search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99024"

    பழனி கோவில் சிலை மோசடி வழக்கை 10 நாட்கள் நேரடியாக விசாரிக்க உள்ளதாக ஐஜி பொன்மாணிக்கவேல் கூறினார். #PonManickavel

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான நவபாஷான சிலை உள்ளது. இந்த சிலை சேதமடைந்ததாக கூறி புதிய ஐம்பொன் சிலை செய்யப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு இந்த சிலை செய்ததில் மோசடி நடந்ததாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து அப்போதைய கோவில் இணை ஆணையர் ராஜா, ஸ்தபதி முத்தையா உள்பட பலர் இதில் சிக்கினர்.

    இது மட்டுமின்றி நகை மதிப்பீட்டாளர் உள்பட பலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தனர். தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஐம்பொன் சிலை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    மோசடி வழக்கை விசாரித்து வந்த ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். இதனால் சிலை மோசடி வழக்கில் தொடர்புடைய பலர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில் அவரது பணி காலத்தை ஓராண்டு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும் நேற்று உறுதி செய்தது. இதனையடுத்து பழனி கோவிலுக்கு நேற்று இரவு  ஐஜி பொன்மாணிக்கவேல் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


    பழனி முருகன் கோவிலில் ஐம்பொன் சிலை மோசடி வழக்கு விசாரணை ஒரு டி.எஸ்.பி. தலைமையில் நடந்து வந்தது. கடந்த சில நாட்களாக நடந்த இவ்வழக்கில் எவ்வித விசாரணையும் நடைபெறாமல் இருந்தது. விரைவில் அந்த வழக்கை நானே நேரடியாக விசாரணை நடத்த உள்ளேன்.

    பழனியில் 10 நாட்கள் வரை தங்கி இருந்து இதில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்துவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிலை மோசடி வழக்கில் பல அதிகாரிகள் இன்னும் சிக்கவில்லை என பக்தர்களும், பொதுமக்களும் தெரிவித்து வந்தனர். விசாரணை நடத்தி வந்த ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பணி ஓய்வு பெற்றதால் இனி இந்த வழக்கு எப்படி நடக்குமோ? என்ற அச்சமும் பக்தர்களிடையே நிலவியது.

    மேலும் சிலை மோசடி குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு அதிகாரிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அதிகாரிகள் மட்டுமின்றி கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

    சிலை மோசடியில் மூளையாக செயல்பட்ட நபரை நெருங்கும் சமயத்தில் வழக்கு விசாரணை தொய்வு ஏற்பட்டது. தற்போது தானே நேரடியாக விசாரணை நடத்த உள்ளேன் என தெரிவித்திருப்பது மோசடி வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.  #PonManickavel

    சாயல்குடியில் உள்ள அடகு நிறுவனத்தில் ரூ.24 லட்சத்து 74 ஆயிரம் மோசடி செய்ததாக முன்னாள் மேலாளர் உட்பட 5 பேர் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    ராமநாதபுரம்:

    சாயல்குடி முத்தூட் பின்கார்ப் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்தவர் கமல்ராஜ் (வயது 30) இவர் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி முதல் அக்டோபர் 22-ந்தேதி வரை 15 வாடிக்கையாளர்கள் பெயரில் தங்க நகையை அடகு வைத்ததாக ஊழியர்களின் உதவியுடன் ரூபாய் 24 லட்சத்து 74 ஆயிரம் மோசடி செய்துள்ளார்.

    இது வங்கியில் நடைபெற்ற ஆடிட்டர் ஆய்வில் தெரியவர, இது குறித்து மதுரை மண்டல மேலாளர் சுரேஷ் குமாரிடம் ஆடிட்டர் புகார் அளித்தார்.

