search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99004"

    வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியின் ஸ்டேட்டஸ்-இல் விளம்பரங்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #WhatsApp


    வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படலாம் என்ற வாக்கில் பலமுறை தகவல்கள் வெளியாகி, பின் அவை வதந்தி என கூறப்பட்டது. ஆனால் இம்முறை வாட்ஸ்அப் உண்மையாகவே கட்டணம் வசூலிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

    அதன்படி வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் குறுந்தகவல்களுக்கு 24 மணி நேரத்திற்கு பின் பதில் அனுப்பினால் கட்டணம் செலுத்த வேண்டும் என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. மேலும் ஸ்டேட்டஸ்களில் விளம்பரங்களை வழங்க திட்டமிடுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    வாட்ஸ்அப் செயலியை கூர்ந்து கவனிப்பவராக இருந்தால், சில நிறுவனங்கள் உங்களை அணுக வாட்ஸ்அப் மூலம் அனுமதி கேட்டிருக்கலாம், மேலும் இதே வழிமுறையை ஃபேஸ்புக் பின்பற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.


    கோப்பு படம்

    புதுவகையான விளம்பரங்கள் மூலம் பயனர்கள் வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு அழைப்பு விடுக்காமல், நேரடியாக நிறுவனங்களை வாட்ஸ்அப் மூலம் தங்களது சந்தேகங்கள் அல்லது புகார்களை தெரிவிக்க முடியும். ஒவ்வொரு நாட்டிலும் நிறுவனங்கள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் கட்டணம் வசூலிக்கும்.

    சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், உபெர் என ஏற்கனவே கிட்டத்தட்ட 100 நிறுவனங்கள் ஏற்கனவே இந்த அம்சத்தை சோதனை செய்ய துவங்கியிருக்கின்றன. எனினும் புதிய ஸ்டேட்டஸ் விளம்பரங்கள் 2019 முதல் தெரிய ஆரம்பிக்கும். ஸ்டேட்டஸ் பகுதியில் பயனர் எழுத்து, புகைப்படங்கள் அல்லது வீடியோ உள்ளிட்டவற்றை வைக்கலாம், இவை 24 மணி நேரத்திற்கு பின் தானாக அழிந்து போகும்.

    உலகில் இதுவரை சுமார் 45 கோடி பேர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் ஏற்கனவே விளம்பரங்கள் வருகின்றன. #WhatsAppBusiness #Apps
    வாட்ஸ்அப் செயலியில் தினமும் 200 கோடி நிமிடங்கள் வாய்ஸ் கால் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #WhatsApp


    வாட்ஸ்அப் செயலியை தினமும் சுமார் 130 கோடி பேர் பயன்படுத்தி வரும் நிலையில், தினசரி 200 கோடி நிமிடங்கள் வாய்ஸ் கால் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி சேர்க்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் பயனர்கள் தினமும் 200 கோடி நிமிடங்கள் வாய்ஸ் கால்களை மேற்கொள்கின்றனர் என வாட்ஸ்அப் வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறது.

    வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சத்தில் ஒரே சமயம் அதிகபட்சம் நான்கு பேருடன் உரையாட முடியும். வாட்ஸ்அப் மெசேஜ்களை போன்றே க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சமும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகிறது.

    உலகம் முழுக்க வெவ்வேறு பகுதிகளில் உள்ள நெட்வொர்க்-க்கு ஏற்ப வேலை செய்யும் படி க்ரூப் காலிங் அம்சம் வழங்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வழங்கப்பட்டு இருப்பதால் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சம் அடுத்த சில தினங்களில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #WhatsApp #Apps
    ஃபேஸ்புக் ஏற்கனவே அறிவித்ததை போன்று வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதியை வழங்குகிறது. #WhatsApp


    ஃபேஸ்புக் இன் வாட்ஸ்அப் 2018 F8 நிகழ்வில் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சம் விரைவில் வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. அறிவிப்பை தொடர்ந்து சோதனை துவங்கப்பட்டது. 

