search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99007"

    நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தொடர்பான, 15 லட்சம் நேரலை வீடியோக்களை, 24 மணி நேரத்தில் பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. #FacebookRemoved #MosqueShootingvideo #NewZealandShooting
    வாஷிங்டன்:

    நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    துப்பாக்கி சூடு நடத்திய குற்றவாளி  தன்னை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த "பிரெண்டன் டாரன்ட்" என்று டுவிட்டரில் அடையாளம் காட்டினான். அத்துடன், 73 பக்கத்தில் தனது நோக்கங்களை தெரிவித்து இருந்தான்.

    மேலும் ஆன்லைன் கேம்களில் வருவதைப் போல டாரன்ட், துப்பாக்கியினால் மக்களை கொன்று குவித்த வீடியோவினை நேரலையாக வெளியிட்டிருந்தான். இதனை கண்ட உலகின் பல்வேறு நாடுகளின் அரசும், மக்களும் கொதித்தெழுந்து, கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த இரக்கமற்ற செயல் அரங்கேறிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவலாக பரப்பப்பட்டு வந்தது. இதையடுத்து இந்த வீடியோவின் எவ்வித பகிர்வும் சட்டத்திற்கு எதிரான மிகப்பெரிய வன்முறை என்றும், அதனை பேஸ்புக் மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்களும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நியூசிலாந்து பிரதமர் ஜெசினா ஆர்டர்ன் உத்தரவிட்டார். அதன்படி சமூக வலைத்தளங்களில் உள்ள வீடியோக்கள் நீக்கப்பட்டன.

     மியா கார்லிக்

    இதையடுத்து பேஸ்புக் நிறுவனத்தின் நியூசிலாந்து செய்தி தொடர்பாளர் மியா கார்லிக் கூறியதாவது:

    இந்த வீடியோ, இணையப்பக்கத்தில் பகிரப்படுவதை தடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கென தனியாக ஒரு குழு, சிறந்த தொழில்நுட்பத்துடன் முழுவதும் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் 1.5 மில்லியன்(15 லட்சம்) வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன.  மேலும் பேஸ்புக் ஊழியர்கள் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர்.  

    இவ்வாறு அவர் கூறினார். #FacebookRemoved #MosqueShootingvideo #NewZealandShooting

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வீடியோக்களை பகிர்வதை தடுக்க வலியுறுத்தி பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். #PollachiCase #CBCID
    கோவை:

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் இந்த கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்கள் குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


    இதற்கிடையே மதுரை ஐகோர்ட் இந்த வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது.

    இதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய வீடியோக்கள் பகிரப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளனர். #PollachiCase #CBCID
    பொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் பெண்களுக்கு வலைவிரித்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வீடியோ எடுத்த வழக்கில் கைதான நாகராஜ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. #Pollachimolestation #AIADMK #partycadre
    சென்னை:

    பொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் பழகி சுமார் 100 பெண்களை ஏமாற்றி சீரழித்த வழக்கில் கைதான திருநாவுக்கரசிடம் இருந்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான நாகராஜ் என்பவர் அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் என தகவல் வெளியானது.

    இவ்விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற தமிழக அரசு முயன்று வருவதாக இன்று குறிப்பிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    இந்நிலையில், அதிமுக கட்சியின் கொள்கைக்கும் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் ஏ.நாகராஜ் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pollachimolestation #AIADMK #partycadre 
    கோவையில் பேஸ்புக் மூலம் பழகி 50-க்கும் மேற்பட்ட மாணவிகள், இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கைதான 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    கோவை:

    கோவை பொள்ளாச்சி ஜோதிநகரை சேர்ந்தவர் சபரிராஜன்(வயது 25). என்ஜினீயர்.

    இவருக்கு ‘பேஸ்புக்’ மூலம் அப்பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் அறிமுகம் கிடைத்தது. நாளடைவில் இப்பழக்கம் காதலாக மாறியது. சம்பவத்தன்று மாணவிக்கு போன் செய்த சபரிராஜன் சுற்றுலா செல்லலாம் என ஆசை காட்டி ஊஞ்சவேலம்பட்டி பகுதிக்கு அழைத்தார். இதை நம்பி மாணவி அவருடன் காரில் சென்றார்.

