search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99100"

    கறிவேப்பிலை மிளகு குழம்பு பிரசவித்த பெண்களுக்கு மிகவும் நல்லது. மழை நேரத்தில் ஏற்படும் ஜுரம், உடல் வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.
    தேவையான பொருட்கள் :

    கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு,
    மிளகு - 20,
    உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
    துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - 4 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.

    கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்தவற்றுடன் சேர்த்து… புளி, உப்பு சேர்த்து, நீர் விட்டு நைஸாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து, அரைத்ததை போட்டு கொதிக்கவிட்டு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

    சூப்பரான கறிவேப்பிலை மிளகு குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் தேங்காய் சேர்த்த இறால் குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - அரை கிலோ
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    பூண்டு - மூன்று பல்
    தக்காளி - மூன்று
    எண்ணெய் - தேவையான அளவு
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    பட்டை - சிறிதளவு
    கறிவேப்பிலை - மூன்று கொத்து
    மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
    மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    தேங்காய் பால் -  தேவையான அளவு
    சீரகம் - கால் டீ ஸ்பூன்



    செய்முறை :

    இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்க வேண்டும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    தேங்காய், சீரகத்தை நைசாக அரைக்க வேண்டும்.

    சோம்பை நன்றாக தட்டி வைக்க வேண்டும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் இறாலை சேர்க்க வேண்டும்.

    இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

    சூப்பரான தேங்காய் சேர்த்த இறால் குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான குருமா, மசாலா செய்து சுவைத்து போர் அடித்திருக்கும். இன்று பக்கோடா குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பெரிய வெங்காயம் - 2  
    தக்காளி - 2
    புளி - நெல்லிக்காய் அளவு
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
    உப்பு - தேவையான அளவு

    பக்கோடாவிற்கு...

    கடலைப் பருப்பு - 1/2 கப்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    வரமிளகாய் - 2
    பூண்டு - 4 பற்கள்
    பெரிய வெங்காயம் - 1
    கொத்தமல்லி - சிறிது

    அரைப்பதற்கு...

    துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
    சோம்பு - 1/2 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    பட்டை - 1/4 இன்ச்
    கிராம்பு - 2
    கறிவேப்பிலை - சிறிது
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்



    செய்முறை:

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.

    மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    கடலைப்பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்து மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு, பூண்டு, சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அத்துடன் பக்கோடாவிற்கு கொடுத்துள்ள பொருட்களான, வெங்காயம், உப்பு, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள கலவையை சிறு பக்கோடாக்களாக போட்டு பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, அத்துடன் புளிச்சாற்றினையும் சேர்த்து 5-7 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

    இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து குறைவான தீயில் வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட வேண்டும்.

    பின் பொரித்து வைத்துள்ள பக்கோடாக்களை சேர்த்து கொத்தமல்லியைத் தூவி இறக்கி, 5 நிமிடம் கழித்துப் பரிமாறினால், செட்டிநாடு பக்கோடா குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சின்ன வெங்காய சாம்பார் சூப்பராக இருக்கும். இன்று இந்த சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    துவரம் பருப்பு - 150 கிராம்
    சின்ன வெங்காயம் - 100
    தக்காளி - 3
    சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
    புளி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    சீரகம், வெந்தயம் தலா - 1 ஸ்பூன்
    கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
    பெருங்காயத்தூள், கொத்தமல்லி இலை - தேவையான அளவு



    செய்முறை :

    பருப்புடன் சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரில் வேக விடவும். பருப்பு நன்றாக வெந்தவுடன் நன்றாக கடைந்து வைக்கவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

    புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    சின்ன வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியும் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் புளித்தண்ணீர் விட்டு சாம்பார் பொடி, உப்பு சேர்த்து வெந்த பருப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

    சூப்பரான சின்ன வெங்காய சாம்பார் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    `நேத்து வச்ச மீன் குழம்பு இன்னும் சுவை…’ என்று கேட்க நன்றாக இருக்கலாம். ஆனால் எந்த உணவையும் சமைத்த உடனேயே சாப்பிடுவதுதான் நல்லது.
    `நேத்து வச்ச மீன் குழம்பு இன்னும் சுவை…’ என்று கேட்க நன்றாக இருக்கலாம். ஆனால் எந்த உணவையும் சமைத்த உடனேயே சாப்பிடுவதுதான் நல்லது.

