search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99005"

    இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து ஃபேஸ்புக் சேவையில் பயனர் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது.




    ஃபேஸ்புக் சேவையில் பயனர்கள் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது. யுவர் டைம் (Your Time) என அழைக்கப்படும் புதிய அம்சம் ஃபேஸ்புக் ஆன்ட்ராய்டு செயலியில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இந்த அம்சம் ஃபேஸ்புக் செயலியை எவ்வளவு நேரம் பயன்படுத்தினர் என்பதை பார்க்க முடியும்.

    புதிய வசதியை கொண்டு ஒவ்வொரு ஏழு நாட்களிலும், தினமும் சராசரியாக ஃபேஸ்புக் பயன்படுத்திய நேரத்தை தெரிந்து கொள்ள முடியும். இத்துடன் தினமும் ஃபேஸ்புக் பயன்படுத்த குறிப்பிட்ட கால அளவை நிர்ணயிக்க முடியும். இவ்வாறு செய்யும் போது, நீங்கள் செட் செய்த நேரத்தில் ஃபேஸ்புக் உங்களுக்கு நினைவூட்டும். 

    “ஃபேஸ்புக்கில் பயனர் செலவழிக்கும் நேரம் சிறப்பானதாக இருக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.” என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர் ஃபேஸ்புக் சேவையை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து எப்போதும் அறிந்து கொள்ள முடியும்.



    கூகுள், ஆப்பிள் போன்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் சொந்த ஸ்கிரீன் டைம் மானிட்டரிங் செய்யும் டேஷ்போர்டுகளை அறிமுகம் செய்துள்ளன. இவற்றை கொண்டு பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனினை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் மற்றும் ஒவ்வொரு செயலியில் அவர்கள் செலவிடும் நேரம் குறித்த விவரத்தை வழங்குகிறது.

    மேலும் செயலிகளை குறிப்பிட்ட காலத்துக்கு பயன்படுத்தினால் போதும் என ரிமைன்டர் செட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரம் நிறைவுற்றதும், செயலி தானாக க்ளோஸ் ஆகிவிடும். இன்ஸ்டாகிராம் செயலியிலும் இந்த அம்சம் வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது. இன்ஸ்டாவில இந்த அம்சம் டைம் ஸ்பென்ட் (time spent) என அழைக்கப்படுகிறது.

    ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் தரம் குறைந்த வைரல் வீடியோக்கள் தோன்றுவதை குறைக்கும் படி அல்காரிதம் சமீபத்தில் மாற்றப்பட்டது. இதனால் 2017 நான்காவது காலாண்டில் வடஅமெரிக்க பகுதியில் ஃபேஸ்புக் பயன்பாடு தினசரி அடிப்படையில் 7,00,000 வரை குறைந்தது.

    புகைப்படம்: நன்றி @wongmjane
    இன்ஸ்டாகிராம் நிறுவனத்தன் ஐஜிடிவி ஆப் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐஜிடிவி (IGTV) என அழைக்கப்படும் புதிய செயலியில் நீண்ட நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை பார்க்க முடியும். 

    வழக்கமான இன்ஸ்டாகிராம் செயலியில் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் ஓடும் வீடியோக்கள் சிறிய திரையில் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு புதிய செயலி முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும். ஐஜிடிவி செயலியில் வீடியோக்கள் செங்குத்தாகவும், திரை முழுக்க ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஐஜிடிவி செயலியை திறந்ததும் பெரிய வீடியோக்களை பார்க்க முடியும், இதனால் இன்ஸ்டாவில் நீங்கள் பின்தொடர்வோரின் வீடியோக்களை பார்க்க பிரத்யேகமாக தேட வேண்டிய அவசியம் கிடையாது. இதே திரையில் இருந்த படி மேல்புறமாக ஸ்வைப் செய்தால் மேலும் புதிய தரவு வழங்குவோரின் வீடியோக்களை பார்க்க முடியும். 



    இதில் ஃபார் யூ, ஃபாலோவிங், பாப்புலர் மற்றும் கன்டியூ வாட்சிங் (“For You,” “Following,” “Popular” மற்றும் “Continue Watching”) போன்ற ஆப்ஷன்களை பார்க்க முடியும். இத்துடன் லைக், கமென்ட் செய்வதுடன் வீடியோக்களை நண்பர்களுக்கு நேரடியாக அனுப்பவும் முடியும். ஐஜிடிவி செயலியில் அதிகபட்சம் ஒரு மணி நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம்.

