search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமேசான்"

    கேரளாவில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்தவருக்கு ஒரிஜினல் பாஸ்போர்ட்டை அனுப்பிய அமேசான் நிறுவனத்தின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டின் கனியம்பேட்டா கிராமத்தில் வசித்து வருபவர் மிதுன் பாபு. இவர் சமீபத்தில் தான் வாங்கிய பாஸ்போர்ட்டை வைப்பதற்காக கவர் ஒன்றை அமேசான் நிறுவனத்தில் ஆர்டர் செய்துள்ளார்.

    சில தினங்களுக்குப் பிறகு அமேசன் நிறுவனத்தில் இருந்து நவம்பர் 1-ம் தேதி மிதுன் பாபுவுக்கு ஒரு பார்சல் வந்தது. அந்தப் பார்சலைப் பிரித்து பார்த்த மிதுனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    அந்தப் பார்சலில் பாஸ்போர்ட் கவருக்கு பதிலாக உண்மையான பாஸ்போர்ட் இருந்ததைக் கண்டு மிதுன் பாபு அதிர்ச்சி அடைந்தார்.
    இந்திய அரசால் வழங்கப்படும் பாஸ்போர்ட் அமேசான் மூலம் எப்படி வந்தது என்பது தெரியாமல் அவர் குழம்பினார்.

    இதுகுறித்து அமேசான் நிறுவன வாடிக்கையாளர் சேவைப் பிரிவைத் தொடர்பு கொண்டார். அங்கு முறையான பதில் அளிக்கப்படவில்லை.

    இதனால் குழம்பிய மிதுன் பாபு அந்த பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தார். அது திருச்சூரை சேர்ந்த முகமது சலீம் என்பவருடையது என்பதை கண்டுபிடித்தார். உடனே அதில் இருந்த முகவரியை தொடர்பு கொண்டு பாஸ்போர்ட் விவகாரம் குறித்து விசாரித்தார். அந்த பாஸ்போர்ட் முகமது சலீமின் ஒரிஜினல் பாஸ்போர்ட் என தெரிந்தது.

    விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன் அமேசானில் பாஸ்போர்ட் கவர் வாங்கிய சலீம், கவர் பிடிக்காததால் அதை மீண்டும் திருப்பி அனுப்பிவிட்டார். அப்படி அனுப்புகையில் கவரில் வைத்த பாஸ்போர்ட்டை எடுக்க மறந்தது தெரிய வந்தது.

    முகமது சலீம் திருப்பி அனுப்பிய பாஸ்போர்ட் கவரை சோதிக்காத அமேசான் நிறுவனத்தினர் மீண்டும் அந்த பாஸ்போர்ட் கவரை மிதுன் பாபுவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பாஸ்போர்ட் கவருக்கு பதிலாக, ஒரிஜினல் பாஸ்போர்ட்டை டெலிவரி செய்த அமேசான் நிறுவனத்தின் செயல் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

    அமேசான் நிறுவனத்தின் அலெக்சா டிஜிட்டல் அசிஸ்டண்ட், சொன்னதை உடனே மறக்கக்கூடிய புதிய தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
    வாஷிங்டன்:

    அமேசான் நிறுவனத்தின் அலெக்சா டிஜிட்டல் அசிஸ்டண்ட் இன்று பலராலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வேலையே, நாம் இணையத்த்ல் என்ன தேட விரும்புகிறோமோ அதனை கமெண்ட்டாக சொன்னால், நமக்கு எடுத்துக் கொடுத்துவிடும்.

    கூகுள் தேடுபொறியில் நாம் ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தை தேடும்போது விடை கிடைப்பதை போல, அலெக்சா ஆடியோ வடிவில் செயல்படும்.

    இந்த அலெக்சா வெளியிடப்பட்ட நாள் முதல் பல்வேறு தரப்பட்ட மக்களின் கவனத்தை ஈர்த்து, தற்போது பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் கூடுதலாக, "Alexa, delete everything I said today" என்ற கமெண்ட் கொடுத்தால் நாம் ஒரு நாளையில் சொன்ன, தேடியவை அனைத்தும் அழிந்துவிடும் என அமேசான் நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



    அதேபோல் "Alexa, delete what I just said" என கூறினால் அப்போது என்ன கூறி தேடினோமோ, அதனை அலெக்சா உடனே அழித்து விடுமாம். இந்த வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. 



    சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.



    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகமாகும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் டீசரை சாம்சங் தனது அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசானில் வெளியிட்டுள்ளது.

    இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 600 சீரிஸ் பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா உள்ளிட்டவை புதிய ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன. 



    சாம்சங் எம் சீரிசில் நான்காவது மாடலாக கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்30 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

    இத்துடன் புதிய கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனின் புகைப்படத்தையும் சாம்சங் தனது வலைதளம் மற்றும் அமேசானில் வெளியிட்டுள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.



    ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 6 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் சார்ந்த ஒன் யு.ஐ. வழங்கப்படலாம்.

    இதுவரை சாம்சங் வெளியிட்ட எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம் வழங்கப்பட்ட நிலையில், இவற்றுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கும் பணிகளை சாம்சங் துவங்கி இருக்கிறது. 



    முதற்கட்டமாக கேலக்ஸி எம்30 மாடலுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற இரு ஸ்மார்ட்போன்களுக்கு விரைவில் இந்த அப்டேட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முந்தயை கேலக்ஸி எம் மாடல்களில் எக்சைனோஸ் பிராசஸர்கள் வழங்கப்பட்ட நிலையில், ஸ்னாப்டிராகன் பிராசஸருடன் வெளியாக இருக்கும் முதல் கேலக்ஸி எம் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி எம்40 இருக்கும். இத்துடன் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனில் சூப்பர் AMOLED ஸ்கிரீன், 128 ஜி.பி. மெமரி மற்றும் வைபை 802.11ac. கனெக்டிவிட்டி வழங்கப்படலாம்.
    இந்து மத உணர்வை புண்படுத்தும் வகையில் அமேசான் நிறுவனம், பொருட்களை விற்பனை செய்வதாக அந்நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    நொய்டா:

     ‘அமேசான்’ அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட  பன்நாட்டு இணைய வணிக நிறுவனமாகும்.  இதன் இணைய விற்பனை, ஸ்டெப்பிள்சு நிறுவனத்தினை விட மூன்று மடங்கு அதிகமாகும். இந்நிறுவனம் ஒரு இணைய புத்தக சந்தையாக ஆரம்பிக்கப்பட்டது.

    அதன் பின்னர் அன்றாட தேவைகளுக்கான அனைத்து பொருள்களையும் விற்க ஆரம்பித்தது. இந்த இணையத்தில் கணினி மென்பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், துணிகள், உணவுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனையாகி வருகிறது.

    இந்த அமேசான் நிறுவனம், பல்வேறு நாடுகளில் தனி தளம் அமைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. உலகின் எந்த எல்லையில் இருந்தாலும் இணையத்தில் ஆர்டர் செய்யும் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு சேர்க்கிறது.



    இந்நிலையில் அமேசான் நிறுவனத்தின் இணையதளத்தில் சில தினங்களுக்கு முன் இந்து மத கடவுள்களின் ஸ்டிக்கர்களை டாய்லட் பேப்பர்கள், டாய்லட் மூடிகள், கால்மிதிகள் ஆகியவற்றில் ஒட்டி விற்பனைக்கென புகைப்படத்துடன் வெளியிட்டது.

    இதனையடுத்து நொய்டாவைச் சேர்ந்த விகாஸ் மிஷ்ரா என்பவர் அமேசான் நிறுவனத்தின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரில், ‘அமேசான் நிறுவனம் வெளியிட்ட விற்பனைக்கான புகைப்படங்கள், இந்து மத உணர்வை பெரிதும் புண்படுத்தியுள்ளது. இது நாட்டில் எப்போது வேண்டுமானாலும் சமுதாய பதற்றத்தை தூண்டலாம். எனவே, அமேசான் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று மேலும் நடக்காமல் இருக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து அமேசான் நிறுவனம் மீது மத உணர்வை புண்படுத்துவது தொடர்பான பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அமேசான் நிறுவனத்தை கண்டித்து  ‘#BoycottAmazon' எனும் ஹாஷ்டாக் வைரலாகி வருகிறது.