    எந்த வகை உணவாக இருந்தாலும் அதிலிருக்கும் மினரல்ஸ் மற்றும் வைட்டமின் சத்துக்கள் சமைத்த உடன் வெளிவரும் என்பதால், சமைத்த சூடு அடங்குவதற்குள் சாப்பிட்டால் சத்துக்கள் அனைத்தும் உடலில் சேரும். உணவு ஆறிய பின்னர் சாப்பிடுவதால் அது வெறும் சக்கைதான். அதை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவது அதைவிட வேஸ்ட்! சுவையும் இருக்காது.

    பிரியாணி, மீன், கோழி, மட்டன் குழம்பு மற்றும் பிற அசைவ உணவுகளை நாள்விட்டு சாப்பிட்டால் சில நேரங்களில் `புட் பாய்ஷன்’ ஆகவும் மாறலாம். இதனால் உடலில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக அலர்ஜி மற்றும் தோல் நிறம் மாறும். அதேபோல், காய்கறிகளை நறுக்கி பிரிஜ்ஜில் வைத்து அப்புறம் சமைப்பது, குழம்பை பிரிஜ்ஜில் வைத்து, அடுத்த நாள் சூடாக்கி சாப்பிடுவது என்பதெல்லாம் நோய்களை நாமே தேடிக்கொள்வதற்கு சமம்!
    இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள வாத்துக்கறி குழம்பு சூப்பராக இருக்கும். இன்று வாத்துக்கறி குழப்பை வேலூர் ஸ்டைலில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாத்துக்கறி - 1 கிலோ
    சின்ன வெங்காயம் - அரை கிலோ
    தக்காளி - 4
    தேங்காய் துருவல் - 1 கப்
    இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    பட்டை - 2
    கிராம்பு - 4
    மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
    மல்லி தூள் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாத்துக்கறியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    தவாவில் சிறிது எண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கி ஆற வைத்து, பிறகு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

    துருவிய தேங்காயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு, சூடானதும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது, பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சுத்தம் செய்த வாத்துக்கறி ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும்.

    பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, மஞ்சள் தூளைச் சேர்க்கவும்.

    வாத்துக்கறியிலிருந்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, தேவையான அளவு நீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் குக்கரை மூடி எட்டு முதல் பத்து விசில் வரை விட்டு இறக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூடான, டேஸ்டான வேலு}ர் வாத்துக்கறி குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, பூரி, சாதம், புலாவ், நாண், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை உருளைக்கிழங்கு கறி. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்

    முட்டை - 4
    உருளைக்கிழங்கு - 1
    தக்காளி - 1
    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
    சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
    மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் துருவல் - 100 கிராம்

    அரைக்க

    இஞ்சி - 1/2 இன்ச் அளவு
    பூண்டு - 3 பல்
    கொத்தமல்லித்தழை - 1 மேஜைக்கரண்டி 

    தாளிக்க

    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    பட்டை - 1 இன்ச் அளவு
    கிராம்பு - 2
    வெங்காயம் - 1/4 பங்கு
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை  :

    உருளைக்கிழங்கை தோலுரித்து நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை நீள வாக்கில் வெட்டி வைக்கவும்.

    இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித்தழையை அரைத்துக் கொள்ளவும்.

    தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து முதல் பால், இரண்டாம் பால் எடுத்து தனியாக வைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு, கொத்தமல்லித்தழை அரைத்த கலவையை போட்டு வதக்கவும்.

    அடுத்து உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றவும்.

    அவற்றுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க விடவும்.

    உருளைக்கிழங்கு நன்கு வெந்து மசாலா வாடை போனதும் முட்டைகளை உடைத்து ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    பின்னர் முதலில் எடுத்த தேங்காய்பாலை ஊற்றி நன்றாக கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    சுவையான முட்டை உருளைக்கிழங்கு கறி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிலருக்கு அதிக காரமான உணவுகளை சாப்பிட மிகவும் பிடிக்கும். இன்று காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பச்சை மிளகாய் - 15
    குடை மிளகாய் - 1
    சின்ன வெங்காயம் - 15
    தக்காளி - 1
    உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
    புளி - சிறிய உருண்டை
    வெந்தயம் - 1 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :


    பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பை போடவும்.

    பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    மிளகாய் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.

    காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு தயார்.

