என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் பலி"

    • வடலூரில் அரசு பஸ் மோதி டிரைவர் பலியானார்.
    • பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது,

    கடலூர்:

    வடலூர் காட்டுக்கொல்லை சர்வோதயநகர் பகுதியை சேர்ந்தவர் பகிரவன் (வயது 24)டிரைவர், இவர் மோட்டார் சைக்கிளிலில் விருத்தாச்சலத்தில் இருந்து வடலூர் நோக்கி வந்தார். ,வடலூர் தொழி ற்பேட்டை பொட்டுகடலை கம்பெனி அருகில் வரும்போது, கடலூரில் இருந்து விருத்தாச்சலம் சென்ற அரசு பஸ் மோதி பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலே இறந்துவிட்டார்.

    இறந்த பகிரவன் உடல் பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது, இது குறித்து புகாரின்பேரில் வடலூர் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மேலூர் அருகே விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து குதித்த டிரைவர் பலியானார்.
    • தான் ஓட்டி வந்த லாரியிலேயே சிக்கி டிரைவர் பலியான சம்பவம் மேலூரில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    மேலூர்

    சென்னையில் இருந்து சிவகாசி நோக்கி பி.வி.சி. பவுடர் பாரம் ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி சென்று கொண்டிருந்தது. இதை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வைராபுரத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 36) ஓட்டி வந்தார்.

    இந்த லாரி மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டி என்ற இடத்தில் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை வந்த போது திடீரென்று லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை விட்டு விலகி ரோட்டின் நடுவில் இருந்த தடுப்பின் மீது மோதியது. அப்போது டிரைவர் சக்திவேல் கதவைத் திறந்து வெளியே குதித்தார். இதில் எதிர்பாராதமாக அவரது சட்டை, லாரியில் இருந்த கம்பியில் மாட்டியதால் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த சக்திவேலின் தலையில் லாரி டயர் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தான் ஓட்டி வந்த லாரியிலேயே சிக்கி டிரைவர் பலியான சம்பவம் மேலூரில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    • வெவ்வேறு விபத்துகளில் ஆம்புலன்சு டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
    • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 39). இவர் சாத்தூர் டோல்கேட் ஆம்புலன்சு டிரைவராக பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று காலையில் மோட்டார் சைக்கிளில் மகேஸ்வரன் வேலைக்கு புறப்பட்டார். ஆர்.ஆர். நகர் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த மகேஸ்வரன் சிகிச்சை பலனின்றி இறந்தார். அப்பநாயக்கன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் வேம்பாளியை சேர்ந்தவர் ஆண்டி என்ற கல்லாபெட்டி (47). இவர் சம்பவத்தன்று டிராக்டரில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு புறப்பட்டார். டிராக்டரை வேம்பாளியைச் சேர்ந்த முத்தையா என்பவர் ஓட்டினார். நரிக்குடி-திருச்சுழி ரோட்டில் உள்ள புல்வாய்க்கரை காலனி பகுதியில் வந்தபோது டிராக்டரில் அமர்ந்திருந்த ஆண்டி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    அருப்புக்கோட்டை பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் சேர்மதுரை (71). இவர் சம்பவத்தன்று நாகராஜன் என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்தார். ஓரிடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியபோது சேர்மதுரை இறங்க முற்பட்டார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி தனியார் பஸ் மீது பின்பக்கமாக மோதியது.
    • மோதிய வேகத்தில் பஸ் டிரைவர் முன்பக்கமாக கீழே விழுந்து கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் இருந்து ஷாபூருக்கு தனியார் பஸ்சில் திருமண விழாவுக்காக 35 பேர் சென்று கொண்டிருந்தனர். மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி தனியார் பஸ் மீது பின்பக்கமாக மோதியது.