    ஐஜிடிவியில் சேனல்களும் இருப்பதால், கிரியேட்டர்களே சேனல்களாக செயல்படுகின்றனர். இன்ஸ்டாகிராமில் கிரியேட்டர் ஒருவரை பின்தொடரும் போது, அவரது ஐஜிடிவி சேனல் உங்களுது திரையில் பார்க்க முடியும். அதிக நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை யார் வேண்டுமானாலும் பதிவேற்றம் (அப்லோடு) செய்ய முடியும். 

    உலகம் முழுக்க சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐஜிடிவி ஆப் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களின் பிளே ஸ்டோர்களில் கிடைக்கிறது.
    இன்ஸ்டாகிராம் செயலியில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சோதனை துவங்கப்பட்ட அம்சம், கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்ஸ்டாகிராம் செயலியில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் ஸ்டோரீக்கள் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டால் பயனர்களுக்கு தெரியப்படுத்தும் அம்சம் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது.

    இந்த தகவல் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் செயலி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்த அம்சத்திற்கான சோதனை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி ஸ்டோரீக்களை யாரேனும் ஸ்கிரீன்ஷாட் எடுத்தால், இதுகுறித்த தகவல் வழங்கப்படாது.

    இதுகுறித்து பஸ்ஃபீட் வெளியிட்டிருக்கும் தகவல்களில் இன்ஸ்டாகிராம் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில், இந்த அம்சத்திற்கான சோதனை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தற்சமயம் ஸ்னாப்சாட் வழங்குவதை போன்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது குறித்து நோட்டிஃபிகேஷன் வழங்கப்படாது.



    முன்னதாக சோதனை காலத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டால், புஷ் நோட்டிஃபிகேஷன்கள் அனுப்பப்படாமல், சிறப்பு குறியீடு மூலம் பயனர்களுக்கு தெரியப்படுத்தப்படும் என கூறப்பட்டது. இது ஸ்னாப்சாட் சேவைக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது, ஸ்னாப் நிறுவன சேவையில் ஒவ்வொரு முறை ஸ்கிரீஷாட் எடுக்கப்படும் போதும் பயனருக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் தகவல் அனுப்பப்படும்.

    இன்ஸ்டாகிராம் செயலியின் டைரக்ட் மெசேஜ் (Direct Message) சேவையில் பயனர்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்தால், பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

    சமீபத்தில் இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரீக்களில் இருந்தே நேரடியாக ஷாப்பிங் செய்யும் வசதி சேர்க்கப்பட்டது. இதனால் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் தெரியும் சிறிய ஷாப்பிங் பேக் ஐகானை க்ளிக் செய்தே குறிப்பிட்ட பொருளின் முழு விவரங்களை அறிந்து கொண்டு ஷாப்பிங் செய்ய முடியும்.
    இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் செய்வதற்கான வசதி ஃபீட்களில் இருந்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
    கலிஃபோர்னியா:

    இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் செய்யும் வசதி ஃபீட்களில் இருந்து ஸ்டோரீக்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் தெரியும் சிறிய ஷாப்பிங் பேக் ஐகானை க்ளிக் செய்து குறிப்பிட்ட பொருளின் முழு விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

    அடிடாஸ் முதல் அரிட்சா வரை, உலகின் பிரபல பிரான்டு பொருட்களை பயனர்கள் இனி இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் ஷாப் செய்ய முடியும். புதிய ஸ்டைல் மற்றும் டிரென்ட் சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ளவே பலர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.



    சமீபத்திய ஆய்வின் படி இன்ஸ்டாகிராம் வாசிகள், அவ்வப்போது ஸ்டோரீக்களை பார்த்து அவர்கள் விரும்பும் பிரான்டுகளின் புதிய பொருட்கள் சார்ந்த விவரங்களை தெரிந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். பல்வேறு பிரான்டுகளும் தங்களது பொருட்களின் விவரங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது பயனர்களுக்கு பயன் தரும் வகையில் உள்ளது.

    இன்ஸ்டாகிராம் செயலியின் சமீபத்திய அப்டேட் சென்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் தேர்வு செய்யப்பட்ட பிரான்டு பொருட்களை வாங்கிட முடியும். 
    இன்ஸ்டாகிராம் சேவையில் நியூஸ் ஃபீட் ஸ்டோரிக்களை ஒவ்வொருத்தருக்கும் பிரத்யேகமாக வழங்க அந்நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
    புதுடெல்லி:

    இன்ஸ்டாகிராம் சேவையில் ரிவர்ஸ் க்ரோனோலாஜிக்கல் ஃபீட் வழிமுறையை 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நிறுத்தியது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் புதிய ரேன்கிங் அல்காரிதத்தை அறிமுகம் செய்துள்ளது.

    அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் ஒவ்வொருத்தருக்கும் பிரத்யேக ஃபீட் வழங்க மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. மெஷின் லெர்னிங் பயன்படுத்துவதால், மற்றவர்கள் பயன்படுத்தும் கணக்குகளையே நீங்கள் பயன்படுத்தினாலும் அவற்றுடன் நீங்கள் உரையாடும் விதத்தை கொண்டு பிரத்யேக ஃபீட் பார்க்க முடியும்.

    இன்ஸ்டாகிராம் நியூஸ் ஃபீடில் நீங்கள் பார்க்கும் போஸ்ட்கள் விருப்பம், பயன்பாட்டு அளவு மற்றும் உரையாடல் என மூன்று அம்சங்களை கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வகையிலான போஸ்ட்களுக்கு முன்னதாக நீங்கள் அணுகிய விதத்தை புரிந்து கொண்டு நியூஸ் ஃபீடில் வரும் போஸ்ட்களை நீங்கள் விரும்பும் வகையில் இருப்பதை இன்ஸ்டாகிராம் சரியாக புரிந்து கொள்ளும். 


    கோப்பு படம்

    மேலும் இந்த வழிமுறை போஸ்ட்களை பகிர்ந்து கொண்டவர்களிடம் நீங்கள் எத்தனை முறை உரையாடி இருக்கிறீர்கள் என்பதை கமென்ட், லைக் மற்றும் இதர அ்மசங்களை கருத்தில் கொண்டு கண்டறிந்து கொள்கிறது. மூன்று முக்கிய அம்சங்களை கடந்து ஃப்ரீக்வன்சி, பின்பற்றுவது மற்றும் பயன்பாடு உள்ளிட்டவற்றை அடுத்தக்கட்ட முக்கிய அம்சங்களாக எடுத்துக் கொள்கிறது.

    குறிப்பிட்ட நபர்களை ஃபாளோ செய்யும் போது ஃப்ரீக்வன்சி அம்சம் நீங்கள் எத்தனை முறை அவர்களின் போஸ்ட்களை பார்க்கின்றீர்கள் என்பதையும், பயன்பாடு என்பது நீங்கள் எத்தனை நேரம் போஸ்ட்களில் செலவிடுகின்றீர்கள் என்பதை புரிந்து கொள்ளும்.

    மேலும் ஃபீட்களில் எதுபோன்ற போஸ்ட்கள் வரவேண்டும் என்பதை கட்டுப்படுத்தவில்லை என்றும், இன்ஸ்டா வாசிகள் விரும்பும் போஸ்டகள் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் அம்சங்களை புரிந்து கொண்டு புகைப்படம் அல்லது வீடியோ என அனைத்து ஃபீட்களும் தெரியும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.
    இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபீட் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபீட் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    புதிய அப்டேட் மூலம் பயனரின் ஃபீடில் வரும் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களாக ஷேர் செய்ய முடியும். இனி ஃபீட் போஸ்ட்களை ஸ்டோரீக்களில் ஷேர் செய்ய போஸ்ட்-இன் கீ்ழ் காணப்படும் பேபர் ஏர்பிளேன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் புதிய ஸ்டோரீயை உருவாக்குவதற்கான ஆப்ஷன் தெரியும். 



    இன்ஸ்டாகிராமில் பீட் போஸ்ட்-ஐ ஸ்டிக்கர் வடிவில் பிரத்யேக பேக்கிரவுன்டுடன் ஷேர் செய்ய தயார் நிலையில் இருக்கும். இதனை ஷேர் செய்யும் முன் ஸ்டிக்கரை ஸ்கேல் செய்யும் ஆப்ஷன்களை இயக்கலாம். இன்ஸ்டாகிராம் ஃபீட்களில் இருந்து ஷேர் செய்யப்படும் ஸ்டோரீக்களில் குறிப்பிட்ட போஸ்ட்-ஐ உண்மையில் பதிவிட்டவரின் யூசர்நேம் இடம்பெற்றிருக்கும்.

    நீங்கள் பதிவிடும் போஸ்ட்களை மற்றவர்கள் ஸ்டோரீக்களாக ஷேர் செய்யாமல் இருக்க ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய வசதிக்கான அப்டேட்கள் முதற்கட்டமாக ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஐஓஎஸ் இயங்குதளத்திலும் வழங்கப்பட இருக்கிறது.
    ×