    இதைத்தொடர்ந்து மண்டல மேலாளர் சுரேஷ்குமார் நடத்திய விசாரணையில், பணத்தை விரைவில் கட்டிவிடுவதாக மேலாளர் கமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    ஆனால் குறிப்பிட்டபடி பணம் செலுத்த தவறியதால் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனாவிடம், மண்டல மேலாளர் சுரேஷ் குமார் புகார் செய்தார்.

    முன்னாள் மேலாளர் கடலாடி கமல்ராஜ், அங்கு பணியாற்றிய சாயல்குடி ராஜேஸ்வரன்(26), கமுதி சரவணக்குமார் (32), சாயல்குடியை சேர்ந்த அரவிந்தராஜ், ராஜேஸ்வரி ஆகிய 5 பேர் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது.

    எஸ்.பி.உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் பரம குருநாதன் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் தேடி வருகின்றனர். #tamilnews
    புதுவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவி குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கோரிமேடு ராம்நகரை சேர்ந்த சூரியகுமார். இவரது மனைவி உஷாராணி (வயது 45) ஜிப்மர் ஊழியர். கணவன்-மனைவி இருவரும் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.

    இவர்களிடம் புதுவை லப்போர்த் வீதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் சாமிஜோசப் (60) என்பவர் 3 சீட்டுகள் போட்டிருந்தார். மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் 3 சீட்டுக்கு பணம் கட்டி வந்தார்.

    சீட்டு காலம் முடிந்ததும் சாமிஜோசப் தான் செலுத்திய சீட்டுக்கான பணம் ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்தை கேட்டார். அதற்கு உஷா ராணியும், சூரியகுமாரும் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

    பலமுறை நேரில் சென்று கேட்டும் அவர் பணத்தை கொடுக்காததால் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். அப்போது போலீசார் புகாரை வாங்க மறுத்து விட்டனர். இதையடுத்து சாமிஜோசப் புதுவை கோர்ட்டில் முறையிட்டார். இதை விசாரித்த நீதிபதி இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    கோர்ட்டு உத்தரவின் பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ் பெக்டர் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டியில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் வாலிபரை தேடி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த மேலப்பாளையம் இலுப்பைதோப்பு பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 40). கார் டிரைவர்.

    இவர் தனது நண்பரான அன்பழகன் என்பவரின் மகனுக்காக வேலை சம்பந்தமாக திருவள்ளுவர் மாவட்டம் கொரட்டூர் பகுதியை சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவரிடம் பேசினார்.

    அதற்கு நாராயணமூர்த்தி, முஸ்தபாவிடம் தான் வேலை வாங்கி தருவதாக கூறி 18 லட்சம் ரூபாய் கேட்டார். அதற்கு முஸ்தபா சம்மதித்து நாராயணமூர்த்தியிடம் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி பணம் கொடுத்தார். மீதமுள்ள 12 லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்கினர். ஆனால் நாராயணமூர்த்தி வேலைவாங்கி தரவில்லை, பணமும் திருப்பி தரவில்லை.

    இதுகுறித்து பண்ருட்டி போலீசில் முஸ்தபா புகார் செய்தார். இதையொட்டி நாராயணமூர்த்தி மீது போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர். #tamilnews
    மதுரையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 13½ லட்சம் மோசடி செய்த அரசு பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை:

    மதுரை ஆத்திக்குளத்தை சேர்ந்தவர் குமரவேல் (வயது 41). அரசு பஸ் டிரைவராக உள்ள இவர் அண்ணாநகர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரை கரிசல்குளம் திருமால்நகரை சேர்ந்த கணபதி (48) என்பவர் அரசு கண்டக்டராக பணியாற்றி வருகிறார். அவருக்கு தெரிந்தவர்கள் மூலம் உறவினர்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

    இதை நம்பி கணபதியிடம் ரூ. 13½ லட்சத்தை கொடுத்தேன். பணத்தை பெற்றுக் கொண்ட அவர் வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது கணபதி கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப் பிடப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணபதியை கைது செய்தனர். #tamilnews
    தோவாளை அருகே அதிமுக பிரமுகரிடம் ரூ.10½ லட்சம் மோசடி செய்த போதகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    தாழக்குடி கண்டமேட்டுக் காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 63). இவர் தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. அவைத்தலைவராக உள்ளார்.