    இந்நிலையில் வாய்ஸ் மற்றும் வீடியோ க்ரூப் கால் அம்சம் அனைவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் ஒரே சமயத்தில் நான்கு பேருடன் க்ரூப் கால் செய்ய முடியும். இந்த அம்சம் எவ்வாறு வேலை செய்யும் என்பதை பார்ப்போம்.



    - முதலில் ஒரு வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்யவும்

    - பின் “add participant” பட்டனை க்ளிக் செய்து பயனர்களை சேர்க்கலாம்

    - நீங்கள் சேர்க்க வேண்டிய மற்ற கான்டாக்ட்களை சர்ச் பாக்ஸ் மூலம் தேடி, தேர்வு செய்ய வேண்டும்

    - க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் வரும் போது உங்களது திரையில் அழைப்பில் இருப்பவர்களை பார்க்க முடியும்

    - அழைப்பில் இருப்பவர் மற்றும் பட்டியலிடப்பட்டு இருக்கும் முதல் கான்டாக்ட் தான் உங்களை சேர்த்திருக்க வேண்டும்.

    - க்ரூப் வாய்ஸ் கால் செய்யும் போது அதனை வீடியோ கால் ஆக மாற்ற முடியாது.

    - க்ரூப் வீடியோ கால் செய்யும் போது கேமராவை ஆஃப் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

    - க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்யும் போது கான்டாக்ட்-ஐ எடுக்க முடியாது. கான்டாக்ட் அழைப்பு துண்டிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும்.

    - க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் ஹிஸ்ட்ரி அழைப்புகளுக்கான டேபில் பார்க்க முடியும். கால் ஹிஸ்ட்ரியை க்ளிக் செய்து ஒவ்வொரு கான்டாக்ட்டையும் பார்க்க முடியும்.

    - க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்யும் போது உஙக்ளை பிளாக் செய்தவருடன் இருக்க முடியும், ஆனால் நீங்கள் பிளாக் செய்த அல்லது உங்களை பிளாக் செய்தவர்களுக்கு அழைப்பு விடுக்க முடியாது.

    குறுந்தகவல்களை போன்றே வாட்ஸ்அப் க்ரூப் அழைப்புகளும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகிறது. உலகம் முழுக்க வெவ்வேறு பகுதிகளில் உள்ள நெட்வொர்க்-க்கு ஏற்ப வேலை செய்யும் படி க்ரூப் காலிங் அம்சம் வழங்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வழங்கப்பட்டு இருப்பதால் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சம் அடுத்த சில தினங்களில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ‘வாட்ஸ்அப்’பில் போலி வதந்தி பரப்பிய அட்மினை கைது செய்வதற்கு பதிலாக குரூப்பில் உள்ள கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு 5 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். #Whatsapp
    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள டேலன் நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜூனைத் கான் (20). இவர் ராஜ்கரில் பி.எஸ்சி. படித்து வருகிறார்.

    இந்த நிலையில் வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பியதாக அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது ‘ஐ.டி.’ சட்டப்பிரிவு மற்றும் இ.பி.கோ.124ஏ (கலவரம் ஏற்படுத்த முயற்சித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

    இதனால் சிறையில் அடைக்கப்பட்ட அவரால் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. அவரது குடும்பத்தினர் கோர்ட்டில் ஜாமீன் பெற முயற்சி செய்தனர். ஆனால் கிடைக்கவில்லை. எனவே, அவரால் தேர்வு எழுத முடியவில்லை.


    கடந்த 5 மாதங்களாக சிறையில் தவித்து வருகிறார். அவரை வெளியே கொண்டு வர முதல்-அமைச்சர் உதவி மையம் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் என பலரை குடும்பத்தினர் சந்தித்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை.
    இதற்கிடையே ஜுனைத் கான் ‘வாட்ஸ் அப்’ குழுவில் ‘அட்மின்’ ஆக இல்லை. அதில் அவர் உறுப்பினராக இருந்தார். தவறுதலாக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    மேலும் ‘வாட்ஸ்-அப்’ வதந்தி பரவியபோது ஜுனைத்கான் ஊரில் இல்லை. ‘ரேட்லம்‘ என்ற இடத்தில் இருந்தார். எனவே இச்சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இல்லை. ஆகவே அவரை விடுவிக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த வழக்கில் இர்பான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். #Whatsapp
    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் சஸ்பீஷியஸ் லின்க் அம்சம் பெருமளவு பயனர்களுக்கு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsApp

    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கவும், ஃபிஷிங், ஸ்பேம் போன்ற தொல்லைகளை தடுக்கவும் புதிய அம்சத்திற்கான சோதனையை வாட்ஸ்அப் சமீபத்தில் துவங்கியது.

