search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99007"

    புவனேஸ்வரம் அருகே ராணுவ வீரருன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புவனேஸ்வரம்:

    மேற்கு வங்காளம் மெத்னிப்பூரை சேர்ந்தவர் மந்துப்பத்ரா. இவர் ஒரிசா மாநிலம் தென்கானல் என்ற இடத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி அருணா. இவர் சமூக வலைதளம் மூலம் பலருடன் நட்பு வைத்திருந்தார். பேஸ்புக்கில் சஞ்சய்குமார் என்ற எல்லை பாதுகாப்புபடை வீரர் அருணாவுக்கு அறிமுகமானார்.

    அரியான மாநிலத்தை சேர்ந்த சஞ்சய்குமார் அசாமில் நேபாளம் எல்லையில் பணியாற்றி வந்தார். அருணாவும், சஞ்சய்குமார் அடிக்கடி பேஸ்புக்கில் தொடர்பு கொள்வது வழக்கம். இது அவர்களுக்குள் காதலை ஏற்படுத்தியது.

    சஞ்சய்குமார் அடிக்கடி தென்கானலுக்கு வந்து அருணாவை சந்திப்பார். அப்போது அவர்கள் தனிமையில் இருப்பது வழக்கம். இந்த காதல் விவகாரம் மந்துப்பத்ராவுக்கு தெரிய வந்தது. அவர் அருணாவை கண்டித்தார்.

    இதனால் கணவரை தீர்த்து கட்டிவிட்டு சஞ்சய் குமாரை திருமணம் செய்து கொள்ள அருணா முடிவு செய்தார். இதற்கு சஞ்சய்குமார் சம்மதித்தார். கடந்த 3-ந் தேதி இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சஞ்சய்குமார் தென்கானலுக்கு வந்தார்.

    அன்று காலை அருணா கணவர் மந்துப்பத்ராவுக்கு காலை உணவில் வி‌ஷத்தை கலந்து கொடுத்தார். இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அருணா காதலர் சஞ்சய் குமாரை வீட்டுக்கு அழைத்தார். அவர் கத்தியால் மந்துப்பத்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அவர் அசாம் சென்று விட்டார்.

    தனது கணவரை யாரோ கொன்று விட்டதாக போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணையில் அருணா கொலை பின்னணியில் இருப்பதை கண்டுபிடித்தனர். அவரை போனை ஆய்வு செய்த போது சஞ்சய் குமாருடன் பேஸ் புக்கில் அடிக்கடி தொடர்பு கொண்டது தெரியவந்தது.

    அது பற்றி தீவிரமாக விசாரித்த போது காதலருடன் சேர்ந்து கொலை செய்ததை அருணா ஒத்துக்கொண்டார். இதையடுத்து போலீசார் அசாமுக்கு சென்று சஞ்சய் குமாரை கைது செய்தனர். அருணா மற்றும் சஞ்சய் குமார் இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #tamilnews
    பேஸ்புக் பயனர்கள் 3 கோடி பேரின் பிறந்த தேதி, கல்வி, உள்பட பிற தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. #Facebook #dataleak
    வாஷிங்டன் :

    அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, பேஸ்புக்கில் உள்ள 5 கோடி வாக்காளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக பிரபல பிரிட்டன் தொலைக்காட்சி நிறுவனமான நியூஸ் 4 செய்தி வெளியிட்டது. அமெரிக்க தேர்தல் விவகாரத்தில் பேஸ்புக்கின் பங்களிப்பு இருந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து பேஸ்புக் நிறுவனம் பெரும் சர்ச்சையில் சிக்கியது.

    ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தின் மூலம் இந்த தகவல்கள் திருடப்பட்டதாகவும், இதனை டொனால்டு டிரம்ப் அரசியல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்ஸ்பெர்க் இந்த விவகாரத்தில் தவறு நடந்து விட்ட உண்மையை ஒப்புக் கொண்டார்.

    இந்நிலையில், பேஸ்புக் பயணர்கள் 3 கோடி பேரின் தகவல்கள் தற்போது திருடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேஸ்புக் பயணர்களின் பெயர், தொடர்பு விவரங்கள் மற்றும் 1.5 கோடி  நபர்களின்  மற்ற தகவல்களை ஹேக்கர்கள் திருடியதாக  பேஸ்புக் தெரிவித்துள்ளது.

