உள்ளது உண்மைதான். அந்த காலியிடத்தை நிரப்பத்தான் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ஜெயலலிதா சிறப்பான ஆளுமை மிக்க தலைவர். இதுவரை அவரை 3 முறை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அரசியலில் அவர் எனக்கு உந்து சக்தியாக உள்ளார். சிறப்பான ஆட்சியாளர், சிறப்பான கல்வியாளர். தனியொரு பெண்மணியாக மொத்த மாநிலத்திலும் ஆளுமை செலுத்தினார்.



    இன்னும் 5 வருடங்களில், அரசியலுக்கு வருவேன். எனது தந்தை அவரது கட்சியில் சேருவதற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்தார். நான்தான் மறுத்துவிட்டேன். நான் தந்தை கட்சியில் சேர்ந்து அரசியலுக்கு வர மாட்டேன். எந்த கட்சியில் சேருவேன் என்பதை பிறகு தெரிவிக்கிறேன்’

    இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்தார். #Varalakshmi #Vishal #Sarkar

    மீ டூ விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த நடிகர் சங்க செயற்குழு கூட்டம் இன்று கூடவிருக்கிறது. #MeToo #NadigarSangam
    மீடூ என்ற இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்கு பணியிடங்களிலோ, வெளியிலோ நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். உலகம் முழுக்க பிரபலமான இந்த மீடூ இயக்கம், கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகாரால் தமிழ்நாட்டிலும் பிரபலமானது. மேலும் அமலாபால் உள்ளிட்ட சில நடிகைகளும் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளை பகிரங்கமாக சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

    இந்த விவகாரம் பரபரப்பாகி சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? என்னும் அளவிற்கு சென்று இருப்பதால் இந்த விவகாரத்தில் நடிகர் சங்கத்தின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுந்தது. 

    சண்டக்கோழி 2 பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷாலிடம் இதுபற்றி கேட்டதற்கு, உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனே கூறினால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறினார். அடுத்த சில நாட்களில் சினிமாவில் பெண்கள் பாதுகாப்புக்காக ஒரு குழு நியமிக்கப்படும் என்று அறிவிப்பு வந்தது.



    இன்று மாலை இந்த வி‌ஷயம் தொடர்பாக அவசர செயற்குழு கூட்டம் நடிகர் சங்கத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த 2 வாரங்களாக செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் இந்த வி‌ஷயத்தில் சட்டபூர்வமான நடவடிக்கைகளை எப்போது எப்படி எடுக்க முடியும் என்று ஆராய்ந்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் மூன்று பேர் அடங்கிய ஒரு குழு நியமிக்கப்பட்டு அதன் மூலம் சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த முடிவு செய்துள்ளனர். #MeToo #NadigarSangam

    ×