    இதற்கிடையில் கடந்த 2017ம் ஆண்டு மகாத்மா காந்தியின் புகைப்படங்களை அவமதிக்கும் விதமான பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், அந்நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

     
    ஆன்லைனில் கேட்பாரற்றுக் கிடந்த பல கோடி இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை ஹேக்கர்கள் குழு திருடியிருக்கிறது.



    ஆன்லைனில் சுமார் 27.5 கோடி இந்தியர்களின் விவரங்கள் கேட்பாரற்றுக் கிடந்ததால் அவற்றை ஹேக்கர்கள் திருடியதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

    இந்திய குடிமக்களின் மாங்கோ டி.பி. (MongoDB) டேட்டாபேஸ் அமேசான் AWS ஷோடன் சர்வெர்களில் பொதுப்படையாக இயக்கக்கூடிய வகையில் இருந்ததாக பாப் டியாசென்கோ எனும் பாதுகாப்பு ஆய்வாளர் தெரிவித்தார்.

    பொதுப்படையில் இன்டெக்ஸ் செய்யப்பட்ட மாங்கோ டி.பி. டேட்டாபேசில் சுமார் 27,52,65,298 பேரின் தனிப்பட்ட விவரங்களுடன் மே 1 ஆம் தேதி துவங்கி கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு பாதுகாக்கப்படாமல் இருந்தது என பாப் தெரிவித்திருக்கிறார். 



    இந்த விவரங்களில் பயனரின் பெயர், மின்னஞ்சல், பாலினம், கல்வி விவரம், பணி விவரங்கள், மொபைல் போன் நம்பர், வேலை செய்யும் இடம், பிறந்த தேதி, வருமானம் உள்ளிட்டவை ஷோடனில் இயக்கக்கூடிய வகையில் கிடந்திருக்கிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி முதன்முதலில் இன்டெக்ஸ் செய்யப்பட்ட விவரங்களில் அதிகளவு கேச்சி இருந்ததாக அவர் தெரிவித்தார்.

    தகவல்கள் பாதுகாக்கப்படாமல் இருந்ததை உறுதி செய்ததும் பாப், இந்திய செர்ட் குழுவினருக்கு மே 1 ஆம் தேதி தகவல் வழங்கி இருக்கிறார். இது மே 8 ஆம் தேதி வரை அனைவராலும் பார்க்கக்கூடியதாக இருந்தது. பின் யுனிஸ்டெலார் எனும் ஹேக்கர்கள் குழு பயனர் விவரங்களை அபகரித்துக் கொண்டு கோடெட் குறுஞ்செய்தியை விட்டுச் சென்றிருக்கின்றது.

    வெளிப்படையாக கிடைத்த விவரங்களை விட குறைந்தளவு விவரங்கள் மட்டுமே வெளியாகி இருக்கலாம் என்ற போதும், இந்திய பகுதியில் இது மிகப்பெரும் பாதுகாப்பு குறைபாடு என பாப் தெரிவித்தார். முன்னதாக முறையற்ற ஆத்தென்டிகேஷன் மூலம் மாங்கோ டி.பி. சர்வெர்களில் மால்வேர் மற்றும் ரான்சம்வேர் போன்றவை இன்ஸ்டால் ஆகியிருக்கின்றன என அவர் தெரிவித்திருந்தார்.
    வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.16 விலையில் 1 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #Vodafone



    வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.16 விலையில் புதிய பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரூ.16 சலுகையில் பயனர்களுக்கு 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இச்சலுகை முதற்கட்டமாக அசாம், கோவா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட வட்டாரங்களில் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வோடபோன் ரூ.16 சலுகையை பயனர்கள் வோடபோன் வலைதளம், மை வோடபோன் ஆப் மற்றும் விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது. இத்துடன் ரூ.33, ரூ.49 மற்றும் ரூ.98 விலையில் டேட்டா சலுகைகளை வோடபோன் வழங்குகிறது. வோடபோனின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி ரூ.16 சலுகையில் 1 ஜி.பி. டேட்டா 24 மணி நேரத்திற்கு வழங்கப்படுகிறது.