    காரில் சபரிராஜன், தனது நண்பர்களான சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்த சதிஷ்(28), பக்கோதிபாளையத்தை சேர்ந்த வசந்தகுமார்(24), மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு(26) ஆகியோர் இருந்தனர். தாராபுரம் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சபரிராஜன் மாணவியின் சுடிதாரை விலக்கி பாலியல் தொல்லையில் ஈடுபட, அதை சதிஷ் செல்போனில் வீடியோவில் படம் பிடித்தார்.

    அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். இதனால் ஆவேசமடைந்த 4 பேரும் சேர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டினர். பின்னர் அவர் அணிந்திருந்த 1 பவுன் செயினை பறித்துக் கொண்டு, மாணவியை காரில் இருந்து கீழே இறக்கி விட்டு சென்றனர்.

    இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறி அழுதார். அவர்கள் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சபரிராஜன் உள்பட 4 பேர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தி சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    திருநாவுக்கரசு தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    இக்கும்பல் சமீபத்தில் வெளியான ‘அடங்க மறு’ சினிமா போன்று அழகான இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை குறி வைத்து பழக்கம் ஏற்படுத்தி, தனியாக வரவழைத்து ‘குரூப்’பாக சேர்ந்தும், தனித்தனியாகவும் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.

    பேஸ்புக்கில் பழக்கமாகும் மாணவிகள், இளம் பெண்களின் செல்போன் நம்பரை எடுத்துக் கொடுக்கும் வேலையை திருநாவுக்கரசு செய்து வந்துள்ளார். அந்த நம்பரில் சபரிராஜன் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகள் பேசி பெண்களை தங்களது வலையில் வீழ்த்தி உள்ளனர். பின்னர் அவர்களை தனியாக அழைத்து சென்று ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி நகை, பணம் பறித்துள்ளனர்.

    இவர்களிடம் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மாணவிகள், இளம்பெண்கள் சிக்கியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் இதுவரை யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை.

    முதல்முறையாக மாணவி புகார் கொடுத்ததால் இந்த கும்பல் சிக்கி உள்ளது. புகார் கொடுத்த மாணவிக்கு போதிய பாதுகாப்பு செய்து கொடுத்த போலீசார், இந்த கும்பலின் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். #tamilnews
    இன்று வளர்ந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சி பெரும்பாலானவர்களை தவறான பாதைக்கே அழைத்துச்செல்கிறது. குறிப்பாக சமூக வலைதளத்தினால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
    தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நன்மை தருவதற்கு மட்டும் தானே தவிர கெடுதல் தருவதற்கு அல்ல. ஆனால் இன்று வளர்ந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சி பெரும்பாலானவர்களை தவறான பாதைக்கே அழைத்துச்செல்கிறது. குறிப்பாக சமூக வலைதளத்தினால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அப்படி பேஸ்புக் எனும் சோஷியல் மீடியா மூலம் எப்படி பெண்கள் தடம் மாறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்!

    ஒருவர் தனது புகைப்படத்திற்கு அல்லது பதிவிற்கு தொடர்ந்து லைக் செய்து, கருத்து தெரிவித்து வந்தால் அவருடன் பெண்கள் பழக ஆரம்பித்துவிடுகிறார்கள்.

    அருகில் இருப்பவர்களுடன் பிடிப்பு இல்லாத நட்பு உடைய பெண்கள் பேஸ்புக் மூலம் ஆண் நண்பர்களை தேடி ஏமாந்து போகின்றனர்.

    பேஸ்புக்கில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும் என்ற லைக்ஸ் மோகத்தினாலும் பெண்கள் அதிகம் பாதிப்படைகின்றனர்.

    நேரில் அல்லது அருகே அதிக தோழமை அல்லது உறவில் பெரிய பிடிப்பு இல்லாத பெண்கள், ஃபேஸ்புக் மூலம் பழகும் நட்பு வட்டாரத்தை பெரிதாக்கி கொள்ள விரும்புகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான நட்புகள் சேர்த்துக் கொள்ள முகம் தெரியாத நபர்களை இணைத்துக் தனது விபரங்களை பகிர துவங்கி விடுகிறார்கள்!