    அதன்படி செயலியில் பரப்பப்படும் வலைதள முகவரி போலியானதாக இருப்பின், அதனை வாட்ஸ்அப் சஸ்பீஷியஸ் லின்க் என அடையாளப்படுத்தும். முன்னதாக ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.204 பதிப்பில் மிக குறைந்த அளவு பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.221 வெர்ஷனில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்பதையும் வாட்ஸ்அப் FAQ பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.221 வெர்ஷனில் சஸ்பீஷியஸ் லின்க் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் உங்களுக்கு யாரேனும் போலி வலைதள முகவரிகளை பகிர்ந்தால் சஸ்பீஷியஸ் லின்க் என அடையாளப்படுத்தும். இதனால் பயனர்கள் குறிப்பிட்ட முகவரியை (லின்க்-ஐ) க்ளிக் செய்யாமலேயே அறிந்து கொள்ள முடியும். தொடர்ந்து இதனை க்ளிக் செய்யும் பட்சத்தில் ஓபன் லின்க் மற்றும் கோ பேக் இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    சஸ்பீஷியஸ் (suspicious) வார்த்தை டையலாக் பாக்ஸ் வடிவில் அடையாளப்படுத்தப்படுகிறது. புதிய சஸ்பீஷியஸ் லின்க் டிடெக்ஷன் அம்சம் ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் போன் தளங்களில் இதுவரை வழங்கப்படவில்லை. எனினும் இனி வரும் அப்டேட்களில் இந்த அம்சம் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.



    "இந்த இன்டிகேட்டர் ஏதேனும் லின்க் விசித்திரமான குறியீடுகளை கொண்டிருக்கும் பட்சத்தில் வெளிப்படும். ஸ்பேமர்கள் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, பயனர்களை க்ளிக் செய்ய தூண்டி உண்மையான வலைதளம் போன்ற தோற்றத்தை உருவாக்கி மால்வேர் நிறைந்த வலைதளத்துக்கு எடுத்து செல்லாம்." என வாட்ஸ்அப் FAQ பக்கத்தில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

    மேலும் இந்த லின்க்கள் தானாக சரிபார்க்கப்பட்டு, இந்த தகவல் யவராலும் பார்க்க முடியாதபடி முழுமையாக என்க்ரிப்ஷன் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது. புதிய அம்சம் ஃபிஷிங், ஸ்பூஃபிங் மற்றும் ஸ்பேம் உள்ளிட்டவற்றை தடுக்கும் என்றாலும் போலி செய்திகளை குறைக்க முடியாது. வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளின் தொந்தரவு சமீப காலங்களில் அதிகரித்து விட்டது.

    பெரும்பாலான வலைதளங்களில் எவ்வித விசித்திரமான குறியீடுகளும் தனது இணைய முகவிரகளில் (லின்க்) கொண்டிருக்கவில்லை, எனினும் இவை போலி செய்திகளை உண்மையானதாகவே வெளியிட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன் வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கும் வகையில் ஃபார்வேர்டு செய்யப்படும் மெசேஜ்களின் எண்ணிக்கையை 5-ஆக குறைத்தும் க்விக் ஃபார்வேர்டு பட்டன் நீக்க வாட்ஸ்அப் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.  #WhatsApp #Apps

    புகைப்படம்: நன்றி WABetaInfo
    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில், புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் மூலம் இனி செயலியை இவ்வாறு பயன்படுத்த முடியாது. #WhatsApp #Apps



    இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் அதிகம் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. நாடு முழுக்க சுமார் 20 கோடி பேர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில் புதிய மாற்றங்கள் தற்சமயம் சோதனை செய்யப்படும் நிலையில், விரைவில் பயனர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வாட்ஸ்அப்-இல் பகிர்ந்து கொள்ளப்படும் குறுந்தகவல்களில் புகைப்படம், வீடியோ அல்லது ஜிஃப் போன்றவற்றுடன் ஃபார்வேர்டு பட்டன் நீக்கப்படுகிறது. இத்துடன் ஃபார்வேர்டு மெசேஜ் எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறது, எனினும் இந்தியாவில் மட்டுமே இவ்வாறு செய்யப்படுகிறது.