    ரூ.16 சலுகையில் வாய்ஸ் கால் அல்லது எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. ஒரு நாள் வேலிடிட்டி கொண்டிருக்கும் வோடபோன் சலுகையில் வேலிடிட்டியை நீட்டிக்க முடியாது. முதற்கட்டமாக சில வட்டாரங்களில் மட்டும் அறிவிக்கப்பட்டிருக்கும் இச்சலுகை விரைவில் மற்ற வட்டாரங்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

    கடந்த மாதம் வோடபோன் நிறுவனம் யூத் ஆஃபர் என்ற பெயரில் அமேசான் பிரைம் சந்தாவில் 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கியது. இத்துடன் ரூ.509 விலையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் படி மாற்றியமைத்தது. 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் இச்சலுகையில் முன்னதாக தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது.
    அமேசான் நிறுவனம் செயற்கைகோள் உதவியுடன் மலிவு விலையில் இணைய வசதியை வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Amazon



    அமேசான் நிறுவனம் பிராஜெக்ட் குய்பர் என்ற திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உலகம் முழுக்க அதிவேக இணைய வசதியை வழங்க அமேசான் முடிவு செய்துள்ளது.

    அதிவேக இணைய வசதியை வழங்க அமேசான் 3000 செயற்கைக்கோள்களை அமேசான் பயன்படுத்த இருக்கிறது. இவற்றின் உதவியுடன் உலகம் முழுக்க இடையூறின்றி இணைய சேவையை வழங்க முடியும் என அமேசான் நினைக்கிறது. 3000 செயற்கைக்கோள் மூலம் உலக மக்கள் தொகையின் 95 சதவிகிதம் பேருக்கு இணைய வசதியை வழங்க முடியும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை அமேசான் ஆண்ட்ராய்டு போலீஸ் நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறது. புதிய திட்டத்தின் மூலம் உலகம் முழுக்க செயற்கைக்கோள்களை நிறுவ அமேசான் திட்டமிட்டுள்ளது. குய்பர் நீண்ட கால திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் திட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கும் அதிகமாக இணைய வசதியை வழங்க முடியும்.



    அனைவருக்கும் இணைய வசதியை வழங்கும் நோக்கம் கொண்ட மற்ற பிராண்டுகளுடன் கைகோர்க்கவும் அமேசான் திட்டமிட்டுள்ளது. அமேசான் நிறுவனம் மொத்தம் 3236 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக மக்கள் தொகையில் 95 சதவிகிதம் பேருக்கு இணைய வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இத்திட்டத்தை வெற்றியடைய வைக்க அமேசான் நிறுவனம் பெரும் தொகையை முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் அமேசான் நிறுவனம் துவக்கத்தில் இணைய கட்டணத்தை குறைவாக நிர்ணயம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

    இதேபோன்று ரிலையன்ஸ் ஜியோவும் தனது ஜிகாஃபைபர் திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இவை நாடு முழுக்க அதிவேக பிராட்பேண்ட் இணைய வசதியை மலிவு விலையில் வழங்க இருக்கிறது. 
    அமேசான் நிறுவனம் அலெக்சா வசதியுடன் கூடிய வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Amazon



    அமேசான் நிறுவனம் சொந்தமாக வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஆப்பிளின் ஏர்பாட்ஸ் இயர்போன்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. இது அமேசான் லேப் 126 ஹார்டுவேர் பிரிவின் மிகமுக்கிய திட்டமாக இருக்கலாம் என தெரிகிறது. 

    அமேசான் தனது வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையான அலெக்சாவை பல்வேறு எக்கோ சாதனங்களில் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்சமயம் வயர்லெஸ் இயர்போன்களிலும் அலெக்சா சேவையை புகுத்த அமேசான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அலெக்சா வசதி கொண்ட வயர்லெஸ் இயர்போன் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகமாகலாம்.



    தோற்றத்தில் அமேசானின் இயர்போன்கள் பார்க்க ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்றே காட்சியளிக்கும் என்றும் இதில் சிறப்பான ஆடியோ தரத்தை புகுத்த அதன் பொறியாளர்கள் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேசான் இயர்பட்ஸ் கொண்டு பயனர்கள் இசையை கேட்பது, பொருட்களை வாங்குவது, வானிலை விவரங்களை அறிந்து கொள்வது என பலவற்றை மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

    இத்துடன் இசையை கேட்கும் போது அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது போன்றவற்றை இயர்பட்களை தட்டியே செயல்படுத்த முடியும் என கூறப்படுகிறது. இயர்போன்களில் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை இயக்க அலெக்சா என கூறினாலே போதுமானது என்றும் இது ஸ்மார்ட்போனுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிகிறது.