    இவரது மனைவி லதா ராமச்சந்திரன். அ.தி.மு.க. மாவட்ட இணைச் செயலாளராக உள்ளார். ராமச்சந்திரன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் அ.தி.மு.க. கட்சியில் உள்ளேன். மக்கள் பிரச்சினைக்காக அடிக்கடி சென்னை தலைமை செயலகத்திற்கு செல்வது வழக்கம். அப்போது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த போதகர் ஜோன்ஸ் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும், பலருக்கு வேலை வாங்கிக்கொடுத்து இருப்பதாகவும், பணி இட மாறுதல் வாங்கிக்கொடுத் திருப்பதாகவும் என்னிடம் கூறினார்.

    அவரது ஆசை வார்த்தைகளை நம்பினேன். எனது மூத்த மகன் பினிலுக்கு உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தார். அதற்காக 10 லட்சத்து 75 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டார். மேலும் எனது தங்கையின் மகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டார். பணம் வாங்கிய பிறகு ஜோன்ஸ் எந்த காரியத்தையும் செய்து தரவில்லை.

    இதையடுத்து நான் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டேன் தொடர்ந்து கேட்டதன் பேரில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை திருப்பிக் கொடுத்தார். ரூ.10 லட்சத்து 45 ஆயிரம் பணத்தை திருப்பித் தரவில்லை. தொடர்ந்து ஏமாற்றிவந்தார்.எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி தலைமையிலான போலீசார் இந்த மனு மீது விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஜோன்ஸ் பணம் வாங்கி விட்டு ஏமாற்றியது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மீது போலீசார் இந்திய தண்டனைச்சட்டம் 420 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் இன்று காலை ஜோன்சை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #tamilnews
    வெளிநாட்டில் வசிக்கும் தமிழரிடம் ரூ.4½ கோடி மோசடி செய்த சிவகங்கை போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 60). இவர் குவைத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், தியானம், சித்தர்கள் வழிபாடு என்று சென்று வருவாராம். இதை தெரிந்து கொண்ட குவைத்தில் வேலை செய்யும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த அப்துல்அஜீஸ் என்பவர் ராமதாசிடம் சிவகங்கையில் ஒரு சித்தர் இருப்பதாகவும், அவர் தரும் மருந்தில் பல நோய்கள் குணமாகிறது என்றும் கூறியுள்ளார்.

    இதை நம்பிய ராமதாஸ் கடந்த 2015–ம் ஆண்டு சிவகங்கைக்கு வந்துள்ளார். அவரிடம் சிவகங்கை அண்ணாமலை நகரை சேர்ந்த ரவி (46) என்பவரை சாமியார் என அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து சிவகங்கையில் ஆசிரமம் அமைக்க வேண்டும் என்று கூறி ராமதாசிடம் பல தவணைகளில் ரூ.4 கோடியே 66 லட்சம் வாங்கினாராம்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆசிரமம் மற்றும் பணம் குறித்து ராமதாஸ் கேட்ட போது, சாமியார் ரவி சரிவர பதிலளிக்கவில்லையாம். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமதாஸ் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் அளித்தார்.