    இந்தியா தவிர்த்து மற்ற சந்தைகளில் ஃபார்வேர்டு செய்யப்படும் எண்ணிக்கையை 20-ஆக நிர்ணயம் செய்கிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் ஆன்ட்ராய்டு பீட்டா டெஸ்ட் செய்வோருக்கு வழங்கப்பட்டு அதன் பின் மற்றவர்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புதிய அம்சம் சர்வெர்-சார்ந்த அப்டேட் கிடையாது என்பதால், பீட்டா அல்லத பயனர்களுக்கு சாதாரண ஆப் அப்டேட் போன்றே வழங்கப்படும். இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்பது குறித்தும் தனிநபர் மற்றும் க்ரூப் சாட்களில் எவ்வாறு இருக்கும் போன்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.

    முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேர்டு செய்யப்படும் குறுந்தகவல்களில் ஃபார்வேர்டு லேபெல் சேர்க்கப்பட்டது. நாடு முழுக்க போலி செய்திகள் சார்ந்த அச்சுறுத்தல்கள் அதிகரிப்பதை தொடர்ந்து போலி செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு அம்சங்களை வாட்ஸ்அப் சோதனை செய்கிறது.
    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை முடக்க புதிய அம்சங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறது. இது குறித்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #WhatsApp



    வாட்ஸ்அப் தலைமை அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய நிர்வாக அதிகாரிகள் மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில் தேர்தல் சமயங்களில் வாட்ஸ்அப் தளத்தை தவறாக பயன்படுத்துவதை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 

    இந்தியாவில் வரவிருக்கும் தேர்தல் காலத்தில் போலி குறுந்தகவல்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய வசதிகளை வழங்குவது குறித்த பணிகளில் ஈடுபட இருப்பதாக வாட்ஸ்அப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த வசதிகள் தேர்தல் துவங்குவதற்கு சரியாக 48 மணி நேரத்திற்கு முன் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சமீபத்தில் மெக்சிகோவில் நடைபெற்ற போலி செய்திகளை சரிபார்க்கும் வழிமுறையை இந்திய பொது தேர்தலிலும் வாட்ஸ்அப் கொண்டு வருகிறது. 

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவுற்று இருப்பதாகவும். இதில் வாட்ஸ்அப் நிறுவன ஆராய்ச்சியாளர்கள், பொது கொள்கை மற்றும் வியாபார வளர்ச்சி துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.


    கோப்பு படம்

    மேலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த வழிமுறையை நடைமுறைப்படுத்த ரகசியம் காக்கவும், செயல்பட துவங்கியதும் அதிக எச்சரிக்கையாக செயல்பட ஒப்பு கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2018 ஆண்டு இறுதியில் பின்பற்றப்படும் வழிமுறைகளை 2019-ம் ஆண்டு பொது தேர்தல் காலத்தில் மேலும் அதிகப்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் இந்திய குழு இந்திய வங்கிகளை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய வங்கிகளுடன இணைந்து வாட்ஸ்அப் சேவையில் பண பரிமாற்றம் செய்யும் வசதி வழங்க வேண்டியிருப்பதால், இந்த சந்திப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

    பிப்ரவரி 2018 வரை வாட்ஸ்அப் சேவையை சுமார் 20 கோடி பேர் பயன்படுத்தி வரும் நிலையில், இந்தியா வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மிக முக்கிய சந்தையாக விளங்குகிறது. மெக்சிகோ தேர்தல்களில் வாட்ஸ்அப் பயன்படுத்திய வெரிஃபிகாடோ மாடல் (சரிபார்க்கும் வழிமுறை) இந்தியாவில் கொண்டு வர வாட்ஸ்அப் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