    மேலும், 1.4 கோடி  மக்களுடைய பெயர்கள் மற்றும் தொடர்பு விவரங்கள் திருட ஹேக்கர்கள் முயற்சித்துள்ளதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

    இரண்டு வாரங்களுக்கு முன்னர் பேஸ்புக் தொழில்நுட்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை அந்நிறுவனம் சரிசெய்து வரும் நிலையில், மீண்டும் 3 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Facebook #dataleak
    சியோமி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #POCOF1



    சியோமி நிறுவனம் அறிமுகம் செய்த போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் ஆன்லைனில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. அதிக சக்திவாய்ந்த சிறப்பம்சங்களை குறைந்த விலையில் வழங்குவதால் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக சியோமி நிறுவனம் தனது போகோ எஃப்1 ஸ்மார்ட்போனினை ஆஃப்லைனில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அந்த வகையில் அக்டோபர் 13 (இன்று) முதல் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் சியோமியின் அதிகாரப்பூர்வ Mi ஹோம் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

    இதைத் தொடர்ந்து சியோமியின் கூட்டு விற்பனை மையங்களில் அக்டோபர் 17-ம் தேதி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சியோமி போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரர்பூர்வ வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போகோ பிரான்டு இந்தியர்கள் மத்தியில் பிரபலப்படுத்த சியோமி முடிவு செய்துள்ளது.

    ஆகஸ்டு மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகமான போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் 6ஜி.பி. ரேம்/64 ஜி.பி. மெமரி, 6ஜி.பி. ரேம்/128 ஜி.பி. மெமரி, 8ஜி.பி. ரேம்/256 ஜி.பி. மெமரி என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. 

    சியோமியின் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கொண்டு இயங்குகிறது, இதே பிராசஸர் ஒன்பிளஸ் 6, சாம்சங் கேலக்ஸி நோட் 9 மற்றும் பல்வேறு இதர ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது. 



    போகோ எஃப்1 சிறப்பம்சங்கள்:

    - 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் 
    - அட்ரினோ 630 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், 1.4μm பிக்சல், சோனி IMX363 சென்சார்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் சென்சார்
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டிராக் ஹெச்.டி., டூயல் ஸ்மார்ட் PA
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் பிளாக், ஸ்டீல் புளு மற்றும் ரோஸோ ரெட் போன்ற நிறங்களிலும், ஆர்மர்டு எடிஷன் மாடலும் கிடைக்கிறது. இவற்றுடன் சாஃப்ட் கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. 

    போகோ எஃப்1 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடல் ரூ.20,999, போகோ எஃப்1 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ.23,999, போகோ எஃப்1 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் ரூ.28,999, போகோ எஃப்1 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் கெவ்லர் ஆர்மர்டு எடிஷன் ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இன்று பேஸ்புக் பயன்படுத்தும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. பேஸ்புக்கில் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு.
    இன்று பேஸ்புக் பயன்படுத்தும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. பேஸ்புக்கில் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது நமது கைகளில் தான் இருக்கிறது. பேஸ்புக்கை பயன்படுத்தும் பெண்கள் தெரியாமல் செய்யும் செயலால் பல பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. சாலை என்று இருந்தால் அதில் விபத்துக்கள் நடக்க கூடும். விபத்திலிருந்து நம்மை பாதுகாப்பதற்கு சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். அதுபோல் தான் பேஸ்புக்கில் நம்மை பாதுகாப்பதற்கு சில வழிமுறைகளை பின்பற்றினால் பாதுகாப்பாக இருக்கலாம். இல்லை என்றால் பல ஆபத்துகளை சந்திக்கக்கூடும். பேஸ்புக்கில் பெண்கள் செய்யும் சில தவறுகளை பற்றி பார்ப்போம்.