    மோதிய வேகத்தில் பஸ் டிரைவர் முன்பக்கமாக கீழே விழுந்து கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பஸ்சில் பயணித்த 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கீழ காசாக்குடியில் உள்ள உறவினரை மோட்டார் சைக்களில் வந்து பார்த்துவிட்டு, இரவு மீண்டும் கும்பகோணம் சென்றார்.
    • முரளி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கும்பகோணம் சுவாமிமலை மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் விஜயக்குமார்(வயது32). கார் டிரைவரான இவர், காரைக்கால் அருகே கீழ காசாக்குடியில் உள்ள உறவினரை மோட்டார் சைக்களில் வந்து பார்த்துவிட்டு, இரவு மீண்டும் கும்பகோணம் சென்றார். மேலகாசாகுடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சாலையோரம் இருட்டில் நிறுத்தப்பட்ட காரில் தெரியாமல் மோதியதில், தூக்கியெறியப்பட்ட விஜயக்குமார் தலையில் பலத்த காயமுற்றார். உடனே அருகில் இருந்தோர், விஜயக்குமாரை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் கொண்டுசெல்லப்பட்டார். செல்லும் வழியில் விஜயக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து, காரைக்கால் போக்குவரத்து காவல்நிலைய போலீசார், சாலையோரம் காரை நிறுத்திய நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச்சேர்ந்த முரளி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கோவையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பஸ் பொங்கலூர் டெலிபோன் எக்சேஞ்ச் அருகே வந்தபோது காருடன் நேருக்கு நேர் மோதியது.
    • பல்லடம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காருக்குள் சிக்கி இறந்து போன டிரைவர் தாசை வெளியே கொண்டு வந்தனர்

    பல்லடம் :

    பல்லடம் ராயர்பாளையத்தைச் சேர்ந்த ராஜன் என்பவரது மகன் தாஸ் (வயது 45). இவர் பல்லடத்தில் வாடகை காரின் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் காங்கேயத்தில் இருந்து பல்லடம் நோக்கி நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தார். அப்போது கோவையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பஸ் பொங்கலூர் டெலிபோன் எக்சேஞ்ச் அருகே வந்தபோது காருடன் நேருக்கு நேர் மோதியது.

    இதில் கார் அப்பளம் போல் நசுங்கியது. இந்த விபத்தில் காரை ஒட்டி வந்த டிரைவர் தாஸ் உள்ளே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பஸ்சின் நடத்துனர் திருச்சி, அண்ணா நகரை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் பாலசுப்பிரமணி (55), அதுபோல் டிரைவர் திருச்சி, மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் சுரேஷ் (44) ஆகியோர் காயம் அடைந்தனர். மேலும் காரில் மோதாமல் இருக்க டிரைவர் வலது புறமாக பஸ்சை திருப்பியதில் அருகில் இருந்த ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதியது. இதில் அந்த சுவர் இடிந்தவிழுந்ததில் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த காருக்கு சேதம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து காருக்குள் சிக்கி இறந்து போன டிரைவர் தாசை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரண்டு கார்களும் மீன் மார்க்கெட் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
    • ஷேக் அப்துல்லா குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழ ந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருதாசலம் ஆலடி ரோட்டை சேர்ந்தவர் ஷேக்அப்துல்லா (வயது 34) கார் டிரைவர்.நேற்று ஷேக் அப்துல்லா விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்த ராஜி (61) என்பவரை புதுச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று விட்டு மதியம் திரும்பி வந்து கொண்டிருந்தார். வடலூர் பெத்தநாயக் கன்குப்பம் விஷ்ணுகுமார் (27) என்பவர் தனது காரில் நண்பர் கஞ்சநாத ன்பேட்டையை சேர்ந்த அஜித் (24) என்பவருடன், வடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    இரண்டு கார்களும் வடலூருக்கும், குறிஞ்சிப்பா டிக்கும் இடையே ஆண்டிக்குப்பம் மீன் மார்க்கெட் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் ஷேக் அப்துல்லா, ராஜி, விஷ்ணுகுமார், அஜித் ஆகிய 4 பேரும் காயமடைந்து குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டனர். இதில் ஷேக் அப்துல்லா குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். காயம் அடைந்த ராஜி புதுச்சேரி தனியார் ஆஸ்பத்திரியிலும், விஷ்ணுகுமார் கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்ற னர். அஜித் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த விபத்து குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை ரவுண்டானா அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.
    • இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சென்னையிலிருந்து இரும்பு பிளேட்டுகளை ஏற்றிக்கொண்டு சேலத்திற்கு கனரக லாரி ஒன்று மாலை புறப்பட்டது. தென்காசி மாவட்டம் நன்னகரம் கிராமத்தை சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர் இந்த லாரியை ஓட்டி வந்தார். இந்த லாரி நேற்று நளளிரவு உளுந்தூர்பேட்டை ரவுண்டானா அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே டிரைவர் நாராயணமூர்த்தி உடல் நசுங்கி உயிரழந்தார்.