    அவருடைய உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பாண்டிசெல்வம், இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ், சப்– இன்ஸ்பெக்டர்கள் சசிகலா, அருள்மொழிவர்மன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வெள்ளைச்சாமி, தவமுருகன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதில் ரவி போலி சாமியார் என்பதும் இதுபோல் திருச்சியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரிடம் ரூ.40லட்சம் மோசடி செய்து இருப்பதும் தெரியவந்தது

    அதைத்தொடர்ந்து போலி சாமியார் ரவி, அவரின் மனைவி புவனேஸ்வரி, உறவினர் மோதீஸ்வரன், அப்துல்அஜீஸ், பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜமாணிக்கம், சென்னையை சேர்ந்த தேவர் என்ற பொன்னியப்பன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் போலி சாமியார் ரவியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    அணைக்கட்டு அருகே மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    அணைக்கட்டு:

    அணைக்கட்டை அடுத்த ஊணை மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வினோத்குமார் (வயது 22), கார்த்திகேயன் (23). இவர்கள் 2 பேரும் அதே பகுதியை சேர்ந்த பாலு என்பவரிடம் அரசு வேலையில் சேர்ப்பதற்கு யாராவது இருக்கின்றார்களா? என்று கேட்டுள்ளனர். அதற்கு பாலு, குடியாத்தம் தாலுகா மேலாலத்தூர் ஊராட்சி வடக்குபட்டறை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (33) என்பவர் இருக்கிறார் என்று சொல்லி அவரை வரவழைத்து வினோத்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரிடம் வேலை சம்பந்தமாக பேசியுள்ளனர்.

    அப்போது சுரேஷ் மின்வாரியத்துறையில் முக்கியமான அதிகாரிகள் தெரியும் முன்பணமாக 2 பேரும் சேர்ந்து ரூ.3 லட்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் ரூ.3 லட்சத்தை சுரேசிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இன்று வரை வேலையும் கிடக்கவில்லை, கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை.

    இதுகுறித்து வினோத்குமார் அணைக்கட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேசை கைது செய்தனர்.

    தி.நகர் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் மோசடி செய்த அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    தி.நகர் ரங்கன் தெருவைச் சேர்ந்தவர் அஜந்தா. சென்னையில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது உறவினர் ஒருவருக்கு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி அண்ணா நகரைச் சேர்ந்த காமராஜ் என்பவர் ரூ.6 லட்சம் பணம் வாங்கி உள்ளார்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த பணத்தை காமராஜ் பெற்றுக் கொண்டார். ஆனால் உறுதி அளித்த படி அவரால் வேலை வாங்கி கொடுக்க முடியவில்லை.

    இதனால் 4 மாதங்களுக்கு பிறகு காமராஜ் ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். மீதி பணம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.

    அஜந்தா பலமுறை கேட்டும் காமராஜ் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி அஜந்தா மாம்பலம் போலீசில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காமராஜ் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    கைதான காமராஜ் குமரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகியாக உள்ளார்.

    திருப்பூரில் நூல் வாங்கி ரூ. 77 லட்சம் மோசடி செய்த பனியன் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர்-தாராபுரம் ரோடு கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன்(வயது 48). இவர் அதே பகுதியில் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் பனியன் தயாரிப்புக்காக கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பல்லடம் ரோடு தட்டான்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு நூல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ரூ.1 கோடியே 2 லட்சம் மதிப்பிலான நூல்களை வாங்கியுள்ளார்.

    இதற்காக முதல் கட்டமாக ரூ.25 லட்சத்தை மட்டுமே பாஸ்கரன் வழங்கியதாக தெரிகிறது. மீதமுள்ள பணத்தை விரைவில் கொடுத்து விடுவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் மீதி பணத்தை கொடுக்காமல் அவர் இழுத்தடித்து வந்துள்ளார். நூல் தயாரிப்பு நிறுவனத்தினர் பலமுறை பாஸ்கரனிடம் சென்று பணம் கேட்டும் அவர் எந்த பதிலும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து நூல் தயாரிப்பு நிறுவன மேலாளரான கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த முருகேசன்மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம், பாஸ்கரன் தங்கள் நிறுவனத்தில் நூல் வாங்கி சுமார் ரூ.77 லட்சம் மோசடி செய்ததாக புகார் தெரிவித்தார். மோசடி வழக்கு தொடர்பாக பாஸ்கரனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    சென்னையில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் வங்கி அதிகாரி, மோசடி பணத்தில் சொகுசு கார், படகு, பங்களா வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது. #BankOfficer #CheatingCase
    சென்னை:

    சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் கமலக்கண்ணன். முன்னாள் தனியார் வங்கி அதிகாரி. இவர் மீது நெல்லையை சேர்ந்த தொழில் அதிபர் ஜெபரத்தினம் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் கொடுத்தார்.