    பேஸ்புக்கில் இன்று பெண்கள் செய்யும் மிக பெரிய தவறில் ஒன்று தங்களுடைய புகைப்படங்களை பகிர்வது. அந்த புகைப்படங்கள் எல்லாம் எங்கே செல்கிறது எவ்வாறு பயன்படுத்தபடுகிறது என்று பெண்களுக்கு தெரிவது இல்லை. பெண்கள் சர்வசாதாரணமாக புகைப்படங்களை பகிர்கின்றனர். நீங்கள் பகிரும் புகைப்படங்களை விஷமிகள் எடுத்து மார்பிங் செய்து ஆபாச இணையதளத்திற்கு விற்று விடுகிறார்கள். இப்படி பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கின்றனர். சற்று தெளிவான பெண்கள் பேஸ்புக் டைம் லைனில் புகைபடங்களை பகிர்வதில்லை.

    பேஸ்புக்கில் பெண்கள் அவர்களின் உறவினர்களுடன் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் உரையாடும் போது அவர்களின் புகைப்படங்களை பகிர்வார்கள். நம் உறவினர் மற்றும் நம் நண்பர்களை தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது அப்படி செய்வது மிகவும் பாதுகாப்பானது என்று பல பெண்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அது தான் இல்லை. நீங்கள் பேஸ்புக்கை எப்போது தொடங்கினீர்களோ அப்போதிலிருந்து நீங்கள் பேசிய உரையாடல், புகைப்படங்கள் மற்றும் அனைத்து நடவடிக்கையும் பேஸ்புக் சர்வரில் சேமித்து வைத்து இருக்கும்.

    இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால் நீங்கள் அழித்தவற்றையும் பேஸ்புக் சேமித்து வைத்து இருக்கும். இதனால் எனக்கு என்ன ஆபத்து என்று கேட்கலாம் உங்கள் பேஸ்புக் கணக்குஹேக்கர்ஸ் அல்லது விஷ கிருமியிடம் கிடைத்தால் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள அனைத்து தகவல்களையும் எடுத்து அதை எந்த வழிகளிலும் பயன்படுத்த முடியும். ஆகையால் பெண்கள் பேஸ்புக்கில் உரையாடும் போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    பேஸ்புக்கில் நமக்கு அறிமுகம் இல்லாத நபர் யாரும் நட்பு வேண்டுதல் கொடுத்தால் அதை ஏற்காதீர்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மட்டும் நட்பு வைத்து கொள்ளுங்கள். இதனால் பல பிரச்சினைகளை தவிர்க்கலாம். பேஸ்புக்கில் போலி கணக்குகளும் இருக்கின்றன. எனவே யாரையும் எளிதாக நம்பிவிடவேண்டாம்.

    எந்த புரொபைலையும்(சுய விவர குறிப்பு) பார்த்ததும் நட்பு வேண்டுதல் செய்து விடாமல், அந்த கணக்கை பற்றி முழு விவரம் தெரிந்த பின்னர் நட்பு வேண்டுதலை தெரிவியுங்கள். பெண்கள் பேஸ்புக் கணக்கை தொடங்கும் போது தங்களின் தொலைபேசி எண் வைத்து கணக்கை தொடங்குவார்கள். அவ்வாறு செய்வது பெண்களுக்கு பாதுகாப்பானது இல்லை.

    நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கை தொலைபேசி எண்ணை வைத்து உருவாக்கினால் உங்கள் தொலைபேசி எண் பேஸ்புக்கில் உள்ள ரிப்போர்ட் பக்கத்தில் தோன்றும் அதை எல்லாராலும் பார்க்க முடியும். இதனால் அந்த எண்ணுக்கு தேவையில்லாத அழைப்புகள் வரக் கூடும். பேஸ்புக் கணக்கை உருவாக்கும்போது பெண்கள் மின்னஞ்சலை பயன்படுத்தி உருவாக்குங்கள் அது பாதுகாப்பானது. அந்த மின்னஞ்சலை வேறு எதற்கும் பயன்படுத்த வேண்டாம் பேஸ்புக் கணக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

