என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி பலி"

    • மூதாட்டி உயிரிழந்து 2 நாட்கள் ஆகிய நிலையில் அவரது இறுதிசடங்கு செய்து சுடுகாட்டிற்கு கொண்ட செல்ல முடியவில்லை.
    • கிராமமக்கள் களக்காடு அம்பேத்கர் சிலை அருகே உயிரிழந்த மூதாட்டி உடலுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கல்லடி சிதம்பராபுரம் வேதநாயகபுரம் கிராமம் உள்ளது. இங்குள்ளவர் இறந்தால் பெருமாள்குளத்தில் உள்ள சுடுகாட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் அந்த சுடுகாடு இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தமானது என தனியார் ஒருவர் கூறியதுடன் சுடுகாட்டை சுற்றி வேலி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தாங்கள் நீண்டகாலமாக சுடுகாடாக பயன்படுத்தி வரும் இடத்தை தங்களுக்கு மீட்டு தர வேண்டும் என கூறி அந்த கிராமமக்கள் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் வேதநாயகபுரத்தை சேர்ந்த சங்கரன் என்பவரது மனைவி இளங்காமணி (வயது70) என்ற மூதாட்டி உடல் நலக்குறைவால் இறந்தார்.

    இதையடுத்து அவரது உடலை பெருமாள்குளம் சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்த இடத்தை சொந்தம் என கூறி வரும் நபர்கள் அதற்கு அனுமதி மறுத்துள்ளனர். எனவே மூதாட்டி உயிரிழந்து 2 நாட்கள் ஆகிய நிலையில் அவரது இறுதிசடங்கு செய்து சுடுகாட்டிற்கு கொண்ட செல்ல முடியவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் களக்காடு அம்பேத்கர் சிலை அருகே உயிரிழந்த மூதாட்டி உடலுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு நாங்குநேரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    • முனியம்மாள் திருக்கோவிலூரில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெறும் பஜனைக்காக சென்றார்.
    • போலீசார் விரைந்து சென்று முனியம்மாளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருவண்ணாமலை மாவட்டம், பெரும்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது தாய் முனியம்மாள் (வயது87). இவர் திருக்கோவிலூரில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெறும் பஜனைக்காக சென்றார். அப்போது அந்த பகுதியில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் முனியம்மாள் தனியாக இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக முனியம்மாள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.

    அதிர்ச்சி அடைந்த அவர் உயிர்பிழைக்க கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆனால் அவர் தண்ணீரில் அடித்துசெல்லப்பட்டார். இதுகுறித்து திருக்கோ விலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல்அறிந்த போலீசார் விரைந்து சென்று முனிய ம்மாளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியபாலம் அருகே முனியம்மாள் உடல் கரை ஒதுங்கிக் கிடந்தது. உடலை கைப்ப ற்றிய போலீசார் பிரேத பரிசோ தனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருக்கோ விலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று மதியம் 1 மணியளவில் வழக்கம்போல் ஊரில் உள்ள அனிவற்றிகுளத்தில் குளிப்பதற்கு சென்றார். 2 மணிக்கு மேலாகியும் சரசம் திரும்பி வீட்டிற்கு வரவில்லை
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ குளத்திற்கு விரைந்து சென்றனர்.அப்போது சரசத்தின் உடல் குளத்து நீரில் மிதந்தது.தீயணைப்பு வீரர்கள் குளத்தில் குதித்து அவரது மீட்டு கரை சேர்த்தனர்.

    கன்னியாகுமரி ;

    மணவாளக்குறிச்சி அருகே கருங்காலிவிளையை சேர்ந்தவர் சண்முக சுயம்பு.இவரது மனைவி சரசம் (வயது 75).

    இவர் நேற்று மதியம் 1 மணியளவில் வழக்கம்போல் ஊரில் உள்ள அனிவற்றிகுளத்தில் குளிப்பதற்கு சென்றார். 2 மணிக்கு மேலாகியும் சரசம் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. குடும்பத்தினர் அவரை தேடி செல்லும்போது குளித்துவிட்டு வீடு திரும்பிய வேறு ஒரு பெண் சரசம் நீரில் முழ்கியதாக தகவல் தெரிவித்தார்.உடனே திங்கள்நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ குளத்திற்கு விரைந்து சென்றனர்.அப்போது சரசத்தின் உடல் குளத்து நீரில் மிதந்தது.தீயணைப்பு வீரர்கள் குளத்தில் குதித்து அவரது மீட்டு கரை சேர்த்தனர்.

