என் மலர்
நீங்கள் தேடியது "slug 99052"
- திருவட்டார் போலீசார் விசாரணை
- தெரிந்தவர் ஒருவரை மார்த்தாண்டம் சென்று பார்த்து வருவதாக தன் மனைவியிடம் கூறிச்சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே பள்ளிகுழிவிளை பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில் பாஸ்டராக ஜோண் குட்டி (வயது 62) செயல்பட்டு வருகிறார்.
நேற்று மாலை தனக்கு தெரிந்தவர் ஒருவரை மார்த்தாண்டம் சென்று பார்த்து வருவதாக தன் மனைவி யிடம் கூறிச்சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச்ஆப் ஆகி இருந்தது.
மார்த்தாண்டம் பகுதியில் சென்று பார்த்தபோதும், பல்வேறு இடங்களில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் தேடி பார்த்த போதும் காணவில்லை. இது குறித்து அவரது மகன் ஷெரின்ஜோண் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வழக்குபதிவு செய்து தீவிரமாக தேடி வருகிறார்.
- மீட்கப்பட்ட சிறுமிகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு
- சிறுமிகள் எதற்காக வீட்டை விட்டு சென்றார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
தக்கலை போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று அவர் வழக்கம் போல் பணிக்கு சென்று இருந்தார். வீட்டில் அவரது 11 வயது மகள் வீட்டில் இருந்தார்.பக்கத்து வீட்டில் 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார்.அவரது பெற்றோரும் வெளியே சென்று இருந்தனர்.
இதையடுத்து இரு சிறுமிகளும் வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக தனது பாட்டியிடம் கூறிவிட்டு சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பாட்டி பல்வேறு இடங்களில் தேடினார்.
எங்கு தேடியும் சிறுமிகள் கிடைக்கவில்லை.இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்களும் அங்கு வந்து தேடிப் பார்த்தனர். ஆனால் இரு சிறுமிகள் பற்றியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து தக்கலை போலீசில் புகார் செய்யப்ப ட்டது. போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மாணவிகள் மாயமானது குறித்த தகவல் அவர்களது புகை ப்படங்களுடன் சமூக வலை தளங்களில் பரவியது. இது மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படு த்தியது.
மாயமான மாணவிகளை தேடும்படியில் போலீசாரும் அவரது உறவினர்களும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் இரவு நாகர்கோவிலில் இருந்து மேல் மிடாலத்திற்கு சென்ற பஸ்ஸில் இரு சிறுமிகளும் பயணம் செய்தனர்.இதை பார்த்த பஸ் கண்டக்டர் சிறுமிகளிடம் விசாரித்தார்.அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்தனர்.அப்போது கண்டக்டர் அவரது வாட்ஸ்ஆப்க்கு வந்த பதிவை பார்த்தார்.
அதில் மாணவிகள் வீட்டிலிருந்து மாயமான தகவல் தெரியவந்தது. உடனே பஸ் கண்டக்டர் அந்த இரு சிறுமிகளும் பஸ்ஸில் இருக்கும் தகவலை கட்டுப்பாட்டு அறை போலீசுக்கு தெரிவித்தார்.
கட்டுப்பாட்டு அறை போலீசார் உடனடியாக தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தக்கலை போலீசார் மேல்மிடாலம் பகுதிக்கு சென்று பஸ்ஸில் இருந்த 2 சிறுமிகளையும் மீட்டனர். மீட்கப்பட்ட இரு சிறுமிகளும் தக்கலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
பின்னர் அவர்களை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுமிகள் எதற்காக வீட்டை விட்டு சென்றார்கள் என்பது குறித்த தகவலை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
- நேற்று முன் தினம் மதியம் சுகுணா வீட்டில் டி.வி.பார்த்துக் கொண்டிருந்ததை அவரது அக்கா மாலதி பார்த்துள்ளார்.