    சின்ன, சின்ன பிரச்சனைகள் எழுந்தாலும் கூட, உடனே காதல் முறிந்து, அடுத்த நபருடன் இணையவும் சமூக தளம் ஒரு காரணியாக இருக்கிறது. இப்போதெல்லாம் காதல் தோல்வியை புகைப்படத்துடன் ஃபீலிங் எலோன் என பதிவு செய்வது அதிகரித்து விட்டது. இதை கண்டதும், தோள் கொடுத்து ஆசை வார்த்தை பேசி, காதலில் அப்பெண்ணை வீழ்த்த துடிக்கும் அன்(ம்)புகள் இங்கே ஏராளம்.

    இளவட்ட வயதான 17 - 24-க்குட்பட்ட வயதினர் அதிகமாக ஃபேஸ்புக் மாயைகளில் ஏமார்ந்துவிடுகின்றனர். புதிய நபர்களுடன் பழகுவதில் இருக்கும் ஈர்ப்பு, வெளி செல்ல வேண்டும் என்ற துடிப்பு போன்றவை இவர்களை ஏமாற செய்கிறது. ஃபேஸ்புக் மூலம் இணைந்த பல காதலர்களும் இருக்கிறார்கள், ஃபேஸ்புக் மூலம் பிரிந்த காதலர்களும் இருக்கிறார்கள். இவை அனைத்தும் ஒரு நபர் எப்படி ஃபேஸ்புக் என்ற கருவியை பயன்படுத்துகிறார் என்பதில் தான் இருக்கிறது.

    உலகின் சிறந்த சமூக வலைத்தளம் எது? என்று நடத்தப்பட்ட ஒரு புள்ளி விவர கணக்கெடுப்பில் வாட்ஸ்-ஆப் பேஸ்புக்கை விஞ்சிய வலைத்தளமாக வளர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
    உலகின் சிறந்த சமூக வலைத்தளம் எது? என்று நடத்தப்பட்ட ஒரு புள்ளி விவர கணக்கெடுப்பில் வாட்ஸ்-ஆப் பேஸ்புக்கை விஞ்சிய வலைத்தளமாக வளர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

    2018-ம் ஆண்டின் சமூகவலைத்தள பயன்பாட்டை வைத்து ஒரு புள்ளிவிவர கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் வாட்ஸ்ஆப் பேஸ்புக்கை விஞ்சி உலகின் சிறந்த சமூக தகவல்தொடர்பு வலைத்தளமாக பதிவானது. இது பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அப்ளிகேசன் என்றாலும் அது பேஸ்புக்கை மிஞ்சியிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.

    கடந்த 2 வருடங்களில் வாட்ஸ்ஆப் பயன்பாடு 30 சதவீத அளவு வேகமாக உயர்ந்திருக்கிறது.

    மாதாந்திரம் தொடர்ந்து பயன்படுத்தும் ‘ஆக்டிவ்’ பயனாளர்களின் அடிப்படையில் வாட்ஸ்-ஆப் மெஸேஞ்சரில் பேஸ்புக்கைவிட அதிகமான எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் செயல்பாட்டில் உள்ளனர்.

    பேஸ்புக்கின் மற்றொரு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமும் 2017-2018 காலத்தில் 35 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.

    பேஸ்புக் மற்றும் பேஸ்புக் மெஸேஞ்சர் வலைத்தளங்கள் கடந்த 2 வருடங்களில் முறையே 20 சதவீதம் மற்றும் 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

    சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டு நேரம் கடந்த 2 ஆண்டுகளில் 35 சதவீதம் உயர்ந்துள்ளது.

    மொபைல் போன்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாகும்.

    சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை ரசிப்பதும். பகிர்வதும் பெருகி உள்ளது. இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டோக் போன்றவை அதிகம் பிரபலமான வீடியோ காட்சி பகிர்வுத் தளங்களாக தெரியவந்துள்ளன.

    இந்தியாவில் வாட்ஸ்ஆப் மெஸேஞ்சர் தளம் அதிக பயன்பாட்டில் முதலிடத்தையும், அடுத்ததாக இன்ஸ்டாகிராமும், மூன்றாவது இடத்தை பேஸ்புக்கும் பெற்றுள்ளன.

    அமெரிக்காவில் ஸ்னாப்சாட் தளம் முதலிடம் பிடித்திருக்கிறது.