    வாட்ஸ்ப் செயலியில் போலி தகவல்கள் மற்றும் சந்தேத்திற்கிடமான பயனர்களை கண்டறிய மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. சமூக வலைத்தள பயன்பாடு தேர்தல் பிரச்சாரத்திற்கு தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க 2014 ஜனவரியில் 14 பேர் கொண்ட குழுவை நியமித்தது. #WhatsApp
    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் குறுந்தகவல்களை நோட்டிஃபிகேஷன் சென்டரிலேயே மியூட் செய்யும் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் அந்நிறுவனம் புதிய அம்சத்தை சோதனை செய்வது சில தினங்களுக்கு முன் தெரியவந்த நிலையில், இந்த அம்சம் பீட்டா செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. 

    அந்த வகையில் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியின் நோட்டிஃபிகேஷன் சென்டரில் மார்க் ஆஸ் ரீட் (mark as read) என்ற ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு வாட்ஸ்அப் செயலியில் உங்களுக்கு மெசேஜ் வரும் போது, நோட்டிஃபிகேஷன் சென்டரில் இருந்த படியே அதனை நீங்கள் படித்ததாக மார்க் செய்ய முடியும்.

    முன்னதாக குறுந்தகவல்கள் வரும் போது நோட்டிஃபிகேஷன் சென்டரில் ரிப்ளை (Reply) ஆப்ஷன் மட்டுமே காணப்பட்டது, பீட்டா அல்லத பயனர்களுக்கு தற்சமயம் வரை இவ்வாறே காணப்படுகிறது. வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.216 பதிப்பில் இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு மட்டும் தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே அம்சம் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.214 பதிப்பில் காணப்பட்டது.



    நோட்டிஃபிகேஷன் சென்டரில் ஒரே சாட்-இல் இருந்து அதிகபட்சம் 51-க்கும் அதிகமான குறுந்தகவல்களை நேரடியாக மியூட் செய்ய முடியும். இந்த அப்டேட் மார்க் ஆஸ் ரீட் அம்சத்தை நோட்டிஃபிகேஷன் சென்டரில் இதுவரை வழங்கவில்லை.

    இத்துடன் 2.18.218 பதிப்பில் ஸ்டிக்கர் பிரீவியூ எனும் அம்சம் ஸ்டோர் மற்றும் அப்டேட் பட்டனில் காணப்படுகிறது. எனினும் ஸ்டிக்கர்கள் உருவாக்கப்படுவதால், இன்னும் வழங்கப்படவில்லை. #WhatsApp #Apps

    புகைப்படம்: நன்றி WABetaInfo
    வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக இந்தியாவில் உருவான கிம்போ ஆப் 24 மணி நேரத்தில் நீக்கப்பட்ட நிலையில், புதிய பெயரில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. #BOLO



    பதாஞ்சலியின் இந்தியாவில் உருவாக்கப்பட்ட குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப்-க்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டது. கிம்போ என்ற பெயரில் வெளியிடப்பட்ட செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில், செயலி வெளியான 24 மணி நேரத்தில் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.

    இந்தியாவில் மே 28-ம் தேதி முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட கிம்போ ஆப் மேம்படுத்தப்பட்டு போலோ மெசன்ஜர் ஆப் என்ற பெயரில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 13-ம் தேதி கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி வெளியாகியிருக்கிறது.

    கிம்போ செயலிக்கு எதிர்பார்த்ததை விட அதிகளவு வரவேற்பு கிடைத்திருப்பதை தொடர்ந்து சர்வெர் பற்றாகுறை காரணமாக செயலி நீக்கப்படுவதாக பதாஞ்சலி செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார். எனினும் செயலியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதை டெவலப்பர்கள் ஏற்றுக் கொண்டு, கிம்போ செயலி பிழைகளை சரி செய்து மீண்டும் வெளியிடுவதாக பதாஞ்சலி அறிவித்திருந்தது.