    ஒரு சில நேரம் பெண்கள் சிலரை நல்லவர் என்று நினைத்து அவர்களின் நட்பு வேண்டுதலை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் ஏற்றுகொண்ட பிறகு அவர்களின் தொல்லை அதிகமாக இருக்கும். அவர்களை முதலிலே தவிர்த்து விடுவது நல்லது. பேஸ்புக்கில் அவர்களை எப்படி பிளாக் செய்வது என்று பார்ப்போம். முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள செட்டிங்ஸ் என்ற பக்கத்திற்கு செல்லுங்கள். அந்த பக்கத்தில் இடது பக்கம் இருக்கின்ற ப்ளாக்கிங் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதில் இருக்கும் ப்ளாக் யூசர்ஸில் நீங்கள் ப்ளாக் செய்ய விரும்புவோரின் பெயர், மின்னஞ்சல் அல்லது அவரின் புரொபைல் யூ. ஆர். எல் . இதில் ஏதேனும் ஒன்றை அந்த இடத்தில் கொடுத்து ப்ளாக் என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான் இனி அவர் எப்போதும் உங்களை தொடர்பு கொள்ள முடியாது.

    நீங்கள் ஏதாவது ஒரு பக்கத்திற்கு சென்றால் அந்த பக்கத்தில் ஓர் பதிவிற்கு நீங்கள் கருத்துகள் தெரிவிக்கும் போது அந்த கருத்துகள் மற்றும் புரொபைல் அதே பக்கத்தில் இருக்கும். இதனால் வெளியாட்கள் அந்த பக்கத்திற்கு வரும் போது உங்கள் புரொபைலுக்கு நட்பு வேண்டுதல் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. இது பெண்கள் அறியாமல் செய்யும் மிக பெரிய தவறு இதனால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும்.

    இது பெண்களுக்கு பாதுகாப்பானது இல்லை. இணையதளத்தில் உங்கள் புகைப்படங்களை பதிவேற்றுங்கள் முப்பது வருடங்களுக்கு பிறகு நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று சொல்கிறேன் என்று கேள்வி கேட்டால் அதில் பெண்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யாதீர்கள் மற்றும் ஒரு லிங்கை அனுப்பி இந்த லிங்கில் நீங்கள் சென்று லாகின் செய்தால் 15ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள் உங்களுக்கு வெறும் 1200 ரூபாய்க்கு கிடைக்கும் என்று கூறினால் செல்லாதீர்கள்.

    ஏனென்றால் உங்கள் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்ய நினைப்பார்கள். “பிஷிங்” என்ற முறையில் உங்கள் பேஸ்புக்கை மற்றும் இதர கணக்குகளை ஹேக் செய்து விடுவார்கள். பிஷிங் என்றால் பேஸ்புக் லாகின் பக்கம் மாதிரியே உருவாக்கி அதை உங்களுக்கு அனுப்புவார்கள். அதை நீங்களும் கிளிக் செய்து உங்கள் கணக்கை லாகின் செய்தால் உங்கள் யூசர் நேம், பாஸ்வேர்டு உள்ளிட்டவை திருடப்பட்டுவிடும். மேலே கூறப்பட்டுள்ள வழிகளை பெண்கள் பின்பற்றினால் பேஸ்புக்கில் பாதுகாப்பாக இருக்கலாம்.

    ப.பொன்விக்னேஸ், கல்லூரி மாணவர்
    மம்தா பானர்ஜி குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்து வெளியிட்ட திரிபுராவின் தலாய் மாவட்டத்தை சேர்ந்த துஷார் சர்மா என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். #MamtaBanerjee #Facebook
    அம்பாசா:

    ரோஹிங்யா அகதிகள் பிரச்சினையில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை விமர்சித்து பேஸ்புக் தளத்தில் அவதூறு கருத்துகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக மம்தா பானர்ஜிக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகள் அதில் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

    கடந்த ஏப்ரல் மாதம் பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்காள போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இந்த பதிவை திரிபுரா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வெளியிட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இரு மாநில போலீசாரும் இணைந்து அந்த வாலிபரை கைது செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர்.

    இதன் பயனாக திரிபுராவின் தலாய் மாவட்டத்தை சேர்ந்த துஷார் சர்மா என்ற அந்த வாலிபர் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளார். அவரை கைது செய்து கமல்பூரில் உள்ள கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, துஷார் சர்மாவை 3 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.  #MamtaBanerjee #Facebook
    சமீபகாலமாக மற்றவர்களை விட இளம்பெண்களுக்கு பேஸ்புக்கில் பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது. எனவே பேஸ்புக்கில் இருக்கும் பெண்கள் தாங்களே தங்களை பாதுகாத்து கொள்ள சில டிப்ஸ்...
    சமீபகாலமாக மற்றவர்களை விட இளம்பெண்களுக்கு பேஸ்புக்கில் பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது. பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட பெண்களின் படங்களை திருடி, ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டதால் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே பேஸ்புக்கில் இருக்கும் பெண்கள் தாங்களே தங்களை பாதுகாத்து கொள்ள சில டிப்ஸ்...