    இலவச போன் அழைப்பு, இலவச மெஸேஜ் மற்றும் தொடர்பு எண் மூலம் தகவல் பரிமாற்றம் ஆகியவை வாட்ஸ்ஆப் பயன்பாட்டிற்கு முக்கிய காரணமாக தெரியவந்துள்ளன. மேலும் ‘என்ட் டூ என்ட் என்கிரிப்டடு’ பாதுகாப்பு அம்சமும் அதன் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
    பெரியபாளையம் அருகே பேஸ்புக்கில் தரக்குறைவாக விமர்சனம் செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள வெங்கல், ஜமீன்தார் தெருவைச் சேர்ந்தவர் வேல். இவர் ஒரு தரப்பினர் பற்றி அவதூறாக பேசி ‘பேஸ்புக்கில்’ பதிவிட்டு இருந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றொரு தரப்பினர் ஆவேசம் அடைந்தனர். ‘பேஸ்புக்கில்’ தரக்குறைவாக பேசி பதிவிட்ட வேலை கைது செய்யக்கோரி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் எதிர் தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் இரண்டு தரப்பினரிடையே மோதல் உருவாகும் நிலை உருவானது.

    ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இதற்கிடையே திருவள்ளூர் அருகே ஈக்காடு பகுதியில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த வேலை போலீசார் கைது செய்தனர்.

    அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    பேஸ்புக் மூலம் பழகி கல்லூரி மாணவி உள்பட 20 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கல்லரா பகுதியை சேர்ந்தவர் சைஜூ. இவரது மகன் ஜின்சு (24). ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவர் கடந்த 3 மாதங்களாக பேஸ்புக் மூலம் சில பெண்களிடம் பழகி தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார். பின்னர் அவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவியிடம் ஜின்சு பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார். அவரிடம் நன்கு பழகி வந்துள்ளார். அவரை பல்வேறு இடங்களுக்கும் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    நேற்று வாலிபர் ஜின்சு அந்த மாணவியை காரில் கல்லூரிக்கு அழைத்து சென்றார். காரில் இருந்து இறங்கிய மாணவி ஜின்சுவை பார்த்து சிரித்து கொண்டே சென்றுள்ளார்.

    இதனை கல்லூரி முதல்வர் பார்த்து விட்டார். அவருக்கு வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர் கோட்டயம் போலீஸ் சூப்பிரண்டு அரி சங்கருக்கு புகார் தெரிவித்தார்.

    அவர் சம்பந்தப்பட்ட மாணவியை அழைத்து விசாரணை நடத்தினார். மாணவியின் செல்போன் மூலம் பேசி ஜின்சுவை தனி இடத்திற்கு வருமாறு அழைத்தனர். அதன்படி ஜின்சு அங்கு வந்தார்.

    அங்கு மறைந்து இருந்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது கல்லூரி மாணவி மட்டுமின்றி மேலும் 19 பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததை ஒத்துக் கொண்டார்.

    அவரை கோட்டயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
    சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தவர்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் வகையில், 1000க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டன. போராட்டத்தை ஒடுக்க மாநில காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    இந்நிலையில், சபரிமலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர்களின் பெயர் மற்றும் அவர்களின் பின்னணி உள்ளிட்ட விவரங்களை கேரள காவல்துறை திரட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1000க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை கண்காணித்து வருகிறது.

    இது தொடர்பாக மாநில ஹைடெக் சைபர் செல், மாவட்ட சைபர் செல் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சுமார் 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கருத்துக்களை பதிவிடுவதற்கும், போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்கும் பலர் சமூக வலைத்தளங்களை கருவியாக பயன்படுத்தினர். இவற்றில் பல பேஸ்புக் கணக்குகள் வெளிநாட்டில் இருந்து செயல்பட்டதாக போலீசார் கண்டறிந்துள்ளனர்.

    சைபர் செல் மூலம் பெறப்பட்ட தகவல்களை பேஸ்புக் அதிகாரிகளிடம ஒப்படைத்து, சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடிப்பதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதன்பின்னர், அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். #SabarimalaVerdict #SabarimalaProtest #KeralaPolice #FacebookAccounts
    காஷ்மீரில் பேஸ்புக் மூலம் இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு தூண்டிய பெண்ணை உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். #KashmiriWoman #Militancy #Facebook
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தை சேர்ந்த, 2 குழந்தைகளுக்கு தாயான சாஷியா என்கிற பெண் ‘பேஸ்புக்’ மூலம் இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு தூண்டுவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சாஷியாவின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்த உளவுத்துறை அதிகாரிகள் அவருடைய ‘பேஸ்புக்’ கணக்கை முடக்கி அவரை கைது செய்தனர்.