    தகவலறிந்த மணவாளக்குறிச்சி போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிதம்பரம் அருகே கனமழைக்கு சுவர் இடிந்து மூதாட்டி பலியானார்.
    • கடந்த 2 நாட்களாக சிதம்பரம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள நஞ்சமகத்துவாழ்க்கை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது தாயார் கலியம்மாள் (வயது 70). இவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக சிதம்பரம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இவரது வீட்டில் சுவர் நனைந்து இருந்தது. நேற்று திடீரென பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் கலி யம்மாள் இடிபாடுகளுக்குள் சிக்கினார்.

    அவர் உயிர் பிழைக்க கூச்சல்போட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் கலி யம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தில்லை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பீளமேடு ரெயில் நிலையம் அருகே 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார்.
    • போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூர்-கோவை ரெயில்வே தண்டவாளம் பீளமேடு ரெயில் நிலையம் அருகே 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அவர் பச்சை நிற பூ போட்டு இருந்த சேலை அணிந்திருந்தார். பின்னர் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரெயில் மோதி இறந்து கிடந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. அவர் ரெயில் தண்டவாளத்தை கடந்தபோது ெரயில் மோதி இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.

    • மாடு மேய்த்து விட்டு அந்த பகுதியில் உள்ள பாலக்காடு-சேலம் சாலையை கடக்க முயன்றார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கா.கா. சாவடி அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி மரகதம் (வயது 70). சம்பவத்தன்று இவர் மாடு மேய்த்து விட்டு அந்த பகுதியில் உள்ள பாலக்காடு - சேலம் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மரகதம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த தகவல் கிடைத்ததும் கா.கா. சாவடி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கா.கா. சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • தொரப்பள்ளி பகுதியில் வந்த போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக புல்லட் வாகனம் மீது மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே நக்சம்மா உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள தொரப்பள்ளி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் நக்சம்மா (வயது67). இவரது மகன் சீனிவாசு ஆகியோர் இருசக்கர வாகனம் புல்லட்டில் ஒன்னல்வாடி-பேரண்டப்பள்ளி சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது தொரப்பள்ளி பகுதியில் வந்த போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக புல்லட் வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நக்சம்மா உயிரிழந்தார்.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார்.
    • ரெயில் மோதி இறந்து கிடந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை

    கோவை,

    கோவை பீளமேடு-இருகூர் ரெயில்வே தண்டவாளத்தில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அவர் சிவப்பு நிற பூ போட்டு இருந்த சேலை அணிந்திருந்தார். பின்னர் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் மோதி இறந்து கிடந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. அவர் ரெயில் தண்டவாளத்தை கடந்தபோது ெரயில் மோதி இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.

    • திண்டிவனம் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
    • பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் செஞ்சி பஸ் நிறுத்தம் அருகே 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அந்தப் பகுதியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். இன்று அதிகாலை அந்த பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, மூதாட்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் பலமாக மோதியுள்ளது .

    இதில் தூக்கி வீசப்பட்ட அந்த மூதாட்டி சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து தகவல் அறிந்த ரோசனை போலீசார் சம்பவத்திற்க்கு நேரில் வந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்த மூதாட்டியின் மீது மோதிய வாகனம் குறித்து பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.

    பனிமூட்டம் காரணமாக தங்கமணி ரெயில் வருவதை கவனிக்காமல் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் நாச்சியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம் இவரது மனைவி தங்கமணி (65). இவர் இன்று அதிகாலை 5:30 மணியளவில் காலை வீட்டில் இருந்து குப்பைகளை கொட்டுவதற்காக நாச்சியார்பேட்டை ெரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற அதிவிரைவு ெரயில் மோதி பலியானார்.

    பனிமூட்டம் காரணமாக தங்கமணி ரெயில் வருவதை கவனிக்காமல் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் மூதாட்டி பொன்னம்மாள் மீது மோதியது.
    • மூதாட்டி சம்பவ இடத்தில் பலியானார்.

    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூரைச் சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி பொன்னம்மாள் (வயது70). இவர் இன்று காலை உறவினர் வீட்டிற்கு செல்ல மேல்மருவத்தூரில் இருந்து அச்சரப்பாக்கம் அருகே உள்ள தொழுப்பேடு பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    பின்னர் அவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் மூதாட்டி பொன்னம்மாள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார்.

    இந்த விபத்து குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெருந்துறை, பவானி ரோடு பகுதியில் ராமாத்தாள் ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை, ஈரோடு ரோடு வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி ராமாத்தாள் (வயது 74). இவர் தனது பேத்தியின் வீட்டில் குடியிருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் பெருந்துறை, பவானி ரோடு பகுதியில் ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த ராமாத்தாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×