    பேஸ்புக் தகவல்களில் உங்கள் தொலைபேசி எண், முகவரி போன்ற தகவல்களை அளிக்காதீர்கள்.

    இன்டர்நெட் சென்டர்கள், கல்லூரி, நண்பர்களின் கணினிகள் மூலம் பேஸ்புக் கணக்கை லாக் இன் செய்தால், வேலை முடிந்ததும் லாக் அவுட்செய்ய மறக்காதீர்கள். இல்லையெனில் உங்கள் பேஸ்புக் கணக்கை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தக்கூடும்.

    உங்களுடைய போட்டோக்களை பேஸ்புக்கில் பதிவிடும் போது கவனமாக இருங்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த நட்பு வட்டாரங்கள் மட்டும் பார்க்கும் வகையில் பேஸ்புக் செட்டிங்கை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.



    நீங்கள் என்ன செய்கிறீர்கள், என்ன செய்யப் போகிறீர்கள், தற்போது எங்கே இருக்கிறீர்கள் என உங்கள் சொந்த விஷயங்களை பேஸ்புக் ஸ்டேட்டஸ் மூலம் தம்பட்டம் அடிக்காதீர்கள்

    தெரியாத நபர்களிடமிருந்து வரும் நட்பு அழைப்புகளை ஏற்காதீர்கள். புள்ளிவிபரங்களின் படி பேஸ்புக்கில் உள்ள ஓவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 130 நண்பர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 130 பேரில் உங்களுக்கு எத்தனை பேரை நீங்கள் நேரில் சந்தித்த அனுபவம் உள்ளது? என்பதை அறிந்து பின்னர் அவர்களை மட்டும் பின்தொடருங்கள்.

    உங்கள் குழந்தைகளின் படங்களை பேஸ்புக்கில் பதிவிடாதீர்கள். குறிப்பாக சிறிய குழந்தைதானே என ஆடை அணியாத உங்கள் பிள்ளைகளின் படங்களை பதிவிட வேண்டாம்.

    பேஸ்புக்கில் உள்ள உங்கள் நட்பு வரிசையை அனைவரும் பார்க்கும் வண்ணம் பப்ளிக்கில் வைக்காதீர்கள்.

    உங்களுக்கு தொல்லை கொடுக்கும் நபர்கள், ஆபாச புகைப்படங்கள், வீடியோ அனுப்பும் நபர்களை பிளாக் செய்து, ரிப்போர்ட் செய்யுங்கள். உங்கள் சக நண்பர்களிடமும் சொல்லி அந்த குறிப்பிட்ட நபரை ரிப்போர்ட் செய்ய சொல்லுங்கள்.
    சுமார் 5 கோடி பேரின் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 கோடி பேரின் அக்கவுண்ட் பாதுகாப்பற்று இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. #Facebook
    வாஷிங்டன் :

    உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருக்கும் பேஸ்புக் பயனர்களின் அக்கவுண்ட்கள் செயல்படும் முறையில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு இருந்ததை கண்டுபிடித்திருப்பதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு குறைபாட்டினால் சுமார் 5 கோடி பேரின் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 கோடி பேரின் அக்கவுண்ட்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மைத் துறை துணை தலைவர் கய் ரோசன் என்பவர் பேஸ்புக் நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது :-

    இந்த பாதுகாப்பு குறைபாட்டினை பேஸ்புக் நிறுவனத்தை சேர்ந்த பொறியியல் நிபுணர்கள் குழு கடந்த 25-ம் தேதி மாலை கண்டறிந்தனர். இப்போது இந்த பிரச்சனையை சரி செய்யும் பணிகளில் நிபுணர்கள் குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் உள்ள சிறப்பு அம்சமான வியூ ஆஸ்(View As) எனும் வசதி இந்த பாதுகாப்பு குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

    தங்களுடைய அக்கவுண்ட்களை மற்றவர்கள் பார்க்கும் போது, அதில் உள்ள பதிவுகள் அனைத்தும் எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை நமக்கு நாமே பார்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட வசதி தான் இந்த வியூ ஆஸ் எனும் சிறப்பு வசதி.