- இதுகுறித்து சுகுணாவின் அக்கா மாலதி அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சுகுணாவை தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள வீரணம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகுணா (23). பி.எஸ்.சி., படித்துள்ள இவர், பெருந்துறை அருகே உள்ள சுள்ளிபாளையத்தில் உள்ள மகாலிங்கம் என்பவரிடம் கடந்த 6 மாதங்களாக ஆடிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
சுகுணாவுக்கு கடந்த 10 நாட்களாக காது வலி இருந்து வந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் மதியம் சுகுணா வீட்டில் டி.வி.பார்த்துக் கொண்டிருந்ததை அவரது அக்கா மாலதி பார்த்துள்ளார்.
அதன்பின் சுகுணாவை காணவில்லை. அக்கம்பக்கம், உறவினர் வீடுகள் என எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
வீட்டில் உள்ளவர்கள் டி.வி.ஸ்டேண்டில் பார்த்தபோது ஒரு கடிதம் இருந்தது. அதில், தனக்கு காதுவலி அதிகமாக இருப்பதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், தனது மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை என்றும் சுகுணா எழுதி வைத்துச் சென்ற கடிதம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து சுகுணாவின் அக்கா மாலதி அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சுகுணாவை தேடி வருகின்றனர்.
- நேர்முக தேர்வுக்கு சென்ற இளம்பெண் மாயமானார்
- என்ஜினீயரிங் கல்லுாரியில் டைப்பிஸ்டாக பணியாற்றி வருகிறார்
திருச்சி:
திருச்சி உறையூர் காவேரி நகர் 5-வது கிராசை சேர்ந்த ராஜா மகள் ஐஸ்வர்யா(வயது 25). இவர் மூகாம்பிகை என்ஜினீயரிங் கல்லுாரியில் டைப்பிஸ்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புதிய வேலை ஒன்றில் சேர்வதற்காக நடத்தப்படும் இண்டர்வியூவில் கலந்து கொண்டு வருவதாக தனது வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் பலன் இல்லாததால், திருச்சி உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போது மாயமான ஐஸ்வர்யாவிற்கும், அதே கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றும் தேவா என்பவருக்கும் காதல் இருந்து வந்தது தொிய வந்துள்ளது. அதனால் அந்த பேராசிரியருடன் ஐஸ்வர்யா ஓட்டம் பிடித்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
- கடந்த 19-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே போனவர் வீடு திரும்பவில்லை.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன செல்லம்மாளை தேடி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே முண்டப்பிலாவிளை, புத்தன்கடை பகுதியை சேர்ந்தவர் அசோகன் இவருக்கு ரமணி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.மனைவியின் தாயார் செல்லம்மாள் (வயது 72) என்பவரும் இவர்களுடன் வசித்து வந்தார். செல்லம்மாள் தன் மகளின் வீட்டில் இருக்கும்போது அடிக்கடி அந்த பகுதியில் வெளியே சென்றுவிட்டு வருவது வழக்கம்,
அதேபோல் கடந்த 19-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே போனவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. உடனே செல்லம்மாளின் மகள் ரமணி பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். உற்றார், உறவினர்கள் வீடுகளிலும் தேடி பார்த்து எங்கேயும் காணவில்லை. உடனே திருவட்டார் போலீசில் ரமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன செல்லம்மாளை தேடி வருகிறார்கள்.
- 17-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.
- திருவட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே மேக்கோடு, செங்கோடி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு மரிய மிறியல் என்ற மனைவியும் பெனிஷா (வயது 21) என்ற மகளும் உள்ளனர். பெனிஷா குலசேகரம் அருகே தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார்.