    அதில், “கமலக்கண்ணன் என்னிடம் வங்கிகளில் கடன் வாங்கி தருவதாக கூறினார். இதனால் அவரை நம்பினேன். ஆனால் கமலக்கண்ணன், எனது பெயரில் பலகோடி மதிப்பில் நிலங்கள் இருப்பதாக போலி ஆவணங்கள் தயார் செய்து 3 வங்கிகளில் கொடுத்து ரூ.1.83 கோடி கடன் வாங்கி உள்ளார். அந்த வங்கியில் இருந்து எனக்கு நோட்டீசு வந்த பிறகுதான் கமலகண்ணன் மோசடி செய்தது தெரிய வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

    இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் வங்கி அதிகாரியான கமலக்கண்ணனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பலரிடம் தொழிலுக்காக கடன் வாங்கி தருவதாகவும், கார் கடன் வாங்கி தருவதாகவும் மோசடி செய்து வந்ததும், மோசடி பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது.

    கொடைக்கானலில் ரூ.2 கோடிக்கும் மேல் உள்ள பங்களா வீடு வாங்கி உள்ளார். 2 சொகுசு கார்கள் வைத்திருக்கிறார். மேலும் உல்லாச படகு ஒன்றையும் வாங்கி அந்தமான் தீவில் நிறுத்தி வைத்திருப்பதும் தெரியவந்தது.

    தேனாம்பேட்டையில் உள்ள ஒரு வங்கியில் கமலக் கண்ணன் தனது கூட்டாளிகள் 6 பேருடன் சேர்ந்து ரூ.6.71 கோடி மோசடி செய்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் அவரது கூட்டாளிகள் 6 பேரையும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

    தற்போது முக்கிய குற்றவாளியான கமலக்கண்ணன் சிக்கி உள்ளார். இதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கமலகண்ணனை போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்துள்ளது. #BankOfficer #CheatingCase
    விழுப்புரம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி காங்கிரஸ் பிரமுகரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள பெரியகரம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 63), காங்கிரஸ் பிரமுகர். இவருடைய மகன் சக்திவேல் (25). இவர் பி.இ. மெக்கானிக்கல் முடித்துள்ளார். சண்முகத்திற்கும் செஞ்சி- திருவண்ணாமலை சாலை புதுத்தெருவை சேர்ந்த அரங்ககாந்தி (53) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது அரங்ககாந்தி, டெல்லியில் தனக்கு அரசு அதிகாரிகள் சிலரை நன்கு தெரியும், அவர்கள் மூலமாக சக்திவேலுக்கு மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக சண்முகத்திடம் கூறியுள்ளார்.

    இதை நம்பிய சண்முகம், அரங்ககாந்தியிடம் எப்படியாவது தனது மகனுக்கு மத்திய அரசு பணி வாங்கித்தரும்படி கூறினார். அதற்கு பணம் செலவாகும் என்று கூறிய அரங்ககாந்தி, சண்முகத்திடம் இருந்து ரூ.8 லட்சத்து 16 ஆயிரத்தை பெற்றார்.

    பின்னர் சில மாதங்கள் கழித்து வேலைக்கான உத்தரவு வந்துவிட்டதாக கூறி பல்வேறு ஆவணங்களை சண்முகத்திடம் அரங்ககாந்தி கொடுத்துள்ளார். அந்த ஆவணங்களை கொண்டு வேலைக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டபோது அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சண்முகம், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட அரங்ககாந்தியை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று செஞ்சியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற அரங்ககாந்தியை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். # tamilnews
    ×