    ஆனால் இந்த வசதி பேஸ்புக் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் பற்றிய ரகசிய தகவல்களை உள்ளடக்கிய பாதுகாப்பு டோக்கனை (security token) அம்பலப்படுத்துகிறது.  அதை பயன்படுத்தி ஒருவரின் பேஸ்புக் கணக்கைக் கட்டுப்படுத்த போதுமான தொழில்நுட்ப அறிவைக் கொண்ட எவராலும் பிறரின் அக்கவுண்ட்டை ஹேக் செய்ய முடியும்.

    எனவே, இப்போது பேஸ்புக்கில் உள்ள வியூ ஆஸ் வசதி தற்காலிகமாக செயல்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என  கய் ரோசன் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே ஹேக் செய்யப்பட்ட 5 கோடி அக்கவுண்ட்கள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 4 கோடி அக்கவுண்ட்களில் உங்களுடைய அக்கவுண்டும் ஒன்றா என கண்டுபிக்டிக்க ஒரு வழி உள்ளது.



    நாம் முதல்முறையாக நமது செல்போன்களில் அல்லது கணிணியில் பேஸ்புக் லாக்-இன் செய்யும் போது பார்ஸ்வேட் கொடுப்போம், பின்னர் அந்த பாஸ்வேர்டை மீண்டும் கொடுக்காமல் இருக்க சேவ் பாஸ்வேர்ட் எனும் ஆப்ஷனை கிளிக் செய்வோம். இதனால் அடுத்த முறை  நமது அக்கவுண்டை லாக்-இன் செய்யும் போது பாஸ்வேர்ட் கேக்காமலேயே அக்கவுண்ட் திறக்கும்.

    ஆனால், பாதுகாப்பு குறைபாட்டினால் ஹேக் செய்யப்பட்டுள்ள 5 கோடி அக்கவுண்டும், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 4 கோடி அக்கவுண்ட் என மொத்தம் 9 கோடி பேஸ்புக் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதால், அவற்றை ஒருவர் லாக்-இன் செய்யும் போது வழக்கம் போல பாஸ்வேர்ட் இல்லாமல் பேஸ்புக் பக்கம் திறக்காது. லாக்-அவுட் நிலைக்கு வந்து நம்மிடம் மீண்டும் பாஸ்வேர்ட் கேட்கும் அவ்வாறு நமது அக்கவுண்ட் அதுவாகவே லாக்-அவுட் ஆனால் நமது அக்கவுண்டும் பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம்.

    எப்போதும் போல பாஸ்வேர்ட் இல்லாமல் உங்கள் பேஸ்புக் பக்கம் திறந்தால் அந்த 9 கோடி பேரில் நீங்களும் ஒருவர் இல்லை என தெரிந்துகொள்ளலாம். #Facebook
    கூகுள், டுவிட்டர் பேஸ்புக் போன்றவை தன்னைப்பற்றிய சாதகமான செய்திகளை இருட்டடிப்பு செய்வதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். #WhiteHouseprobes #TrumpaccusesGoogle
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான பிரபல செய்தி நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான் கூகுள் முன்னுரிமை அளிக்கிறது. அரசுக்கு எதிர்மறையான செய்திகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்றவை அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றிய சாதகமான செய்திகளுக்கு தருவதில்லை என அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார்.

    நமது மக்களின்மீது ஆதிக்கம் செலுத்த கூகுள், டுவிட்டர், பேஸ்புக் ஆகியவை நினைக்கின்றன. இவர்களின் செயல்பாடு பெரும்பான்மையான மக்களுக்கு நியாயமானதாக இல்லை.  மிகவும் மோசமான பாதை வழியாக செல்ல நினைக்கும் இவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் டிரம்ப் எச்சரித்திருந்தார்.