    அமேசான் இயர்போன்களுடன் ஸ்டோரேஜ் கேஸ் ஒன்று வழங்கப்படும் என்றும் இதுவே இயர்போன்களை சார்ஜ் செய்யும் சார்ஜர் போன்று இயங்கும் என கூறப்படுகிறது. பயனர்கள் இதனை வழக்கமான யு.எஸ்.பி. கேபிள் கொண்டே சார்ஜ் செய்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.
    உலகிலேயே அதிக அளவில் ரூ.2½ லட்சம் கோடியை தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுக்கிறார் அமேசான் நிறுவன தலைவர். #Amazon #JeffBezos #MacKenzie #Divorce
    நியூயார்க் :

    உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 55). இவரது தற்போதைய சொத்து மதிப்பு 136 பில்லியன் டாலர் ஆகும்.

    ஜெப் பெசோஸ் அமேசான் நிறுவன தலைவராகவும், பெரிய கோடீஸ்வரராகவும் ஆவதற்கு முன்பே, நாவலாசிரியரான மெக்கின்சியை (48) காதலித்து, திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் 1993 செப்டம்பரில் நடந்தது. அதன்பின்னர் 1994-ம் ஆண்டு ஜூலை மாதம் அமேசான் நிறுவனத்தை ஜெப் பெசோஸ் தொடங்கினார்.

    இந்நிறுவனம் உலகம் முழுவதும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றதால் லாபத்தை அள்ளிக்குவித்தது. இதன் மூலம் ஜெப் பெசோஸ் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.

    ஜெப் பெசோஸ்-மெக்கின்சி தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. அத்துடன் ஒரு பெண் குழந்தையை அவர்கள் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்துவந்த ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கின்சி ஆகிய இருவரும் கடந்த ஜனவரி மாதம் தங்களது விவாகரத்து முடிவை அறிவித்தனர். அதன்படி நேற்று இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

    அமெரிக்க சட்டப்படி விவாகரத்தின் போது கணவனின் சொத்தில் 50 சதவீதம் வரை மனைவி ஜீவனாம்சமாக பெற முடியும். அதன்படி அமேசான் நிறுவனத்தில் ஜெப் பெசோஸ் வைத்துள்ள 16 சதவீத பங்குகளில் பாதியளவான 8 சதவீத பங்குகளை மெக்கின்சிக்கு கொடுக்க வேண்டும். இதன் மூலம் அவர் 68 பில்லியன் டாலர் சொத்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.



    ஆனால் 4 சதவீத பங்குகளை மெக்கின்சிக்கு இழப்பீடாக அளிக்க ஜெப் பெசோஸ் ஒப்புக்கொண்டார். இந்த பங்குகளின் மதிப்பு 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி) ஆகும்.

    மெக்கின்சி இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். அத்துடன் ‘வா‌ஷிங்டன் போஸ்ட்’ மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘பூளு ஆர்ஜின்’ ஆகிய நிறுவனங்களில் தனக்கு இருக்கும் பங்குகளை கணவருக்கு விட்டுக்கொடுப்பதாக மெக்கின்சி தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து இருவரும் விவகாரத்து சொத்து உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இந்த தகவலை இருவரும் தனித்தனியாக தங்களின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தனர்.

    ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடியை மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுப்பதன் மூலம் உலகிலேயே அதிக தொகையை ஜீவனாம்சமாக கொடுத்தவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகிறார் ஜெப் பேசோஸ்.

    தனது மொத்த சொத்து மதிப்பில் 25 சதவீதத்தை மனைவிக்கு கொடுத்தாலும் உலகின் முதல் பணக்காரராக ஜெப் பேசோஸ் தொடர்கிறார்.