    வாட்ஸ்அப் ஐகான் போன்றே காட்சியளிக்கும் கிம்போ ஆப் ஐகான் புதிய செயலியில் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் கிம்போ ஆப் மீண்டும் புதிய பெயரில் வெளியிடப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ட்விட்டர் பதிவுகளில் இந்த செயலி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான போலோ ஆப்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய போலோ ஆப் பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்க செயலியின் டெவலப்பரான அதித்தி கமல் ட்விட்டரில் ஆராய்ச்சியளர் எலியட் ஆல்டெர்சனுக்கு செயலியை ஹேக் செய்யுமாறு சவால் விடுத்திருந்தார். சவாலை ஏற்றுக் கொண்ட ஆராய்ச்சியாளர் எலியட் சில மணி நேரங்களில் செயலியில் உள்ள பிழைகளை கண்டறிந்து, தெரிவித்திருக்கிறார். #BOLO #Apps
    நடிகை ஜெயலட்சுமி விவகாரத்தில் கைதானவர்கள் அரசியல்வாதிகள் பெயரை சொல்லி துணை நடிகைகளை பாலியலுக்கு அழைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    சென்னை:

    தமிழ் நடிகை ஜெயலட்சுமி. இவர் நேபாளி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

    இவரது வாட்ஸ் அப்புக்கு ஒரு கும்பல் தகவல் அனுப்பி விபச்சார வலை விரித்தது. முக்கிய பிரமுகர்களுடன் உல்லாசமாக இருந்தால் ரூ.30 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று தகவல் அனுப்பி இருந்தது.

    இதுகுறித்து நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விபசார தடுப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நடிகைக்கு வாட்ஸ்-அப் மூலம் விபச்சார அழைப்பு விடுத்த சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த முருகப்பெருமான், கவியரசன் என்று தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் வாட்ஸ்-அப் மூலம் பிரபல நடிகைகளை தொடர்பு கொண்டு விபச்சார வலை விரித்துள்ளனர். ரூ.30 ஆயிரம் முதல் ரூ.30 லட்சம் வரை சம்பாதிக்கலாம். உங்கள் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் விருப்பம் இருந்தால் தொடர்புகொள்ளுங்கள் என்று தகவல் அனுப்பி உள்ளனர்.

    துணை நடிகைகள் மற்றும் இளம்பெண்களையும் குறிவைத்து விபச்சாரத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதும் தெரிய வந்தது. கைதான 2 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் ஏராளமான பெண்களின் புகைப்படங்கள் இருந்தன.

    அதில் பிரபல நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் படங்கள் இருந்தன. அவர்களின் வாட்ஸ்-அப்பை ஆய்வு செய்த போது பலருடன் சாட்டிங் செய்துள்ளதும். பெரும்பாலும் துணை நடிகைகளுக்கு தகவல் அனுப்பி உள்ளதும் தெரிய வந்தது.


    ‘‘ரிலேசன்ஷிப் டேட்டிங் குரூப்’’ என்று வாட்ஸ்- அப்பில் ஆரம்பித்து அதன் மூலம் நடிகைகளுக்கு தகவல்களை அனுப்பி உள்ளனர். ‘டேட்டிங்’ செல்ல விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம். வசதி படைத்தவர்கள், அரசியலில் முக்கிய பொறுப்பிலும், பதவியிலும் இருப்பவர்கள் எங்களிடம் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

    அவர்கள் நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க விரும்புகிறார்கள். அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவார்கள் என்று ஆசை வார்த்தைகளை கூறி உள்ளனர். இதுதொடர்பான உரையாடல்கள் இருந்தன.

    அவர்களின் செல்போனில் நடிகைகள் படம் மட்டுமின்றி குடும்ப பெண்களின் புகைப்படங்களும் இருந்தன. அதை அவர்கள் பேஸ்புக் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வாட்ஸ்-அப்பில் அனுப்பி உள்ளனர். இவர்கள் உருவாக்கிய வாட்ஸ்-அப் குரூப்பில் பல இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் உரையாடல்கள் நடத்தி விபச்சாரத்துக்கு பேரம் பேசி இருக்கிறார்கள்.

    இளைஞர்களிடம் துணை நடிகைகள் மற்றும் இளம் பெண்களின் படங்களை வாட்ஸ்-அப்பில் அனுப்பி விபச்சாரத்துக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.