    அவரது இந்த குற்றச்சாட்டுக்கு கூகுள் நிறுவனமான ஆல்ஃபபெட் இன்க் மட்டும் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அதிபரின் செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுவது உண்மைதானா? என்ற விசாரணையில் வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக டிரம்ப்பின் நிதித்துறை ஆலோசகர் லேரி குட்லோவ் இன்று தெரிவித்துள்ளார். #WhiteHouseprobes #TrumpaccusesGoogle  
    கோவையை சேர்ந்த 38 வயது பெண்ணுக்க பேஸ்புக் மூலம் செக்ஸ் தொல்லை கொடுத்ததாக சோமனூரை சேர்ந்த தம்பதி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    வடவள்ளி:

    கோவை வடவள்ளியை சேர்ந்த 38 வயது பெண் சென்னையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு கோவை சோமனூரை சேர்ந்த ஒருவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டனர். அதன் பின்னர் நட்பு ரீதியாக பேசி வந்தனர்.

    இந்த நிலையில் அப்பெண் சென்னையில் இருந்து வடவள்ளி வந்து விட்டார். அதன் பின்னரும் சோமனூரை சேர்ந்தவர் நட்புடன் பேசி வந்தார். இதனால் அவரது பேஸ்புக்கிற்கு வடவள்ளியை சேர்ந்த பெண் தனது மகளுடன் இருக்கும் படத்தை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

    இதனை பார்த்த அவர் உன்னை விட உனது மகள் அழகாக இருக்கிறார் என கூறி அவரது மகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக தெரிகிறது. மேலும் மார்பிங் செய்த படத்தை வெளியிட்டு விடுவேன். உனது மகள் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்து உள்ளார். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வடவள்ளி பெண் தனது பேஸ்புக்கில் சோமனூரை சேர்ந்தவர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை போலீசில் புகார் செய்து விடுவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஆனால் தொடர்ந்து பேஸ்புக் மூலம் மிரட்டல் விடுத்து வந்ததால் அப்பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இது குறித்து விசாரணை நடத்தும் படி வடவள்ளி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து வடவள்ளி போலீசார் சோமனூரை சேர்ந்தவர், அவரது மனைவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்ததல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ள வடவள்ளி பெண் சென்னையில் வேலை பார்த்த போது இது போல் 4 பேர் மீது புகார் கொடுத்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    திருவண்ணாமலை இளம்பெண்ணின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை டவுன் தண்டராம்பட்டு சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற கல்வித்துறை அதிகாரி. இவரது மகளுக்கும், பெங்களூருவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடந்தது.

    திருமணத்திற்கு பிறகு அந்த பெண் பெங்களூரு சென்றார். சில நாட்களுக்கு முன்பு அவர் கணவருக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. அந்த பெண்ணை அவர் பெங்களூருவிலேயே விட்டுவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார்.

    அந்த பெண் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், பெங்களூருவை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாலிபர், அந்த பெண்ணின் ஆபாச படத்தை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தன் தந்தையிடம் கூறினார். அவர், திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து பெங்களூரு வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மெரீனாவில் அடக்கம் செய்ய இடம் தரக்கோரி முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    திருப்பூர்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய மெரீனா கடற்கரை அண்ணா சமாதி அருகே அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் கோர்ட்டு மூலம் கருணாநிதி உடல் மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி பெறப்பட்டது.

    இந்நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் காலனியை சேர்ந்த கனகசுந்தரம் (வயது 35) என்ற வாலிபர் பேஸ்புக்கில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பற்றி அவதூறு பரப்பும் வகையில் தகவல்களை பதிவு செய்திருந்தார். மேலும் அதில் கருணாநிதிக்கு அண்ணா சமாதி அருகே இடம் தராவிட்டால் கொங்கு மண்டலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் நுழைய முடியாது என்றும் பதிவு செய்திருந்தார்.

    இதைப்பார்த்த அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கணேசன் (58) என்பவர் திருப்பூர் தெற்கு போலீசில் கனகசுந்தரம் பரப்பிய அவதூறு மற்றும் மிரட்டல் குறித்து புகார் செய்தார்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முதல்-அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த கனகசுந்தரத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    பேஸ்புக்கில் வெளியான இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை பார்த்து ஏமாந்து அவர்களை தேடிச் சென்ற வாலிபர்களிடம் பணம் பறித்த 2 பெண்கள் உள்பட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    சமூக வலைதளங்கள் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைத்தாலும், அதை தவறான செயலுக்கு பயன்படுத்தி பணம் பறிக்கும் செயல்களும் அடிக்கடி நடந்து வருகிறது.