    * இதை அனைத்து விதமான சாதத்தோடும் பரிமாற சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காராமணி குழம்பை சாதம், தோசை அல்லது சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டால், நன்றாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காராமணி - 1 கப்
    புளி - 1 எலுமிச்சை அளவு
    தக்காளி - 1
    வெங்காயம் - 1
    உப்பு - தேவையான அளவு
    சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    பட்டை - 2
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    வர மிளகாய் - 2
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :


    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காராமணியை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்க வேண்டும்.

    பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வறுத்த காராமணியை போட்டு, அதில் 2 கப் தண்ணீர் விட்டு, 6 விசில் விட்டு இறக்க வேண்டும்.

    மற்றொரு வாணயிலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, வரமிளகாய், சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் சாம்பார் பொடி, புளித் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கிளறி விட வேண்டும்.

    நன்றாக கொதித்து வரும் போது வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

    இப்போது அருமையான காராமணி கறி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெயில் காலத்தில் மோர் குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இன்று உருளைக்கிழங்கை சேர்த்து மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தனியா - 2 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
    அரிசி - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - ¼ கப்
    உருளைக்கிழங்கு - 4
    தயிர் - 1½ கோப்பை
    கொத்தமல்லை தழை - சிறிதளவு
    நீர் - ½ கப்
    துருவிய தேங்காய் - ¼ கப்
    உப்பு - சுவைக்கு

    தாளிக்க :

    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    வெந்தயம் - ½ தேக்கரண்டி
    கறிவேப்பிலை சிறிதளவு
    ஓமம் - ½ தேக்கரண்டி



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிரில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கடைந்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தனியா, சீரகம், மிளகு, ப.மிளகாய், இஞ்சி, கடலைப்பருப்பு, அரிசிபோட்டு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் கடைந்த மோர் ஊற்றி அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பிக்கும் போது உப்பை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

    மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், ஓமம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை மோர் கலவையில் கொட்டவும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து பல்வேறு சுவையான உணவுகளை செய்யலாம். இன்று மாம்பழத்தை வைத்து மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புளிப்பும் தித்திப்புமான சிறு மாம்பழங்கள் - 2,
    புளித்த மோர் - 2 கப்,
    அரிசி - ஒரு டீஸ்பூன்,
    சீரகம், கடுகு - தலா அரை டீஸ்பூன்,
    வெந்தயம் - கால் டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - ஒன்று,
    காய்ந்த மிளகாய் - 2,
    தேங்காய் துருவல் - ஒரு கப்,
    தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    மாம்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வாணலியில் ஒரு கப் தண்ணீர் விட்டு மாம்பழங்களை வெட்டிப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக விடவும்.

    மிக்சியில் தேங்காய் துருவல், அரிசி, சீரகம், ஒரு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்ததை மோரில் கலந்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வெந்து கொண்டுஇருக்கும் மாம்பழங்களுடன் கலக்கவும் (தேவையானால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்).

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானமும் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், ஒரு காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும்.

    குழம்பு பொங்கி வரும்போது கீழே இறக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

    சூப்பரான மாம்பழ மோர்க்குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அசைவ உணவுக்கு ஈடான சுவையை தரும் காளானுடன் சத்துக்கள் நிறைந்த பசலைக் கீரையை சேர்த்து ஒரு குழம்பு செய்தால், மிகவும் அலாதியான சுவையில் இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பட்டன் காளான் - 15
    வெங்காயம் - 1
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    பசலைக்கீரை பேஸ்ட் பொருட்கள்...

    பசலைக் கீரை - 1 கட்டு
    இஞ்சி - சிறிய துண்டு
    பச்சை மிளகாய் - 4
    பட்டை - 1
    ஏலக்காய் - 4
    கிராம்பு - 4
    அன்னாசிப்பூ - 1
    கொத்தமல்லி - ஒரு கட்டு



    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பசலைக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பட்டன் காளானை நன்கு நீரில் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    பசலைக்கீரை பேஸ்ட்டிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு கெட்டியான பேஸ்ட் போல், தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்த பின்னர், வெங்காயத்தைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

    பின்பு நறுக்கி வைத்திருக்கும் காளானை சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

    பிறகு பசலைக்கீரை பேஸ்ட்டை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

    அடுத்து மல்லி தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தண்ணீர் ஊற்ற, மூடி 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

    காளான் நன்கு வெந்ததும், அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி இறக்கினால், சூப்பரான பசலைக்கீரை காளான் குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×