    இந்த விபச்சார விவகாரத்தில் இவர்களுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை சொல்லி நடிகைகளுக்கு ஆசைகாட்டி விபச்சாரத்துக்கு அழைத்துள்ளதாக தெரிகிறது. 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். #ActressJayalakshmi
    மக்களின் வாட்ஸ்-அப் தகவல்களை ‘டேப்’ செய்ய மத்திய அரசு விரும்புகிறது என சுப்ரீம் கோர்ட்டு சாடியுள்ளது.
    புதுடெல்லி:

    சமூக வலைதளங்களான வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. மஹுவா மாய்த்ரா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம் கான்வில்கர், டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மஹுவா மாய்த்ரா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, இதுதொடர்பான நடவடிக்கைக்கு ஆகஸ்ட் 20-ம் தேதி மத்திய அரசு டெண்டர் கோருகிறது. சமூக வலைதள மையம் உருவாக்குவதன் மூலம் மக்களின் சமூக வலைதளங்களை கண்காணிக்க விரும்புகிறார்கள் என வாதிட்டார்.

    இதனையடுத்து, மத்திய அரசு இந்திய மக்களின் வாட்ஸ்-அப் செய்திகளை டேப் செய்ய விரும்புகிறது. இது கண்காணிக்கும் அரசை உருவாக்குவது போன்றது என சுப்ரீம் கோர்ட்டு விமர்சனம் செய்தது.

    சமூக வலைதளங்களை அரசு கண்காணிப்பதற்கான முன்மொழிவை அரசு அளித்துள்ளதையும் மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டது.
     
    மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் முடிவு ஒரு கண்காணிப்பு நிலையை ஏற்படுத்துவது போன்றது, இதுதொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இவ்விவகாரத்தில் தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபாலின் வழிகாட்டலையும் கேட்டுள்ளது.

    மத்திய அரசு இவ்விவகாரம் தொடர்பாக டெண்டர் கோருவதற்கு முன்னதாக ஆகஸ்ட் 3-ம் தேதி விசாரணைக்கு எடுக்கும் என கூறியுள்ளது.
    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் வழங்க புதிய அம்சம் உருவாக்கப்படுவது இணையத்தில் லீக் ஆகியிருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது. #WhatsApp



    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீடடா செயலியில் அந்நிறுவனம் புதிய அம்சத்தை சோதனை செய்வது தெரியவந்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியின் நோட்டிஃபிகேஷன் சென்டரில் மார்க் ஆஸ் ரீட் (mark as read) என்ற ஆப்ஷன் வழங்கப்பட இருக்கிறது.

    தற்சமயம் உருவாக்கப்படும் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை. வாட்ஸ்அப் செயலியில் உங்களுக்கு மெசேஜ் வரும் போது, நோட்டிஃபிகேஷன் சென்டரில் அதற்கு பதில் அளிக்க கோரும் ரிப்ளை (Reply) ஆப்ஷன் மட்டுமே தற்சமயம் காணப்படுகிறது. 



    புதிய அம்சம் வழங்கப்படும் பட்சத்தில் உங்களுக்கு வரும் வாட்ஸ்அப் மெசேஜ் நோட்டிஃபிகேஷன்களில் ரிப்ளை ஆப்ஷனுடன் மார்க் ஆஸ் ரீட் ஆப்ஷன் வழங்கப்பட இருக்கிறது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய அம்சம் கொண்டு குறுந்தகவலை நோட்டிஃபிகேஷன் சென்டரிலேயே படித்ததாக மார்க் செய்ய முடியும்.

    இதுவரை இந்த அம்சம் வழங்கப்படாத நிலையில், நோட்டிஃபிகேஷன் சென்டரில் புதிய மியூட் பட்டன் வழங்கப்பட இருக்கிறது. இதை கொண்டு நோட்டிஃபிகேஷன் சென்டரில் இருந்தபடியே சாட்களை மியூட் செய்ய முடியும். எனினும் புதிய ஆப்ஷன்கள் எவ்வாறு காட்சியளிக்கும் என்பது குறித்து எவ்வித தகவலும், படமும் இல்லை.  #WhatsApp #Apps

    புகைப்படம்: நன்றி WABetaInfo
    ×