    பேஸ்புக், வாட்ஸ்-அப் மூலம் ஆன்லைனில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு இளம்பெண்களின் படங்களை அவர்களுக்கு அனுப்பி அதன் மூலம் விபசாரம் செய்யும் கும்பல்கள் கேரளாவில் பல இடங்களில் சிக்கி உள்ளன. இது தொடர்பாக வரும் புகார்களை சைபர்கிரைம் போலீசார் விசாரித்து அந்த கும்பல்களை தொடர்து கைது செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பேஸ்புக்கில் வெளியான இளம்பெண்களின் கவர்ச்சி படத்தை பார்த்து ஏமாந்து அவர்களை தேடிச் சென்ற வாலிபர்களிடம் பணம் பறித்த 2 பெண்கள் உள்பட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருச்சூர் அருகே தலச்சேரி பகுதியை சேர்ந்த இளம் என்ஜினீயர் ஒருவர் சமூக வலைதளங்களில் நேரம் செலவிடுவதில் அதிக ஆர்வம் உள்ளவர். பேஸ்புக்கில் அவர் பார்வையிட்டு கொண்டிருந்த போது 2 இளம் பெண்கள் தங்களின் கவர்ச்சி படங்களை வெளியிட்டு இருந்தனர். மேலும் அதை பார்ப்பவர்கள் ஆசையை தூண்டும் வகையில் சில வாசகங்களை வெளியிட்டு தங்களது செல்போன் நம்பர்களையும் அதில் பதிவிட்டு இருந்தனர். இதை பார்த்ததும் சபலமடைந்த அந்த என்ஜினீயர் செல்போன் நம்பரில் தொடர்புகொண்டு பேசினார்.

    அப்போது அவரிடம் ஒரு இளம்பெண் பேசினார். அவர் கொடுங்கல்லூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முகவரியை கூறி அங்கு வந்தால் தன்னை சந்திக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினார். இதனால் அவரும் அந்த பெண் கூறிய முகவரிக்கு சென்றார். அங்குள்ள ஒரு வீட்டில் 2 இளம்பெண்கள் இருந்தனர். அவர்கள் அந்த என்ஜினீயரிடம் நெருக்கமாக அமர்ந்து அவரை மயக்க தொடங்கினார்கள்.

    அப்போது திடீரென்று கதவு தட்டப்பட்டதால் அந்த பெண்கள் கதவை திறந்தனர். அங்கு 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். தங்களை போலீஸ் என்று கூறிக்கொண்டு அவர்கள் உள்ளே நுழைந்தனர். மேலும் அந்த வாலிபரை நிர்வாணமாக்கி 2 அழகிகளுடன் நெருக்கமாக நிற்க வைத்து செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

    அப்போது அந்த பெண்கள் ஒன்றும் அறியாதவர்கள் போல கண்ணீர் விட்டு கதறினார்கள். தங்களை விட்டு விடும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டனர். உடனே 4 வாலிபர்களும் அந்த என்ஜினீயரிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தையும், ஏ.டி.எம். கார்டையும் பறித்துக் கொண்டனர். மேலும் தங்களுக்கு ரூ.3 லட்சம் கொடுக்காவிட்டால் இந்த ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிவிட்டு சென்று விட்டனர்.

    இதைதொடர்ந்து பாதிக்கப்பட்ட என்ஜினீயர் கொடுங்கல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடி நடவடிக்கையில் இறங்கி அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர். அப்போது அங்கு நசீமா (வயது 26), சமீனா (26) என்ற 2 இளம்பெண்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த 2 பெண்களும் பேஸ்புக்கில் படங்களை போட்டு வாலிபர்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்கள் என்பது தெரியவந்தது.

    உடனே அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த மோகன்(34), பாபு (35), சிங்கித் (29), அக்பர்ஷா (24) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதே போல பல வாலிபர்களை ஏமாற்றி அவர்கள் பணம் பறித்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×