    அவருடைய வீட்டில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சாஷியாவின் சகோதரர்கள் 2 பேரையும் உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், சாஷியா தனது ‘பேஸ்புக்’ மூலம் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளில் சேரவும், ஆயுதங்களை வாங்கவும் இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்து வந்தது தெரியவந்தது.

    மேலும் அவரிடம் இருந்து அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் சமீபத்தில் ஆயுதங்கள் வாங்கி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    சாஷியாவுக்கு பயங்கரவாத இயக்கத்தின் தளபதிகளுடன் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி உளவுத்துறை அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  #KashmiriWoman #Militancy #Facebook 
    ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில், குழந்தைகளின் நிர்வாண படங்கள் பெருமளவில் காணப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து கடந்த 3 மாதங்களில் 87 லட்சம் குழந்தை நிர்வாண படங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Facebook
    சான்பிரான்சிஸ்கோ :

    உலகமெங்கும் உள்ள இணையதள ஆர்வலர்களின் ஆதரவைப் பெற்றுள்ள ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில், குழந்தைகளின் நிர்வாண படங்கள் பெருமளவில் காணப்படுவதாக புகார் எழுந்தது. இதைக் கண்ட உபயோகிப்பாளர்கள் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனத்தின் கவனத்துக்கு எடுத்துச்சென்றனர்.

    அது மட்டுமல்ல, காமன்ஸ் ஊடகக்குழுவின் தலைவர் டேமியன் காலின்ஸ், இதற்காக ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தை கடுமையாக சாடினார். இது தொடர்பாக பி.பி.சி., ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் ரகசிய குழுக்களால் குழந்தைகளின் ஆபாச படங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவது தெரிய வந்தது.



    இதையடுத்து கடந்த 3 மாதங்களில் 87 லட்சம் குழந்தை நிர்வாண படங்கள் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், புதிதாக இதற்கெனவே அந்த நிறுவனம் ஒரு மென்பொருள் (சாப்ட்வேர்) உருவாக்கி உள்ளது. அந்த மென்பொருள், ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்துக்கு எந்தவொரு குழந்தையின் நிர்வாண படங்களோ, ஆபாச படங்களோ வந்தால், அதைத் தானாகவே நீக்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. #Facebook 
    சென்னை மடிப்பாக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு வீதியில் திரிந்த ஒரிசா வாலிபரை போலீசார் பேஸ்புக் மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். #Facebook
    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம் பகுதியில் சந்தேகப்படும்படி வடமாநில வாலிபர் ஒருவர் அலைந்து திரிவதாக மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மடிப்பாக்கம் பஸ்நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அருகே வடமாநில வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து சுற்றி வந்த மடிப்பாக்கம் போலீசார், அந்த வாலிபர் மோட்டார் சைக்கிள் திருடுவதற்காக வந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.

    உடனே அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவருடைய பெயர் தேவேந்திர பியான் (21). ஒரிசா மாநிலம் பலேசோர் என்ற இடத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

    தொடர்ந்து விசாரித்த போது ஒரு போன் நம்பரை சொன்னார். அதன்மூலம் அந்த வாலிபரின் ‘பேஸ்புக்’ தொடர்பை போலீசார் கண்டுபிடித்தனர். ஐ.டி.ஐ. படித்த இவர் 20-நாட்களுக்கு முன்பு கேரளாவுக்கு பிட்டர் வேலைக்காக சென்றதும், அங்கு ஏமாற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது.

    இந்தநிலையில் கேரளாவில் ரெயில் ஏறி சென்னை வந்த அவர் மடிப்பாக்கம் பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இதுகுறித்து பேஸ்புக் மூலம் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதை அறிந்த தேவேந்திரபியான் உறவினரும், நண்பர்களும் ஒரிசாவில் இருந்து மடிப்பாக்கம் போலீஸ் நிலையம் வந்தனர். அவர்களிடம் வாலிபர் தேவேந்திரபியான் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து மடிப்பாக்கம் போலீசாருக்கும், உறவினர்கள் வரும் வரை வாலிபருக்கு பாதுகாப்பு கொடுத்த தொண்டு நிறுவன பிரமுகர் நாராயணனுக்கும் வாலிபரின் உறவினரும் நண்பர்களும் நன்றி தெரிவித்தனர். #Facebook
    ×