    அதே போல் கணவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி பெற்றதன் மூலம் மெக்கின்சி, உலகின் 3-வது மிகப்பெரிய பெண் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். #Amazon #JeffBezos #MacKenzie #Divorce 
    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. #GalaxyMSeries #Smartphones

     

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியை ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான புதிய வீடியோ மற்றும் புகைப்பட டீசர்களை வெளியிட்டுள்ளது. புதிய டீசர்களில் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இன்ஃபினிட்டி யு ரக டிஸ்ப்ளே மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    இந்தியாவில் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 28 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி எம் (SM-M105F), கேலக்ஸி எம்20 (SM-M205F) மற்றும் கேலக்ஸி எம்30 (SM-M305F) என்ற மாடல் பெயர்களில் உருவாகி வருகிறது.



    இதுதவிர சாம்சங் இந்தியா சப்போர்ட் வலைதளத்தில் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன் தவறுதலாக பட்டியலிடப்பட்டு பின் உடனடியாக நீக்கப்பட்டு விட்டது. சாம்சங் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர்களில் புதிய ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி யு ரக டிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா, ஸ்மார்ட்போனின் மேல்புறம் இயர்பீஸ் வழங்கப்படுகிறது.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் ஓரங்கள் வளைந்திருக்கிறது. பக்கவாட்டில் பவர் பட்டன், வால்யூம் ராக்கர் உள்ளிட்டவையும், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் டூயல் பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. இதுதவிர புதிய ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    சாம்சங் கேலக்ஸி எம்20 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7885 14 என்.எம். பிராசஸர்
    - மாலி G71 GPU
    - 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
    - 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்
    இந்தியாவில் அமேசான் வலைதளத்திற்கு போட்டியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜியோ இணைந்து புதிய சேவையை துவங்க இருக்கின்றன. #relianceindustries



    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சொந்தமாக ஆன்லைன் வலைதளம் ஒன்றை துவங்க இருக்கிறது. புதிய வலைதளம் இந்தியாவில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    ஜியோ டெலிகாம் சேவை, மொபைல் சாதனங்கள் மற்றும் ரீடெயில் வர்த்தக நெட்வொர்க் உள்ளிட்டவற்றை ஒன்றிணைத்து உலகின் முன்னணி ஆன்லைன் வலைதளங்களை எதிர்கொள்ள முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளர். 

    ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் ஒன்றிணைந்து பிரத்யேகமாக புதிய ஆன்லைன் வலைதளத்தை துவங்கி, குஜராத்தில் இருக்கும் சுமார் 12 லட்சம் சிறு வணிகர்களை ஊக்குவிக்க இருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார். 



    இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ சேவையை இதுவரை சுமார் 28 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ரிலையன்ஸ் ரீடெயில் முணையங்கள் இந்தியா முழுக்க சுமார் 6,500 நகரங்களில் 10,000 விற்பனை மையங்களாக இயங்கி வருகின்றன. 

    புதிய ஆன்லைன் வர்த்தகத்தில் வியாபாரிகளை சேர்க்க ஜியோவின் செயலிகள் மற்றும் சாதனங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன என்று ரிலையன்ஸ் ரீடெயில் மூத்த அதிகாரியான வி. சுப்ரமணியம் தெரிவித்தார்.

    வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தக தளங்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களின் பொருட்களை பிரத்யேகமாக விற்பனை செய்யவோ, சிறப்பு சலுகைகள் வழங்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த விதிமுறைகள் மூலம் அமேசான் மற்றும் வால்மார்ட் கைப்பற்றியிருக்கும் ப்ளிப்கார்ட் நிறுவன வியாபாரங்களை வெகுவாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்தியாவில் சோலோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனினை ஃபேஸ் அன்லாக் வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது. #Xolo #smartphone



    இந்தியாவில் நீண்ட இடைவெளிக்கு பின் சோலோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. சோலோ இரா 4எக்ஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

    புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா, இரு கேமரா சென்சார்களுக்கும் எல்.இ.டி. ஃபிளாஷ், டூயல் 4ஜி வோல்ட்இ, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    புதிய சோலோ ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்படாத நிலையில், ஸ்மார்ட்போனின் பாதுகாப்பிற்கு ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    சோலோ இரா 4எக்ஸ் சிறப்பம்சங்கள்

    - 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - ஃபேஸ் அன்லாக்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சோலோ இரா 4எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.4,444 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சோலோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 9 ஆம் தேதி முதல் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் மெமரி மற்றும் ரேம் விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.
    ×