கடந்த 17-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. கல்லூரிக்கு சென்று விசாரித்தபோது அங்கு காணவில்லை. உடனே உறவினர்கள் வீடு, தோழிகளிடம் விசாரித்தபோது எங்கே சென்றார் என்பது தெரியவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் ஆக இருந்தது. பெனிஷாவின் தாயார் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- வீட்டில் இருந்த 7 ஆடுகள் மாயமானது
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல்குடி ஊராட்சி சூத்தியன்காடு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 56) இவரது 2 ஆடும்'அதே பகுதியை சேர்ந்த வடக்கு அக்ரஹாரம் அடைக்கலம் மகன் பார்த்திபன் ( 44) இவரது 5 ஆடுகள் என மொத்தம் 7 ஆடுகளை வீட்டின் பின்புறத்தில் கட்டி வைத்திருந்தனர். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது ஆடுகளை காணமால் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஆலங்குடி போலீசில் புகார் கொடுத்தனர். புகாரி ன் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல்போன ஆடுகளை தேடி விசாரித்து வருகின்றனர்.
- ஷாலினி திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- கா சிநாதன் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே வரிஞ்சிபக்கம் முருகன் கோவில் தெரு சேர்ந்தவர்காசிநாதன். அவரது மகள் ஷாலினி (வயது 17). இவர்திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்றுஇரவு 9 மணிக்கு தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை.அதிர்ச்சி அடைந்த காசிநாதன் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினர்.
எங்கும் தேடியும் கிடைக்காததால் காசிநாதன் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவி ஷாலினியை தேடி வருகிறார்.
- நிலை தடுமாறி ஆற்றில் தவறி விழுந்தவர் கரையேறவில்லை.
- மாயமான வாலிபரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள பட்டமங்கலம் நடுத்தெரு நடேசன் மகன் அருள் (வயது 30).லோடு மேனான இவர், தேவூர் கடைத்தெரு பகுதியிலுள்ள கடுவையாற்றில் கை கழுவ சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நிலை தடுமாறி ஆற்றில் தவறி விழுந்தவர் கரையேறாத நிலையில், அருகிலிருந்தவர்கள் கீழ்வேளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து சம்ப இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் மாயமான இளைஞரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அவரது கதி என்ன ஆனது என்று தெரியாததால் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கணவர் குளச்சல் போலீசில் புகார்
- பாலப்பள்ளம் வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே பத்தறை பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை தொழிலாளி. இவரது மனைவி அபிஷா (வயது 30). இருவருக்கும் கடந்த 2017-ல் நெய்யூரில் வைத்து திருமணம் நடந்தது.இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.கடந்த 12-ந்தேதி அபிஷா பாலப்பள்ளம் வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்த தங்கத்துரை வீடு பூட்டி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அபிஷா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அபிஷாவை தேடி வருகின்றனர்.
- சேலம் கருப்பூரில் உள்ள தாய் அருவி வீட்டில் தங்க வைத்து பிரியா தனது 2 மகன்களையும் படிக்க வைத்து வருகிறார்.
- நேற்று முன்தினம் 2 பேரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால் இருவரும் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 35). லாரி டிரைவர். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு மோனீஸ்வரன் (10), பூவரசன் (8) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். சேலம் கருப்பூரில் உள்ள தாய் அருவி வீட்டில் தங்க வைத்து பிரியா தனது 2 மகன்களையும் படிக்க வைத்து வருகிறார். இருவரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் 2 பேரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால் இருவரும் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது அங்கு 2 பேரும் இல்லை. இதனால் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் 2 பேரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இருவரும் ஈரோடு மாவட்டம் பாப்பம்பாளையத்தில் உள்ள குமாரின் பெற்றோர் வீட்டுக்கு பஸ்சில் சென்றிருப்பது தெரிந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், இருவரையும் மீட்டனர்.
- மனநிலை பாதிக்கப்பட்டவர் மாயமானார்
- மனநிலை பாதிக்கப்பட்டவர் மாயமானார்
புதுக்கோட்டை:
ஆலங்குடி கம்பர் தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் ரமேஷ் (வயது 47) மன நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த இவர், சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குபதிவு செய்து காணாமல் போன ரமேஷை தேடி வருகின்றனர்.