    தகவலறிந்து விரைந்து வந்த எடக்கல் போலீசார் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதைத் தொடர்ந்து கிரேன் எந்திரத்தை உடனடியாக வரவழைத்து தலைக்குப்புற கவிழ்ந்த லாரியை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக எடக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஆங்கில புத்தாண்டு பிறந்து ஒரு மணி நேரத்தில் உளுந்தூர்பேட்டை ரவுண்டானாவில் விபத்து நடந்து, லாரி டிரைவர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கொடிவேரி பிரிவு பகுதியில் 2 வேன்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது.
    • இதில் வேனின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் வெள்ளித் திருப்பூர் பகுதி யில் இருந்து அதே பகுதியை சேர்ந்த சங்கை (40) என்பவர் வேனில் பால் கேன்களை ஏற்றி கொண்டு சத்திய மங்கலத்துக்கு சென்று கொண்டு இருந்தார். வேனை சங்கை ஓட்டி சென்றார்.

    அவர் கோபிசெட்டிபாளையம் ரோட்டில் இன்று காலை வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே மற்றொரு வேன் வந்தது.

    கொடிவேரி பிரிவு பகுதியில் வந்த போது அந்த 2 வேன்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் வேனின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இதில் சங்கை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மற்றொரு வேனில் வந்த டிரைவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • உறவினர் வீட்டு விழாவுக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மாரியம்மன் கோவில் பகுதியை சதீஷ் (வயது 35) லாரி டிரைவர்.

    இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆம்பூரில் உள்ள உறவினர் காதணி விழாவுக்கு சென்றார்.

    பின்னர் விழா முடிந்து ஆம்பூர் பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்த வாகனம் சதீஷ் மீது மோதியது.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் சதீஷ்சை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சதீஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்வம் (வயது 48). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்,சாலையை கடக்கும் பொழுதுமோட்டார் சைக்கிள் இவர் மீது பயங்கரமாக மோதியது..
    • இதில் செல்வதடசம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கக்கனூர் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 48). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார், இவர் நேற்று இரவு சென்னை செல்வதற்காக அரசு பஸ்சில் சென்றார். விக்கிரவாண்டி அருகே உள்ள இரவு ஓட்டலில் பஸ் நின்றபோது பஸ்சை தவற விட்டுவிட்டார்,

    பின்னர் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகில் பஸ்சில் ஏறுவதற்காக சாலையை கடக்கும் பொழுது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் இவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விக்கிரவாண்டி போலீசார் உடலை கைப்பற்றினர். முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • விஜய் (வயது 40). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. லாரி டிரைவரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது.
    • நேற்று இரவு விஜய் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தேங்கல்பாளையம் குடித்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் விஜய் (வயது 40). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. லாரி டிரைவரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

    நேற்று இரவு விஜய் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஆயிபாளையம் ரெயில்வே பாதையை கடக்க முயன்றபோது, ரெயில் மோதியதில் விஜய் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். சம்பவ இடத்திற்கு வெண்ணந்தூர் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு வெண்ணந்தூர் போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

    ×